வீட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்த மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்தை சந்திப்பதற்கு சிறுதானியங்கள் திறன்மிக்க மாற்றாக திரும்ப வருகிறது. ஒன்று சேர்ந்து வருவதால், நிறுவனங்கள் பொதுவான தொலைநோக்கு பார்வையை கொண்டு இந்த மாற்றத்தை கொண்டுவருகிறது. ஒடிசா சிறுதானிய குழு மூலம் முறையாக அனைத்து மதிப்பு சங்கிலி கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களை பெண்கள் வழிநடத்துகின்றனர்.
மான்டியா (ஒடியா மொழியில் கேழ்வரகின் உள்ளூர் பெயர்), ஒடிசாவில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கும் /முணுமுணுக்கும் வார்த்தையாகும். டீக்கடைகள் முதல் ஹோட்டல்கள் வரை, இந்த பிரபலமான சிறுதானியம், நகர மக்கள்தொகை மத்தியில் உணவு வகைகளான சாப்பாடு, சிற்றுண்டி, கேக்குகள் மற்றும் பிஸ்கெட்டுகளில் முக்கிய பகுதியை நிரப்புகிறது.
எங்கு வளர்கிறது என்று பார்ப்பதற்கு, ஒடிசாவில் சுலபமாக அணுகமுடியாத பழங்குடியின கிராமங்களை காண நாம் பயணிக்க வேண்டும். டிசம்பர் மாதம், ஒடிசாவில் கொராபுட் மாவட்டம், மங்க்தித்தடா கிராமத்தை காண செல்பவருக்கு, மரகட்டையால் அறுவடை செய்யப்பட்ட கேழ்வரகு பயிரை, ஆத்மார்தமாக, பராஜா என்ற பாடலை பாடிக்கொண்டே, அடிப்பதைக் கண்டு ஈர்க்கப்படுவர்.இந்த வீட்டு பயிரின் நிறைவான அறுவடை செய்யப்பட்ட விளைப்பொருட்களை, ஒடிசாவில் உள்ள கொராப்புட் மற்றும் நப்ரங்கப்பூர் மாவட்டங்களில் இருக்கும் வியாபார மண்டிகளுக்கு சென்றடைந்தது.
ஹர்ஷா அறக்கட்டளை, என்ற அரசு சாரா நிறுவனத்தின் உதவியுடன் ஒடிசா சிறுதானிய அமைப்புடன் ஆதிவாசி பெண் விவசாயிகள் கைகோர்த்து ஒருங்கிணைந்த முயற்சிகளால், இது சாத்தியமானது. மேட்டு நிலத்தில் குறைந்த இடுபொருட்களை கொண்டு வளரக்கூடிய பயிரை தேர்ந்தெடுப்பதில், விவசாய உற்பத்தி நிறுவனங்கள், இடுபொருள் அதிகம் தேவைப்படக்கூடிய மக்காச்சோளம் மற்றும் நெல் பயிர்களிலிருந்து சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்பிற்கு மாறுவதற்கான முன்னோடியாக இருக்கின்றனர். மேலும் நுகர்வோரும் ஆரோக்கிய உணவையே தேர்ந்தெடுப்பர்.
ஒடிசாவில் உள்ள மலைப்பகுதிகளில் சிறுதானிய பயனம்
கொராப்புட் மற்றும் நப்ரங்கப்பூர் மாவட்டங்கள், பழங்குடியின மற்றும் கலாச்சாரம் நிறைந்த மாவட்டங்களாக கருதப்படுகிறது. இங்கு மொத்தம் 2977 கிராமங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாவர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011). இந்த பழங்கூடியின சமூகத்தினர் வேளாண்மை, கால்நடை மற்றும் கட்டைகள் அல்லாத வன விளைப்பொருட்கள் ஆகியவை இவர்களின் உணவு மற்றும் வாழ்வாதாரங்களாக இருக்கிறது. இங்கு பழங்குடியின பெண்கள் வீட்டின் பொருளாதாரத்தை பார்த்துக்கொள்கின்றனர்.
