சிறுதானியங்களில் கொள்கை மாற்றங்கள்: ஒரு மறுபார்வை


சிறுதானியங்கள் அதிக சத்துக்கள் நிறைந்த ஆதாரமாக இருக்கிறது. பசி மற்றும் சத்து குறைபாடு பிரச்சனைகளில் தீர்வு காண உகந்த பொருளாக அமைகிறது. ஒரு பகுதிக்கு சத்துக்கள் அளிக்கும் நோக்கத்தோடு அரசு கொள்கைகள் இருப்பினும், அவை மறைமுகமாக ஓரினப்பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தி உயிர்பல்வகைமை குறைந்தது, அதனால் பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டது. ஆகையால், உள்ளூர் வேளாண்  உயிர்ச்சூழல் அமைப்புக்கு உகந்த பாரம்பாிய முறைகளை பயன்படுத்தி சிறுதானியங்களை திட்டமிடுவது மிகவும் முக்கியம்.


சத்துக்களின் ஆதாரமாகவும், பசியை ஒழிக்கும் கருவியாகவும், நன்கு படர்ந்துள்ளது, சிறுதானியங்களின் சாதகமாகும். பழமையான உணவு ஆதாரங்களில் ஒன்றான சிறுதானியங்கள், இந்தியாவின் பழங்குடியின பகுதிகள் மற்றும் உலகளவில் சில வளர்ச்சியடைந்த பகுதிகளில், உணவாக கருதப்படுகிறது. பெரும்பாலும் ஏழை மக்களின் உணவாக கருதப்படுவது சிறுதானியங்களாக இருப்பினும், தற்போது அது முறையாக ஒதுக்கப்பட்டதனால் அதன் உற்பத்தி குறைந்துள்ளது.
மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்லாமல், 20-25 வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் பழங்குடியின சமூகங்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் கொராபுட் மாவட்ட கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் சிறுதானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டது. செஞ்சோளம், சோளம், வரகு, பனிவரகு, திணை, குதிரைவாலி மற்றும் கேழ்வரகு ஆகிய இரகங்கள் இதில் அடங்கும். பரப்பளவு பொருத்தவரையில், இவைகளில் கேழ்வரகு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. சிறிதளவே தண்ணீர் பிடிக்கும் திறன் கொண்ட குறைவான தரமுடைய மண்ணில் சிறுதானியங்கள் வளர்க்கப்படுகிறது. மேலும் உற்பத்தி செய்வதற்கு பருவ மழையை சார்ந்தே இருக்கிறது. மித மற்றும் மேட்டு நிலங்களில் மலை சாிவுகளின் ஊடே மாற்று சாகுபடியை பின்பற்றும் பழங்குடியினர்கள் ஜுன் முதல் செப்டம்பர் வரை பயிர் சாகுபடி செய்கின்றனர். இந்த பழங்குடியினர்களுக்கு சிறுதானியங்களே ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து மையம், ஹைதராபாத், வெளியிட்ட அறிக்கையில், அரிசியை ஒப்பிடும்போது சிறுதானியங்களில் அதிக தாதுஉப்புகள், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்தப் பகுதியை பரவலாக தாக்கும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தச் சோகையை எதிர்த்து போராடும் இரும்புச் சத்து சிறுதானியங்களில் இருக்கிறது.

சீதோஷன மாற்றம் உலகளவில் வேளாண்-வன அமைப்புகளின் எதிர்க்கால தாக்கங்களின் பிரச்சனையை தற்போது சிறு-தானிங்கள் மேல் பார்வை கொண்டுவரப்பட்டது. இந்தப் பின்னனியில் ஒடிசா மாநிலத்தின் தென்பகுதியில், வேளாண்மையில் ஏற்பட்ட மாற்றங்களை புரிந்துகொள்ள ஆய்வு நடத்தப்பட்டது.

