நீலகிரி உயிர்க்கோளப் பாதுகாப்பு பகுதியில் உள்ள உள்ளூர் சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் அவர்களாகவே உருவாக்கி கொண்டனர். உறுப்பினர்கள் மற்றும் தொழில் இலாபம் ஆகிய ரீதியில் நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி, உள்ளூர் சமூகங்களுக்கு நிலைத்த மற்றும் நல்ல வாழ்வாதார தேர்வுகள் அளித்ததனால், இதை வெற்றி மாதிரியாக பிரதிபலிக்கிறது.
நீலகிரி உயிர்க்கோளப் பாதுகாப்பு பகுதியில் உள்ள உள்ளூர் சமூகங்கள் காப்பி, மிளகு, பட்டுபருத்தி, சிறுதானியங்கள், பயறு வகைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்கின்றனர். மேலும் இவர்கள் பாரம்பாியமாக, தேன், நெல்லி, சியக்காய், வழலைக் கொட்டை மற்றும் பெர்ரிகள், ஈச்சம்பழ இலைகள் ஆகியவை பருவத்தின்போது அருகேயுள்ள வனத்தில் சேகாிப்பதில் ஈடுபடுவர். உள்ளூர் சமூகங்கள் சேகாிக்கும் விறகற்ற வளபொருட்களுக்கு கிடைக்கும் நியாயமற்றவிலை, விற்பனையில் ஏற்ற இறக்கங்கள், மற்றும் விற்பனையில் இடைத்தரகர்களின் சுரண்டல் ஆகிய பிரச்சனைகளில் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் இதற்கு தீர்வு காணும் நோக்கத்தோடு ஒரு முறையை உருவாக்கி அதன்மூலம் விளைபொருட்களுக்கு நல்ல விலையை உறுதி செய்தல், விற்பனையை நிலையாக அளிப்பது மற்றும் விலை ஏற்றதாழ்வுகளின் பாதிப்பிலிருந்து குறைக்கிறது.
ஒரு தொடக்கம்
கீஸ்டோன் நிறுவனம், ஆதிமலைக்கு பின்னுள்ள உந்துசக்தியாகும், ஆதார மையங்கள் அமைக்கும் பணியை துவக்கியுள்ளது. இது கிராம அளவில் சமூகங்கள் சேகாித்த பொருட்களுக்கு மதிப்பு கூட்டுகிறது. 2004-2005 ஆம் ஆண்டு நீலகிரி உயிர்க்கோளப் பாதுகாப்பு பகுதியில், பகுதி ஆதார மையங்கள் அமைக்கப்பட்டது. மத்திய கிராமத்தை அடிப்படையாக வைத்து பல சிறு செயற்கைகோள்கள் சேவை செய்யும் இடமாக இருக்கிறது. விறகு அல்லாத வன பொருட்கள் மற்றும் பண்ணை விளைப்பொருட்களை உற்பத்தி செய்து, மதிப்பு கூட்டுதல் சார்ந்த செயல்பாடுகளை இந்த ஆதார மையங்களில் நடைபெற்றுவரும் ஒரு முக்கிய நிகழ்வு, மிகையான நேரம். வாழ்வாதார தலையீடுகள் மூலம் செயல்பாடுகளை ஊக்குவித்த கீஸ்டோன், இயற்கை மற்றும் நிலையான மகசூலை அறுவடை செய்தது. திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்வதற்கு பதிலாக புதிய முறையான மதிப்பு கூட்டுதலை அறிமுகப்படுத்தி உள்ளூரிலேயே விற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அழுத்தம் கொடுக்கும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த மையங்களில் சமூக உறுப்பினராக்குவதே ஆகும். இது பல குடும்பங்களில் உள்ள விளைப்பொருட்கள் சேகாிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. மிகை நேரத்தில் மையங்களின் பணி பல்வகைமைப்படுத்தப்பட்டது. இவர்கள் திறமையாக செயல்பட்டு உற்பத்தி மையங்களாக துவக்கப்பட்டது. இவர்கள் மேலும் சேவையை
• வனங்கள், நிலம், காட்டு விலங்குகள் மற்றும் தண்ணீர் குறித்த தகவல் மற்றும் அறிவின் ஆதார அடிப்படையாக இருக்கிறது.
• இது அதிக திறன் மற்றும் உகந்த தொழில்நுட்பங்களை அடையும் இடமாக இருக்கிறது.
