காளான் வளர்ப்புத் தொழில் – அதிகாரபலத்தை நோக்கி ஒரு கூட்டு முயற்சி


இந்த கதையானது ஒரு பழங்குடியின சமூகத்தின் கடும்துன்ப வாழ்க்கையிலிருந்து வளமையான வாழ்விற்கும், தாித்திரத்திலிருந்து பொருளாதார அதிகாரம் பெற்ற ஒரு பயணத்தின் தோற்ற மாற்றீடு குறித்ததாகும். அறிவை சக்தியாகவும், கூட்டுச் செயல்பாட்டை அவர்களின் பலமாகவும் கொண்டு இந்தப் பழங்குடியின பெண்கள் வளமான மற்றும் அதிகாரம் பெற்ற வாழ்வை தங்களின் சொந்த வழியாக கொண்டுள்ளனர்.


தும்கா மாவட்டத்தின் ஜமா மற்றும் தும்கா வட்டத்தின் அடர்ந்த மற்றும் நெடுந்தொலைவில் உள்ள காடுகளுக்கு சொந்தமான 8 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின சமூகங்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக பயிர் சாகுபடி மற்றும் வருமானத்தை பெருக்கக் கூடிய செயல்பாடுகளை நம்பியுள்ளனர். தாழ்வான பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் நெல் சாகுபடி உணவுக்கான அரிசிக்கும், அதிலிருந்து ஹன்ரியா – உள்ளூரில் மிகுந்திருக்கும் அரிசி ஒயினுக்கு மூலப்பொருளாகவும் விளங்குகிறது.

பயறு வகை பயிர்களான பச்சை பயறு, உளுந்து, தட்டைப் பயறு, துவரை, கொள்ளு மற்றும் சில கடினமான எண்ணைவித்துப் பயிர்களான எள்ளு, போியன் மற்றும் கடுகு விதை போன்றவை நெல் மற்றும் காய்கறி பயிர்களோடு இயற்கையாகவே கூட்டாளி பயிர்களாக பயிரிடப்படுகின்றன. பாரம்பாிய கலப்புப் பயிர் சாகுபடி முறை குடும்ப அளவில் ஊட்டச்சத்து உத்திரவாதத்தை உறுதிப்படுத்துகிறது. காய்கறிகள் விற்பதிலும், மகோ பூக்கள் மற்றும் காடுகளில் இருந்து சேகாிக்கப்படும் அரக்கு விற்பதிலும் வருமானம் கிடைக்கிறது. டெண்டு, பலாஸ் மற்றும் மகோ இலைகளில் இருந்து தட்டுகள் தயாரித்து விற்பது அவர்களின் முக்கிய பொருளாதார செயல்பாடாகும்.

உள்ளூர் சமூகங்கள் உள்ளூர் பாரம்பாிய நெல் வகைகள் மற்றும் சில குறியிடப்படாத கொடி வகை காய்கறிகளான பூசணி, பரங்கி, பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவற்றை மட்டுமே வளர்த்தனர். இந்த பகுதியும் விரிவாக்க நிறுவனங்கள் வந்திராததால், உள்ளூர் சமூகங்கள் பயிர் சாகுபடியில் தோன்று தொட்டு பழைய முறையையே பின்பற்றி வந்தனர். 2009-10 ஆம் ஆண்டில், தேசிய வேளாண் புதிய கண்டுபிடிப்புகள் திட்டத்தில் ( என். ஏ. ஐ.பி) இந்த உள்ளூர் பழங்குடியின சமூகங்களின் வாழ்வாதாரத்தை வேளாண் செயல்பாடுகள் மூலமாக மேம்படுத்துவதற்காக ஒரு திட்டம் துவங்கப்பட்டது.
கிராம சபையின் மூலம் விவசாயிகள் முதலில் அணுகப்பட்டனர். காய்கறி நாற்றங்கால் வளர்ப்பில் விவசாயிகளுக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. மலைப்பகுதியில் அவர்கள் சில உள்ளூர் வகைகள் நேரடியாக பயிரிட்டனர். அப்படி செய்யும் போது அவர்கள் முக்கிய பருவத்தில் மட்டும் பயிரிடுவதோடு சுருக்கி கொள்வதால், பயிர்கள் அதிக மழையாலும், வறண்ட காலத்திலும், பனியிலும் மற்றும் குளிரிலும் பாதிக்கப்பட்டு வந்தது. அவர்கள் பருவமற்ற காலங்களில் பயிரிட வேண்டிய பயிர்கள் மற்றும் பருவமற்ற காலங்களில் நாற்றங்கள் வளர்ப்பு போன்றவற்றை பற்றி அறியாதவர்களாக இருந்தனர். எனவே, பயிற்சியின் நோக்கமாக, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக நாற்றங்கால் வளர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட சம்மந்தப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிற்சியிலும், நாற்றங்கால் வளர்க்கும் செயல்பாடுகளிலும் பங்கெடுத்தனர். சமூக நாற்றங்கள் அமைக்கப்பட்டது அவர்களுக்கு வேளாண்மையை கூட்டாக மேற்கொள்வதற்கான ஒரு பயிற்சியாக உதவியது. கூடுதலாக ஒரு பொிய அளவிலான நாற்றங்களை வடிவமைப்பது மற்றும் பராமாிப்பது போன்றவற்றை கற்பதற்கும், அவரவரின் நிலங்களில் நடுவதற்கான நாற்றுகளை எடுத்து பயனடைவதற்கும் உதவியாக அமைந்தது. புதிய முறைகளை கற்றுக்கொண்டதனால், விவசாயிகள் பருவமற்ற காலங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்ய உதவியது.