சிறுதானியங்கள் கீழ் குறைந்து வரும் சாகுபடி பகுதி – சில காரணிகள்
வணிக வேளாண்மை மற்றும் மரப்பயிர்களான தைல மரம், எண்ணெய் வித்து மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் மற்றவைகளை காட்டிலும் அறிமுகப்படுத்தியதால், உண்மையில் சிறுதானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் யாவும் உணவில்லா பயிர்களுக்கு அதிகளவில் மாற்றமடைந்து வருகிறது. பழங்குடியின பகுதியில் வாழும் குறைந்த வருமானம் ஈட்டும் சமூகங்களுக்கு முக்கிய உணவு மற்றும் சத்துக்களின் ஆதாரம் அழிவிற்கு தள்ளப்பட்டது. முரண்பாடாக, ஒரு காலத்தில் எங்கு பயிர் பல்வகைமை மற்றும் பாரம்பாிய இரகங்கள் ஊக்குவிக்கப்பட்டதோ, இந்தப் பகுதியில் ஏழ்மை மற்றும் சத்து குறைபாடு ஆகியவற்றிற்கு எதிராக போராடும் மிக சிறந்த கருவியாக நிரூபிக்கப்பட்டும், நவீன முறைகள் மற்றும் ஓரினப் பயிர் சாகுபடி முறைகள் ஊக்குவிக்கப்பட்டன. இந்த கவனக்குறைவினால், மரப்பயிர்கள் மற்றும் உணவு பழக்கங்களுக்கு மாற்றத்தை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டனர். எப்படி இந்தப் பகுதியின் ஆரோக்கிய நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தொலைதூரப் பார்வையில் பார்க்க வேண்டும்.
பயிர் உற்பத்திக்கு இந்த நிலங்கள் உகந்ததாக இல்லை என்று அறிவித்ததால், இந்த நிலங்கள் யாவும் தைல மரம் போன்ற மரங்கள் வளர்ப்பதற்கு மாற்றப்பட்டது. இதனால் இந்தப் பகுதிகளில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் மேலும் குறைந்துள்ளது. முன்பு இந்தப் பகுதியில் வளர்க்கப்பட்ட பல்வேறு சிறுதானிய இரகங்கள் தற்போது சாகுபடி செய்யப்படவில்லை. அட்டவணை 1 இல் சிறுதானிய சாகுபடியிலிருந்து மரப்பயிர் வளர்ப்பிற்கு மாறியதால் எதிர்காலத்தில் இந்த சமூகம் சீதோஷன மாற்றத்தின் மூலம் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதன் சாத்தியக்கூறுகளை விளக்குகிறது. கொழுப்பு குறையும் தாய்ப்பால் சுரப்பது அதிகாிக்கும், கால்ஷியம், நார்ச்சத்து கிடைக்கும் போன்ற ஆரோக்கிய பலன்களை அளிக்கும் சிறுதானியங்கள் மற்றும் கேழ்வரகு என்று தொிந்திருந்தும், பொது விநியோக முறையின் மூலம் மானிய விலையில் அரிசி கிடைப்பதால், சிறுதானியங்கள் உண்ணுவது குறைந்துள்ளது. இவ்வாறு சிறுதானியங்கள் உண்ணுதல் குறைவது மட்டுமில்லாமல் அதன் சத்துக்களின் அளவும் பாதிக்கப்பட்டுள்ளது. சாகுபடி செய்யும் பகுதிகள் குறைதல், பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வம் குறைதல் மற்றும் பாரம்பாிய இரகங்கள் அழிதல் ஆகியவை மேலும் ஏற்படுகிறது.

