கடினமான தானியங்களிலிருந்து ஆரோக்கிய உணவுகளுக்கு ஆய்வு செய்வதற்கான நேரம்


ஓடிசாவில் கொந்த் பழங்குடியின சமூகங்களின் உயிர்-கலாச்சார முறையின் அங்கமாக சிறுதானியங்கள் திகழ்கின்றன. கொந்த் சமூகங்கள் பகிர்தல் மற்றும் அக்கறை காட்டுதல் நிலைத்த விழாவை அளிக்கும் பூமியுடன் அனைத்து வாழ்வின் வடிவங்களுடன் உள்ள உறவை கொண்டாடுதல் ஆகிய கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தல். வெளியிலிருந்து ஊக்கப்படுத்தும் எந்த முயற்சியும் பாரம்பாிய கலாச்சாரங்களில் ஆழமாக சென்று சமூக நலனை நிலைக்க செய்து ஊக்கப்படுத்துகிறது.


பகுதியின் மத்தியில் தனிப்பயிர் தையிலமரச் சாகுபடி,பருத்தி மற்றும் கிராமமாக கந்து குடா இருந்தது. இது வேளாண்மை – உயிர்ச்சூழல் பிரதிநிதியின் களஞ்சியமாக இருந்தது. கந்து குடாவை சேர்ந்து கொந்த் விவசாயிகளை,ஆதி கும்ருகா ‘ என் வயலில் விளையும் எந்த பொருளும் எனக்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. இது என் குடும்பம், எங்கள் சமூகம், என் வயலை சந்திக்கும் பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிற்கு உணவு கிடைக்கிறது. தற்போது எல்லாரும் முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர்.

கொந்த் வழி பயிர் சாகுபடி
கொந்த் வழி பயிர் சாகுபடியில், எல்லோரும் நிலத்தை பயன்படுத்தும் வண்ணம் உறுதிசெய்யப்படுகிறது. குடும்பத்தின் அளவை பொறுத்து நிலம் ஒதுக்கப்பட்டது. ஒருவர் பொிய குடும்பத்திற்கு உணவளிக்கும் நிலையில் இருந்தால், அவர்கள் பொிய நிலம் பெறுவர். அனைத்து வீடுகளிலிலும் முன்பட்டத்தை விதைகளை கவனமாக சேகாிப்பர். அனைத்து வீடுகளால் சேகாிக்கப்பட்ட விதைகளை, மையப்பகுதியில் வைத்து, எல்லா குடும்பங்களுக்கும், விதைப்பதற்கு சமமாக விநியோகம் செய்யப்பட்டது. யாரேனும் விதைகளை சேகாிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏனென்றால் கொந்த் ஆதிவாசிகள் மத்தியில் விதைகள் எல்லோருக்கும் உண்டு. இந்த வாழ்க்கை முறையில், எல்லோரும் நிலம் மற்றும் விதைகள் வைத்திருந்தனர். மேலும் விதைப்பும், அறுவடையும் ஒன்று சேர்ந்து செய்யப்பட்டது. கொந்த் சமூகங்கள் பொது கிராம நிதி ஒன்று பராமாித்து வந்தனர். இந்த நிதி யாருக்கு தேவையென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கிராம நிதியானது சமூகத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்டது. இது உணவு தானியங்களாகவும், அல்லது சமயங்களில் பணமாகவும் சேகாிக்கப்படுகிறது. மேலும் இது ஒருவரின் தேவையின்போது பயன்படுகிறது. இங்கு நாம் என்ன காணலாம் என்றால் கொந்த் சமூகத்தில் வாழ்வது, ஒருவருடைய கவலைகளை மற்றொருவர் பகிர்வதும், மற்றொருவருடைய நலனில் அக்கறைக் காட்டுவது என்ற பண்பாட்டை சுழன்று வரும் வழியில் வாழ்கின்றனர்.

