கூட்டுத் தொழில் – சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்தும் வழி


கர்நாடகாவில் குறிப்பாக குறைவான நிலத்தை பெற்றிருக்கும் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பயிராக மக்காச்சோளம் திகழ்கிறது. அனைவரும் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்து, சிக்கயம்மிகனுரு கிராமத்தில் உள்ள மக்காச்சோள விவசாயிகள் ஒரு கூட்டுத் தொழிலை உருவாக்கி, அதன் மூலம் விலையை நிர்ணயிக்கும் கட்டுபாட்டை சிறப்பாக பெற்றனர். மக்காச்சோளக் கழிவுகளை மறுசுழற்சி செய்து எரிவாயுவாக மாற்றுவதால், இந்தக் குழு பயிர்க்கழிவுகள் மூலம் வருமானம் ஈட்டுவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு செயல்படுவது தொிகிறது.

சித்ரதுர்கா மாவட்டம், ஹோலல்கரே தாலுக்காவில் உள்ள சிக்கயம்மிகனுரு கிராமத்தில் வாழ்ந்து வரும் 840 குடும்பங்களில் கிட்டதட்ட 80 சதவிகிதத்தினர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர். மக்காச்சோளம் மானாவாரி பயிராக சாகுபடி செய்வதற்கு சுலபமாகவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருப்பதால், சாகுபடி செலவு மிகவும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக, இந்த கிராமத்தில் உள்ள சிறு விவசாயிகள் மற்றப் பயிர்களை காட்டிலும் முக்கியப்பயிராக மக்காச்சோளத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். பொதுவாக, விவசாயிகள் ஒரு ஹெக்டர் நிலத்தில் 60 முதல் 75 குவிண்டால் கிடைக்கும் என்பதால் மித இலாபமான சுமார் ரூ.15000 –த்தை மற்ற பயிரைக் காட்டிலும் குறைந்த ஆபத்தில் கிடைக்கிறது. உள்ளூர் சாிவிகித உணவில் பல்வேறு உணவு பொருட்களான உப்புமா, தோசை, ரொட்டி, சேமியா போன்றவைகள் மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மேலும் கோழி தீவனம் மற்றும் மாட்டுதீவனம் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. மக்காச் சோளத்தில் பயிர்க் கழிவுகள் அதிகம் கிடைக்கும், இது மண்ணின் கனிம பொருட்களை அதிகாிக்க உதவுகிறது. இந்தப் பயிர்க் கழிவுகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. தானியம் நீக்கப்பட்ட கதிர்கள் அதிக வெப்பத் திறன் கொண்டதால், இதனை எரிவாயுவாக பயன்படுத்தலாம். எனினும் விவசாயிகள் இதனை வீண் என நினைத்து கிடைக்கும் விலைக்கு உள்ளூர் வியாபாரிகளிடம் கொடுத்துவிடுகின்றனர் அல்லது நிலத்திலேயே அவற்றை எரித்து விடுகின்றனர்.
2017 ஆம் ஆண்டு, மைராடா பசுமை கல்லூரி, இந்த கிராமத்தில் உள்ள 30 விவசாயிகளுக்கு, மக்காச்சோளத்தில் உயர்த்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி ஒன்று நடத்தியது. மைராடா பசுமை கல்லூரி வேளாண்மை அடிப்படையாக கொண்ட தொழில்களை வளர்க்கும் நோக்கதோடு, திறனை வளர்க்கும் மையமாக திகழ்கிறது. இந்த மையம் 2016 ஆம் ஆண்டு மைராடாவால் வெல்த்தங்கர் ஹல்பேவின் பங்களிப்போடு, பசுமை புதிய முயற்சி மையத் திட்டத்தின் கீழ் தட்ஷே ஜசெல்சாப்ட் பர் இன்டர்நேஷ்னேல் சுசாம்னார்பெட் என்று அழைக்கப்படும் (ஜி. ஐ. சட்) மற்றும் ஜெர்மன் பெடரல் பொருளாதார கூட்டு மற்றும் வளர்ச்சி அமைச்சகம் (பி.எம்.சட்) ஆகியவற்றின் உதவியோடு துவக்கப்பட்டது. வேளாண் தொழில் ஊக்க மையம் என்ற மைராடா பசுமை மையப் பிரிவின் மூலம் பசுமை கல்லூரி பயிற்றுனர்களால் உருவாக்கப்படும் தொழிலுக்கு உதவிப்புரிகிறது. பயிற்சி பெற்ற விவசாயிகள் ஒன்றுசேர்ந்து மக்காச்சோள சாகுபடிக் குழு என்று அழைக்கப்படும் சம்ருத்தி மெக்க ஜோள பெலிகராரா சங்கத்தை ஒருங்கிணைத்தது. ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி குழு கூடி பயிற்சியின்போது கற்றுகொண்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கான அனுபவத்தையும் இதர பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. உறுப்பினர்கள் ரூ.50 முதல் 100 மாத சேமிப்பாக, இதுவரை ரூ.19 520 அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ளது.