மேலும் வாழ்க்கை தரம் மாறுவதால், சமுதாயத்தில் மேல் மற்றும் நடுத்தர வகுப்பை சார்ந்தவர்கள் சிறுதானிங்கள் நுகர்தல் குறைந்தது, இதனால் சிறுதானியங்களின் தேவை கீழே தள்ளப்பட்டது. இதன் விளைவாக சிறு, குறு விவசாயிகள், சிறுதானியங்கள் சாகுபடி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுதானியங்களின் பல நிலஇனங்கள் மற்றும் இரகங்கள் யாவும் எதிர்க்கால நிலைத்த வேளாண்மையில் இந்த பயிர்களின் பல்வகைமை கூட்டக்கூடியவைகள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. பன்னிரண்டு இரகங்கள் வளர்க்கப்பட்ட இடங்களில் தற்போது ஒன்று அல்லது இரண்டு இரகங்களே வளர்க்கப்படுகிறது. கேழ்வரகில் பயிரிடும் இரகங்கள் மற்றும் பயிரிடப்படாத இரகங்கள் குறித்து விபரம் அட்டவணை 2 கொடுக்கப்பட்டுள்ளது. இது பாரம்பாிய பகுதியில் அழியப்பட்ட பயிர்கள் குறித்த விபரங்களை காட்டுகிறது. வேளாண்மை அல்லது மேய்ச்சல் நிலங்களிலிருந்து தைல மரமாக மாறுவதற்கு, சமுதாய பொறுப்புகளே காரணம் என்று காஷியூர் வட்டத்தில் உள்ள சிரிகுடா கிராமத்தை சேர்ந்த பல்ராம் பித்தியா கூறியுள்ளார். தனது மூன்று பெண் குழந்தைகளை எவ்வாறு திருமணம் செய்வது என்ற அழுத்தத்தினால், இவருடைய மூன்றில் இரண்டு பங்கு நிலங்களை எவ்வாறு கேழ்வரகு சாகுபடியிலிருந்து தைல மரம் வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்ற நிலையை விளக்குகிறார் (பெட்டி 1 ஐ பார்க்க). தனிமனிதனின் இந்த அணுகுமுறையால் உற்பத்தி குறைவதால், பல்ராம் போன்ற மற்ற விவசாயிகள் சத்துக்களின் ஆதாரமான கேழ்வரகை சார்ந்திருக்கும் மற்ற விவசாயிகள் பின்னடைவு சந்திக்கின்றனர் என்ற கருத்தை இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

திருமதி. சுமன் ஜோடியாவை பொருத்தவரையில், தற்போது இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கட்டுபாடில்லாமல் மாற்றமடைந்து வருவதாக கூறுகிறார். ஐம்பது விவசாயிகளுக்கு மேல், அவர்களுடைய பெரும்பாலான நிலங்களில் தைல மரங்களை எப்படி வளர்க்க துவங்கினர் என்பதை விளக்கினார். அரசு வழங்கும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தால், பசியை தீர்க்க கேழ்வரகு வளர்ப்பது அவசியமில்லாமல் போய்விட்டது. மேலும் மக்களுக்கு இந்தப் பயிரை வளர்ப்பதற்கு ஆர்வமும் இல்லை. இந்த விவாதத்தை மற்ற மகளிரான கமாளினி ஜோடியா, குஞ்சாபட்டி ஜோடியா மற்றும் சோப்னி ஜோடியா ஆதாித்தனர். இது பாரம்பாிய சிறுதானியங்கள் வளர்க்கும் பகுதிகள், வணிக நிறுவனங்களுக்கு தேவையான வணிகப்பயிர்களுக்கு எப்படி மாறியது என்பதை குறிக்கிறது.

சிறுதனியங்களை ஊக்குவித்தல்-அடிப்படையில் எதற்கான தீர்வு
சிறுதானியங்கள் பரப்புவது அதிகாித்து வருகிறது. பல இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் இதன் முக்கியத்துவம் எதிரொலித்தது. எனினும்,அடிப்படையில் இந்த முக்கிய ஆதாரத்தை அரசு, தனியார் பிரிவு மற்றும் சமூக அமைப்புகளால் சிறிதளவு பாதுகாத்து வருகின்றனர். சென்ற வருடம் அரசு, சிறுதானியங்கள் சாகுபடி செய்வதற்கு இருபொட்களான தண்ணீர் வசதி மற்றும் விதை ஆகியவை வழங்குவதாக அரசு உறுதியளித்தது. சாதாரணமாக, சிறுதானியங்களுக்கு குறைவான இரசாயன இடுபொருள் மற்றும் பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஆகையால் பூச்சிகொல்லிகளை தவிர்ப்பதற்கும் அல்லது இதன் பயன்பாட்டை குறையும் என்பதால் சிறுதானியங்கள் கீழ் நிலங்கள் அதிகாிப்பதற்கு இது ஒரு சிறந்த அணுகுமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. பயிர்களை வணிக பொருட்களாக முழுமையாக யூகிக்காமல், அதன் சாகுபடி செலவு அதிக வெளியிடு பொருட்களோடு அதிகாிப்பதற்கு மாறாக இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டது. எனினும் இந்த பயிர்களுக்கு உரம், பூச்சிக்கொல்லிகள் போன்ற வேளாண் இடுபொருட்களின் தேவை குறைவு என்பதால், உற்பத்தி நிறுவனங்கள் பாரம்பாியத்தோடு இணைந்த இந்த பொருட்களை விற்பதற்காக, சிறுதானியங்களை சாகுபடி செய்வதில் சிறிதளவே ஆர்வம் காட்டினர். மற்றொருபுரத்தில் சமயங்களில் இந்தப் பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகளை இழிவுபடுத்துவர். ஆகையால் வணிக நிறுவனங்கள் இதில் ஈடுபடாததால், பொது மன்றங்களில் இந்த பயிர்கள் சாகுபடி செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதும் பலவீனமாக மாறியது.