வேளாண்மையை தாண்டி, கொராப்புட் மாவட்டத்தில் போரிகம்மா மற்றும் குந்திரா வட்டங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகள் சிறந்த வழிகளைக் காணத் துவங்கியுள்ளனர். கொராப்புட்டில் 80% மக்கள் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர். இவர்கள் 90% குறைந்த மகசூல் அளிக்கும் மேட்டு நிலத்தை பெற்றிருக்கின்றனர். சிறு விவசாயிகள் இடம் பெயர்ந்து அருகிலுள்ள நகரம் மற்றும் மாநிலங்களுக்கு சென்று கூலி வேலையை செய்யப் பழகிவிட்டனர்.
பல வருடங்களாக இடுபொருள் அதிகம் தேவைப்படும் பயிர்களான நெல் மற்றும் மக்காச்சோளம் போன்றவைகளை சாகுபடி செய்து, தொடர் வறட்சி, பூச்சித் தாக்குதல், தேவைக்கு அதிகமாக பயிர் இடுபொருட்கள், அழிந்துவரும் நிலத்தின் தன்மை மற்றும் குறைந்த உற்பத்தி போன்ற தாக்கத்தால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மலைப்பகுதியில் பழங்குடியின பெண் விவசாயிகள் உழைத்த உழைப்பிற்கு விரும்பத்தக்க , நிலைத்த மற்றும் சுலபமான தீர்வுகள் இந்த சூழ்நிலைக்கு உடனடியாக தேவைப்படுகிறது.
சிறுதானியங்கள் திறன்மிகுந்த ஆட்டத்தை மாற்றும் கருவியாக மாறி ஒட்டுமொத்த குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது, மேலும் ஊட்டச்சத்து உத்திரவாதமும் அளிக்கிறது. ஒரு பொதுவான நோக்கத்தை மையமாக வைத்து நிறுவனங்கள் யாவும் ஒன்றுகூடவேண்டிய தேவையிருக்கிறது.
நிறுவனங்களால் சிறுதானிய மறுஉயிர்ப்பு கொண்டு வரப்படுகிறது
சிறுதானியங்கள் மானாவாரி பகுதியில் வளர்க்கப்படுகிறது, ஏனென்றால் சீதோஷண மாற்றங்களை எதிர்த்து வளரும், இது வறட்சியை தாங்கி வளர்வதற்கும் உதவுகிறது. சீதோஷணத்தை தாங்கும் திறன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்திருப்பதை உணர்ந்து, பண்ணையிலும் மற்றும் உண்ணும் தட்டுகளிலும் சிறுதானியங்களை நிறைப்பதற்கு ஒடிசா சிறுதானிய அமைப்பு 2017 ஆம் ஆண்டு துவக்கியது. ஹர்ஷா நிறுவனத்தோடு இணைந்து பழங்குடியின பெண் விவசாயிகளை முன்னேற்றும் நோக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர். களத்தில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்டு, ஹர்ஷா நிறுவனத்தோடு பழங்குடியின பெண் விவசாயிகள் இணைந்து வாழ்வாதார உத்திரவாதத்தை உறுதிப்படுத்தவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பணி செய்து வருகின்றனர். இந்த காரணத்திற்காக அரசு சாரா நிறுவனம் பெண் விவசாயிகளோடு, ஏப்ரல் 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்த பகுதியில் பணிபுரிந்து சுய உதவிக் குழுவாக ஒருங்கிணைத்தது . துவக்கத்தில், 350 மொத்த விவசாய உறுப்பினர்களோடு 31 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. இந்த சுய உதவிக் குழுக்களை நிர்வகிக்க , முதன்மை சுய உதவிக் குழு என்று அழைக்கப்படும், ஒற்றை நிர்வாக சுய உதவிக் குழு அமைத்து, பின்னர் கம்பெனி சட்டத்தின்படி விவசாய உற்பத்தி நிறுவனமாக மாற்றப்பட்டது. ஹர்ஷா நிறுவனம், ஒடிசா சிறுதானிய அமைப்போடு ஜூலை 2017 ஆம் ஆண்டில் பணி செய்ய தொடங்கினர்.
விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களின் வழிமுறைகளில், படிப்படியாக சிறுதானியங்களை நெறிப்படுத்துவது முக்கிய அங்கமாக கொண்டுள்ளனர். விவசாயிகள் அவர்களே முன்னெடுத்து செல்வதால், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள், சிறுதானிய மதிப்பு கூட்டு சங்கிலிக்கு உயிர்ச்சூழலை உருவாக்கும் பணியை செய்துவருகிறது. நகரத்தில் நுகர்வோரின் ஆரோக்கிய முக்கியத்துவம் அதிகாித்து வருவதற்கேற்ப தேவையை பூர்த்தி செய்யும் அதே நேரத்தில், சிறுதானியங்கள் உண்ணுவது இவர்களின் குடும்பங்களில் அதிகாிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சக்தி வாய்ந்த வீடாக கருதப்படுவதால், இதன் தேவை விரைவாக புதிய உயரத்திற்கு வழி தேடி-உயர் மட்ட சந்திப்புகள், நகர நிகழ்ச்சிகள், அரசு கூட்டங்கள்,கருத்தரங்குகள் மற்றும் இதர கூட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும் உணவில், சிறுதானிய ஆடம்பர பட்டியலில் முக்கியமாக இடம்பெறுகிறது. அதிகாித்த விழிப்புணர்வு, திறன் வளர்ப்பும், உயர்ந்த உற்பத்தி தொழில்நுட்பங்கள், வரவுசெலவு முறைகள், சுழலும் தேவையினால் ஏற்பட்ட ஊக்கம், ஆகியவற்றினால் இடுபொருள் அதிகம் பயன்படுத்தப்படும் பயிர்களை ஒப்பிடுகையில் சிறுதானியங்கள் அதற்கு சமமான மற்றும் அதிக இலாபம் கிடைக்கும் என்று சமூகத்தினர் அறிந்துகொண்டனர். அதையும்தாண்டி, இந்தப்பயிர்கள் குறைந்த கார்பன் வெளியிடுவதால், இந்தப்பகுதியில் நிறைந்திருக்கும் உயிர்ச்சூழலையும், உயிர்பல்வகைமையையும் பாதுகாக்க உதவுகிறது.
நாரி பிரகதி விவசாய உற்பத்தியாளர் நிறுவன அமைப்பினால் உருவான நிகழ்வு
துவக்கத்தில், ஹர்ஷா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்கள் போன்ற சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் உருவாக்க பாிந்துரைத்து, பண்ணை அடிப்படையிலான வாழ்வாதார முயற்சிகளை எடுப்பதற்கு அறிவுறுத்தி வந்தனர். பிப்ரவரி 2020 ஆண்டு குழுக்கள் நாரி பிரகதி உற்பத்தி நிறுவனம் (NPPCL) என்ற விவசாய உற்பத்தி நிறுவனமாக ஒருங்கிணைக்கப்பட்டது. என்பிபிசிஎல் 2020 ஆம் ஆண்டு 570 விவசாயிகளோடு உருவாக்கப்பட்டு, தற்போது 2022 ஆம் ஆண்டு 3200 விவசாய உறுப்பினர்களோடு வளர்ந்து நிற்கிறது. என்பிபிசிஎல் பின்பற்றிய மாதிரி மூலம் தேவையான முன்னேற்றத்தை வளர்த்துள்ளது.
பழங்குடியின குடும்பங்களின் உணவிற்கான முக்கிய தேர்வாக சிறுதானியங்கள் இருக்கும் நிலையில், இவற்றின் பொருளாதார திறன் இன்னும் உணரப்படவில்லை. சிறுதானிய உற்பத்தி குறித்து பரவலாக்கம் செய்வதற்கு,தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவி, கடனளிக்கும் அமைப்புகள், உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் வசதிகள் போன்றவற்றில் அறிவு பெண் விவசாயிகளுக்கு குறைவாக இருக்கிறது. விவசாயிகள் நவீன மண்டிகள் அல்லது வரையறுக்கப்பட்ட விற்பனை அமைப்புகளில்
சிறுதானியங்களை விற்பதில்லை. இந்த இடைவெளிகளை சாியாக கண்டுபடித்து, என்பிபிசிஎல் ஒஎம்எம் உதவியோடு தீர்வு கண்டது. இதன் மூலம் பொருளாதார அளவுகோள்களை அடைவதற்கு, சிறுதானியம் அடிப்படையாக கொண்ட சாகுபடி முறைகளை பாிந்துரைக்கிறது.