கடினமான தானியங்களிருந்து ஆரோக்கிய உணவுகளுக்கு
வரலாற்றிலேயே சிறுதானியங்கள் பலபயிர் சாகுபடி முறையில், வேளாண்மை உயிர்ச்சூழல் முறைகளை பயன்படுத்தி வளர்க்கப்பட்டது. கொந்த் ஆதிவாசிகள் போன்ற சமூகங்கள், சிறுதானியங்களை வெறும் தானியங்களாக நினைப்பதில்லை.இது தலைமுறைகளாக சமூக சேகாிப்பு தனித்துவத்தின் களஞ்சியமாக பிரதிபலிக்கிறது. மலைகள், நிலங்கள், வானம், வளங்கள் மற்றும் அவர்களின் வேளாண்மை தொழில்நுட்பங்களை வணங்குவதால் பூமித்தாயின் மீது (தாினி பெறு) அவர்கள் வைத்திருக்கும் மாியாதை மற்றும் நன்றியுடையவராக இருப்பது பிரதிபலிக்கிறது. அவர்களை பொருத்தவரையில், சிறுதானியங்கள் பல வகை ரக வேளாண்மைக்காக நின்று, நிலைத்த தன்மையையும், அவர்களிடையே வலிமையையும் பெற்றிருக்கின்றனர்.

1960 களில் பசுமை புரட்சி இந்திய வேளாண்மையில் புகுத்தியபோது சிறுதானிய சாகுபடியில் உள்ள நிலங்கள் மோசமாக குறைந்தது. ஏனென்றால் அனைத்து கொள்கையும் அரிசி மற்றும் கோதுமை விவசாயிகளுக்கு சாதகமாக இருந்தது. வீரிய ஒட்டு விதை, இரசாயன இடுபொருட்களான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை ஊக்கப்படுத்தப்பட்டது. சிறுதானியங்களை கடினமான தானியங்களை என்றும் கூறப்படும் பொருள் ஏழைகளால் மட்டுமே உண்ணக்கூடியது. இதே தானியங்கள் தற்போது ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது. சீதோஷன மாற்றத்தினால் உணவு பாதுகாப்பில் ஏற்படும் மாற்றத்தை சந்திக்க வெள்ளி குண்டாக பார்க்கப்படுகிறது.

அதிக உயிர்ச்சூழல் வேளாண் அறிவு கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் மேல் வெளிப்படையான உலகப்பார்வை உள்ளது. தற்போது வேளாண்மையில் முன்னுதாரணமாக, கலாச்சாரத்தை, வேளாண்மையை கொண்டு மாற்றுதல், தொழிலை- வேளாண்மை தொழிலாக முரணாக உள்ளது. பல வழிகளில் ஒன்றான வேளான் தொழில் மாதிரி, சிறுதானியங்களைச் சுற்றி புதிய கண்டுபிடிப்புகள் மூலம் இந்த தானியம் கிராமத்திலிருந்து நகர பகுதிக்கு வழங்க ஊக்குவித்து வருவதை ஒரு வடிவம் பெறுகிறது. சா;க்கரை, எலும்பு சம்மந்தமான நோய்கள் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றினால் பாதிக்கப்படும் நடுத்தர நகர நுகர்வோர், சிறுதானியங்கள் ஆரோக்கிய உணவாக உண்டு ஆறுதல் தேடுகின்றனர். மேலும் எந்த சிறுதானிய இரகங்கள் நகர சந்தைகளில் அதிக வரவேற்பு பெறுகிறதோ அதனை ஊக்கப்படுத்துகின்றனர். சிறுதானிய பல்வகைமை சுருங்குவதனால் ஏற்படும் உள்ளார்ந்த ஆபத்தும், பண்ணை விரிதிறனை பலவீனமடைதல் ஆகியவை சிறுதானிய விவசாயிகள் பாதிப்படைவதற்கு பங்களிக்கிறது, குறிப்பாக சீதோஷன மாற்றுச்சூழலில் இது முக்கிய பங்களிக்கிறது.