பாரம்பாியமாக, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இயற்கை அணுகுமுறையை பயன்படுத்தி விவசாயிகள் வரிசையை மேம்படுத்துகின்றனர். இன்று, நகரப்பகுதிகளில், ஆரோக்கியம் உயர்த்தும் உணவு என்ற சாதகமான பண்பு இந்தப் பயிரை பிரபலமடைய செய்து வருகிறது. இது மேலும், இதன் நுகர்வு மிகவும் பிற்படுத்தபட்டதன்மை மற்றும் ஏழ்மையோடு இணைப்பதால், முற்காலத்தை ஒப்பிடுகையில் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு சென்று முக்கிய உணவாக கருதப்படுகிறது. சிறுதானியங்கள் சாகுபடியை முழுமையான வணிக அணுகுமுறையில் எடுத்துக்கொள்வதினால், மெதுவாக சில இரகங்களை ஒரினப்பயிர் சாகுபடிக்கு மாறிய மற்ற தானியப் பயிர்களான கோதுமை, அரிசி மற்றும் மக்காச் சோளம் மாறிவிடும். இதனால் பயிர் பல்வகைமை மற்றும் சீதோஷன மாற்றங்களால் புதிதாக உருவாகும் பயிர்கள் ஆகியவை அழிய வாய்ப்புண்டு. எந்த இயற்கை சீற்றங்கள், நோய் மற்றும் பூச்சித் தாக்குதலால் பயிர் அழியும் அபாயம் இருக்கிறது. ஆதலால் இதனுடன் நில இனங்கள் மேம்படுத்துவது அவசியமாகும்.

முக்கிய மாற்றத்தின் தேவை
ஓவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சத்துக்கள் அளிக்கக்கூடிய அரசு கொள்கைகள், மறைமுகமாக சிறுதானியங்களை ஊக்குவிப்பது குறைந்து வருகிறது. மேலும் பல்வேறு வகையான சத்து குறைபாடு ஏற்படும் அதே சமயத்தில் இந்த பகுதியில் பசி நிலை அதிகாிக்கும். எனவே இந்த பகுதியில் நல்ல சந்தைப்படுத்தும் அணுகுமுறையோடு உள்ளூர் சிறுதானிய இரகங்களை சாகுபடி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பரப்புவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் சிறந்த அணுகுமுறை முக்கியமாகும். அதனால் சிறுதானிய சாகுபடியை பணப்பயிர்களுடன் ஒப்பிடலாம். மேலும் இதனுடன் மரப்பயிர்கள் சேர்த்தால் விவசாயிகள் பயனடைவர். மேலும் ஏழ்மையிலிருந்து வெளிவருவதற்கு விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதால் இது நன்கு பாராட்டப்பட்டது. எனினும் சீதோஷன மாற்று சூழ்நிலையில், சிறுதானிங்களை தொடர்ந்து சாகுபடி செய்வதன் முக்கியத்துவத்தை குறித்து தற்போது விவசாயிகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பது முக்கியம். பழங்குடியின விவசாயிகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பிற்கு சிறப்பாக பொருந்தும் கலப்புக் பயிர் மற்றும் பயிர்ச் சுழற்சி முறைகளை பாரம்பாியமாக சாகுபடி செய்து வந்தனர். இந்த பயிர் முறைகள், நேரம் மற்றும் சீதோஷன மாற்றங்களில் பாிசோதனைக்கு உறுதுணையாய் இருந்தது. இம்மாதிரியான பாரம்பாிய பயிர் முறைகளுக்கு உறுதுணையாய் இருந்து இவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியான வேளாண்மை முறைகள் வாழ்வாதாரம் உள்ளூர் சீதோஷன மாற்று பிரச்சனைகளை தீர்க்க இது ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.

