சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் – உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்


சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான நேரம் மற்றும் மோசமான வானிலை சூழல்களிலும் தாங்கி நிற்கிறது. இந்த வேளாண் அமைப்புகள் போல் நிலைக்கச் செய்வது பழங்குடியின சமூகங்கள் மத்தியில் நிலவிவரும் ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுவது மிக முக்கியமாகும்.


ஓடிசாவில் உள்ள பாரம்பாிய சமூகங்களின் அன்றாட உணவின் ஒரு அங்கமாக சிறுதானியங்கள் இருக்கிறது. சிறுதானியப் பயிர்கள் சீதோஷணத்தை தாங்கக்கூடிய, மானாவாரி சூழ்நிலையில் குறைந்த தண்ணீரில் வளரக்கூடியது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத் தேவையான உணவு உத்திரவாதம் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக இருக்கின்றன.

பாரம்பாிய சமூகங்கள் மித மற்றும் மேட்டு நிலங்களில் மலையின் சாிவை ஓட்டி இடமாற்று சாகுபடி செய்வது பழக்கத்தில் இருக்கிறது. இங்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை பயிர் சாகுபடி செய்வர். குடும்பத்திற்கு தேவையான உணவிற்காக பெரும்பாலான விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக சாகுபடி செய்து வருகின்றனர். உள்ளூர் சந்தையில் வெறும் 10-20 சதவிகிதம் பண்ணை விளைபொருட்கள் விற்கப்படுகிறது. பாரம்பாியமாக, கலப்பு சாகுபடி மற்றும் பயிர் சுழற்சியும் பின்பற்றி வந்தனர். இது உள்ளூர் பயிர் உயிர்ச்சுழலுக்கு உகந்ததாக இருக்கிறது. இந்தப் பயிர் வடிவமைப்புகள் மோசமான வானிலை காரணிகள் மற்றும் நேரங்களில் நிலைத்திருக்கிறது. தின உணவு முறையின் மாற்றங்களை கடந்த 20 வருடங்களை கண்டதில், பெரும்பாலான குடும்பங்கள் அரிசியையே தேர்வு செய்கின்றனர். ஏனெனில் பொது வினியோக அமைப்பில் சுலபமாக கிடைக்கிறது. தேவைக்காக சாகுபடி செய்வதைத் தாண்டி உள்ளூர் சமூகங்கள், விறகற்ற வன பொருட்களுக்காக வனத்தை சார்ந்திருக்கின்றனர். கடுமையான இடம் பெயர்தல் என்பது கந்தம்மாளில் வாழும் பெரும்பாலான குடும்பங்களின் உண்மை நிலை இதுவாகும்.

ஒரு முயற்சி
2012 ஆம் ஆண்டு, நிர்மான் உள்ளூர் பாரம்பாியமான சமூகங்களோடு, கலப்பு, உயிர்பல்வகைமை மற்றும் நிலைத்த வேளாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் உயிர்ச்சூழல் சாகுபடி ஆகியவற்றை ஊக்கப்படுத்தி பணிசெய்ய துவங்கியது. முதல் படியாக, பங்கேற்புடன் கூடிய கிராம ஆய்வுப் பயிற்சியை அனைத்து கிராமங்களிலும் நடத்தி, அடிப்படைத் தகவல்களை சேகாித்தனர். குடும்பத்தின் வருமானம், பாரம்பாிய வேளாண் தொழில்நுட்பங்களை பின்பற்றும் நிலை, விதை பல்வகைமையின் நிலை போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்களை சேகாித்து, சமூகங்களிடம் பாரம்பாிய வேளாண் தொழில்நுட்பங்களை புதுப்பிப்பதற்கு ஊக்கப்படுத்த, கிராம அளவிலான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாரம்பாிய பயிர் பல்வகைமை அழிந்துவருவது, பாரம்பாிய வேளாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் நிலைத்த வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடினர்.