சில முக்கிய கஷ்டங்கள் /கவலைகள்
கொந்த் சமூகத்தின் வாழ்க்கையின் வழியில் தற்போது பதட்டம் ஏற்படும் வண்ணம் மிக மோசமான அச்சுறுத்தல் நிலவி வருகிறது. சிறுதானிய சாகுபடி கொந்த் சமூகத்தின் முக்கிய அடையாளத்தின் ஒன்றாக இருக்கிறது. இதன் சாகுபடியை சுற்றி, விதைப்பு, அறுவடை மற்றும் விதை பகிரும் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து மக்கள் சந்தித்து, பாடி, ஆடி, மற்றும் அவர்களின் உயிர்ச்சூழல் மற்றும் ஒற்றுமையை கொண்டாடுகின்றனா;. இந்த ஒற்றுமை அவர்களுடைய வாழ்க்கை பாதையில் நிலவி வரும் அச்சுறுத்தல்களான வனத்தை அழித்தல், வலுக்கட்டாயமாக ஏற்பட்ட இடமாற்றம், இளைஞா;களுடைய இடமாற்றம் மற்றும் பல இதர வழிகள் அவர்களுடைய வேளாண்மையில் நஷ்டமடைந்தால் அவர்கள் மத்தியில் இடைவெளி ஏற்படும். மேலும் அவர்களுடைய வழக்கத்தின் மூலமாக உதவியும் குறையும், அவர்களின் குழந்தைகள் இந்த அறிவு மற்றும் உணவு உற்பத்தி, சேகாிப்பு மற்றும் ஒருவரோடு ஒருவர் பகிர்தல் ஆகியவற்றில் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நுகர்வோர் கலாச்சாரங்களை மையமாக வைத்து சிறுதானியங்களை செய்வது. கலாச்சார ஒருங்கிணைப்பிற்கு சிறிதும் மாியாதை இல்லாமலும், வாழ்க்கை நிலைப்பாட்டிற்கான காரணங்கள், இதனை புதுப்பிப்பதற்கான எந்த பங்கும் அளிப்பதில்லை. இது குறித்து பல கேள்விகள் இருக்கின்றன. பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் உண்ணுவதிலிருந்து சிறுதானியங்கள் உண்ணுவதற்கு மாறியதால், வேளாண்மையிலிருந்து வேளாண்மை தொழிலுக்கு மாறியது பிரச்சனைகனை சந்திக்கும்திறன் இன்றியமையாததாக இருக்குமா? இது விவசாயிகளின் அறிவு, விதைகள் மற்றும் நிலம் கட்டுபாடில்லாமல் இழக்கும் பிரச்சனையை தீர்க்க முடியுமா.
பி. சாய்நாத், எழுதிய சமீபத்திய தலைப்புகளின் ஒன்றில், கிராமங்களில் மக்களின் தாகம் குறைந்திருக்கிறதா? என்று கேட்கிறார். (இந்திய தண்ணீர் போர்ட்டல், 2017) வறட்சி தாக்கி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட மஹாராஷ்டிராவில், ஒவ்வொரு தளத்திலும் நீச்சல் குளத்தோடு கட்டிடங்கள் கட்டப்படுகிறது, தண்ணீர் பற்றாகுறையால் விவசாயிகள் நிலங்களை கைவிட்டனர் என்று அவர் கூறினார். இந்தியாவில் எந்த பெருநகர பகுதியில் உயர்ந்த நிலையை தொடர்ந்து தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய வாழ்க்கை முறையை வாழ்கின்றனர். இதனால் அதிகளவு குப்பைகளை உருவாக்குகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு கழிவுகளை வெளியிடும் தொழிற்சாலை பொருட்கள். யாராக இருந்தாலும் வெறும் சிறுதானியங்களை உண்ணுவது மட்டும் அவர்களின் நலன் உறுதிப்படுத்துகிறது என்ற எண்ணம் பொிதும் தவறு. நமது அதிகப்பட்ச உயிர்ச்சூழலின் கால்தடம், சமமற்ற ஆதாரங்கள் அதிகளவில் இருப்பது பிரதிபலிக்கிறது.ஆனால் மிக முக்கியமாக எப்படி நமது வாழ்க்கை, நமது விவசாயிகளின் உயிர்ப்பு அச்சுறுத்துகிறது என்பதை காட்டுகிறது. இந்த தருணத்தின் தேவை என்னவென்றால் நமது தேர்வுகளை ஆராய்ந்து, சமூக நலனில் வேறூன்றியிருக்கும் வேளாண்மையின் கலாச்சாரத்தை புதுப்பிப்பதே ஆகும்.