நெல் பயிருக்கு பிறகு, சமூகங்கள் தக்காளி, காய்கறி, மிளகாய், கொடி வகைச் செடிகள் போன்றவற்றை பருவமற்ற காலங்களில், திறந்த வெளியில் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் பாலி டனல்களிலும் வளர்க்க கற்றுக்கொண்டனர். அவர்கள் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சாகுபடியாளர்களுக்கு கன்றுகளை விற்பனை செய்தனர். இதுதான் அவர்களின் முதல் வணிக ரீதியான முயற்சியாகும். சிறிய அளவில் இருந்தாலும், அது உற்சாகம் அளித்த அனுபவமாக இருந்தது. வருமானம் அதிகாித்ததால் உற்சாகமடைந்த சமூகங்கள் மேலும் பல முயற்சிகளுக்கு தயாரானார்கள்.

காளான் சாகுபடி:
கிராமப்புற மக்கள் காடுகளில் வளரும் உண்ணக்கூடிய காளான்கள் பற்றி நன்கு அறிந்தவர்கள். வீட்டு உபயோகத்திற்காகவும், அருகில் உள்ள வாரச் சந்தைகளில் (குஹியஜோரி, டம்கா, பாடாபழனி மற்று காிலா சந்தைகள்) கிலோ ஒன்றுக்கு ரூ. 80- 100 விற்பதற்காகவும் அவற்றை அவர்கள் சேகாிப்பார்கள். இருந்தபோதிலும், காளான்களை வளர்ப்பது என்ற யோசனை அவர்களுக்கு புதியது. என். ஏ.ஐ.பி -யின் உதவியுடன், அவர்கள் ஆர்வத்துடன் காளான் வளர்க்கும் திறமையை கற்றுக் கொண்டு, தங்களின் வீடுகளிலேயே முதல் பாிசோதனை செய்து பார்த்தனர். முதல் முறையிலேயே வட்டார அளவில் உள்ள சந்தைகளான டம்கா, குஹியஜோரி, ஜாம்டாரா பகுதிகளில் எளிதாக விற்பனை செய்ய முடிந்தது. காளான்கள் ஒரு கிலோவிற்கு ரூ. 120-140 வரை விற்பனை செய்யப்பட்டது. தங்களின் முதல் அனுபவத்திலிருந்து அவர்களின் உற்சாகம் பெருக்கெடுத்து, இதனை மேலும் உயர்த்துவதற்கான விருப்பதை அவர்கள் வெளிப்படுத்தினர்.

அதன் விளைவாக, 10 கிராமங்களை சேர்ந்த 700-800 பண்ணை பெண்கள் காளான் வளர்ப்பில் பயிற்றுவிக்கப்பட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நாள் முழுக்க பயிற்சிகள் நடத்தப்பட்டன. பயிற்சிக்கு பிறகு அதே வருடம் (2009-2010) கிட்டத்தட்ட 100-200 பெண்கள் காளான் பயிரிட ஆரம்பித்தனர். பெரும்பான்மையான விவசாயிகள் நிலமற்றவர்கள் அல்லது குறைந்த நிலப்பரப்பை கொண்டவர்களாக இருந்ததால் அவர்களால் தேவைப்படும் இடுபொருட்களை வாங்குவதற்கு செலவழிக்க முடியாமல் பாதியிலே விட்டுவிட்டதால், அந்த ஒரு பருவத்திற்கு பிறகு, 50 பெண்கள் மட்டுமே இதனை தொடர்ச்சியாக செய்து வந்தனர் பொதுவாக இந்த குடும்பங்கள் நெல் சாகுபடி பருவம் முடிந்தபின் வேலை தேடி இடம்பெயர்ந்து விடுவார்கள். ஏறக்குறைய 20-25 குடும்பங்கள் மட்டும் கிராமத்திலே தங்கி, அவர்களுக்கு காளான் வளர்ப்புக்குத் தேவையான இடுபொருட்களை திட்டத்தில் இருந்து வாங்கி கொடுத்து ஊக்குவிக்கப்பட்டது.

