தனி மனித அமைப்பு – வேளாண் உயிர்ச்சூழல் குறித்து பரப்பும் விவசாய கல்வியாளர்


வேளாண் உயிர்ச்சூழல் குறித்த அறிவு தொடர்ந்து வயல்களில் உருவாகி வருகிறது. இந்த அறிவை ஒன்றிணைந்து உருவாகி அதனை பரப்புவதற்கு, விவசாயிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். விவசாய இணைப்பு குழு போன்ற உள்ளூர் அமைப்புகளை பயன்படுத்தி, வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு விவசாயிகள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த ஆசிரியர் மற்றும் விவசாயி ஒருவர் இங்கு உள்ளார்.


ஓரிசா மாநிலம்,கஞ்சம் மாவட்டம், திகபஹண்டி வட்டத்தில் உள்ள சிறிய கிராமமான குஹல்பூரில் இருக்கும் மத்திய பள்ளியில் 16 வருடங்களாக தலைமை ஆசிரியராக இருக்கிறார். திரு. பிரதீப்குமார் அவர்கள். பிமாபூர் என்ற இடத்தில் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பிரதீப். இவர் தன்னுடைய வாழ்க்கையை வளர்ச்சி பணியாளராக கிராம் விகாஸ் என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கினார்.. பிரதீப், ஆழ்ந்த பொறுப்பில் வளர்ச்சியை நோக்கி விவசாயிகள் மற்றும் மாணவர்கள் எண்ணத்தை மாற்றி அதனை செயல்படுத்துவதற்கு பாடுபட்டார்

செம்மை நெல் சாகுபடி, ஒரு வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பம் பரப்புதல்
கிராம் விகாஸ் -உடன் இணைந்திருக்கும்போது பிரதீப்குமார் நெல் விவசாயிகளுடன் பணிபுரிந்துள்ளார். அதனால் நெல் சாகுபடியில் உள்ள பிரச்சனைகளை அறிந்திருந்தார், குறிப்பாக பாசன நீரில் உப்புத்தன்மை அதிகம் உள்ளதையும் உட்பட. 2000ஆம் ஆண்டு, லீசா இந்தியாவில் அதே ஆண்டில் டிசம்பர் மாத இதழில் வெளியிடப்பட்ட தலைப்பை டாக்டர். நார்மன் அப்ஹஃப் படிக்க நேர்ந்தது.
இந்த கருத்தில் ஆச்சாியமடைந்து குஹல்பூரில் உள்ள அவரது விவசாய நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டு, செம்மை நெல் சாகுபடி முறையை தங்களது பண்ணைகளில் செய்துபார்க்க அறிவுறுத்தினார். இரண்டு விவசாயிகள் இந்த தொழில்நுட்பத்தை செய்துபார்த்து நல்ல முடிவுகளை பெற்றனர்.

2000-2001 ஆம் ஆண்டு கோஹேத்தா அணையிலிருந்து நெல் விவசாயிகளுக்கு பாசனம் செய்வதற்கு, தேவையான தண்ணீரை விநியோகம் செய்வதற்கு வழிநடத்தினார் திரு.பிரதீப் குமார். இவர் பாணி பஞ்சாயத்து என்ற தண்ணீர் குழுக்களாக, விவசாயிகளை ஊக்குவித்து, ஒருங்கிணைத்தார். திகபஹண்டி வட்டத்தில் உள்ள 57 கிராமங்கள், கிராமத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் என்ற ரீதியில் விவசாயிகள் இந்த குழுவில் அங்கமாக இருந்தனர். இந்தக் குழு மாதம் ஒரு முறை கூடி, வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள் குறித்தம், ஒட்டுமொத்த கிராம வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடுவர். குழு கூட்டத்தின் போது பல கிராம அளவிலான பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது. விவசாயியாக இருந்து, பிரதீப் குழுவின் அங்கமாகவும் இருக்கிறார். இந்தக் குழுவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கிய பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் படித்தவராகவும், ஆசிரியராகவும் இருப்பதால் உள்ளூர் சமூகத்தில் அவருக்கு நல்ல மாியாதை இருக்கிறது.