நயகார் மற்றும் கந்தம்மயாள் மாவட்டங்களில் சில பெண்கள், அவர்கள் பகுதிகளில் சிறுதானிய சாகுபடியில் அவர்கள் சந்தித்த சவால்களை தௌிவாக விளக்கினர். சிறுதானிய சாகுபடி பகுதிகள் மிக மோசமாக குறைந்து, இந்தப் பயிர்களின் மகசூலும் குறைந்தது. கடந்த 20 வருடங்களில் மொத்த சாகுபடி பகுதிகளில் 25-30 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் மூன்றில் ஒரு பங்கு பயிர் மகசூலும் குறைந்துள்ளது. உள்ளூர் பாரம்பாிய இரகங்களின் விதைகள் கிடைக்காததாலும், மலைப்பகுதியில் இடமாற்று சாகுபடி செய்வது வனத்துறையால் தடுக்கப்படுகிறது. அதிகளவில் காடுகள் அழிப்பது மற்றும் மண் அரிமானம் அதிகாிப்பது போன்றவை பெரும்பாலான பிரச்சனைகளில் சிலவாகும்.

திட்டம் துவங்கிய முதல் வருடத்தில் சிறுதானிய அடிப்படையிலான கலப்பு சாகுபடி குறித்த பயிற்சிகள் நடத்தப்பட்டது. இரண்டாவது வருடத்தில் நிலைத்த வேளாண்மை தொழில்நுட்பங்கள், பாரம்பாிய கலப்பு மற்றும் உயிர்ப்பல்வகைமை சாகுபடி அமைப்பு, விதை பல்வகைமை மீண்டும் சேமிக்கும் தேவையை வலியுறுத்தி கிராம அளவிலான பயிற்சிகளும் நடத்தப்பட்டது. உணவு உற்பத்தி அமைப்பு மற்றும் பாரம்பாிய வேளாண் பல்வகைமையை பாதுகாப்பதற்கு பெண்களின் கட்டுபாட்டை மையமாக வைத்து பெண்கள் வழிநடத்தும் அணுகுமுறைகளாக ஊக்கப்படுத்துவதே எங்கள் தலையீட்டின் முக்கிய வழிமுறையாகும்.

பெண்களுடன் கிராம கூட்டங்கள் நடத்தப்பட்டது. கிராம அளவிலான நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. சுமார் 21 கிராம அளவிலான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களுக்கு, சிறுதானிய அடிப்படை சமூக விதை வங்கிகளை மேம்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தற்போது சுமார் 27 சமூக விதை வங்கிகள் உருவாக்கப்பட்டு, இதன் மூலம் 27 கிராமங்களில் உள்ள 600 விவசாயிகளுக்கு உதவி புரிகின்றது. உள்ளூர் தேர்விற்கு உகந்த 12 பாரம்பாிய பயிர்களின் பல தலைமுறை விதைகளை / பரம்பரை விதைகளை, உள்ளூர் சமூகங்களுக்கு வினியோகித்து ஒரு முறை விதை மூலதனமாக வைத்து பாதுகாப்பதற்கு வழங்கப்படுகிறது. 12 பயிர் இரகங்கள் ஒரு பயிர் பட்டத்திற்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.

பாரம்பாிய கலப்பு சாகுபடி முறையை உயிர்ப்பிக்கும் முயற்சியாக பெண்களை கலப்பு சாகுபடி செய்முறையை பின்பற்றுவதற்கு ஊக்கப்படுத்தகிறது. விதை பல்வகைமையை மீண்டும் சேமிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டது. பெரும்பாலான வழிமுறையில் பெண்கள் வழிநடத்தும் அணுகுமுறையாக ஊக்கப்படுத்தப்படுகிறது.

மேட்டு நிலம் மற்றும் சாிவான நிலத்தில் சிறுதானியங்கள் சாகுபடி செய்வதற்கு சமூகங்கள் மத்தியில் ஊக்கப்படுத்துகிறது. சிறுதானிய குழுத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான சிறுதானியங்களை இந்தப் பகுதியில் சாகுபடி செய்து புதிய இடத்தை நிரப்பியது. காரீப் பட்டத்தின்போது 2-3 மாதங்களுக்கு சிறுதானியங்கள் வளர்க்கப்படுகிறது. மேட்டுநிலங்களில் சாகுபடி செய்யும் பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள் உணவு உத்திரவாதம் அடைய நெல் பயிரிடுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நெல்லில் பாதி நிலத்தை ஊடுபயிராக மாற்றுவது பயிர் பல்வகைமையை அடைவதற்கான உகந்த அளவீடாக கருதப்படுகிறது. பல்வேறு பயிர்களை இணைத்து கலப்புப்பயிர் சாகுபடி செய்வது பிரபலமாகி வருகிறது.

