நகாி என்பது பழங்குடி பெண்கள் தலைமையில் பாரம்பாிய உணவு விற்பனைக்கான மையத்தை தெற்கு குஜராத்தில் உள்ள கிராமங்களில் பயாப் மூலம் வெற்றிகரமாக அமைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். சமூக உரிமையோடு நடத்தப்படும் நகாி என்னும் கருத்துவாக்கம், பழங்குடி உணவுகளை சுற்றுலா பயணிகள் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள நகர்புற சமூகங்கள் மத்தியில் பரவலாக்கவும், அதன் மூலம் பழங்குடி பெண்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு மாற்று புதிய ஆதாரங்களை பெருக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.
நகாிஸ் என்பது பழங்குடியின பெண்களின் குழுக்களால் மனநிறைவளிக்கும் கேழ்வரகு, பருப்பு வகைகள் மற்றும் பாரம்பாிய மிளகாய் மற்றும் காட்டு கிழங்குகள் மற்றும் பருவகால காட்டு உணவுகளை பூர்வீக முறையில் அதே குழு பெண்களால் பாரம்பாிய முறையில் தயாரித்து விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கடைகளாகும். முதலாவது நகாி, 2006 ஆம் ஆண்டில் வல்சாடுக்கு அருகில் உள்ள கிராமத்தில் நிறுவப்பட்டது. இந்த கருத்துருவாக்கமானது, உள்ளூரில் உள்ள பயாப் குழு உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் என்று கருத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டபோது தோன்றியது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பல்வேறு செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு அதில் காடுகளில் கிடைக்கும் உணவுகளுக்கான ஆதாரங்கள் இருப்பதும் அது உள்ளூர் சமூகங்களால் நுகர்வு கொள்ளப்படுவதை ஆராய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டது.
ஜெய் ஆம்பே மகிளா மண்டல் மற்றும் பஜ்ரங்பாலி மகிளா மண்டல் போன்ற சில ஆர்வமிக்க பெண்கள் குழுக்கள் இணைந்த ஒரு தைரியமான முயற்சியாக பாரம்பாிய உணவுகளை விற்பதற்கான கடைகளை அமைத்தனர். அவர்களது அணுகுமுறை பலனளித்தது. அவர்களின் முதல் முயற்சியே நிகர லாபமாக ரூ. 12000 தரும் என்பதை உணர்ந்தபோது அவர்களின் ஆச்சாியத்திற்கு எல்லையே இல்லை. இந்த வெற்றியினால் உற்சாகப்படுத்தப்பட்டு, இந்த குழுக்கள் பல்வேறு நிகழ்வுகளுக்கு பாரம்பாிய வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுக்க ஆரம்பித்தனர்.
2006 ஆம் ஆண்டில் இந்த பெண்கள் கன்புர் கிராமத்தில் அங்கு வருபவர்களுக்கு உண்மையான பழங்குடியின தாளியை கொடுப்பதற்காக முதல் நகாி கடையை துவக்கினர். பாரம்பாியமாக, பழங்குடியின தாளி என்பது கேழ்வரகு சப்பாத்தி (நங்கிலி ரோட்லா என அழைக்கப்படும்), உளுந்து மற்றும் ஒரு உள்ளூர் பருவகால காய்கறியும் அடங்கியது. நகாி பெண்கள் இவற்றோடு 1-2 உள்ளூரில் கிடைக்கும் பொருட்களில் இருந்து தயார் செய்து அதனை கூடுதல் உணவாக கொடுக்க முடிவு செய்தனர்.
நகாியின் உள்கட்டுமான அமைப்புகள் பழங்குடியின அலங்கார முறையில் ஒரு பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதன் பழமை நலம்கனிந்த புதிய உள்கட்டுமான அமைப்புகள் மூலப்பிரதியான கிராம பின்னணியில் நவீன மற்றும் பாரம்பாிய இணக்கின் முழுமையான அமைப்பாக உருவாக்கப்பட்டு, இந்த பெண்களின் சமையலறைத் தொடர்பான திறமைகளை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டது.