மரம் வளர்ப்பு விவசாயிகளுக்கு நல்ல வணிக உதவி அளிக்கும் முறையாக இருக்கும், அதே சமயத்தில், சீதோஷன மாற்றங்கள் மற்றும் பூச்சித் தாக்குதல் மிக மோசமாக பாதிக்கிறது. அதனால் சாியான மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களை ஏற்படுத்துவது அவசியம். ஆகையால் மரங்கள் மற்றும் சிறுதானியங்கள் ஆகிய இரண்டும் வளர்க்க வேண்டும். இல்லையெனில் குறுகிய கால நிதி இலாபத்திற்கும், சீதோஷன மாற்றத்தினால் பொிய நஷ்டம் எதிர்காலத்தில் சந்திக்கும் நிலை ஏற்படலாம். சீதோஷன மாற்றத்தின் பாதகமான தாக்கங்களை சந்திக்கும் அதே நேரத்தில் மரப்பயிர்களின் இழப்பு மற்றும் சிறுதானிய இரகங்களின் அழிவு ஆகியவை விவசாயிகளின் பிரச்சனைகளை மேலும் அதிகாிக்கும்.

சீதோஷன மாற்றத்தை எதிர்த்து போராடுதல் மற்றும் நெடுநாள் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது ஆகிய இரண்டிலும் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. அதைப் பொருத்தவரையில் இந்தப் பழங்குடியின பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் சிறுதானியங்கள் மத்தியில் உள்ள இணைப்பு அத்தியாவசமானது. இதனை உடைக்க முடியாது. ஆரோக்கியத்திற்கு மாற்றாக சொத்து என்பதற்கு மத்தியில் மெல்லிய கோட்டை தௌிவாக விவரிப்பது அவசியம். அதனால் இந்த பகுதியில் ஆண்டு முழுவதும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் மேலும் பல ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைகளில் விழாமல் தடுப்பது.

முன்னே செல்லும் வழி
மலை மற்றும் குன்றுகள் கொண்ட நில அமைப்பில் 30 மாவட்டங்களை கொண்டது, ஒடிசா. இந்த நில அமைப்பிற்கு உகந்தது கேழ்வரகு மற்றும் இதர சிறுதானியங்கள் சாகுபடியாகும். இந்த பகுதிகள், ஊட்டச்சத்துக்கள் தேவையிருக்கும் பழங்குடியினர்களின் வீடாகும். ஆகையால், இந்த பயிர்களை பரப்புவதும், ஊக்கப்படுத்துவதும் உள்ளூர் சமூகங்களுக்கு அதிகளவில் பயன்தரும்.
தற்போதைய கொள்கைகள் மற்றும் செயல்பாடு பேச்சளவில் மட்டும் சேவை இருப்பதால் , சிறுதானியங்கள் சாகுபடி குறைந்துள்ளது. இந்த பயிர்களின் பரப்பளவு அதிகாிக்க எந்த ஒரு உயிர்ப்பான நடவடிக்கையோ அல்லது அழியும் நிலையில் உள்ள இரகங்கள் உயிர்ப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்தால், சீதோஷன மாற்றத்தினால் ஏற்படும் உணவு பற்றாகுறையை எதிர்த்து போராடுவதற்கு, நாம் விலையுயர்ந்த ஆதாரத்தை தவற விட்டுவிடுவோம். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில். நாங்கள் சில கொள்கை மாற்றங்களை முன்வைக்கிறோம். இது இந்த பகுதியில் பாரம்பாியமாக சிறுதானியங்கள் தொடர்ச்சியாக வளர்க்க உதவும் (அட்டவணை 3 ஐ பார்க்க).
இந்த கொள்கை விருப்பங்கள் உடனடி சீதோஷன மாற்றங்கள் பார்வையில் தேவையான நில இனங்களை நிலத்திலேயே உருவாக்கி, மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இங்கு நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை, சத்துக்களின் ஆதாரமாக இருக்கும் சிறுதானியங்களை ஏழைகளுக்கு கிடைக்க செய்வதன் மூலம் ஓரளவிற்கு குறையும். ஆரோக்கிய சமூகத்தை உறுதிப்படுத்த, பசியை ஒழிப்பது இறுதி குறிக்கோளாக எடுத்துகொள்ள முடியாது என்பதை புரிந்துகொள்வதற்கு இதுவே சாியான தருணம். இந்தப் பகுதியில், ஊட்டச்சத்து குறைபாடு சமமான முக்கியத்துவம் அளிப்பது அவசியம். இந்த பார்வையில், சிறுதானியங்கள் சாகுபடி சார்ந்த அரசு கொள்கை மாற்றங்களை துவக்குவதற்கு இதுவே சாியான தருணம்.
மானிய விலையில் அரிசி கிடைப்பதால், சிறுதானியங்கள் உண்ணுதல் குறைவது மட்டுமில்லாமல் அதன் சத்துக்களின் அளவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 1 – சிறுதானியங்களிலிருந்து தையல மரத்திற்கு மாற்றிய நிலத்தின் தாக்கம்.