ஒரு கூட்டத்தில், பிரதீப், செம்மை நெல் சாகுபடி குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும் மகசூல் விரிவடையும் அதேசமயத்தில், இது ஆதார பயன்பாட்டை எவ்வாறு குறைக்க உதவுகிறது என்பது குறித்தும் பகிர்ந்துகொண்டார். மிக முக்கியமாக தண்ணீர் பயன்பாட்டுக் குழுவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான தண்ணீரை பயனுள்ளதாக உபயோகித்தல் ஆகும்.ஆதலால் அவர் குறைந்தளவு தண்ணீர் தேவைப்படும் செம்மை நெல் சாகுபடியை பின்பற்ற வலியுறுத்தினார். செம்மை நெல் சாகுபடியை செயல்படுத்துவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கும் வழியாக பயன்படுத்திகொண்டார். துவக்கத்தில் சுமார் 200 விவசாயிகள் செம்மை நெல் சாகுபடியை பின்பற்றினர். 2003 ஆம் ஆண்டிற்குள் இந்த வட்டத்தில் சுமார் 1000 விவசாயிகள் தங்களது பண்ணைகளில் செம்மை நெல் சாகுபடியை செய்ய துவங்கினர். 2005 ஆம் ஆண்டு வரை செம்மை நெல் சாகுபடி பரப்பும் நோக்கம் மாநிலத் துறைக்கு இல்லை. இந்த மாவட்டத்தில் மட்டுமே, லிப்பக்கர் மற்றும் கிராம் விகாஸ் ஆகிய சில தொண்டு நிறுவனங்கள், இந்த தொழில்நுட்பத்தை பின்பற்ற விவசாயிகளை ஊக்குவிக்கப்பட்டனர்.பிரதீப் அவருடைய பள்ளியில் இரண்டு கூட்டங்களை ஒருங்கிணைத்தார். இந்த கூட்டத்திற்கு கட்டாக்கில் உள்ள நெல் ஆராய்ச்சி மையத்திலிருந்து விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டனர். சுமார் 50 கிராமங்கள் பங்கேற்றனர். எனினும் இது நீண்ட நாட்களுக்கு தொடரவில்லை.

2005 ஆம் ஆண்டிலிருந்து இந்த முயற்சியை பரவலாக்கம் செய்வதில் அவரது பார்வை இருந்தது. வட்ட அளவில் பாணி பஞ்சாயத்தின் இரண்டு மற்றும் ஒரு கூட்டத்தின்போது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அடைந்த வெற்றி மற்றும் சந்தித்த பிரச்சனைகள் ஆகிய அனைத்தும் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது. உயர்த்த வேண்டிய அறிவு மற்றும் திறன்கள் கண்டறியப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக, இந்த விருப்பத்தை எந்த வழியிலும் சமூகங்கள் நிறைவு செய்ய இயலவில்லை . வேளாண்மை துறையிலிருந்து அலுவலர்கள், உறுப்பினர்கள் வலியுறுத்தும்போது மட்டும் பார்வையிடுவர். ஆனால் வேளாண்மையில் சிறந்த தொழில்நுட்பங்களை எப்பொழுதாவதுதான் அறிவுரை கூறுவர்.

தற்போது, செம்மை நெல் சாகுபடி, வேளாண்மை துறையினால் பாிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு மாநில அளவிலான முயற்சி. மாநில அரசு இந்த முறையை பாிந்துரைப்பதற்கு முன்னரே பிரதீப் திகப்பஹண்டி வட்டத்தில் விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி செய்வதற்கு ஊக்குவித்தார். அரசு நடத்தும் செம்மை நெல் சாகுபடி குறித்த பயிற்சி திட்டங்கள் போதாது என பிரதீப் வெளிபடுத்தினார். விவசாயிகள் ஏற்றுகொள்வது தாமதமானதால் இந்தத் திட்டம் வளர்வதற்கும் தாமதமானது. பல கல்விச் சுற்றுலாவிற்கு பிறகே, விவசாயிகள் செம்மை நெல் சாகுபடி முறையை செய்து பார்த்தார். இருபது கிராமங்களில் உள்ள செம்மை நெல் சாகுபடி விவசாயிகளோடு பிரதீப், கலந்துரையாடினார். விவசாயிகள் மகசூல் அதிகாித்திருப்பதை வெளிப்படுத்தினர். சிலருக்கு ஏக்கருக்கு 20-25 குவிண்டால் கிடைத்துள்ளது ஆனால் முன்பு அவர்களுக்கு ஏக்கருக்கு வெறும் 15 -16 குவிண்டால் கிடைத்தது. விவசாயிகள் இந்த முறை புதியதாகவும், ஆதாரம் சேமிப்பதையும் கண்டனர். ஆனால் பொியளவில் அதனை பின்பற்ற அவர்கள் உறுதியாக இல்லை.