• சுற்றுச்சூழல் கல்வி மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சியின் இடமாக இருக்கிறது.
• பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய கல்வியின் மையம்.
• ஆதிவாசிகள் மற்றும் வனங்கள் சார்ந்த தற்போதுள்ள சட்டம் மற்றும் உரிமைகளின் அறிவுக்கான அடிப்படை.
2013 ஆம் ஆண்டு இந்த அனைத்து கலன்களும் கூட்டமைக்கப்பட்டு, தனிப்பட்ட உற்பத்தி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. உற்பத்தி மையங்கள் ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் என்பது தேசிய அளவில் முதன்முதலில் 147 கிராமங்களில் பரவியுள்ள உள்ளூர் சமூகங்களால் முழுவதும் சொந்தமாக்கியுள்ளது. உற்பத்தி சேகாிப்பை, ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனமாக 3 ஏப்ரல் 2013 ஆம் நாள் இந்திய நிறுவன சட்டம் 1956 ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் கீஸ்டோன் நிறுவனத்தால் (www.keystone-foundation,org ) தத்தெடுக்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை ஊன்றுவதற்கு துவங்கியது. இதற்கு பாரம்பாிய இயற்கை உணவு சாகுபடி, கைவினைபொருட்கள், கால்நடை வளர்ப்பு, வன பொருட்களின் நிலைத்த அறுவடை, இயற்கை ஆதாரங்களை பாதுகாப்பது, மதிப்புக் கூட்டுதல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவித்து, அதனால் சமூகங்கள் மற்றும் நிலங்களின் வளத்தை பாதுகாக்க முடியும்.
ஆதிமலையின் முக்கியமான தொலைதூர பார்வை, சிறிய உள்ளூர் சமூகங்கள் தனித்துவமான தேவைகள் மற்றும் தொழில் மேலாண்மை செயல்பாடுகள் மத்தியில் இருக்கும் இடைவெளியை இணைப்பதே ஆகும்.
தொழிலானது தரம், உயிர்ச்சூழலுக்கு உகந்த மற்றும் நல்ல விலையை நோக்கியே செல்கிறது. இது சுரண்டும் தன்மை கொண்ட இடைதரகர்களின் விற்பனை செயல்பாடுகளை அழிப்பதே நோக்கமாகும்.தற்போது ஆதிமலையில் 1809 பங்குதாரர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நீலகிரி உயிர்கோள பாதுகாப்பு பகுதியின் உள்ளூர் சமூகங்களின் உறுப்பினர்கள் ஆவர். கீழே பல்வேறு பகுதியில் உள்ள பங்குதாரர்களின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சமூக உறுப்பினர்கள் சிறப்பாக பங்கேற்றதனால் விவசாய உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்பட்டது. மக்களாட்சி அரசின் வடிவமைப்பில், சமூக உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்;ட இயக்குநர்களின் குழுவோடு விவசாய உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகளை சமூகத்தின் ஆர்வம் மற்றும் தேவைகளுக்கேற்ப அவர்களின் உரிமைத்தன்மை மற்றும் ஈடுபாட்டை ஊக்கப்படுத்துவது உறுதிப்படுத்துகிறது.
முக்கிய பயன்கள்
ஆதிமலை, பல்வேறு முயற்சிகள் மூலம் உள்ளூர் சமூகங்களின் குறிப்பட்ட சமூக மற்றும் பொருளாதார நன்மைகளுக்கு முக்கிய பங்களிக்கிறது.
முக்கிய பயன்கள்:
ஆதிமலை முக்கிய வன பொருட்களான தேன், தேனீக்களின் மெழுகு, சீயக்காய், நெல்லி, வழலைக்கொட்டை, ஜாமுன், அத்தி, மற்றும் ஹாிடாக்கி ஆகியவற்றுடன்,வேளாண் உற்பத்தி பொருட்களான காப்பி, கப்பாக் பட்டு பருத்தி, சிறுதானிங்கள் மற்றும் மிளகு ஆகியவற்றையும் கொள்முதல் செய்கின்றனர். உள்ளூர் வியாபாரிகளை ஒப்பிடுகையில் சமூகஉறுப்பினர்களின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்க செய்வதை இந்நிறுவனம் உறுதிப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, ஆதிமலை ஒரு கிலோ காப்பி ரூ.190 வழங்குகின்றது. ஆனால் உள்ளூர் விற்பனையாளர்கள் ரூ. 100-110 மட்டுமே அளிக்கின்றனர்.