ஒரு தொழில்
விவசாயிகளுடன் கலந்துரையாடும்போது மக்காச்சோளத்தை உடைப்பது பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்பட்டது. பொதுவாக அறுவடைக்குப்பின், மக்காச்சோளம் காயவைத்து, விவசாயிகளின் வீட்டிலேயே நல்ல விலை வரும் வரை சேமிக்கப்படுகிறது. விற்பனை செய்வதற்குமுன், மக்காச்சோள கதிர்களை உடைக்க வேண்டும். அதாவது, கதிர்களிலிருந்து தானியங்களை பிரித்தெடுத்தல். எனினும், விவசாயிகள் கையால் உடைப்பதற்கு, கூலியாட்கள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும், இது அதிக நேரத்தை எடுக்கக்கூடிய ஒரு முறையாகும். கருவியை கொண்டு கதிர்களை உடைப்பது, மற்றொரு தேர்வாகும், இது கையால் உடைப்பதைவிட சுலபமாக இருக்கும். இதற்கு சிறு விவசாயிகள் பொிய வியாபாரிகள் அல்லது பொிய விவசாயிகள் வைத்திருக்கும் கதிர் உடைக்கும் கருவியை நம்பியே இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலும் சந்தையில் அதிக விலைக்கு போகும்போது, நேரத்தில் கருவி கிடைப்பது விவசாயிகளுக்கு கடினமாக இருக்கிறது.
சாியான சமயத்தில் கதிர் உடைக்கும் இயந்திரம் கிடைக்காவிடில், சிறு விவசாயிகளுக்கு சந்தையில் கிடைக்கும் நல்ல விலை கைநழுவி போகின்றது.  ஒரு பட்டத்தின்போது, மக்காச் சோளத்தின் சந்தை விலையை பார்க்கும்போது புரியும். இதற்குமுன் உள்ள பட்டத்தில், (நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018), ஒரு குவிண்டால் மக்காச்சோளம் சந்தை விலை ரூ. 1060 முதல் 1280 வரை மாற்றமடைந்து கொண்டே இருந்தது. பீகாரிலிருந்து கிடைக்கும் மக்காச்சோளம், சர்வதேச சந்தை நிலவரங்கள், பழைய மக்காச்சோள இருப்பை வெளியிடுதல் போன்ற பல்வேறு காரணிகளை நம்பியே விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், உள்ளூர் சந்தையை ஆழ்ந்து கவனித்துகொண்டிருக்கும் விவசாயிகள், அவர்களுடைய சந்தை விலையின் எதிர்ப்பார்ப்பை (ரூ.1250-1300/குவிண்டால்) பூர்த்தி செய்யும் நிலையில் விற்க முயற்சிக்கின்றனர். ஆனால், சந்தை விலை அதிகமாக இருக்கும்போது, அனைத்து பகுதி விவசாயிகளும் மக்காச்சோளத்தை உடைத்து, அவற்றை சந்தைக்கு கொண்டுசெல்ல முந்திச்செல்லும் நிலை ஏற்படுகிறது. அதனால், மக்காச்சோளம் கதிர் உடைக்கும் இயந்திரங்களுக்கு அதிக தேவை இருக்கிறது. கதிர் உடைக்கும் இயந்திரம் இல்லாத விவசாயிகள் மனஅழுத்ததிற்கு உள்ளாகின்றனர். சந்தையில் நல்ல விலை இருக்கும்போதும், மக்காச்சோள விளைப்பொருளை விற்க முடியாமல்போனதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மக்காச் சோளம் சந்தையில் குவிண்டாலுக்கு ரூ.1200 விற்கம்போது, நான் கதிர்களை உடைத்திருந்தால், என்னுடைய 96 குவிண்டால் மக்காச் சோளத்தை விற்று ரூ.10000 இலாபம் ஈட்டியிருப்பேன் என்ற குழு உறுப்பினரான, திரு.