சிறுதானியக் குழுவின் கீழ் பணமாற்று மானியத்தில் பயன்பெற்று, திருந்திய சிறுதானிய சாகுபடி பின்பற்றுவதற்கு, சமூகங்கள் மத்தியில் நிர்மான் ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறுதானிய குழுத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான கிராமங்கள் கேழ்வரகு சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகாித்து, மகசூலும் அதிகாித்துள்ளது.

தொலைதூரத்தில் இருக்கும் பழங்குடியின பகுதிகளில் சூரியக்கதிர் பயன்படுத்தி வடிவமைத்துள்ள சிறுதானிய பதப்படுத்தும் கலன்கள் போன்ற வசதிகள் சிறுதானியத்தை பதப்படுத்துவதற்காக நிர்மான் விவசாயக் குழுக்களுக்கு உதவிபுரிந்தது. நல்ல வருமானம் ஈட்டுவதற்கு, சிறுதானியங்களை ஒன்று சேர்த்து, பதப்படுத்தி, மூட்டைகளாக கட்டி விற்பனைகளில் பெண் குழுக்கள் ஈடுபடுகின்றனர்.
நுகர்வோர் வாடகை மையங்கள் கூட்டு கிராம அளவில் உருவாக்கி அறுவடை பின் செய்யப்படும் செயல்பாடுகளுக்கு (அறுவடை செய்யப்பட்ட சிறுதானியங்களை சுத்தம் செய்யப்படும்) கருவிகள், இயந்திரங்கள் வாடகைக்கு அளித்தல்.

ஓடிசா சிறுதானியக் குழுவின் கீழ் அரசு தற்போது சிறுதானியங்களை கொள்முதல் செய்கிறது. குறைந்தபட்சஆதரவு விலை கேழ்வரகிற்கு இருக்கிறது. எனினும், மற்ற சிறுதானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கவில்லை. பாிசோதனை அடிப்படையில் தற்போது சிறுதானியங்களை, மாநில திட்டங்களான பொது வினியோக முறை, மத்திய உணவுத் திட்டங்களில் அங்கமாக இருக்கிறது. சிறுதானியங்களை பல்வேறு டவுன் மற்றும் நகரங்களில் இருக்கும் அரசின் அங்காடிகளில் விற்கின்றனர். சக்திக் குழு போன்ற மிக குறைந்த விற்பனை முகமையும், ஓ.ஆர்.எம.ஏ.எஸ் மற்றும் டி.ஆர்.ஐ.எப்.ஈ.டி ஆகிய தனியார் நிறுவனங்களும் இருக்கின்றனர். சிறுதானியத்திற்கான சர்வதேச சந்தை இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ளது. சில பொது சமூக செயல்பாட்டாளர்கள் மூலம் சர்வதேச நுகர்வோரிடம் டிஜிட்டல் சந்தை ஊடகத்தை பயன்படுத்தி, குறிப்பாக ஜெர்மனி போன்ற நாடுகளோடு இணைந்து துவக்கியுள்ளது.

முடிவுகளும், தாக்கமும்
பாரம்பாிய பயிர;களை புதுப்பித்தல் சமூகம் சார்ந்த விதை வங்கிகளை மேம்படுத்துதல், பாரம்பாிய வேளாண் உயிர்ப்பல்வகைமையை பாதுகாத்தல் ஆகிய அனைத்திலும் பெண் விவசாயிகள் மிக பொிய பங்கு வகிக்கின்றனர்.

விவசாயிகள் நேரடியாக கலந்துரையாடவும், அறிவு பாிமாற்றம் செய்துகொள்ளவும், சிறந்த பாரம்பாிய சிறுதானிய இரகங்கள் பாிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றை வழிநடத்துவதற்காக கந்தம்மாள் மற்றும் நயகார் மாவட்டங்களில் விதை திருவிழாவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. உயிர்ச்சூழல் சாகுபடி முறைகள் மற்றும் செயல்பாடுகள், பாரம்பாிய இயற்கை சாகுபடி முறைகள் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகாித்து வருகிறது.