சிறுதானியங்களை உயிர்ப்பிப்பதற்கு முழுமையான வழிமுறைகள்
பலதரப்பட்ட செயல்பாட்டு முறைகளை திடப்படுத்துவதும், ஒருங்கிணைப்பதும் முக்கியமாக கருதப்பட்டது. இது அனைத்து விஷயங்களையும், சேவைகளையும் உள்ளடக்கியது- உற்பத்தி, பதப்படுத்துதல், உட்கொள்ளுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் ஹர்ஷா அறக்கட்டளை உதவியுடன் பெண் விவசாயிகளால் எடுத்து நடத்தப்பட்டது.
சிறுதானிய மதிப்பு சங்கிலியை வெற்றி பாதையில் செல்ல உதவிய பல்வேறு முக்கிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
சிறுதானிய உற்பத்தியில், பெண் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், பயிற்சிகள் அளிப்பதும்:
களப்பார்வை அல்லது கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும்போது ஒருங்கிணைத்த முக்கிய குழு கலந்துரையாடல்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையை உருவாக்குவதற்கான செயல்பாடுகளை, பெண் சுய உதவிக் குழு மற்றும் முக்கிய கலந்துரையாடல் குழுவின் உறுப்பினர்களோடு சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல். உயர்த்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் , குறிப்பிட்ட சாகுபடியின் மொத்த செயல்பாடுகளை மையமாகக் கொண்டு சிறுதானிய சாகுபடி முறைகளின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு பயிற்சிகள் மற்றும் திறன் வளர்ப்பு முயற்சிகள் யாவும் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறுதானிய சாகுபடி முறையின் மூலம் வருமானம் விரிவுப்படுத்துவதற்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பெண்கள் முன்னெடுத்து செய்வதால், அறிவானது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பரவுகிறது. கீழே குறிப்பிட்டுள்ளவாறு சிறுதானிய முறைகள் குறித்து ஊக்கப்படுத்த, மொத்தம் 141 பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்தர விதை உற்பத்தியை அதிகாிப்பதையும், கிடைக்க செய்வதையும் உறுதிப்படுத்துதல்
இதை, போரிகம்மா,பொண்டகுடா,அஞ்சளா, மற்றும் கத்ரகடா ஆகிய நான்கு விதை மையங்களின் உதவியால் 3200 விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்பை ஏற்றனர்.
அனைத்து சாகுபடி தொழில்நுட்ப முறைகள் மற்றும் கூடுதல் நன்மை தரும் நல்ல பண்ணை செயல்பாடுகளை உயர்த்துதல்
இயற்கை பூச்சி மேலாண்மை செயல்பாடுகள், திருந்திய சிறுதானிய சாகுபடி முறை, வரிசை விதைப்பு மற்றும் நடவு ஆகியவை முதல்நிலை சாகுபடி தொழில்நுட்பங்களில் உட்படுத்தப்பட்டது. (பெட்டி 2 பார்க்க)
உயர் தொழில்நுட்பங்களை (திருந்திய சிறுதானிய சாகுபடி முறை, வரிசை விதைப்பு மற்றும் நடவு) பின்பற்றும் விவசாயிகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒடிசா சிறுதானிய அமைப்பிலிருந்து கூடுதல் இலாபம் பெற்றனர். திருந்திய சிறுதானிய சாகுபடி முறை பின்பற்றிய விவசாயிக்கு ரூ. 5000/ஹெக்டர் மற்றும் வரிசை விதைப்பு மற்றும் நடவு முறையை பின்பற்றும் விவசாயிக்கு ரூ. 2500 / ஹெக்டர். தொடர்ந்து அடுத்த வருடம் பின்பற்றுபவருக்கு ரூ. 3000 மற்றும் 1500 திருந்திய சிறுதானிய சாகுபடி முறைக்கும், ரூ.1500 மற்றும் ரூ.1000 வரிசை விதைப்பு மற்றும் நடவு முறையை பின்பற்றுபவருக்கு அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிற்கே சென்று தொழில்நுட்ப மற்றும் விரிவாக்க சேவைகளை வழங்குவதற்கு, சமூக ஆதார பணியாளர் போன்ற கிராம அளவிலான பணிகளை உருவாக்குதல்.
கிராம பஞ்சாயத்து அளவிலான நுகர்வோர் வாடகை மையங்கள் மற்றும் முதல்நிலை பதப்படுத்தும் கலன்கள் அமைத்து, கதிரடிக்கும் இயந்திரம் மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்த ஊக்கப்படுத்துகிறது. நான்கு நுகர்வோர் மையங்கள், பத்து அறவை மற்றும் பதப்படுத்தும் கலன்கள் ஒவ்வொன்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட்டது.
