நிலைத்த வாடியின் நீண்ட நெடிய கதை


வெற்றிகரமான வேளாண்மைக்கு முக்கிய காரணியாக இருப்பது பல்வேறு தொழில்களை ஒருங்கிணைப்பது. ஒருங்கிணைக்கும் போது, மறுசுழற்சியின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தினால், ஒரு சிறிய துண்டு நிலத்தில் கூட வேளாண் குடும்பத்திற்கு போதுமான அளவு உணவு, ஊட்டச்சத்து மற்றும் வருமானத்தை அளிக்க முடியும். மல்லேஷப்பா ஒரு வெற்றிக்கதை – விரக்தியில் இருந்து ஆதாயமான வேளாண்மையை அடைந்த ஒரு பயணம்.


கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள கம்பிலிகோப்பா கிராமத்தை சேர்ந்த மல்லேஷப்பா ஹக்லட்க்கு 1.2 ஹெக்டர் மானாவாரி நிலம் சொந்தமாக உள்ளது. அவரின் குடும்பத்திற்கு ஒரே வாழ்வாதாரத்தின் ஆதாரமாக இருப்பது இந்த நிலமே, அதுவும் உற்பத்திக்கு தகுதியற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திக்கு தகுதியற்ற நிலத்தை வைத்துக்கொண்டு 6 குழந்தைகள் கொண்ட குடும்பத்தை நிர்வகிப்பது மல்லேஷப்பாவிற்கு மிகவும் சிரமமாக இருந்தது.
1996 ஆம் ஆண்டு கம்பிலிகோப்பா கிராமம் பயாப் நிறுவனத்தின் திட்ட இலக்கு கிராமங்களில் ஒரு கிராமமாக தேர்வு செய்யப்பட்டு மரங்களை அடிப்படையாக கொண்ட (வாடி) திட்டத்தை நிலைத்த வளர்ச்சிக்கான தொழிற்நுட்பங்களை மாற்றிக் கொடுப்பது (டி.டி.எஸ்.டீ) திட்டத்தின் கீழ் செயல்படுத்தியது. வாடி திட்டமானது முக்கியமாக 50 செ.மீ நீளத்திற்கு குழிகளையும், வரப்புகளையும் அமைப்பதும், பண்ணைக் குட்டைகளை (30 x 30 x 10 அடி) வீதம் அமைப்பது, 40 தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவது மற்றும் 500-800 காடுகளில் பயிரிடக்கூடிய மரக்கன்றுகளை வளர்ப்பது, தீவன உற்பத்தியை கூட்டுவது, மற்றும் மண்புழு உர அமைப்பது ஆகும். இந்த திட்டமானது, வேளாண்மை, தோட்டக்கலை, காடுவளர்ப்பு மற்றும் தீவனங்களை ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரே விதானமாக அமைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் உணவு, தீவனம், எரிபொருள் போன்றவற்றின் உத்திரவாதத்தை சுய வேலைவாய்ப்போடு ஏற்படுத்திக் கொள்வதாகும்.