ஆரம்பக்கட்டத்தில், பெண்கள் தனித்தனியாக அவர்களின் வீடுகளில் உற்பத்தியும், விற்பனையையும் பார்த்துக் கொண்டனர். 1-2 உற்பத்தி சுழற்சிக்குப் பின், அவர்கள் தனித்தனியாக உற்பத்தியை தொடர்ந்தனர். ஆனால் விற்பனை செய்யும்போது பொருட்களை சேகாித்து கூட்டாக மேற்கொண்டனர்.
கூட்டு முயற்சியை நோக்கி நகர்ந்தது:

2011 ல் இருந்து வணிக ரீதியாக காளான்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதால், தங்களிடம் உள்ள ஆதாரங்களை ஒன்றிணைத்து செய்வதென அவர்கள் முடிவு செய்தனர். கூட்டு முயற்சியில் செய்யும் போது செலவினங்களை குறைக்க முடியும் என உணரப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு, காளான்கள் உற்பத்தி செய்வதற்கு அடிப்படை மூலக்கூறான ஸ்பான் பெறுவதற்கு, மூலக்கூறு தயாரிப்பு தளங்களை பராமாிப்பது மற்றும் காளான்களை சந்தைக்கு எடுத்து செல்வது மற்றும் அவற்றை இறுதி விற்பனைக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றில் குறைக்க முடியும். நடைமுறை செலவினங்களும் கூட இந்த கருவிகள் மற்றும் கூலியாட்கள் போன்றவற்றை கூட்டாக ஏற்பாடு செய்வதன் மூலம் குறைக்க முடியும். இந்த விசயத்தில், எல்லா விவசாயிகளும் காளான் வளர்ப்பிற்கான அறையை அமைப்பதற்கு பதிலாக, ஒரு பொதுவான வளர்ப்பு அறை குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்துவதற்கு போதுமானதாக இருந்தது. அதே போல், அனைவரும் சேமிப்பு மற்றும் பை நிரப்பும் களம் தேவையில்லை, ஒரு பொது களம் இருந்தால் அதனை கூட்டாக அனைவருடையதையும் பராமாிக்க முடியும். இது இடம், முதலீடு மற்றும் கூலி போன்றவற்றை மிச்சப்படுத்தியது.

இவர்களை சிறிய குழுக்கள் (4-5 உறுப்பினர்கள்) மற்றும் பொிய குழுக்கள் (16-20 உறுப்பினா;கள்) பெரும்பாலும் ஒரு கிராமத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் என அவர்களே தங்களுக்கும் கூட்டு உற்பத்தி மற்றும் விற்பனையை எடுத்துக் கொண்டனர். முதல் சுய உதவிக் குழுவானது என்.ஏ.ஐ.பி ஆதரவுடன் அமைக்கப்பட்டது. அதன் பிறகு நிறைய சுய உதவிக் குழுக்கள் கூட்டுச் செயல்பாடுகளுக்காக எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரும், உள்ளூரில் கிடைக்கும் வைக்கோல்களை பயன்படுத்தி மூலக்கூறு தயாரிப்பது, உற்பத்தி மற்றும் விற்பனை என பல்வேறு செயல்பாடுகளுக்கு பொறுப்பாக்கப்பட்டனர். குழு மேலாண்மை குறித்த பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
என். ஏ. ஐ. பி. திட்டமானது அவர்களின் இந்த முயற்சிக்கு இடுபொருட்களான ஸ்பான், பார்மால்டிஹைடு மற்றும் கார்பென்டெசியம் (மூலக்கூறுகளை தூய்மைப்படுத்த) மூல தட்டுகள், பிளாஸ்டிக் கயிறுகள் மற்றும் பாலிப்ரோபைலின் பைகள் (காளான் பைகள் தயாரிக்க) போன்றவை தொடர்ச்சியாக கிடைக்க ஆதரவு அளித்தது. தேவைப்படும்போது கால்சியம் கார்பனேட்டும் அளிக்கப்பட்டது. இந்த செயல்பாடுகள் மண் வீடுகளில் தென்னங்கீற்றுகள் வேயப்பட்ட இடங்களில் நடைபெற்றதால், பாலிஎத்திலின் விரிப்புகள் மேற்கூரையை சுற்றி போடுவதற்கு கொடுக்கப்பட்டன.