ஆதிமலையில் எலக்ட்ரானிக் எடைபோடும் இயந்திரங்கள் இருக்கின்றன, அதனால் முரண்பாடுகளை தவிர்த்து, சாியான அளவுகளை உறுதிப்படுத்துகிறது. இந்த செயல்பாடுகள் சமூக உறுப்பினா;களுக்கு நவீன முறைகள் பயன்படுத்த தொிவதால், விற்பனையாளர்களோடு கலந்துரையாட உதவுகிறது.
இது சீயக்காய், தேனீக்கள் மெழுகு, அத்திப்பழம், ஹாிடாக்கி, வழலைக்கொட்டை போன்ற விறகல்லாத வன விளைபொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் நுகர்வோர் கிடைக்காதவர்களுக்கு சந்தையை அளிக்கிறது. குறிப்பாக, ஆதிமலை, தேன் போன்ற சில பொருட்களுக்கு சந்தை விலையை விட இரட்டிப்பு விலை வழங்குகிறது. தேன் சேகாிப்பதில் உள்ள சவால்களுக்கு அங்கிகாரம் தரும் வகையில் ஆதிமலை ரூ.1 லட்சம் காப்பீடுத் தொகையாக தேன் சேகாிப்பவருக்கு வழங்குகிறது. இந்தக் காப்பீடு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக அளிக்கப்படுகிறது.
ஆதிமலை கீஸ்டோன் நிறுவனத்தோடு இணைந்து வன பொருட்களுக்கான நிலைத்த அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி சமூக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த முயற்சி உள்ளூர் உயிர்ச்சூழல் அமைப்பு மேம்படுத்தி, வளர்ப்பதற்கு முக்கியமாக இருக்கிறது.
ஆதிமலை இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றுவதற்கு சிறப்பாக ஊக்கப்படுத்தி வருகிறது. பங்கேற்பாளருடன் கூடிய உத்திரவாத அமைப்பின் ஒரு பங்காக இந்நிறுவனம் குழுக்கள் அமைக்க உதவிசெய்து, நிலைத்த மற்றும் இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்களை வளர்க்கவும் உதவுகிறது.
சவால்கள் மற்றும் வெற்றிகள்
ஆதிமலை துவக்கக் காலங்களில் அவர்கள் நிறைய சவால்களை சந்தித்தது. நன்கு செயல்படும் சந்தையை உருவாக்குதல், புதிய பொருட்களை தொடர்ந்து வினியோகிப்பதை மேம்படுத்துதல். விலை முரண்பாடுகளை சந்தித்தல், வலுவான தர அடையாளம் உருவாக்குதல் ஆகியவை வலிமையான சவால்களாக கருதப்படுகிறது. தொடர்புகளுக்கான வசதிகளை தற்போது தேவையான அளவு இல்லாததால்,கிராமங்களை அடைவதில் குறைந்த வாய்ப்பே இருப்பது முக்கிய சவாலாக கோரப்படுகிறது.
ஆதிமலையின் முக்கிய அம்சம் என்னவென்றால், மோசமான பழங்குடியின குழு உற்பத்தியாளர்களுக்கு மையமாக வைத்து கொள்முதல் செய்முறையே ஆகும். நேரடி மற்றும் நல்ல உறவை இந்த சமூகங்களோடு மேம்படுத்துதல், இது உள்ளூர் சந்தை மதிப்புகளைவிட,உயர்மதிப்பு விலையில் பிரதிபலிக்கிறது. இது ஆதிமலையின் சமூக நியாயம் மற்றும் தரத்தில் ஆதிமலையின் அர்ப்பணிப்பு முக்கியத்துவமளிக்கிறது.
