பண்ணையில் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பது, வள ஆதாரங்களை திறன்பட மேலாண்மை செய்வதில் மட்டுமின்றி பண்ணை உற்பத்தி, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாிப்பு ஆகியவற்றிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பும் (ஐ.எப்.எப்) பாரம்பாிய பிழைப்பிற்கான அடிப்படை வேளாண் முறைக்கு மதிப்புக் கூட்டும் ஒரு மாதிரியாகும். தொடாச்சியான வருமான பலன்களை அளிப்பதோடு, இந்த மாதிரியானது பண்ணை குடும்பங்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்தையும் அளிக்கிறது.
உத்தரகண்ட், பெரும்பான்மையாக மலைப்பிரதேசங்கள் கொண்ட மாநிலம், அதில் சிறப்பியல்புகளாக கிராமங்கள் தனித்தனியாகவும், மேடு பள்ளங்களை கொண்ட நிலப்பரப்பையும், சிறிய மற்றும் துண்டு துண்டான மானாவாரி நிலப்பரப்புகளை கொண்டதாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகள் இல்லாமல், அதோடு கடினமான பருவகால நிலைகளும் சேர்ந்து விவசாயிகளை சிறுதானிய மற்றும் பயறுவகை வேளாண் முறைகள் மற்றும் பாரம்பாிய பிழைப்பிற்கான அடிப்படை விவசாய முறைகளில் கவனம் செலுத்த வைத்துள்ளது. மாற்று வாழ்வாதார முறைகள் இல்லாததால், பிழைப்பிற்கான அடிப்படை வேளாண் முறைகளை பின்பற்றுவது அல்லது வேலை தேடி நகர்புற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வது என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மையான சிறிய நிலப்பரப்புகளை பெண்களே நிர்வகிக்கின்றனர். வேளாண் உற்பத்தியானது, மக்களின் உணவு தேவைகளை ஆறு மாதத்திற்கும் குறைவாகவே பூர்த்தி செய்கிறது. கிடைமட்ட விரிவாக்கம் குறைவாக இருப்பதால், செங்குத்து ஒருங்கிணைப்பு பண்ணை உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்பு, மற்றும் நிலையான வருமானம் அளிப்பதற்கும் தேவைப்படுகிறது. இது முறைப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பண்ணை முறைகளை சாியான வரிசையில் அமைப்பதால் சாத்தியமாகிறது. ஊதாரணத்திற்கு, கால்நடை, மீன், கோழி வளர்ப்பு, காய்கறிகள் போன்ற பல்வகையான பண்ணை அம்சங்களை ஒருங்கிணைத்தால், அது பல்வேறு பொருட்களில் குறைந்த முதலீட்டில், சுற்றுச்சூழலுக்கு பாதகமான விளைவுகளை குறைத்து நிலையான உற்பத்தியை உறுதிப்படுத்துகிறது.
ஒரு விவசாயியின் கதை:
சாந்தி தேவி என்பவர், உத்தரகாண்டில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பசோலி கிராமத்தில் உள்ள சிறிய பண்ணைக்கு சொந்தக்காரர். அவர் 1.2 ஹெக்டர் வேளாண் நிலத்தை 2 கி.மீ பரப்பளவில் விரிந்துள்ள மலையகப் பகுதியை சொந்தமாக கொண்டுள்ளார். மொத்த நிலத்தில் 0.4 ஹெக்டர் நிலம்தான் சாகுபடியில் உள்ளது. சாந்தி தேவி வேளாண்மை மற்றும் அதன் உப தொழில்கள், குறிப்பாக பாரம்பாிய பிழைப்பிற்கான தானிய மற்றும் – சிறுதானிய வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார். மழையளவு 600 முதல் 700 மி.மீ வரை கிடைக்கும் காரிப் பருவத்தில் கேழ்வரகு, குதிரைவாலி, கொள்ளு, சோயா மற்றும் காய்கறிப் பயிர்களான வெள்ளரி, அவரை, வெண்டை, தக்காளி போன்றவற்றையும், மழைப்பொழிவை தீர்மானிக்க இயலாத ராபி பருவத்தில் கோதுமை மற்றும் சில கீரைகளும் பயிரிடப்படுகின்றன.