காிப்பசப்பா ஒரு கூட்டத்தில் வருத்தத்தோடு கூறினார். மைராடா பசுமைக் குழுவோடு சேர்ந்து இந்த பிரச்சனைக் குறித்து  கலந்துரையாடி, சாியான சமயத்தில் மக்காச் சோளம் உடைப்பதற்கு பல்வேறு வழிகளை கண்டுபிடித்து, சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது அவற்றை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்க விவசாயிகளுக்கு உதவி புரிந்தனர். மைராடா பசுமை மையத்தின், வேளாண்மை தொழில் ஊக்குவிப்பு மையம் மக்காச் சோளம் உடைக்கும் இயந்திரத்தின் விவரங்களை குழுவிற்கு வழங்கியது. மக்காச் சோளம் உடைக்கும் இயந்திரத்தை சொந்தமாக மேம்படுத்தலாம் என்று இந்தக் குழு ஆர்வம் கொண்டனர். மைராடா அலுவலர் மற்றும் குழு பிரதிநிதிகள் கதிர் உடைக்கும் இயந்திரத்தின் விலை மற்றும் எந்த வழியில் இதனை கொள்முதல் செய்வது என்பது குறித்து கலந்துரையாடினர். கதிர் உடைக்கும் இயந்திரத்தின் விலை ரூ.188000/-. விவசாயிகளின் குறைந்த சேமிப்பை வைத்து இயந்திரத்தை வாங்க முடியாது. வேளாண்மை துறையில் , தனி விவசாயிக்கு ரூ.88000 க்கு மானிய விலையில் இயந்திரம் வழங்கும் திட்டம் இருந்தது. மேலும், இந்தத் தொகையும் விவசாயிகளுக்கு அவர்களின் சேமிப்பைக் காட்டிலும் அதிகமாக இருந்தது.
ஆகையால், வேளாண்மை தொழில் ஊக்கவிக்கும் மையம் மானிய விலையில் உள்ள மக்காச் சோள கதிர் உடைக்கும் இயந்திரத்தை குழுவிற்கு வாங்க உதவிப்புரிந்தனர்.  குழு உறுப்பினரான திரு. கு. நாகப்பா மானியம் வாங்க தகுதியுடையவர் என்பதால், குழு அவரை தேர்ந்தெடுத்தது. மைராடா பசுமை மையம், விவசாயக் குழு மற்றும் விவசாயி (கு. நாகப்பா) மத்தியில் முப்பாிணாம ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டனர். இதில் சமூகத்தின் சார்பாக இயந்திரத்தை மேலாண்மை செய்யும் உரிமையை  வேளாண்மை தொழில் ஊக்கவிக்கும் மையத்திற்கு வழங்கப்பட்டது. டிசம்பர் 2017 ஆம் ஆண்டு, கதிர் உடைக்கும் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டது. ஜனவரி 2018 இரண்டாம் தேதி அன்று சம்ருத்தி குழுவிற்கு வழங்கப்பட்டு, ஒரு பட்டத்திற்கு இயந்திரத்தை பயன்படுத்துமாறு கூறப்பட்டது. இயந்திரத்தை குழுவாக செயல்படுத்த வேளாண்மை தொழில் ஊக்குவிக்கும் மையம் வழிநடத்துகிறது. குழுவின் உறுப்பினர் இல்லாத விவசயிகளுக்கு, ஒரு குவிண்டால் மக்காச் சோள கதிர் உடைக்க ரூ.50, குழு உறுப்பினர்களுக்கு ரூ.45 நிர்ணயிக்கப்பட்டது. கல்லேஷப்பா என்ற உறுப்பினரை இயந்திரத்தை இயக்குவதற்கு தேர்தெடுத்தனர். இயந்திரத்தை இயக்கும் செலவு, மேம்படுத்துதல் மற்றும் காப்பீடு ஆகியவை இயந்திரத்தின் வருமானத்திலிருந்து செலவு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. மீதி தொகையில் ரூ.36000 குழுவிற்கு சேமித்து வைத்துவிட்டு, மற்றவை கல்லேஷப்பாவிற்கு அளிக்கப்படுகிறது.