இளம் சமூகத்தினரை வேளாண் உயிர்ச்சூழலை நோக்கி வடிவமைத்தல்
பிரதீப் அவரது பள்ளியில் வீட்டுத்தோட்டம் செயல்படுத்த பணிபாிந்தார். வீட்டுத் தோட்டம். செயல்பாட்டு அடிப்படையிலான கற்கும் சூழ்நிலை உருவாக்குவதன் பங்காக இது ஆரம்பிக்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் ஏழை குடும்பத்திலிருந்து வருவதால், அவர்கள் தோட்டம் அமைப்பதற்கு இயற்கையாகவே ஆர்வம் கொண்டிருந்தனர். வீட்டுத்தோட்டம் 200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. கத்திரி, முருங்கை, மிளகாய், கீரைகள்,பப்பாளி போன்ற காய்கறிகள், வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்பட்டது.
இயற்கைக்கு உகந்த சாகுபடி செய்யும் முறையை பாிந்துரைத்து வருகிறார். தோட்டத்தில் ஒரு குழி அமைத்து அங்கு கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி மக்கு உரம் தயாரிக்கப்படுதிறது. சாணம், வேம்பு இலை, டியோடார் இலை போன்றவை மக்குஉரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மேலும், மண்புழு உரம் குறித்து புத்தகத்தில் படித்தவர், பாிசோதனையும் செய்தார். ஆனால் பொிதாக வெற்றியடைய முடியவில்லை.

துவக்கத்தில், தாவரங்களை வெள்ளை எறும்புகள் தாக்கியது, சில நேரங்களில் நோய்கள் தாக்கியது. டாக்டர். நாராயணசாமி ரெட்டி பகுதி, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பொிதும் உதவியது (லீசா இந்தியா, இயற்கை விவசாயிக்கான சிறப்பு பகுதி என பிரதீப் கூறினார். மேலும் இவர் பசுந்தாள் உரத்தை பயிர் செய்து அதனை தொடர்ந்து பாதுகாத்து, கண்காணித்ததால் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உதவியது. நாராயண ரெட்டியின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு அவர் மேலும் இருட்டு மண்ணை சாமந்தி செடிகளுக்கு இட்டு முயற்சி செய்தார்.

குழந்தைகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும், ஒரு மணி நேரத்திற்கு சிறப்பு பகிர்வு வகுப்பு உள்ளது. மாணவர்கள் பசுமைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை அவர்களுக்கு தொியப்படுத்தப்பட்டது. குழந்தைகள் என்ன செய்தகொண்டிருக்கின்றனர் என்பதையும், வீட்டுத்தோட்டங்களில் பராமாிப்பு பிரச்சனைகளை பகிர்ந்துகொள்கின்றனர். ஆசிரியர்கள் அவர்களுக்கு தேவையான தொடர் நடவடிக்கை செயல்பாடு குறித்து அறிவுரை கூறினர். ஆனால், வீட்டுத்தோட்டம் குறித்த சிறப்பு பயிற்சிகள் குழந்தைகளுக்கு அளிக்கப்படவில்லை.

வீட்டுத் தோட்டத்திலிருந்து அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் மதிய உணவிற்கு பயன்படுத்தப்படுகிறது. தாங்கள் வெளியில் வாங்கிய காய்கறிகளின் சுவையை காட்டிலும் வீட்டுத்தோட்டத்தில் வளர்த்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருப்பதை மாணவர்கள் உணர்ந்தனர்.குழந்தைகள் வீட்டிற்கு சென்றபின் இதனை தங்களுடைய பெற்றோர்களிடம் கலந்துரையாடினர்.

செய்வது நம்பிக்கையுடையது” என்று பிரதீப் உணர்கிறார். குழந்தைகள் முதல் சந்ததி கல்வியாளர்கள் என்பதால், வீட்டுத் தோட்டங்கள், மக்கு உரம் குறித்து செய்முறை பயிற்சி அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கு மத்தியில் சுதந்திரமாக யோசிக்கும் திறன் அதிகாிக்கவும் செய்கிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வும், நம்பிக்கையும் ஏற்படுகிறது. இந்த மகிழ்ச்சி கலந்த கற்றல்முறை, மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்கிறது. பள்ளியிலிருந்து நிறுத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை முற்றிலும் தடுக்கப்படுகிறது என்று பிரதீப் மகிழ்ச்சியாக கூறினார்.

தாக்கத்தின் எல்லை
பிரதீப் பாணி பஞ்சாயத்து மூலம் விவசாய சமூகங்களுடன், பள்ளி குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் ( அவர்களும் விவசாயிகள்) மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துரையாடி உயிரோட்டமான இணைப்பில் இருந்தார். மேலும் கிராம அளவிலான அலுவலர்களுடன் நன்கு திடமான தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது, வட்ட அளவில் அனைத்து வளர்ச்சி செயல்பாடுகளுக்கும் பிரதீப்தான் அணுகும் நபராக உள்ளார். அவர் பல்வேறு பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடுவார் குறிப்பாக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உருவாக்குவதில் முனைப்புடன் இருக்கிறார்.