சாந்தி தேவி அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையின் பெண்கள் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பயிற்சியில் பங்கெடுத்தார். பயிற்சியானது ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு தத்துவங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. பயிற்சிக்கு பின் அவருக்கு அந்த முறைகளை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதல்களும் கிடைத்தது.
ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு மாதிரி:
இந்த மாதிரியானது கீழ்க்கண்ட உட்பொருட்களை உள்ளடக்கியது – 3 நீர்த் தொட்டிகள் (1.78 மீ3 கொள்ளளவு திறனுடைய நீர்த் தேக்கத் தொட்டி. 1.47 மீ3 கொள்ளளவு திறனுடைய வடிகால் தொட்டி மற்றும் வடிகட்டிய நீரை சேகாிக்க 9.8 மீ 3 கொள்ளவு திறனுடைய தொட்டி), 100 மீ2 கொள்ளளவு திறனுடைய மீன் குட்டை, குட்டைக்கும், காய்கறி சாகுபடி செய்யும் படுக்கைக்கு அருகில் ஒரு சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ள கோழி வளர்ப்புக் கூடம்.
மார்ச் 2004-ல் மீன் குட்டையில் சில்வர் கெண்டை (ஹெபோதால் மிச்தைமோலிட்ரிக்) புல் கெண்டை (டினோபார்ரான் கோடோநிடில்லஸ்) பொதுவான கெண்டை (சைப்ரினஸ் கார்பியோ) என்ற ச;க்கையில், 45:35:20 என்ற விகிதாரச்சத்தில், ஒரு ஹெக்டேருக்கு 5-10 செ.மீ சராசாி அளவுடைய 3000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இந்த வகை மீன்கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளக்கூடிய உணவுப் பழக்கத்தையும், வெவ்வேறு உயிர்ச்சூழல் இடத்தில் வசிக்கக் கூடியதாகவும், ஏறக்குறைய ஒரே சமயத்தில் சந்தைக்கு விலைபோகும் அளவை அடையக் கூடியதாகவும், அதே நேரத்தில் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பவை. இந்த மீன்கள் அரிசி தவிடு மற்றும் நிலக்கடலை புண்ணாக்கு (1:1) கலந்த தீவனத்தை, ஆரம்பக் கட்டத்தில் மீன்களின் உடல் எடையில் 2 விழுக்காடு என்ற அடிப்படையில் அளிக்கப்படுகிறது. அதன் தொடாச்சியாக, இரண்டு மாதங்கள் ஆன பிறகு எந்த விதமான செயற்கை உணவுகளும் அளிக்கப்படுவதில்லை. பசுஞ் சாணம், கோழிகளின் எச்சங்கள் தான் தீவனத்தின் ஆதாரங்கள். 8-9 மாதங்கள் ஆன பின்பு மீன்கள் அறுவடை செய்யப்படுகின்றன.
மீன் குட்டைக்கும் மேல், 30 கலப்பின பறவைகள் இரண்டு நோக்கங்களுக்காக குறைந்த செலவில் கோழிகள் வசிப்பிடத்தோடு வளர்க்கப்பட்டது. ஆரம்பக் கட்ட வளர்ச்சி நிலைகளில் கூடுதல் உணவு அளிக்கப்பட்டது. குஞ்சுகளின் வளர்ச்சி தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டது. கோழிகள் முட்டை இடும் சுழற்சி நின்றவுடன் விற்கப்படும். கோழிகள் வசிக்கும் இடத்தில் கிடைக்கும் கழிவுகள், மீன் குட்டையில் உள்ள மீன்களுக்கு கூடுதல் உணவாக கொடுக்கப்படும்.