தானியத்தை சந்தைபடுத்துதல்
அனைத்து கதிர் உடைக்கும் வேலைகள் முடிப்பதற்கு 51 நாட்கள் ஆயின. இது 78 விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்தது. ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையில், கதிர் உடைக்கும் வேலை முடிந்த பின்னர், இயந்திரத்தை வேளாண்மை தொழில் ஊக்குவிக்கும் மையத்தில் மே 2018 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தொழிலின் முடிவில் இலாபத்தில் ரூ.36280 (குழுவிற்கு ரூ.36000 செலுத்தியது போக) ஒப்புகொண்டபடி இயந்திரத்தை இயக்குபவருக்கு அளிக்கப்பட்டது. விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கொடகவள்ளிஹட்டி கிராமத்தின் அருகிலிருக்கும் திரு. ராஜ்குமார் ‘திரு.கல்லேஷப்பா எங்களுக்கு நல்ல சேவையை அளித்தார், மேலும் கதிர் உடைக்கும் செயல்முறை நன்றாக இருந்தது. சந்தையில் நல்ல விலை இருக்கும்போது, நான் 120 குவிண்டால் மக்காச் சோள கதிர்களை உடைத்துக் கொண்டேன். வியாபாரியிடமிருந்து பணம் பெற்ற பின்னர் கல்லேஷப்பாவிற்கு ரூ.6000 கட்டினேன். முன்பு, எனது கிராமத்திலிருந்து கதிர் உடைக்கும் இயந்திரத்திற்காக சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது பல முறை முயற்சி செய்தேன். ஆனால் அது வெற்றியடையவில்லை . அசோக் கொடகவள்ளி (குழு உறுப்பினர்) மூலம் சிக்கயம்மிகனுரு கிராமத்தில் குறைந்த விலையில் கதிர் உடைக்கும் இயந்திரம் குறித்து தொியவந்தது. பின்னர், நான் மற்றும் இன்னும் சில விவசாயிகள் கல்லேஷப்பாவை அழைத்தோம். மறுநாள், எங்கள் கிராமத்தில் அவர் கதிர் உடைக்க துவங்கினார். மொத்தத்தில் அனைத்து விவசாயிகளும் கதிர் உடைக்கும் இயந்திரத்தின் சேவை கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனென்றால் சாியான சமயத்தில் கதிர் உடைக்க முடிந்ததால், அவர்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவியாக இருந்தது. கதிர் உடைக்கும் தொழிலில் கல்லேஷப்பாவிற்கு இயந்திரத்தை இயக்கியதால், அந்த பட்டத்தில் நல்ல வருமானம் கிடைத்தது. 4-6 கூலி தொழிலாளர்களுக்கு 45 விழுக்காடு வருமான பங்கு வழங்கப்பட்டது. பணிச் சுமையை அடிப்படையாக கொண்டு தின வேலை அடிப்படையில் வழங்கப்பட்டது.
கூடுதல் பயன்கள்
இதனைத் தாண்டி, வேளாண்மை தொழில் ஊக்குவிக்கும் மையம் மக்காச்சோளக் கதிர்களை நேரடியாக விற்க உதவிபுரிந்தது. கதிர்களிலிருந்து தானியங்கள் பிரித்தெடுத்து, மீதமுள்ள கதிர்களை குவியலாக போட்டு, எரிவாயுவாகவோ அல்லது மக்கு உரமாகவோ பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் விவசாயிகள் கிடைக்கும் விலையில் இடைதரகர்களிடம் விற்கவோ அல்லது வயல்களிலேயே எரிக்கப்படுகிறது. இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு கதிர்களுக்கு குறைந்த விலைக்கே கொடுக்கின்றனர்.