நிலைத்தத்தன்மை மற்றும் இயற்கை தொழில்நுட்பங்களுக்கு ஆதிமலை முக்கியத்துவமளிப்பது, பங்கேற்புடன் கூடிய உத்திரவாத அமைப்பின் கீழ் சான்றிதழ் பெற்றதே சாட்சியாகும். நிறுவனமானது நடவிலிருந்து அறுவடை வரை ஒவ்வொரு உற்பத்தி நிலையில் ஆவணப்படுத்துவதை வழக்கமாக பெற்றிருக்கின்றது, இதனோடு இயற்கையின் நோ;மை மற்றும் நிலைத்த அறுவடையின் முக்கிய மதிப்புகளை நேர்படுத்துகிறது
கொள்முதல், உற்பத்தி, மற்றும் பொட்டலம் போடும் நிலைகளின்போது கடுமையாக தரத்தை சோதிப்பது ஆதிமலையின் செயல்பாடுகளில் ஒருங்கிணைக்கும் ஒன்றாகும். இந்த கடுமையான தரகட்டுபாடு ஒவ்வொரு பொருள் கொண்டு செல்வதற்கு உயர் தரங்களாக மாற்றி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்துவதே ஆதிமலையின் தொலைநோக்கு பார்வையாகும்.
தாக்கம்
ஆதிமலை 15 உறுப்பினர்களோடு தொடங்கி 1809 பங்குதாரர்களாக விரிவடைந்துள்ளதை வைத்து முக்கிய வளர்ச்சியின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. நீலகிரி உயிர்கோளம் உள்ளூர் சமூகங்களுக்கு நிலைத்த மற்றும் நல்ல வாழ்வாதார தோ;வுகளை வழங்குவதில் இந்த மாதிரி மூலம் வெற்றியின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
நாட்டில் உள்ள பெரும்பாலான சில்லறை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு பொருட்களை வெற்றிகரமாக விற்றது, ஆதிமலை. இது கணிசமான வளர்ச்சியை குறிக்கிறது. 2023 ஆம் ஆண்டு பங்குதாரர்களின் எண்ணிக்கை 1609 லிருந்து 1809 வரை அதிகாித்ததில், அதிவேக விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.1.2 கோடிபொருட்கள் விற்பனை செய்துள்ளது ஒவ்வொருவருடமும் நிறுவனத்தின் லாபத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு திரும்ப பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.
2022-2023 நிதியாண்டில், ஆதிமலை பெண்களுக்கு 5115 பணிநாட்கள் உருவாக்கியுள்ளது. இது 135 கிராமத்தில் உள்ள தோராயமாக 2200 உள்ளூர் குடும்பங்களுக்கு சென்றடைந்துள்ளது. அதேவருடத்தில், விளைபொருளை வினியோகித்த சமூக உறுப்பினர்களுக்கு 2.25 இலட்சம் போனஸாக பகிர்ந்தளித்துள்ளனர்.
சமூக முன்னேற்றத்திற்கு இந்நிறுவனம் செய்த அர்ப்பணிப்பு, ஐக்கியநாடுகளின் வளர்ச்சித் திட்டத்திலிருந்து கிடைத்த மதிப்பு மிக்கஈகுவேட்டர் பாிசுஅளித்துஅங்கிகாரத்துடன் மேலும் எடுத்துக்காட்டப்பட்டது.
ஆதிமலையின் எதிர்காலம் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தில் இணைந்து இருக்கிறது.ஒரே நோக்கத்தை ஒத்த நிறுவனங்களை பங்குதாரர்களாக, சமூக வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பவர்களையே இணைக்க முடிவெடுத்துள்ளது. இயற்கை மற்றும் நிலைத்த அறுவடை தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் முக்கியத்துவமளிக்கிறது. இந்நிறுவனம் சமூக திறன்கள் வளர்ப்பதை நோக்கமாக கொண்டு, தனித்து நிற்பதற்கான ைதாியத்தையும் வளர்க்கிறது.
அட்டவணை 1 பங்குதாரர்களின் விவரம்
| பகுதி | மொத்த உறுப்பினர்கள் | ஆண்கள் | பெண்கள் |
| கொணவக்கரை | 223 | 108 | 115 |
| அரக்கோடு | 471 | 242 | 229 |
| குன்னூர் | 282 | 141 | 141 |
| பில்லூர் | 182 | 79 | 103 |
| சிகுர் | 2 | 1 | 1 |
| ஹசனூர் | 649 | 363 | 286 |
| மொத்தம் | 1809 | 875 | 934 |
ஜெஸ்டின் பால்ஸ்
Jestin Pauls Aadhimalai Pazhangudiyinar Producer Company Ltd, 41/111E, Groves Hill Road, Kotagiri 643217 E-mail: ceo@aadhimalai.in
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2023, வால்யூம் 25, இதழ் 4



