தரத்தை உயர்த்துவதன் வழியாக மதிப்பை மேம்படுத்துதல்


கொல்லி மலையின் ஒரு வித்தையான வேளாண் உயிர்ச்சூழல் நிலைகள் அங்கு விளையும் காபியின் நறுமணம் மற்றும் தரத்தில் நேரடியாக விளைவை ஏற்படுத்துகின்றன. இந்த சிறு அளவிலான இயற்கை விவசாயி பல்வகைப்பட்ட, வேளாண் உயிர்ச்சூழல் பண்ணை அணுகுமுறையானது, பொருட்களின் தரத்தை கூட்டுவதோடு, மட்டுமல்லாமல் அதனை கண்கூடாக லாபகரமானதாகவும் காட்டுகிறது.


தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ள நகரம் கொல்லிமலை ஆகும். இது நம்பிக்கையற்ற, ஒரு வலிநிறைந்த 70 நெருக்கமான வளைவுகள் கொண்ட மலைப்பாதையானது, மோட்டார் சைக்கிள், கார்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு உந்துகள் நிறைந்த பாதைகளை கொண்டது. பாதை நிறைவடைந்ததும், மிகவும் அற்புதமான, அடர்த்தியான வன நிலப்பரப்பு பயணிகளை வரவேற்க காத்திருக்கும். காபி உற்பத்திக்கு இது பொருத்தமாக இடமாக இல்லாத போதும், உலகெங்கிலும் இப்படி எளிதில் நெருங்க முடியாத பகுதிகளில் இருந்து மிகவும் அபூர்வமான காபி பயிரிடப்படுகிறது. கொல்லி மலையின் விந்தையான வேளாண் உயிர்ச்சூழல் நிலைகள் சந்தேகமின்றி காபியின் நறுமணம் மற்றும் தரத்திற்கு நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் இந்த பகுதியில் உற்பத்தியாகும் காபியானது வேளாண் உயிர்ச்சூழல் கொள்கைகள் லாபகரமானதாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது.

கொல்லி மலையில் வனப்பகுதியில் புள்ளிகள் தௌித்தாற்போல் உள்ள நெல் வயல்கள் கொண்ட திருமிகு. ஜெயம் சுலவந்திப்பட்டி 20 வருடங்களாக காபி பயிரிட்டு வருகிறார். 2.5 ஹெக்டர் பரப்புடைய நிலத்தில் அவரும், அவரது கணவரும் ஒரு ஹெக்டோில் அரேபியா காபி, மிளகு, வாழை, குச்சி கிழங்கு, ஏலக்காய், எலுமிச்சை, பலா மற்றும் மாதுளை என பல்வகைப்பட்ட இயற்கை வேளாண் பண்ணையில் பயிரிட்டுள்ளார். காபி வேளாண்மை என்பது குடும்ப செயல்பாடாக செய்யப்படுகிறது. அவரது கணவரோடும், நாமக்கல் நகரத்தில் தொழிற்நுட்ப படிப்பு படித்துவரும் அவரின் 3 மகன்களின் அவ்வப்போதைய உதவிகளோடும், அவர்கள் ஒரு வருடத்தில் 200 கிலோ உலர்ந்த காபிக் கொட்டைகளை உற்பத்தி செய்கிறார். கொட்டைகளை வெளியே எடுப்பதை அவரது பண்ணைக்கு வெளியில், பக்கத்து விவசாயியின் வீட்டில் செய்து வருகிறார். பின்னர் காபி மீண்டும் அவர்களின் குடும்ப பண்ணைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள வீட்டின் கான்கிரீட் கூடையில் காய வைக்கப்படுகிறது. 4 வருடங்களுக்கு முன் அவர்களின் காபி தோட்டம் புதுப்பிக்கப்பட்டதால், மகசூலும் அதிகாித்தது. இதை அடைவதற்கு ஜெயம் தனது உலரவைக்கும் பகுதியை மேம்படுத்தவும், சாகுபடியை புதுப்பிக்கவும் காபி வாரியத்தில் இருந்த கடன் எடுத்தார். வாங்குபவர்கள் நேரடியாக அவரின் பண்ணைக்கு வந்து கொள்முதல் செய்வார்கள். அவர்களே விலையை நிர்ணயம் செய்வார்கள். நடைமுறையில் இது அவர்களின் குடும்பத்திற்கு தேவையான ஒன்று, ஏனெனில் காபியை சேகாிக்கும் மையங்களுக்கு அனுப்புவது அவர்களுக்கு மிகவும் சிரமமான காரியம். வாங்குபவர்களிடம் விலையை பேரம் பேசும் சக்தி அவரிடம் இல்லை என்ற போதிலும், முந்தைய வருடங்களைக் காட்டிலும் நல்ல வருமானத்தை அவரால் பெற முடிந்தது. அவரின் அதிக வருமானம் அவருக்கு கிடைத்த அதிக மகசூலால் சாத்தியமானது. குடும்பத்தின் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக அவரது கணவர் மற்ற பண்ணைகளில் கூலிவேலைக்கு சென்ற போதிலும், தற்போது காபி கொட்டை பறிக்கும் காலங்களில் அவரால் கூலியாட்களை தினசாி வேலைக்கு ஈடுபடுத்த முடிகிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடைபெறும் அதிக தீவிரப்படுத்தப்பட்ட வேளாண் முறைகளுக்கும், கொல்லி மலையில் நடைபெறும் வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளுக்கு ஒரு மிகப்பொிய வேறுபாடாக, நிலைத்த விவசாயம் இந்தியாவில் சாத்தியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெயம் மற்றும் அவரது குடும்பத்தை போல், அநேக குடும்ப விவசாயிகள் நிறைய பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அவர்களை நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. பல்வேறு பயிர்களை இணைப்பது இந்த முறையில் உள்ள ஒரு முக்கியமான அம்சமாகும். காபி, மிளகு, ஏலக்காய், பலா, மாதுளை மற்றும் எலுமிச்சை போன்றவற்றை விற்பதன் மூலம் வருமானம் ஈட்ட முடிகிறது. குச்சிக்கிழங்கு வீட்டு நுகர்வுக்கும், பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதற்கும் பயன்படுகிறது. வாழை வீட்டு நுகர்வுக்கும் உள்ளூர் சந்தையில் விற்பனைக்கும் விளைவிக்கப்படுகிறது. சில விவசாயிகள் உள்ளூர் உணவாக சிறுதானியங்களை உள்ளடக்கி பயிரிட்டு வருகின்றனர்.