முன்னேறிச் செல்லும் வழி
இந்த கலாச்சாரத்தை தாண்டி ஒன்றாக உண்பது, ஒன்றாக விதை வினியோகத்தை கொண்டாடுவது சமம் என்ற ஆழ்ந்த உணர்வாகும். பல்வேறு கருத்துகள் இந்த காலத்தில் சமமற்ற நிலையை பரவுவதற்கு மாறாக- சமூகத்தில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை இது உறுதிபடுத்துகிறது. மறைந்திருக்கும் நம்பிக்கை என்னவென்றால் ஒருவரது நலன், மற்றொரு ஆழ்ந்த சார்புத்தன்மை இருக்கிறது. அதனால்தான் பறவைகள், பூச்சிகள், உயிர்ச்சூழல் மற்றும் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் மேல் அக்கறை இருக்கிறது. சிறுதானிய புதுப்பிப்பும், சமூக நலனில் அக்கறையும் துண்டிக்கப்பட்ட நிலை நெடுதூரம் செல்லாது. இது தொடர்ந்தால் நமது விவசாயிகள் மற்றும் நமது உயிர்ச்சூழலுக்கு நேர்மையாக இருக்க நாம் தவறி வருகின்றோம். ஆத்மாவாக கருதும் உயிர்ச்சூழலை நாம் ஏற்கனவே சேதம் செய்து வருகிறோம்.

கல்பதாரில் உள்ள வயதான பெண்மணியை கேட்கும்போது, ஒருவர் 20 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய வேண்டுமென்றால், மேலும் அந்த மனிதன் ஆற்றல் பெற்றிருந்தால், அக்கறையையும் தாண்டி, எந்த காரணமும் இல்லாமல் ஆட்சேபனை செய்ய முடியாது.மேலும் எந்த நிகழ்விலும் ’நமக்கு தொியும் கடைசியாக நாம் அனைவரும் உணவுகளை ஒன்றாக உண்ணுவோம்” என்று கூறினர்.
தவறான நவீன தன்மையின் கடவுள்முன் வணங்க மறுக்கும் கொந்த் போன்ற பாரம்பாிய சமூகங்களுக்கு நாங்கள் மனமுவந்து நன்றியை தொிவித்து கொள்கிறோம். அவர்கள் பன்முக தன்மை கொண்ட தாராளமாக நிறைந்திருக்கும் பூமியை எப்போழுதும் கொண்டாடுகின்றனர். அவர்களின் வயல்களை புரட்டிபோடும் சிறிய எறும்புகளைக் கூட மதிக்கும் பூமி, அதிகமாக மகிழ்ச்சியடையும் வண்ணம் மனிதர்களுக்கு அதிகம் அளிக்கிறது.
சிறுதானியங்களை வெறும் தானியங்களாக நினைப்பதில்லை.இது தலைமுறைகளாக சமூக சேகாிப்பு தனித்துவத்தின் களஞ்சியமாக பிரதிபலிக்கிறது.

தேப்ஜீத் சாரங்கி மற்றும் காவ்யா சௌத்ரி


Debjeet Sarangi and Kavya Chowdhry
Living Farms
Plot No.1181 / 2146, Ratnakarbag-2,
Tankapani Road
Bhubaneswar - 751018
Odisha - India
E-mail: livingfarms@gmail.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2017, வால்யூம் 19, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...