என்பிபிசிஎல் மூலம் கூட்டு விற்பனை மற்றும் குறைந்த நிர்ணய விலையும் உருவாக்கப்பட்டது
விவசாய உற்பத்தி நிறுவனத்தால் விவசாயிகளை ஒருங்கிணைத்தல் குறிப்பாக விளைபொருட்களை ஒன்று சேர்த்தல், முதல்நிலை பதப்படுத்துதல், போக்குவரத்து, மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கு ஒன்றிணைந்து செயல்படுத்துதல். ஒன்று சேர்த்த விளைபொருட்களை, விவசாயிகள் ஒன்றாக நல்ல பேரம்பேசும் திறனை உயர்த்த முடிந்தது. போக்குவரத்தின் விலையும் குறைந்தது. குறைந்த நிர்ணய விலையை ஒடிசா சிறுதானிய அமைப்பு உருவாக்கியது.
விற்பனை மையம்: விவசாயிகள் மற்றும் சந்தைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க போரிகம்மா, கத்தாரகுடா, கெராப்பா, நுவாகன் ஆகிய இடங்களில் மண்டிகள் துவக்கப்பட்டன. முன்பு விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட சிறுதானியங்களை, விற்பதற்கு எந்த மையமும் இல்லை. அதனால் உள்ளூர் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வர்.
மாண்டியா ஹாத், நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலையில் விற்பதற்காகவே உருவாக்கப்பட்டது. சிறுதானியத்தை உட்கொள்ள செய்வதற்கு ஊக்கப்படுத்த ஒடிசா சிறுதானிய அமைப்பின் ஒரு முயற்சியாகும். பிரபல சுற்றுலா இடங்களில் மாண்டியாவை திறந்து, அதனுடன் சிறிய கடைகளில் சிறந்த உணவு வகைகளை விற்கின்றனர். 2021 ஆம் ஆண்டு, கிராம மற்றும் நகர இடங்களில் சிறுதானியங்களை மேலும் பிரபலப்படுத்த ஒடிசா அரசு நவம்பர் 10 ஆம் நாளை மாண்டியா திவாஸாக அறிவிக்கப்பட்டது.
நலத்திட்டங்களில் ஈடுபடுத்துதல்: பொது வினியோக அமைப்பு, மத்திய உணவுத் திட்டங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறுதானியங்களை, ஒடிசா சிறுதானிய அமைப்புகளால் சேர்க்கப்பட்டது .
முக்கியத்துவமிக்க முடிவுகள்
ஓடிசா சிறுதானிங்கள் அமைப்பு மூலம், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறுதானிய சாகுபடி பரப்பளவு போரிகம்மா மற்றும் குந்திரா ஆகிய இடங்களில் 1167 ஹெக்டர்கள் அதிகாித்துள்ளது. உயர்த்தப்பட்ட உற்பத்தி செயல்பாடுகள், கேழ்வரகு மற்றும் சாமை உற்பத்தி , சாதாரண சாகுபடியை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகாித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு குறைந்த உற்பத்தியான 1-2 குவிண்டாலிலிருந்து தற்போது விவசாயிகளுக்கு 6-7 குவிண்டால்கள் வரை ஒற்றை சிறுதானிய சாகுபடி பின்பற்றுவது மூலம் கிடைத்துள்ளது. ஒடிசா சிறுதானிங்கள் அமைப்பு மற்றும் ஒடிசாவில் உள்ள வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வழங்கிய, பத்து கதிர் உடைக்கும் இயந்திரங்களோடு பதப்படுத்தும் கலன்கள் ஆகியவை கூலியாட்கள் அதிகம் தேவைப்படும் கதிரடிக்கும் செயல்பாடுகள் சுலபமாக்கியது. பொது வினியோக அமைப்பு, மத்திய உணவுத் திட்டங்கள் மற்றும் போரிகம்மா, குந்திரா ஆகிய வட்டங்களில், ராகி லட்டு போன்ற சிறுதானிய அடிப்படை உணவுகள் அறிமுகம் செய்வது போன்ற திட்டங்களில் சிறுதானியங்கள் உட்படுத்துவது