உற்பத்திக்கு மதிப்புக் கூட்டல்:
கொல்லி மலையில் உள்ள கொல்லி மலை வேளாண் பல்லுயிர் பெருக்க பாதுகாவலர்கள் கூட்டமைப்பில் உள்ள 1500 விவசாயிகளில் ஜெயமும் ஒருவர் ஆவார். இது ஒரு சுய உதவிக் குழு விவசாயிகளுக்கு சிறுதானியங்கள், காபி மற்றும் குச்சிக்கிழங்கு போன்ற பயிர்களில் மதிப்புக்கூட்டல் மற்றும் பதப்படுத்துதல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கிறது. இந்த கூட்டமைப்பானது பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கான பணியை மேற்கொள்கிறது. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பெரும்பாலான பயிற்சிகள் இயற்கை வேளாண் முறைகளை புரிந்து கொள்வதற்கும், அதனை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டது. சில விவசாயிகளின் களங்களில் வாம் (வாஸ்குலர் அர்பஸ்குலர் மைக்கோரைசா) யூனிட்கள் மண்ணை வளப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டன. உயிர் உரங்கள் மற்றும் இதர இயற்கை இடுபொருட்களும் கூட்டமைப்பினால் மேம்படுத்தப்பட்டது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற சில கூட்டாளிகள் மூலம் விவசாயிகள் சுய உதவிக் குழுக்களை அமைப்பதற்கும் அங்கு மதிப்புக்கூட்டலுக்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்வதற்கும் உதவின.

பொிய அளவில் சந்தைகளை அடைவது:
கொல்லி மலையில் விளைவிக்கப்படும் காபிக்கு உள்ள ஒரு தனிச் சிறப்பு என்னவெனில், அதில் பெரும்பான்மையானவை உள்ளூரிலே நுகரப்படுகின்றன. பொதுவாக தென்னிந்தியா மற்றும் தமிழ்நாடு காபி கலாச்சாரத்திற்கு பெயர் வாய்ந்தவை. சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பொிய நகரங்களில் சிறு கடைகள் முதல் நல்ல அலங்காிக்கப்பட்ட காபி கடைகள், உணவங்களில் என அனைத்து தரப்பினர்களுக்குமான காபி, விற்பனை செய்யப்படுகிறது. கொல்லி மலை காபி நல்ல சுவை மற்றும் நறுமணத்தோடு பண்ணையில் இருந்து விவசாயிகளின் சொந்த பண்ணையில் உலர்த்தப்பட்டு கொல்லி மலையில் சேகாிப்பு மையங்களுக்கு வந்து சேருகிறது. அதன்பின் அங்கிருந்து நாமக்கல், சேலம், சென்னை மற்றும் பெங்களூருக்கு அனுப்பப்படுகிறது. பெங்களூரில் உள்ள பொிய வறுக்கும் கம்பெனிகள் காபி கொட்டைகளை வாங்கி வறுத்து விற்பனை செய்கின்றன. கொல்லி மலையில் உற்பத்தியாகும் காபி இந்தியா முழுக்க நுகரப்படுகிறது. இருப்பினும், கொல்லி மலையின் உண்மையான திறன் இன்னும் சாியாக சென்றடையாமல் இருக்கிறது.