சிறிய குட்டைகளுக்கு அருகில், இதில் உள்ள நீரை நீர்பாசனத்திற்கு பயன்படுத்தி கொள்ளும் விதமாக காய்கறி சாகுபடிக்கான படுக்கைகள் (600 மீ 2) அமைக்கப்பட்டன. ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்ட வகையின் பல்வேறு காய்கறிகள் பண்ணையில் வழிந்தோடும் நீரை பயன்படுத்தி வளர்க்கப்பட்டும், அதன் கிடைக்கும் வண்டல் உரமாகவும் பயன்படுத்தப்பட்டது.
இந்த முறையை மேம்படுத்த விவசாயி தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார். அதிக அடர்த்தியுடன் நண்டு வகைகளை கொண்டும், கோழி வளர்ப்பை முறையாக மேலாண்மை செய்தும், அதிக மகசூல் கொடுக்கும் காய்கறி வகைகளை பயிரிட்டும், மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு முறைகளினால் ஒவ்வொரு யூனிட் பகுதியிலும் விவசாயி வெற்றிகரமாக உற்பத்தியை கூட்டினார். குட்டையின் அதிகபட்ச வளத்தை கோழிகளின் எச்சங்கள் மற்றும் கால்நடைகளின் கழிவுகள் கொண்டு விவசாயி மேலாண்மை செய்தால், அது மீன்களுக்கான உணவாக பிளாங்டான் வளர்ச்சியை அதிகப்படுத்தி மீன் மகசூலை மேலும் அதிகப்படுத்தினார்.
தீவிர மேலாண்மையின் கீழ், விவசாயி மீன் மகசூலை ஒரு ஆண்டுக்கு, ஒரு ஹெக்டேருக்கு 5.5 – 6.0 டன் பெற்றார். குட்டையானது ஒரு முழுமையான கெண்டை வளர்ப்பை உருவாக்கி, அந்த நீரை கொண்டு பல்வகையான காய்கறிகளை வருடம் முழுக்க வளர்க்க உதவியது. மீன் குட்டையில் இருந்து கிடைத்த நீரை பயன்படுத்தி 8-10 பல்வேறு வகையான அதிக மகசூல் தரும் காய்கறிகளை (பிரஞ்சு பீன்ஸ், மிளகாய், பட்டாணி, தக்காளி மற்றும் முள்ளங்கி) விவசாயி வளர்க்க முடிந்தது.
2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு, முழுமையான கெண்டை வளர்ப்பில் இந்த மொத்த யூனிட்டில் இருந்து வருடத்திற்கு, 56-60 கிலோ மீன், 55-65 கிலோ கோழி மற்றும் 2500-3000 முட்டைகள் கிடைத்தது. இந்த மூன்றில் இருந்தும் 50-60 விழுக்காடு மொத்த வருமானத்தை (ரூ.29,938) இந்த முறை பெருக்கி கொடுத்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல மீன்-கோழி- காய்கறி இணைத்த இந்த ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறையானது விவசாயிக்கு ஆண்டு வருமானமாக ரூ.30000-ரூ.35000 வரை ஈட்டிக் கொடுத்தது. அடுத்தத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியில்லாத செலவினங்கள் குறைந்து, ஒட்டு மொத்த வருமானம் அதிகாித்தது. 2016 ஆம் ஆண்டில் இந்த முறையின் வாயிலாக கிடைத்த வருமானம் ரூ.30000 ஆக இருந்தது. 2004 ஆம் ஆண்டில் சாந்தி தேவியின் பண்ணையில் உருவாக்கப்பட்ட இந்த முறை, இன்றும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு பயனாளியின் குடும்பத்திற்கு நிலையான வருமானத்தை அளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறையானது, வள ஆதாரங்களை, ஒன்றுக்கொண்டு உதவக்கூடிய உட்கூறுகளை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்து, பண்ணை உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகாிப்பதற்கு இட்டுச் சென்றது. இந்த ஒருங்கிணைந்த முறையானது தொடர்ச்சியான பொருளாதார பயன்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், விவசாயக் குடும்பத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்தை காய்கறிகள், முட்டைகள், கோழிகள் மற்றும் மீன்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக அளித்ததன் வாயிலாக கொடுத்தது. இந்த கிராமம் சுற்றுலா தளம் உள்ள பின்சாருக்கு