கன்புர் நகாி, 17 பெண்கள் கொண்ட சுயஉதவிக் குழுவால் நடத்தப்பட்டது. நகாியின் தினசாி வியாபாரம் சராசாியாக ரூ. 1000 ஆக இருந்து தற்சார்பு நிலையை அடைந்துள்ளது. இன்று, அவர்கள் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அவர்களின் வேலை மற்றும் லாபம் போக ரூ. 50 அடைந்து அது அவர்களின் ஒன்றிணைந்த சேமிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்குள் 6-6-5 என 3 உப குழுக்களை ஏற்படுத்தி அவர்களின் வேலைகளை மாற்றியமைத்துக் கொண்டு அதன்மூலம் ஒரு நபர் ஒரு மாதத்தில் 10 நாட்கள் வேலை பெறுகின்றனர். ஒவ்வொரு நபரும், சமைத்தல், பாிமாறுதல், சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பொறுப்புகளை செய்கின்றனர். அவர்கள் உப குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுவும் உணவு மையத்திற்கு தேவையான வேலைகளை முடிப்பதை உறுதி செய்து கொள்கின்றனர். உடனடியாக புதிதாக கிடைத்த பொருட்களில் இருந்து உணவை பாிமாறுவதற்கு தயாராகுவதோடு, இந்த பெண்கள் இன்று வசுந்தரா கோஆப்பரேடிப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு விற்பனை முனையத்தையும் ரூ. 5000 முதலீட்டில் ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் பராமாிக்கும் நிதி பேரேடுகளை ஆதாரமாக வைத்து பார்க்கும்போது நகாி இன்று சுறுசுறுப்பான வியாபாரத்தை செய்து வருகின்றது. கன்புர் கிராம மக்கள், அருகாமையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் பழங்குடியினாின் உணவு விரும்பி களைத்து வரும் பயணிகள் ஆதரவோடும், இது கன்புர் கிராமத்திற்கு உண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், பிரபலமான இடமாகவும் விளங்குகிறது.
ஒட்டு மொத்த செயல்பாடுகளிலும், இந்த நிறுவனத்தை மேலாண்மை செய்தவதற்காக, உள் திறமைகளை கட்டமைப்பதற்காகவும், நம்பிக்கையை உருவாக்கவும், பழங்குடியின பெண்களின் குழுக்களுக்கு அவர்கள் நகாியை ஒரு சாத்தியமாக வியாபார நிறுவனமாக வடிவமைக்க தேவையான பயிற்சிகள் மற்றும் திறமைகளை அளிப்பதற்காகவும் நிறைய கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எங்கெல்லாம் கடன் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான உதவிகள் தேவையோ அங்கெல்லாம் அதனை அவர்கள் பெறுவதற்கு பயாப் உதவியது.
இதனை மாதிரியாக கொண்டு 7-8 நகாிஸ் தெற்கு குஜராத்தின் நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் “கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு புதிய வகை வாழ்வாதாரத்தை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை கிராமப்புற பகுதிகளில் விருந்தோம்பல் சேவை வழியாக ஏற்படுத்துதல்” என்ற பயாப் கருப்பொருள் மையத்தின் வழியாக மேலும் இந்த அணுகுமுறையை பிரதிபலிப்புக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்தாக்கம் உள்ளூர் மக்களாலும், சுற்றுலா பயணிகளாலும் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவை, பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ஒரு கருவியாக பார்க்கப்பட்டு, அதே வேளையில் வருமானத்தை பெருக்கும் இவ்வழியில் ஈடுபடுத்தும் போது பழங்குடியின மக்களின் பழக்கங்கள் மற்றும் பாரம்பாியங்கள் அழிந்து விடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
மாதிரியாக உருவாகிவந்தது:
பழங்குடியின மக்களில் பெண்கள் தலைமையில் குழுவாக தொழில் முனைவோராக நகாி ஒரு முன்மாதிரியாக உருவாகியது. அதில், சில பிரச்சனைகளை எதிர்கொண்டு, குறிப்பாக வளர்ச்சியடையாமல் உள்ள பகுதிகளில் ஒரு பக்கம் பயன்படுத்தப்படாத ஆதாரங்கள் மற்றொரு பக்கம் வளர்ச்சி பெறாத சமூகங்கள் வாழ்வதற்கே போராடும் நிலையில் இருப்பதும் என்ற நிலையில்லாமல் பார்த்துக் கொள்வது உறுதி செய்யப்பட்டது. இந்த பகுதியானது பின்தங்கிய மற்றும் பெரும்பான்மையாக மக்கள் குகனா, கோலி, வார்லி, கோட்வாலியா, கோல்சா, நயகா என்கிற பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இந்த பகுதியை சேர்ந்த பழங்குடியின சமூகங்கள் அவர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் பிழைப்பிற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பழங்குடியின பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே சுய வேலை வாய்ப்பை உருவாக்குவதை தவிர, நகாி பாரம்பாிய உணவை அடிப்படையாக கொண்ட உணவு பதார்த்தங்களை அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின அல்லாத மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கும் உதவியது. கடைக்கு வருபவர்கள் பழங்குடியினாின் ஊட்டச்சத்து மற்றும் ருசியான உணவு குறித்த விழப்புணர்வு பெறுவதோடு, இந்த அனுபவம் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
நகாியின் வெற்றியானது, உள்ளூர் சமூகங்களுக்கு அவர்கள் பாரம்பாிய உணவை அடிப்படையாக கொண்ட அறிவு மற்றும் திறமைகளை பாதுகாப்பதற்கான அங்கீகாரம் மற்றும் பாிசாகவும் பார்க்கப்பட்டது. உள்ளூர் காட்டு உணவுகளின் ஆதாரங்களுக்கு தேவைகளை உருவாக்குவதும், அந்த ஆதாரங்களை பாதுகாக்கும் செயல்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியானது, தேவைப்படும் நிதி உதவிகளை உருவாக்குவதற்கும் மற்றும் பழங்குடியின பெண்கள் இடம் பெயராமல், அவர்களின் சொந்த கிராமங்களிலே லாபம் தரக்கூடிய வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றுத்தந்தது. கிராமப்புற பகுதிகளில் உள்ள பிரச்சனை என்பது வேலைவாய்ப்பின்மை என்பதை காட்டிலும் வேலை பற்றாக்குறைதான். வேலை பற்றாக்குறை என்பது கொஞ்சம் கடுமையானது ஏனென்றால் அது கிராமப்புற பெண்கள் அவர்களுக்கு குடும்ப ரீதியான வேலைப்பளு இருக்கும் போது ஒரு நாளில் ஒரு பகுதி மட்டுமே அவர்கள் ஈடுபட முடியும். அந்த வகையில் பணியை மேற்கொள்வதில் வளைந்து கொடுக்கும் தன்மை பழங்குடியின பெண்களுக்கு மிகவும் பயன்தக்கதாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் அவர்களுக்கு அவர்களின் சொந்த இருப்பிடத்திலே பல்வேறு வாய்ப்புகள் கிடைக்காது.
சாதாரண குடும்ப பெண்களாக இருந்து தங்கள் பணத்தை கொண்டு உணவகங்களை வெற்றிகரமாக நடத்தும் தொழில்முனைவோராக திறமை பெற்று முன்னேற்றம் பெற்றிருக்கும் இந்த உறுதியான பெண்களுக்கு இனி பின்னடைவு என்பதே இல்லை.
பயாப்
BAIF BAIF Bhawan, Dr.Manibhai Desai Nagar, Warje, Pune, Maharashtra- 411058 E-mail: baif@baif.org.in
இந்த கட்டுரையானது “நகர்புற சமூகங்களின் மத்தியில் பழங்குடியின உணவை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் 2014 ஆம் ஆண்டில் எஸ். எப். ஏ. சி யின் கிரிஷி சூத்ரா 2 – விவசாய உற்பத்தி நிறுவனங்களின் வெற்றிக்கதைகள் என்பதில் வெளியிடப்பட்டது.
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2018, வால்யூம் 20, இதழ் 1