 
காரணிநிகழ்எதிர்
சுற்றுச்சூழல் பாதியோ அல்லது முழுமையாகவோ வறட்சி நிலவுகிறது. ஆனால் உற்பத்தி கிடைக்கும்சீதோஷன மாற்றத்தினால் வறட்சி தூண்டப்பட்டு பணியும் நிலை ஏற்படும்
நிதிவிவசாயிகளுக்கு அதிக இலாபகரமாக இல்லைபண்ணையிலிருந்து அதிக வருமானம் ஈட்டக்கூடிய நிலை ஏற்படும்
சத்துக்கள்விவசாய சமூகத்தின் சத்துக்களின் நிலையை மேம்படுத்துகிறதுஉற்பத்தி பெரும்பாலும் சந்தைக்கு செல்கிறது, உள்ளூர் மக்களுக்கு தேவையான சத்துக்களுக்கு குறிப்படும் அளவிற்கு பங்கு இல்லாமல் போகலாம்.
சமூகம் கலாச்சாரத்தோடு இணைந்து உணவு வழக்கங்கள் மற்றும் பாரம்பாியத்தோடு இருக்கிறதுஉணவு வழக்கங்களில் மாற்றமடையலாம். மேலும் புதிய உணவை ஏற்றுக்கொள்வது.
பொருளாதாரம்உடனடி சந்தை இருக்காதுவிளைபொருட்களுக்கான சந்தை இருக்கும்.

 

பெட்டி செய்தி – 1
காசிப்பூர் வட்டத்தில், சிரிகுடா கிராமத்தை சேர்ந்தவர் திரு.பல்ராம் பித்யா. இவரின் நான்கு பெண் குழந்தைகளை திருமணம் செய்யும் பொறுப்பில் உள்ளார். இதற்கு பணம் தேவை. கேழ்வரகு சாகுபடியிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவு. ஆகையால் அவருக்கு சொந்தமான முப்பது ஏக்கர் நிலத்தில், 20 ஏக்கர் நிலம் கேழ்வரகு சாகுபடி செய்வதிலிருந்து தைல மரம் வளர்ப்பதற்கு மாற்றினார். இது மூன்று வருடங்களில் ஒரு ஏக்கருக்கு ரூ. 70,000 அவருக்கு கிடைக்கிறது. இது அவருக்கு பொிதும் உதவும். மற்றொருபுரத்தில் கேழ்வரகு சாகுபடி அவருக்கு 100 கிலோவே ஏக்கருக்கு மகசூல் கிடைக்கும். அதனால், இந்த மாற்றம் நியாயமாகவும், இலாபமாகவும் இருக்கும் என்று உணர்ந்தார். கடந்த வருடங்களில் கேழ்வரகின் பல இரகங்களை அவர் சாகுபடி செய்தார். காலம் செல்ல செல்ல தற்போது அவர் மடை மஸ்கிலி இரகம் மட்டுமே சாகுபடி செய்கிறார். இது வீட்டு உபயோகத்திற்கு போதுமானதாக இருந்தது. சில நேரங்களில் கிடைக்கும் அதிக விளைபொருட்கள் சந்தையில் விற்கப்படும்.