அருகில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் இருப்பதால், தங்களது குடும்ப நுகர்விற்கு போக மற்ற எஞ்சிய மீன்கள், முட்டைகள், கோழிகள் மற்றும் காய்கறிகளை விற்பதும் சாத்தியமாகிறது. இந்த பொருட்கள் உள்ளூர் சந்தைகள் மற்றும் வனவிலங்கு சரணாலத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கூடுதல் விலையில் விற்கப்பட்டன. பொருட்கள் இரசாயனங்கள் இன்றி விளைவிக்கப்பட்டவையாகவும், புதிதாகவும் இருப்பதால், அவற்றிற்கு நல்ல விலையும் கிடைத்தது. விவசாய குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கவும், அதனோடு பாரம்பாிய பிழைப்பிற்கான அடிப்படை வேளாண்மை முறைக்கு மதிப்புக்கூட்டுவதான மாதிரிக்கு இந்த ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பொருத்தமானதாக உள்ளது. மேலும், உற்பத்தி செய்யப்பட்டவை, நுகர்வோரை எளிதில் சென்றடைவதால், அறுவடை செய்யப்பட்ட மீன்கள், கோழிகள் மற்றும் காய்கறிகள், தேவைக்கும், வினியோகத்திற்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வீணாகுவதை குறைக்கும் வகையில் சாி செய்யப்படுகிறது.
முடிவுரை:
ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு வளஆதாரங்களை பயன்படுத்தும் திறனை அதிகாிக்க, பல்வகையான பயிர்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பால் அச்சுறுத்தல்களை குறைக்க உதவியது. பண்ணையில் இருந்து கிடைக்கப் பெற்ற பல்வகையான பொருட்கள், குடும்பங்களின் ஊட்டச்சத்து அளவினை அதிகப்படுத்தி, வருடம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கான சந்தர்பங்களையும், வருமானத்தையும் பெருக்கியது. வளஆதாரங்கள் மற்றும் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டதால், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் உற்பத்தி செலவை குறைத்தது. சிறு அளவிலான ஒருங்கிணைந்த மீன் உற்பத்தி சிக்கனமானது மட்டுமல்லாமல சக்தியை சேமிப்பதாகவும் உள்ளது. இது கழிவுகளின் மறுசுழற்சியை ஊக்கப்படுத்தி உயிர்ச்சூழல் சமநிலையை பராமாிக்க உதவியது. அதிக செலவு கொண்ட இடுபொருட்களுக்கு பதிலாக (மீன் உணவு, இரசாயன உரங்கள்) கால்நடை கழிவுகள் பயன்படுத்தப்பட்டதால் இது சார்புத்தன்மை குறைப்பதற்கு இட்டுச் சென்று, ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு என்பது சுயசார்பு, சுய ஆதரவு மற்றும் நிலைத்தத்தன்மை உடையதாக உள்ளது.
மேலும், கூடுதல் தொழில்களான காளான் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, தீவன புல் வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்பு போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டால் இந்த முறை மேலும் லாபகரமாக இருக்கும்.
நன்றிகள்
கட்டுரையின் ஆசிரியர் ஜீ.பி பண்ட் ஹிமாலயன் சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் கோசி-கட்டர்மல், அல்மோரா, ஆகியோருக்கு அவர்கள் அளித்த உற்சாசம் மற்றும் அளித்த தேவையான வசதிகளுக்கு நன்றி தொிவித்து கொள்கின்றனர்.
அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறை, இந்திய அரசு, புதுடெல்லி அவர்களின் நிதிஉதவிக்கும் நன்றிகள்.
தீபா பிஷ்
Deepa Bisht Scientist- DST G.B. Pant Institute of Himalayan Environment and Development, Kosi-Katarmal, Almora, Uttarakhand, India. E-mail: deepabisht1234@rediffmail.com
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2018, வால்யூம் 20, இதழ் 1