5 உறுப்பினர்களை கொண்ட குழுவின் சராசாி உற்பத்தியானது 40 கிலோ ஓய்ஸ்டர் மற்றும் பால் காளான்கள் ஆகும். ஒவ்வொரு தொழில்கூட்டாளி குடும்பங்களும் உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து 20-25 விழுக்காடு தங்கள் நுகர்வுக்கும் போக எஞ்சியவை விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு வீட்டின் நுகர்வும் ஒரு பதிவேட்டில் குறிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திர பணத்திலிருந்து பிடித்துக் கொள்ளப்பட்டது. வருடாந்திர வீடுகளில் நுகரப்படும் காளானின் அளவானது 16 கிலோவில் இருந்து 36 கிலோவிற்கு உயர்ந்தது. முன்பெல்லாம் இந்த சமூகத்து மக்களின் காளான் நுகர்வானது மழைக்காலங்களில் மட்டும் காடுகளில் சேகாிப்பதிலிருந்துதான் கிடைக்கும். ஆனால், தற்போது அவர்களால் பயிரிடப்பட்ட காளான் வகைகளை நிறைய நாட்களுக்கு உண்ணமுடிகிறது.
தனித்தனியாக விற்கும்போது, விவசாயிகள் உள்ளூர் சந்தைகளில் மட்டுமே கிலோ ஒன்றிற்கு ரூ. 100 முதல் ரூ. 120 வரை என்ற விலையில் விற்க முடிந்தது. மேலும், தனித்தனியாக விற்கும்போது பெட்டிகள், போக்குவரத்து மற்றும் குடும்பத்தின் அன்றைய கூலி போன்றவை சேர்ந்து கொண்டு, செலவினங்களை அதிகப்படுத்தியது. பொருட்களை ஒரிடத்தில் சேகாித்து, டும்கா, ஜாம்டரா, சஹெப்கனி போன்ற மாவட்ட அளவிலான பொிய சந்தையில் விற்கும்போது, அவர்களுக்கு நல்ல விலையாக கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.160 வரை கிடைத்து, இந்த நிர்வாக செலவினங்களை 80 விழுக்காடு குறைக்கிறது. 2010-11 ஆம் ஆண்டில் இந்த குழுக்கள் காளான்கள் விற்பனையின் மூலம் ரூ. 1,40,000 வரை சம்பாதித்தனர்.

காளான் விற்பனையில் வந்த பணத்தை சுய உதவிக் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி சுழல் நிதியாக பயன்படுத்தப்பட்டது. தேவையின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு சில கடன்களும் அளிக்கப்பட்டது. தற்போது, குழுவானது 100 ஸ்பான் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்து அதன் மூலம் ஒரு மாதத்திற்கு 300 பெட்டிகள் உற்பத்தி செய்வதற்கு போதுமானதாக உள்ளது. சந்தையில் விலை நன்கு அதிகாிக்க, குழுக்கள் நல்ல நிதியை பெற முடிந்தது. சராசாியாக, குழுக்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 30000 த்தை வருமானமாக சம்பாதிக்க முடிந்தது.

நிலையான வணிக நிறுவனமாக வளர்வதற்கு:
வணிக நிறுவனமாக, காளான் உற்பத்தியானது குடும்ப அளவில் ஊட்டச்சத்து உத்திரவாத்தை மேம்படுத்தி, பலன்தரக் கூடிய வேலைவாய்ப்பை வருமானத்துடன் கொடுத்து, இடம் பெயர்வை தடுத்தது. கூட்டு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலால், பழங்குடியின சமூகங்கள் பல்வகையான பலன்களை அனுபவிக்கவும், அனைவருக்கும் வெற்றி என்னும் நிலையையும் உருவாக்கியது.