அட்டவணை 2 – கொராபுட் பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள கேழ்வரகு இரகங்கள்

 இரகம்நிலைகாரணம்
சின்ன கனி மாண்டியாசாகுபடி இல்லைமரத் தோப்பிற்கு நிலத்தை மாற்றுதல்
ஜனா மாண்டியாசாகுபடி இல்லைதைலம் மற்றும் மரத்தோப்பிற்கு நிலத்தை மாற்றுதல்
டிலிங்கா மாண்டியாசாகுபடி இல்லைகருப்பு நிறம் என்பதால் குறைந்த சந்தை விலை
முகுடா மாண்டியாசாகுபடி இல்லைகருப்பு நிறம் என்பதால் குறைந்த சந்தை விலை
கடாரா சிங்சாகுபடி செய்யப்படுகிறதுநல்ல உழவியல் மற்றும் உணவு தரங்கள் உள்ளன.
மடை மஸ்கிலிசாகுபடி இல்லைநல்ல உழவியல் மற்றும் உணவு தரங்கள் உள்ளன.

 

அட்டவணை 3 – கொள்கை மாற்றங்கள் மற்றும் சாத்தியமான வெளிப்பாடுகள்

 
அரசு செயல்பாடுசுற்றுச்சூழல்/ வேளாண்மையில் சாத்தியமுள்ள தாக்கம்ஆரோக்கிய நிலையில் ஏற்படும் தாக்கம்உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துதல்
அரசு மற்றும் விதை உற்பத்தி கம்பெனிகள், நில இனங்களை கண்டிப்பாக மேம்படுத்த வேண்டும்பல்வகைமையை மேம்படுத்த உதவுகிறது சிறந்த சக்தி மற்றும் சுவையான தரங்களை தேர்வு செய்வதற்காக சாத்தியக்கூறுகளை உருவாக்குகிறதுநில இனங்கள் மேம்படுத்தும் பளுவை விவசாயிகளிடமிருந்து இறக்கப்பட்டது.
அதிக பரப்பளவை கொண்ட விவசாயிகள் தோப்புப் பயிர்கள்/ பணப்பயிர்களுக்கு ஒதுக்கும் நிலத்தின் அளவு விகிதாச்சார ரீதியில் குறைந்துள்ளதுசுற்றுச்சூழலில் ஆரோக்கிய சமநிலையை ஊக்குவித்து, பல்வகைமையை உறுதி செய்தல்.சத்துக்களை உறுதி செய்கிறதுஅதிக வருமானம் ஈட்டி விவசாயிகளுக்கு உதவுகிறது
தனியார் பிரிவு நிறுவனங்களை சிறுதானியங்களை ஊக்குவிப்பதற்கு ஈடுபட செய்தல். உதாரணமாக, சிறுதானிய அடிப்படை உணவு பொருட்களை ஹார்லிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய வேண்டும்ஓரினப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கலாம். நிலஇனங்களை நிறுவனத்தால் பாதுகாக்க வேண்டும்.பெண்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும், கிராம பகுதிகள், நகர உணவு பழக்கங்களுக்கு மாறியதால் சிறுதானிய நுகா;வு உறுதிப்படுத்துகிறது.விளைபொருட்களுக்கு சிறந்த சந்தை
மத்திய உணவு திட்டத்தில் சிறுதானியங்களை சேர்த்தல் மேலும் உள்ளூர் ஆதாரங்களை கொள்முதல் செய்தல்உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துதல்குழந்தைகளுக்கு சிறந்த சத்துக்கள் அளிக்க உதவுகிறது, மேலும் சிறுதானிய உண்ணும் பழக்கத்தை நிலைபடுத்த உதவுகிறதுவிளைபொருட்களுக்கு உடனடி சந்தை இருக்கிறது. விவசாயிகள் விளைபொருட்களை விற்பதற்கு கஷ்டபட வேண்டியதில்லை.

ரஞ்சித் கே. சாஹு, ரவி ஷங்கர் பெஹரா மற்றும் ஸ்ரீனிபாஷ் தாஸ்


Ranjit K Sahu is a freelance writer currently located
in Virginia, USA
E-mail: sahurk9@gmail.com

Ravi Shankar Behera
Independent Freelance Development Consultant
based in New Delhi
E-mail: rsbehera@rediffmail.com

Srinibash Das
District Coordinator,
Agragamee,
Rayagada – 765001
Odisha
E-mail: dassrinivash@gmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2017, வால்யூம் 19, இதழ் 1
அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...