ஆரம்பத்தில் மல்லேஷ்ப்பாக்கு தயக்கம் இருந்த போதிலும், 1998 ஆம் ஆண்டு தன்னை வாடி திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். துவக்கத்தில் அவர் சுய உதவிக் குழுவின் உறுப்பினராக ஆனார். இந்த திட்டமானது சுய உதவிக் குழுவின் மூலம் நடைபெறுவதற்காக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு சுயஉதவிக் குழுவில் இருந்தும் 2 நபர்கள் கிராம விகாஸ் சமிதி (ஜீ.வி.எஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து கிராமங்களிலும் உள்ள ஜீ.வி.எஸ் அமைப்பில் இருந்து 2 நபர்கள் சர்வோதயா மகா சங்கா என்ற உயர்மட்ட அமைப்போடு இணைக்கப்பட்டது. இந்த அமைப்பானது சங்க விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு கூட்டாக விற்பனை ஈடுபடும் பணியை ஒருக்கிணைத்தது. 1996-2002 ஆம் காலங்களில் இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், பதிவேடுகள் பராமாித்தல், மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண் முறைகள், தோட்டகலைப் பயிர்களை நட்டபின் பராமாித்தல், பால் மாடுகள் பராமாிப்பு, தீவன வளர்ப்பு, கன்றுகள் வளர்ப்பு, மதிப்புக் கூட்டல், உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என பல்வேறு அம்சங்களில் அளிக்கப்பட்டது. மல்லேஷ்ப்பாவும் மண் மற்றும் நீர் பாதுகாப்பு, மரங்களை அடிப்படையாக கொண்ட வேளாண்மை, இயற்கை வேளாண்மை கால்நடை வளாப்பு மற்றும் தீவன வளர்ப்பு போன்றவற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு பயிற்சிகள், பட்டறிவு பயணங்களில் கலந்து கொண்டார்.
மல்லேஷப்பா  0.4 ஹெக்டர் நிலத்தில் 40 சப்போட்டா கன்றுகளை பயிரிட்டு உருவாக்கினார். மேலும் அவர்கள் மற்ற தோட்டக்கலைப் பயிர்களான சீத்தா, பப்பாளி, பலா, எலுமிச்சை, முருங்கை, தென்னை மற்றும் முந்திரி போன்றவற்றை பயிரிட்டார். 4 ஆம் வருடத்தில் இருந்து சப்போட்டா காய்க்க தொடங்கியது. முருங்கையை தவிர மற்ற அனைத்து பழங்களும் வீட்டு நுகர்வுக்கு பயன்பட்டது. சராசாியாக ரூ. 2000 முருங்கையில் இருந்து அவருக்கு வருமானம் கிடைத்தது. இந்த ஒருங்கிணைந்த முறையானது 6 வது வருடத்தில் இருந்து நிலையான வருமானம் அளிக்கத் தொடங்கியது. சராசாியாக மல்லேஷப்பா ரூ. 45000த்தை ஆண்டு வருமானமாக தோட்டக்கலை பயிர்களில் இருந்து பெறுகிறார். நல்ல மகசூல் காரணமாக தனது தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பை மேலும் அரை ஏக்கருக்கு விரிவுபடுத்தி அதில் அவரின் சொந்த முதலீட்டில் 50 மா கன்றுகளை நட்டுள்ளார்.

பல்வகை தொழில்களை ஒருங்கிணைத்தல்:
மல்லேஷப்பா வாடி பகுதியில் உள்ள இடைவெளிகளை பயன்படுத்தி ஊடுபயிர்களை பயிரிட்டார். 2011 ஆம் ஆண்டு அவர் மஞ்சள் பயிரிடத் தொடங்கினார். 15 வருட பழ மரத்தோட்டத்தில் கிடைத்த நிழலின் விளைவாக அது மஞ்சள் சாகுபடிக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது. ஒரு குண்டா நிலத்தில் இருந்து அவர் ஒரு குவிண்டால் மஞ்சள் விளைச்சல் எடுத்தார். இருப்பினும் பின் ஏற்பட்ட மழைபொழிவு குறைவு காரணமாக மஞ்சள் சாகுபடி பரப்பை குறைத்து விட்டார். தற்போது அவர் 10 கிலோ பச்சை மஞ்சள் மட்டும் அறுவடை செய்து, பதப்படுத்தி தனது வீட்டு உபயோகத்திற்கு வைத்துக் கொள்கிறார்.
2011 ஆம் ஆண்டில் இருந்து அவர் காய்கறிகள் பயிரிட்டு வருகிறார். அவர் மிதி பாகற்காய் சாகுபடியை ஒரே ஒரு திராட்சை செடியோடு ஆரம்பித்தார். தண்டு வெட்டி வைத்து 150 திராட்சை செடிகளை ஒரு பந்தல் போல் அமைத்து படரவிட்டார். பழங்கள் 2 மாதங்களில் காய்க்க ஆரம்பித்து ஒரு வருடத்தில் 10 மாதங்கள் வரை காய்க்கிறது. ஒரு வாரத்திற்கு மல்லேஷப்பா 20-40 கிலோ அறுவடை செய்கிறார். மேலும் அவர்கள் கொத்தவரை, பீர்க்கு, வெண்டை, மிளகாய், வெள்ளரி, முள்ளங்கி, வெந்தயம் போன்றவற்றை வீட்டுத் தேவைக்கு வளர்த்து வருகிறார். உளுந்து 15 குண்டா நிலத்தில் வீட்டு உபயோகத்திற்கு வளர்க்கப்பட்டு அது 1 குவிண்டால் வரை மகசூல் தருகிறது.