மூலம் குடும்பங்களில் சிறுதானியங்கள் உண்ணுவது அதிகாித்துள்ளது மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களில் நேரடியாக நோ;மறை தாக்கம் ஏற்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி நிறுவனங்கள், வசதியற்ற போக்குவரத்து மற்றும் விற்பனை வசதிகளில் உள்ள சவால்களை கூட்டு விற்பனை அணுகுமுறை மூலம் தீர்வு கண்டனர். வரையறுக்கப்பட்ட சந்தையில் சிறுதானிய விற்பனை விலையானது ஒரு கிலோ ரூ. 15 முதல் ரூ.35 தாக உயர்ந்துள்ளது. கொள்முதல் முகமையாக விளங்கிய என்பிபிசிஎல் பெண் விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களை கொள்முதல் செய்து போரிகம்மா மண்டயில் (ஒடிசா சிறுதானிங்கள் அமைப்பால் சிறுதானியத்திற்கு பிரத்தேகமாக உருவாக்கப்பட்ட மண்டி) வைத்து விற்பனை செய்யும்போது அதிக விலை கிடைக்கிறது மற்றும் சாியான நேரத்தில் பெண் உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு பணம் நேரடியாக சேர்ந்துவிடும். மண்டி உருவாக்கிய பின்னர் சிறுதானிய விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2800 முதல் ரூ.3578 வரை மூன்று வருடங்களில் அதிகாித்துள்ளது. கடந்து மூன்று வருடங்களில், என்பிபிசிஎல் தன்னுடைய சேவையை 24 கிராம பஞ்சாயத்துகளில், 93 கிராமங்களில் உள்ள 3511 பெண் விவசாய உறுப்பினர்களை சென்றடைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்வை தொடர்ந்து சிறுதானிய மறுஉயிர்ப்பு ஏற்படுத்த, விரிவாக்கம் செய்யும் பணி தொடர்ந்து செய்து வருகிறது.
என்பிபிசிஎல் தொழில் வளர்ப்புத் திட்டத்தை மறுவிளக்கம் செய்யும் நோக்கங்களில், சிறுதானியங்களின் செயல்பாடுகளை படிப்படியாக சீரமைத்து சேமிப்பு கிடங்குகள், பதப்படுத்தும் மற்றும் மதிப்பு கூட்டும் கலன்கள் உருவாக்க திட்டமிட்டு, சிறுதானிய உணவுபொருட்களான ராகி பிஸ்கெட், பலதானிய ரொட்டி, ராகி கஞ்சி மற்றும் திண்பண்டங்களை உற்பத்தி செய்து கிராம பெண் தொழில்முனைவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
முடிவு
கொராபுட் மாவட்டத்தில் உள்ள போரிகம்மா மற்றும் குந்திரா வட்டங்களின் பெண் விவசாயிகளின் பயணம், நமக்கு நிலைத்த நிறுவன அணுகுமுறை மூலம் சிறுதானியங்களை உயிர்ப்பிக்கலாம் என்ற ஒட்டுமொத்தமான புரிதல் ஏற்படுகிறது.
இது நேர்மறையாக ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு கடந்து விசாலமாக பரவுகிறது. நுப்ரங்பூர் மாவட்டத்தின் ஜாரிகன் வட்டப்பகுதிகள் சிறுதானியத்திற்கு மாறியுள்ளதை காணலாம். ஹர்ஷா அமைப்பின் உதவியுடன் ஜாரிகன் பகுதியில் மங்கள்மணி விவசாய உற்பத்தி நிறுவனத்தை உருவாக்கி 1456 பெண் உறுப்பினர்கள் சேர்ந்து சிறுதானிய சாகுபடி பகுதியில் 16 ஹெக்டாிலிருந்து இரண்டு வருடங்களில் 685 ஹெக்டர் அதிகாித்துள்ளது. விவசாய உற்பத்தி நிறுவனங்கள் பொருளாதாரம் உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் அதேநேரத்தில் கிராம பழங்குடியின குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து உத்திரவாதத்தை உறுதிப்படுத்துகிறது.