கொல்லி மலையில் உற்பத்தி செய்யப்படும் காபி பற்றிய உண்மை என்னவெனில், இங்கு முற்றிலும் வித்தியாசமான வகையில் இயற்கை வேளாண் உயிர்ச்சூழல் முறைகள் கடைபிடிக்கப்பட்டு பல்வகையான உணவு பொருட்கள் நுகர்வோரை பொிதும் கவரும் வகையில் விளைவிக்கப்படுகின்றன. இந்தியாவின் நகர்ப்புற மையங்களில் உள்ள நுகர்வோர் மத்தியில் பெருகிவரும் கவலைக்குரிய விசயமாக, உதாரணத்திற்கு பெங்களூருவில் சுற்றுச்சூழல் குறித்தும், சப்ளை சங்கிலியில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் விவசாயிகளின் நலன் போன்றவை முறையான சான்றிதழ்கள் மற்றும் லேபிலிங் போன்றவற்றோடு நுகர்வோரின் கேள்விகளுக்கு பதில் தரப்படவேண்டும் என்பதுதான். ஒரு தோற்றுவாயில் இருந்து விற்கப்படுவதால், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கொல்லி மலை காபி, அதிக விலைக்கு அதன் உத்திரவாதமும், குறிப்பாக அந்த காபிக்கு உள்ள நல்ல மதிப்பும் காரணமாக அமைகிறது. கொல்லி மலையில் உள்ள சிறு விவசாயிகளுக்கு காபி சாகுபடி நல்ல லாபமளிக்கக்கூடிய வியாபாரமாக உள்ளது. ஜெயம் குறிப்பிட்டது போல் இந்தப் பகுதியில் வசிக்கும் குடும்ப வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் பருவநிலை மாற்றம் அல்லது ஏற்ற இறக்கம் கொண்ட உணவுப் பொருட்களின் விலைகள் போன்ற வெளிப்புற அதிர்வுகளை தங்களின் பல்வகை பயிர் சாகுபடி முறையினால் சமாளிக்கும் திறனை பெற்றுள்ளனர். பல்வகை பயிர்கள் சாகுபடியை, லாபம் தரும் பொருட்களான காபி போன்றவற்றோடு இணைக்கும்போது அவை அவர்களின் வருமானத்தை கணிசமாக கூட்டி, அதோடு பழங்கள் மற்றும் காய்கறிகள் அவர்களின் வீட்டு நுகர்வுத் தேவையையும், அவற்றை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யும்போது அவர்களின் அதிக வருமானத்திற்கு பங்களிக்கிறது. ஜெயம் அவர்களின் வெற்றிக்கான பண்புகள் அவரின் 2.5 ஹெக்டர் நிலத்தில் பல்வகை பயிர்களை, வேளாண் உயிர்ச்சூழல் முறைகளோடு செய்ததன் காரணமாக அவரின் குழந்தைகளின் கல்விக்கான செலவை அவர்கள் செய்ய முடிவதில் இருந்து தொிகிறது.

இந்தியாவில் கொல்லி மலையில் உள்ள சிறு குறு இயற்கை விவசாயியின் எடுத்துக்காட்டானது, பல்வகை பயிர்கள் கொண்ட, வேளாண் உயிர்ச்சூழல் வேளாண் முறை சாத்தியமானது மட்டுமல்ல, லாபம் அளிக்கக்கூடியது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நிலத்தின் மீது தற்போது மாறி வரும் வேளாண் நிலப்பரப்பு சூழலில் (மண் அரிமானம், வளமின்மை மற்றும் நிலப் பற்றாக்குறை), பருவ நிலை மாற்றத்தின் தாக்கங்கள் முன்பை விட கடுமையாகவும், முன்கூட்டியோ தீர்மானிக்க முடியாத வகையிலும், கிராமப்புற பகுதிகளில் நம்பிக்கை இழந்த சூழலில் இளைஞர்களை நகர்ப்புறங்களை நோக்கி தள்ளும் ஒரு தருணத்தில், இந்த சவால்களை எதிர்கொள்ள வேளாண் உயிர்ச்சூழல் முறையே பாதுகாப்பான வழிமுறையாகும். உயிர்ச்சூழல் மற்றும் பொருளாதார முன்னோக்கு என இருவகையிலும், பண்ணை மற்றும் சமூக அளவில் வேளாண் உயிர்ச்சூழல் முறையே தற்போது உலகெங்கும் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்கு சாியான, நல்ல தீர்வை தேடும் வழிமுறையாக அமையும்.

இங்கிரிட் ப்ரம்


Ingrid Fromm
Bern University of Applied Sciences School of
Agricultural, Forest and Food Sciences
Laenggasse 85 3052, Zollikofen, Switzerland
E-mail: Ingrid.fromm@bfh.ch

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2018, வால்யூம் 20, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...