பிரதீப், தன்னுடைய கருத்துகளை கொண்டு சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான தாக்கம் ஏற்படுத்த முடிந்தது. அவருடைய பள்ளியில் பயிலும் மாணவர்களை தொடங்கி, ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தினார். உதாரணமாக, இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபாியும் பெர்ஹாம்பூர் கிராம பஞ்சாயத்து, சாமா சிங்கியிலிருந்து வரும் திரு.காளி மிஷ்ரா, வீட்டிற்கு திரும்பியதும் இந்த கருத்துக்களை மற்றவர்களுக்கு பரப்புகிறார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் பணிபுரியும் இரண்டு தொண்டு நிறுவனங்கள் உதாரணத்திற்கு, பெர்ஹாம்பூரிலுள்ள லிப்பிக்கா மற்றும் நிகபஹண்டி வட்டத்திலுள்ள ஜன் ஜக்ரன் என்ற நிறுவனங்களுக்கு இந்த கருத்துக்கள் பரப்பப்பட்டது. மேலும் ஊனமுற்றவர்களால் மேம்படுத்தப்படும் ஜன் ஜக்ரன் நிறுவனத்தின் கன்சாமாரி பண்ணைக்கு இவர் ஆலோசகராக இருக்கிறார். இவருடைய திடமான தாக்கம் வட்டத்தின் 57 கிராமங்களை உறுப்பினர்களாக கொண்ட பாணி பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் நன்கு காணலாம். இதனைத் தாண்டி, அவர் வட்ட அளவில் உள்ள சுற்றுச்சூழல் குழு மாணவர்களையும் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.
பிரதீப்பின் தாக்கத்தின் எல்லை மிகவும் விரிந்துள்ளது. ஏனென்றால் பள்ளி ஆசிரியரான அவருடைய பதவி மற்றும் பாணி பஞ்சாயத்தில் அவர் உறுப்பினராக இருப்பதால் பலரிடம் அவர் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. மிக முக்கியமாக தனிப்பட்ட பண்புகளான, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு அவரை இந்த சிறந்த செயலில் ஈடுப்படுத்த செய்தது. உதாரணத்திற்கு, கிராமத்தில் அவருடைய படிப்பும், திறனும் கொண்ட மதிக்கதக்க நபர்களில், பிரதீப், ஒரு முக்கிய நபர் ஆவர். வளர்ச்சி பணிகளில் அவருடைய ஆர்வம், வளர்ச்சி நிறுவனங்களோடு அவர் பெற்றிருந்த அனுபவம், தொடர்புபடுத்திகொள்ளும் திறன் மற்றும் வெளி உலகத்தோடு அவர் வைத்திருக்கும் நட்பு ஆகியவை சமூகத்தில் மதிப்புமிக்க மனிதராக உருவாகினால் மற்றொரு புறத்தில், தலைமை ஆசிரியரான அவருடைய பதவி இளம் தலைமுறையினரை வடிவமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த அனைத்து பண்புகளும், வேளாண் உயிர்ச்சூழல் குறித்த தகவலை பரப்புவதற்கு முக்கிய பங்களித்தது.

ஆர்வம் மிகுந்திருந்தால், ஒரு தனி மனிதன் கூட சமூகத்தில் பல வித்தியாசங்களை காண்பிக்க முடியும் என்று பிரதீப்பின் வெற்றி வெளிப்படுத்துகிறது. தகவலின் சக்தி பகிர்வு இந்த நிகழ்வில் தௌிவாக வெளிப்படுத்துகிறது. சாியான நபருக்கு தகவலை ஆர்வத்துடன் சேர்க்கப்பட்டால் தாக்கம் உருவாவதில் எல்லையே இருப்பதில்லை, ஒரு நபர், ஒரு விவசாயி அல்லது ஒரு கல்வியாளர் கூட, அவர் வாழும் சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

குழந்தைகள் முதல் சந்ததி கல்வியாளர்கள் என்பதால், வீட்டுத் தோட்டங்கள், மக்கு உரம் குறித்து செய்முறை பயிற்சி அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கு மத்தியில் சுதந்திரமாக யோசிக்கும் திறன் அதிகாிக்கவும் செய்கிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வும், நம்பிக்கையும் ஏற்படுகிறது.

டி.எம்.ராதா


T M Radha
AME Foundation
Bangalore, India
www.amefound.org
E-mail: leisaindia@yahoo.co.in

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...