ஓடிசா சிறுதானிய குழு சிறுதானிய அடிப்படை சாகுபடியை உயிர்ப்பிக்கும் அமைப்பானது விவசாயிகள் பொருளாதார அளவீட்டில் சிறுதானியத்தை எடுக்கும் அளவிற்கு புதிய நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது. மாண்டியா ஸ்டால், மாண்டியா ஹாத் மற்றும் மாண்டியா திவாஸ் ஆகிய முயற்சிகள் சிறுதானிய வளர்ச்சி கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு கொண்டு சென்று, பகுதி, தேசிய, மற்றும் சர்வதேச சந்தைகளில் சேர்ப்பதற்கு, விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மூலம் பல பெண் விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
சிறுதானியங்கள், சர்வதேச அமைப்பிலிருந்து கிராம அளவிலான கூட்டங்கள் வரை,இந்த வருடத்தின் பேசும்பொருளாக அமைந்து ஒடிசாவில் தெற்கு மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் வாழ்வாதாரம் உயர்த்துவதற்கு வழிவகுத்தது 2023 ஆம் சர்வதேச சிறுதானிய வருடமாக அறிவித்தது. இது சிறுதானியங்களின் பரவும் தாக்கத்தோடு விவசாய சமூகங்களுக்கு நிலைத்த வாழ்வாதாரத்தை உருவாக்குகிறது.
பெட்டி செய்தி
ஆதிவாசி கலாச்சாரத்தில் சிறுதானியம் மாற்ற முடியாத இடத்தை பெற்றுள்ளது. பிறப்பிட உணவாக மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தின் மையமாக திகழும், சிறுதானிங்கள், ஆதிவாசி விவசாய குடும்பங்களின் அன்றாட உணவிலும் மற்றும் அவர்களின் சமூக, கலாச்சார நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் சுலபத்தன்மை, ஊட்டச்சத்து அதிகமாகவும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சிறுதானிய அடிப்படை உணவு வகைகளான மாண்டியா ஜாவ், முத்தி, பித்த, சாமை உப்புமா, வறுத்த செஞ்சோளம் மாண்டியா தம்பா (ராகி மாவு மற்றும் அரிசி தண்ணீரோடு கஞ்சி) மாண்டியா அண்டா (ராகி மாவு மற்றும் அரிசி) ஆகியவை பழங்குடியின உணவு கூடையில் ஒரு அங்கமாக இருக்கிறது.
பெட்டி செய்தி 1
முன்பு, நான் கேழ்வரகை, என்னுடைய நிலத்தில் 1.5 ஏக்காில் வீட்டிற்கு மட்டும் சாகுபடி செய்தேன் . இரண்டு குவிண்டாலுக்கு மேல் மகசூல் கிடைப்பதில்லை. கேழ்வரகு நல்ல இலாபத்தை கொடுக்கும் என்று எப்பொழுதும் உணர்ந்ததில்லை, ஒடிசா சிறுதானிய அமைப்போடு ஹர்ஷா அறக்கட்டளை உதவியுடன், உயர்தரமான சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி பெற்றேன், மேலும் ஆரோக்கியமான விதை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொண்டேன். இந்த வருடம் இதே நிலத்தில், என்னால் 5 குவிண்டால் ராகியை அறுவடை செய்ய முடிந்தது. என்னுடைய குடும்பத்தின் உணவுத் தேவையை தாண்டி, ரூ.16,475 கூடுதல் வருமானம் ஈட்டினேன்.
பனமளி சல்லன் (43), படபின்டபடர் கிராமம், போரிகம்மா வட்டம், கொராபுட்
அட்டவணை 1: ஹர்ஷா ட்ரஸ்ட் வழிநடத்திய திறன் வளர்ப்பு நிகழ்ச்சிகள்
| வ.எண் | பயிற்சியின் தலைப்பு பெயர் | பயிற்சியின் எண்ணிக்கை | பங்கேற்பாளரின் எண்ணிக்கை |
| 1 | உற்பத்தியின் விரிவாக்கம் | 27 | 864 |
| 2 | தொழில்நுட்பங்களின் தொகுப்பு | 21 | 672 |
| 3 | விதை உற்பத்தி | 11 | 352 |
| 4 | விதை சேமிப்பு | 7 | 224 |
| 5 | மதிப்பு கூட்டுதல் | 7 | 448 |
| 6 | சிறுதானிய ஊட்டச்சத்து பயன்கள் | 9 | 576 |
| 7 | கள செய்முறை விளக்கம் | 38 | 1216 |
| 8 | சிறுதானிய விழிப்புணா;வு திட்டம் | 17 | 2040 |
| 9 | கூட்டு விற்பனை | 4 | 120 |
பெட்டி 2
திருந்திய சிறுதானிய சாகுபடி – திருந்திய சிறுதானிய சாகுபடி, திருந்திய நெல் சாகுபடியின் விரிவாக்க முறையாகும். இதில் உயர்த்தப்பட்ட வேளாண் தொழில்நுட்பங்களான குறைந்த விதை அளவு, விதை நேர்த்தி, குறிப்பிட்ட இடைவெளியில் இளம் மற்றும் ஆரோக்கியமான நாற்றுகள் நடவு செய்தல், உயர்த்தப்பட்ட களை மற்றும் சத்துக்கள் மேலாண்மை தொழில்நுட்பங்கள். இந்த முறையின் மூலம் கிராமங்களில் சிறுதானிய உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது.