தேக்கு, யூகலிப்டஸ், சவுக்கு, அகத்தி, அகேசியா, சில்வர் ஒக், கிளரிசெடியா, சூபாபுல், போன்ற பல்வேறு வகையான வன மரக்கன்றுகள் கிட்டத்தட்ட 800 வரை நிலத்தில் எல்லைகளில் பயிரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பக்க கிளைகள் கவாத்து செய்யப்பட்ட விறகாக பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாம் வருடத்தில் இருந்து நன்கு வளர்ந்த சில அக்கேசியா தாவரங்கள் வெட்டப்பட்டு அவை வீடுகள் கட்டுவதற்கும், கால்நடை கொட்டில்கள் அமைக்கவும் பயன்படுகிறது. பக்க கிளைகளை கவாத்து செய்வதன் மூலம் மல்லேஷப்பா வருடத்திற்கு ரூ. 15000/- வருமானம் ஈட்டுகிறார். கிராமத்தை சுற்றியுள்ளவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதன் மூலம் ஒரு குவிண்டால் ரூ. 300க்கு விற்கிறார். கூடுதலாக அவரின் குடும்பத்திற்கு தேவையான விறகு தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
வரப்புகளின் மேலும், இரண்டு தோட்டக்கலை பயிர்களுக்கு இடையிலும் பல்வேறு வகை தீவன பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தீவன வகைகளான புற்கள் ஸ்டைலோ ஹமதா, ஸ்டைலோசான்தஸ் ஸ்கப்ரா, நேப்பியர் ஒட்டு மற்றும் மர வகைகளான அகத்தி, கிளரிசெடியா மற்றும் சூபாபுல் பயிரிடப்படுகிறது. அவரது நிலத்தில் இருந்து கிடைக்கும் பசுந்தீவனங்கள் அவரின் கால்நடைகளுக்கு போதுமானதாக உள்ளது. கூடுதலாக கிடைக்கும் வேர் கரணைகளை அவர் விற்று விடுகிறார். சராசாியாக ஆண்டு ஒன்றிற்கு ரூ. 20000 வரை வேர் கரணைகளை விற்கிறார்.

போதுமான அளவு தீவனம் இருப்பதால், மல்லேஷப்பா தனது கால்நடை பிரிவையும் விரிவுபடுத்தியுள்ளார். பால் உற்பத்தியும் அவற்றின் அளவிற்கு ஏற்ப அதிகாித்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் பால் உள்ளூரில் உள்ள பால் பண்ணைக்கும், 3 லிட்டர் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுகிறது.

ஆதாரங்கள் மறுசுழற்சி:
மறுசுழற்சி செய்யும் தொழிற்நுட்பங்கள் வேளாண் கழிவுகளில் இருந்து கால்நடை தீவனமாகவும், கால்நடை தீவன கழிவு வேளாண்மைக்கும் உரமாக மாற்றப்படுவது திட்டமிட்டு முறையாக செயல்படுத்தப்படுகிறது. சோளம், மக்காச்சோளம், சோயாபீன்ஸ், தட்டைப் பயிறு போன்றவற்றில் இருந்து கிடைக்கும் வேளாண் கழிவுகள் வைக்கோலாக பயன்படுகிறது. கோடைக்காலங்களில் பசுந்தீவனங்களின் தேவைகள் அகத்தி, சூபாபுல், மற்றும் கிளரிசெடியா தாவரங்களில் இருந்து பூர்த்தி செய்யப்படுகிறது. கால்நடைகளின் சாணம் மண்புழு உரம் தயாரிக்க பயன்படுகிறது. கால்நடைகளின் எண்ணிக்கை அதிகாிப்பதன் மூலம், பயோமாஸ் அதிகம் கிடைப்பதால் அதனைக் கொண்டு போதுமான அளவு மட்குஉரம் தயாரிக்க முடிகிறது. போதுமான அளவு உரங்கள் நிலத்திற்கு பயன்படுத்தப்பட்டு, உபாியாக உள்ளவை விற்கப்படுகின்றது. மல்லேஷப்பா மண்புழு உரம் மற்றும் புழுவையும் விற்று கூடுதல் வருமானம் பெறுகிறார். சராசாியாக அவர் 100 குவிண்டால் மண்புழு உரம் விற்கிறார். மட்கு உரம் தயாரிப்பதோடு கூடுதலாக சாணத்தைக் கொண்டு சாண எரிவாயுவும் தயாரிக்கிறார். கிராம பஞ்சாயத்தின் உதவியோடு சாண எரிவாயு கலன் அமைத்துள்ளார். அதில் கிடைக்கும் கழிவுகள் சாண எரிவாயு கலனில் இருந்து எடுக்கப்பட்டு மட்கு உரம் தயாரிக்கும் குழிக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது.