தற்போது சமூக விதை வங்கிகளில் சிறுதானியங்கள், மக்காச்சோளம், பருப்பு வகைகள், காய்கறி விதைகள் மற்றும் கிழங்குகள் உட்படுத்திய 55 உள்நாட்டு பயிர்களின் பரம்பரை விதைகள் மேம்படுத்திவருகிறது. சமூகங்கள் தற்போது சிறுதானிய கலப்பு சாகுபடி முறையில் 7 உள்நாட்டு நெல் இரகங்கள், 6 உள்நாட்டு மக்காச்சோள இரகங்கள், 3 கேழ்வரகு இரகங்கள், 3 சாமை இரகங்கள், 2 குதிரைவாலி இரகங்கள், 2 கம்பு இரகங்கள், 3 திணை இரகங்கள், 2 செஞ்சோள இரகங்கள், 4 துவரை இரகங்கள், 2 தட்டைப்பயிர் இரகங்கள், 3 நெல் அவரை இரகங்கள், 4 நாட்டு அவரை இரகங்கள், 2 உளுந்து, கொள்ளு இரகங்கள் , 17 கிழங்கு வகைகளை சாகுபடி செய்து வருகிறது.

முடிவுகள்:
சீதோஷன மாற்றத்தை எதிர்த்து போராடவும், மோசமான பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்கவும், பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பழங்குடியின பகுதியில், சிறுதானியங்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உள்ள இணைப்பு இன்றியமையாதது. சிறுதானியங்களை உயிர்ப்பிப்பது, ஏழைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தீர்வுகாணுவதில் வரமாக திகழ்கிறது.
பணப்பயிர்களைகாட்டிலும், இந்தப் பகுதியில் சிறுதானிய உள்ளூர் இரகங்களை சாகுபடி செய்வதும், மேம்படுத்துவதும், விளைச்சலை அதிகாிப்பதற்கான வழிமுறைகளை, நல்ல விற்பனை வழிமுறைகளோடு வடிவமைப்பது முக்கியம். உடனடி சீதோஷண மாற்றம் என்ற ரீதியில், இந்த கொள்கை தேர்வுகள் தேவையான நில இனங்களை இந்த இடத்திலேயே உருவாக்கி, மேம்படுத்த உதவுகிறது.
ஒடிசாவில் உள்ள சிறுதானியக் குழு, உள்ளூர் தொண்டு நிறுவனம் மற்றும் விவசாய நிறுவனங்கள், பல்வேறு பயன்களின் காரணத்திற்காக சிறுதானிய சாகுபடியை ஊக்கப்படுத்தினர். எனினும், முழுமையான தொழில் அணுகுமுறை, சிறுதானிய சாகுபடியை ஒரு பயிர் சாகுபடிக்கு எடுத்து சென்று பயிர் பல்வகைமையை அழிவிற்கு கொண்டு செல்லும் நிலைக்கு போகக்கூடாது என்ற எச்சாிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

 

 
வ.எண்வட்டம்கிராமத்தின் எண்ணிக்கைவிவசாயி எண்ணிக்கை மொத்தபரப்பளவு
(ஹெக்டர்)
கொள்முதல் செய்யப்பட்ட கேழ்வரகின் அளவு (க்விண்டால்)கொள்முதல் மூலம் பெற்ற மொத்த வருவாய்விவசாய கணக்கிற்கு செலுத்தப்பட்ட மொத்த ஊக்கத்தொகை
1துமுதிபந்தா21222551081.43850.6912965755.11659800
2கோட்டகடா751096700.23762.744798142.91602000
3தஸபல்லா22496190.95001699659
4கே.சிங்பூர்5716751075250084425001069000
மொத்தம்36655223047.5510113.43262063986030459

ரவிசங்கர் பெஹெரா


Ravi Shankar Behera
Consultant, NIRMAN
2D-1, Metro Mansion Apartments,
Rabi Talkies Chak, Old Town,
Bhubaneswar-751014, Odisha
E-mail: rsbehera@rediffmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2023, வால்யூம் 25, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...