வரிசை நடவு – வரிசை நடவு சாியான பயிர் சூழலை உறுதிப்படுத்தி, பெரும்பாலான இடைவெளியை பயன்படுத்தி அதிக மகசூல் அளிக்கிறது.
பலப்பயிர்/ஊடுப்பயிர் சாகுபடி – கேழ்வரகு மற்றும் செஞ்சோளம் இணைத்து பலப்பயிர் சாகுபடியை பின்பற்றுவதனால், பயிர் சேதாரத்தை குறைத்து, வருமானம் அதிகாிக்கிறது.
பெட்டி 3
ஜெயந்தி கௌடா, சிறுதானிய விவசாயியின் வெற்றிக்கதை
திருமதி.ஜெயந்தி கௌடா, கொராப்புட், போரிகம்மா வட்டத்தில், கத்திரகடா கிராம பஞ்சாயத்து, மங்திதலா கிராமத்தில் வாழும் பழங்குடியின பெண் விவசாயி ஆவார் . துவக்க வருடங்களில், இவர் சிறுதானிய சாகுபடியை ஆர்வமாக செய்யவில்லை. என்பிபிசிஎல் – ல் இணைந்த பின்னர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தில் திருந்திய சிறுதானிய சாகுபடி மற்றும் இதர உற்பத்தி தொழில்நுட்பங்களின் பயன்கள் குறித்து புரிந்து கொண்டார். 2018-19 ஆம் ஆண்டு பெய்த அதிகளவு மழை காரணத்தால் இவருக்கு இழப்பு ஏற்பட்டது. பின்னர் என்பிபிசிஎல் ன் உதவியோடு மீண்டும் சிறுதானியங்களை சாகுபடி செய்ய தொடங்கினார். இவர் எதிர்பார்த்ததை விட அதிக உற்பத்தி கிடைத்தது. இவரின் வெற்றியை கண்டு ஆச்சாியப்பட்ட பல பெண் விவசாயிகள் சிறுதானிய சாகுபடியை பின்பற்ற துவங்கினர்.
எங்களின் 4.5 ஏக்கர் நிலத்தில், 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்வோம். மீதமுள்ள 2 ஏக்கர் மேட்டு நிலம் பெரும்பாலும் தாிசாக விட்டுவிடுவோம். சில சமயங்களில் இங்கு சிறுதானிய சாகுபடி செய்வோம். என்பிபிசிஎல் – ன் திலையீட்டாலும், ஹர்ஷா அறக்கட்டளை அளிக்கும் தொழில்நுட்ப அறிவின் உதவியாலும் நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் கேழ்வரகை சாகுபடி செய்ய துவங்கினோம். பின்னர் மொத்தம் மேட்டு நிலம் இரண்டு ஏக்காில் சாகுபடி செய்து 6 குவிண்டால் ராகி உற்பத்தியை பெற்றோம்.மேலும் ரூ. 20262/- வருமானம் கிடைத்தது “ என்கிறார் ஜெயந்தி.
ரஞ்சிதா சிவராம் மற்றும் சங்கீதா பெஹெரா
Ranchitha Sivaram and Sangeeta Behera Harsha Trust, First Floor, N1/36, IRC Village, Nayapalli, Bhubaneswar Odisha - 751015 E-mail: ranchithakumaran@gmail.com Sangeetabehera12@gmail.com
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2023, வால்யூம் 25, இதழ் 1