அவரது நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையில் தொடர்ச்சியாக மழை நீர் அறுவடை செய்யப்படுகிறது. சராசாியாக 4 லட்சம் லிட்டர் நீர் ஆண்டுதோறும் அறுவடை செய்யப்படுகிறது. பண்ணைக்குட்டையில் உள்ள நீரை பயன்படுத்தி ஊடுபயிர்களுக்கு பாதுகாப்பான நீர்ப்பாசனம் அளித்தும், கால்நடைகள் மற்றும் மண்புழு தயாரிப்புக்கு தேவையான நீரையும் பயன்படுத்தி கொள்கிறார். ஒவ்வொரு இரண்டு ஆண்டும் பண்ணைக்குட்டையை தூர்வாரி வண்டலை எடுத்துக் கொள்கிறார்.

பல்வேறு அறுவடை பயன்கள் :
பல்வேறு தொழில்களின் ஒருங்கிணைப்பால் மல்லேஷப்பா உற்பத்திக்கு தகுதியற்ற நிலையில் இருந்து 1.2 ஹெக்டர் நிலத்தில் இருந்து நல்ல வருமானம் பெற்று வருகிறார். ஆண்டுதோறும் சராசாியாக ரூ. 45000 தோட்டக்கலை பயிர்களில் இருந்தும், ரூ. 15000 காடு வளர்ப்பில் இருந்தும், ரூ. 75000 பால் விற்பனையிலிருந்தும், ரூ. 20000 தீவன பற்கரணைகள் விற்பதில் இருந்தும், ரூ. 60000 மண்புழு விற்பனையிலிருந்தும் பெறுகிறார். இது அவர் தனது வீட்டிற்கு தேவையான காய்கறிகள் அறுவடை செய்தது போக. இந்த வழியில் ஒரு சிறு துண்டு நிலமானது குடும்பத்திற்கு தேவையான சத்துமிக்க உணவை, ஆரோக்கியமான காய்கறிகள், பால், பால் பொருட்கள், பல்வேறு வகையான பழங்கள், தானியங்கள் மற்றும் ஆண்டு வருமானமாக ரூ. 2,15.000 வரை கிடைக்க வழி செய்கிறது.
மல்லேஷப்பா உயிர்ச்சூழலுக்கு உகந்த வேளாண் வழி முறைக்கு மாறிவிட்டார். அவர் மண்ணிற்கு அதிக அளவு மட்கு உரம் மற்றும் மண்புழு உரங்களை அளிக்கிறார். அவர் பூச்சிகளை கட்டுப்படுத்த “கீட்ஜென்யா நாசாக்கா” என்னும் பூச்சி விரட்டியை பயன்படுத்துகிறார். தன்னிடம் உள்ள இயற்கை வள ஆதாரங்களை திறமையாக பயன்படுத்துவதில் நிபுணராகி விட்டார். வேளாண்மையில் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தோடு, அவர் தனது சாகுபடி பரப்பை மேலும் 3 ஏக்கர் குத்தகை நிலத்திற்கும் விரிவுபடுத்தி, மேலும் 9 ஏக்கர் நிலத்தை 50க்கு 50பது என்ற அடிப்படையில் பகிர்ந்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.

அவரின் பொருளாதார நிலை மல்லேஷப்பா குடும்பத்திற்கு மிகுந்த நம்பிக்கைளை தந்துள்ளது. அவரின் வெற்றிக்காக கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். விவசாயிகள் மத்தியில் அவர்களின் கூட்டங்களில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், வல்லுநராக பயிற்சிகள் அளிக்கிறார். அவரது இரண்டு மகன்கள் வேளாண்மையில் அவருக்கு உதவியாக உள்ளனர். அவரது மனைவி கல்லவ்வா மகா சபையான சர்வோதயா மகா சங்கத்தின் இயக்குநராக உள்ளார். தற்போது பால் வள அமைப்பின் தலைவராகவும், வரூர் கிராம பஞ்சாயத்தின் தலைவராகவும் உள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிராமத்தில் ஒரு கௌரவமான வாழ்வை மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர்.

கங்கா அன்கட்


Ganga Ankad
Research Officer,
BAIF Institute for Sustainable Livelihoods &
Development -K
# 2, Kusumnagar, 11th cross, Kelgeri Road,
Dharwad - 580 008.
E-mail: ganga.ankad@baif.org.in

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2018, வால்யூம் 20, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...