இந்த பெண் விவசாயிகளை கவர்ந்திழுக்கும் விதமாக, கல்வி சுற்றுலா, செய்முறை விளக்கங்கள், பயிற்சிகள், பிரச்சனைகளை சந்திக்கும்போது தேவைப்படும் உந்தித் தள்ளும் ஆதரவுகளை அளிப்பது என பல முக்கிய பங்கை என். ஏ. ஐ. பி ஆற்றியது. தேசிய வேளாண்மை புதிய கண்டுபிடிப்புகள் திட்டம் 2011 ஆம் ஆண்டு முடிவடைந்தவுடன், பயிற்சிகள், கை கொடுக்கும் மற்றும் உந்தித் தள்ளும் ஆதரவுகள் போன்றவை 2014-2015 வரை தொடர்ந்தன. சில தேவையின் அடிப்படையிலான ஆதரவுகள் 2016-2017 வரை தொடர்ந்தன. தற்போது, உற்பத்தியானது முழுவதும் சுய சார்பு அடைந்திருக்கிறது.
நல்ல வருமானத்தை பெறுவதோடு, குழு உறுப்பினர்கள் பணிச் சூழலுக்கு ஏற்றவாறு மாறியுள்ளனர். அவர்களின் கட்டமைப்புகளை சீர்படுத்தி, மூலக்கூறு தயாரிக்கும் இடங்கள் மற்றும் காளான்கள் வளர்க்கும் அறைகளில் உள்ள சேமிக்கும் வசதிகளை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். காளான் விற்பனையில் கிடைத்த பணத்தைக் கொண்டு, சுய உதவிக் குழுக்கள் வைக்கோலை வெட்டுவதற்கான புல் வெட்டும் கருவியை வாங்கினர். இன்று பத்து கிராமங்களில் பத்து புல்வெட்டும் கருவிகள் உள்ளன.
தனித்தனியாக தங்களின் வீடுகளில் காளான் வளர்த்து உள்ளூர் கடைகளில் விற்றுக் கொண்டிருந்த இந்த சமூகங்கள் முறையாக சுய உதவிக்குழுக்களாக வளர்ந்துள்ளனர். குடியிருப்பதற்கு கான்கீரிட் மேற்கூரைகள் மற்றும் சில வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகள், அவர்களின் செல்வம் அதிகாித்திருப்பதற்கான சில எடுத்துக்காட்டுகள்.

பெட்டிச் செய்தி:
கூட்டாக காளான் உற்பத்தி
ஓய்ஸ்டர் காளான் உற்பத்தியை சக்பொி என்னும் கிராமத்தில் உள்ள லீல்முனி சோரன் என்பவரது தலைமையில் 9 பேர் கொண்ட குழுவானது உற்பத்தி செய்தது. 500 சதுர அடி அளவுடைய குடிசை இடத்தில் காளான் உற்பத்தி செய்யப்பட்டது.
மார்ச் மாதம் முதல் வாரத்தில் முதல் தொகுதி போடப்பட்டு, அடுத்தடுத்த தொகுதிகள் 20 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியாக செப்டம்பர் வரை போடப்பட்டது. ஒவ்வொரு தொகுதியும் 40 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 600 பைகள் என 10 தொகுதிகளில் வளர்க்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 400 கிலோ அறுவடை செய்யப்பட்டது. ஒரு கிலோ ரூ. 140 வீதம் ஒவ்வொரு தொகுதியும் மொத்தமாக ரூ. 63000 வருமானம் எடுத்தது. 600 பைகளை கொண்ட ஒரு தொகுதிக்கான சாகுபடி செலவு ரூ. 25500 (இதில் இடுபொருட்கள், இடத்திற்கான வாடகை மதிப்பு, உறுப்பினர்களின் கணக்கிடப்பட்ட மதிப்பு, கூலி மற்றும் மின்சார கட்டணம் போன்றவை அடங்கும்) போக நிகர வருமானம் ரூ. 37500 கிடைத்தது. கூட்டு வியாபாரத்தின் மூலம் ஒவ்வொரு உறுப்பினரும் ரூ. 4167 சம்பாதித்தனர். இதில் 40 விழுக்காடு குழுவின் சேமிப்பிற்கு பங்களிக்கப்படுகிறது.

லீல்முனி சோரன் இப்போது மற்றவர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்றுநராக அடையாளம் காணப்பட்டுள்ளார். பயிற்சி கொடுப்பதில் இருந்து அவர் மாதம் ரூ. 4000 வருமானம் ஈட்டுகிறார்.

எஸ். மௌரியா, பி.ஆர். குமார், ஆர். எஸ். பான், ஏ.கே. சிங், பிகாஸ் தாஸ் மற்றும் பீ.பி. பட்


Priya Ranjan Kumar
Principal Scientist (Plant Breeding)
ICAR - RCER Research Centre
P O: Rajaulatu Plandu,
Ranchi- 834010, Jharkhand.
E-mail: ourprk@gmail.com

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2018, வால்யூம் 20, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...