கதிர்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு, அனைத்து விவசாயிகள் வயல்களிலிருந்து கதிர்களை சேகாிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் 80 முதல் 90 கி.மீ. தொலைவில் உள்ள காயத்ரி வேளாண்மை எரிவாயு மையம், செல்லகரே என்ற இடத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது. காயத்ரி வேளாண்மை எரிவாயு மையம் ‘வேளாண்மைக் கழிவிலிருந்து சொத்துக்கள்” என்ற குறிக்கோளுடன் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. வேளாண்மை கழிவு என்பது மக்காச் சோள கதிர்களோ அல்லது நிலக்கடலை தோல் அல்லது காபி கொட்டைகளின் தோல் போன்ற ஏதேனும் ஒரு வேளாண் கழிவுப் பொருளை தூளாக்கி பின்பு அதனை கடினப்படுத்தி, பராய்லருக்கும், எரிச்சக்தி  கலனுக்கும் பயன்படுத்தும் வகையில் கறி துண்டுகளாக தயாரிக்கப்படுகிறது. எரிவாயு கட்டைகள் மற்றும் எண்ணெய்க்கு பதிலாக இந்த கறித் துண்டுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும் காயத்ரி வேளாண்மை எரிவாயு மையம் முடிந்தவரையில் வேளாண் கழிவுகளை கொள்முதல் செய்து அதிக தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியை எடுத்துவருகிறது. வேளாண்மை தொழில் ஊக்குவிக்கும் மையம் காயத்ரி வேளாண்மை எரிவாயு மையத்திற்கு விவசாய குழுக்கள் நேரடியாக கதிர்களை வினியோகம் செய்வதற்கு வழிநடத்தி வருகிறது. இது விவசாயிகளுக்கு முன்பு கிடைத்த விலையைவிட 2-3 மடங்கு அதிக விலை வழங்கப்படுகிறது. மிக சுலபமான இணைப்பாக இருந்தாலும், செயல்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகள் குறித்து கற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் தொழிலில் உள்ள முக்கியத் திறன் லாரியில் அதிக கதிர்கள் நிரப்புவதேயாகும். துவக்கத்தில். தொழிலதிபர்கள் வெறும் 5.5-6.5 டன்கள் மட்டுமே நிரப்ப முடிந்தது, ஆனால் அனுபவம் பெற்றப்பின்னர், லாரியில் 9-10 டன்கள் நிரப்பப்படுகிறது.
கதிர்களை இடைதரகர்கள் உதவியோடு விற்றால் ஒரு டன் ரூ.250-300 மட்டுமே கிடைத்தது. ஆனால் தானியம் உடைக்கப்பட்ட கதிர்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்றால் விவசாயிகளுக்கு ஒரு டன் ரூ. 650-750 கிடைக்கிறது. ஹலல்கரே என்ற கிராமத்திலிருந்து ஹல்லம்மா என்ற பெண் விவசாயி ‘ மூன்று ஏக்கர் நிலத்தில் மக்காச் சோளம் சாகுபடி செய்தேன். கதிர் உடைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு குவிண்டால் ரூ. 1280 என்ற ரீதியில் 48 குவிண்டால்கள் விற்றேன். 600 கிலோ உடைக்கப்பட்ட கதிர்களையும் விற்று ரூ. 550 கூடுதலாக கிடைத்தது” என்று கூறினார். இந்த பயன்களையும் தாண்டி மிக குறைந்த மதிப்பாக கருதப்படும் கதிர்களை விற்பனை செய்யும் தொழிலில் விவசாயிகளை ஈடுபடுத்துவது மிக சவாலான ஒன்றாக இருந்தது. அதனால் இதற்கு தொழிலதிபர்களை குழுவே தேர்ந்தெடுத்தனர்.
சீனப்பா என்ற கிராம அளவில் தொழிலதிபராக , காயத்ரி வேளாண்மை எரிவாயு செல்லாகரே மற்றும் விவசாயிகளுக்கிடையே தொழிலை நடத்தி வருகிறார். விவசாயிகளிடமிருந்து கதிர்களை, எப்படி வாங்கி அதனை நிரப்ப வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். எதிர்காலத்தில், ஒரு நாளைக்கு ஒரு லாரிக்கு ரூ.700 ஈட்டமுடியும். விவசாயிகள் குழு மூலமாக உடைத்த கதிர்களை நேரடியாக காயத்ரி வேளாண்மை எரிவாயு மையத்திற்கு விற்க ஊக்குவிப்பது அவசியம்.
சவால்கள் மற்றும் முன்னேற்ற பாதை
கதிர் உடைப்பது இலாபம் தரக்கூடிய தொழில் என்று விவசாயக் குழு உணர்ந்தனர். முடிவுகளால் ஊக்கமடைந்து, இன்னும் ஒரு கதிர் உடைக்கும் இயந்திரத்தை வாங்க குழு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன், அனுபவங்கள் வாயிலாக தீர்க்க வேண்டிய பல்வேறு சவால்கள் மற்றும் கற்றல்கள் முதலில் சாி செய்ய வேண்டும். கதிர் உடைக்கும் செய்முறையில் சில மாற்றங்கள் செய்து, கதிர் உடைக்கும்போது வீணாகும் தானியங்களை குறைக்கச் செய்ய வேண்டும். மக்காச் சோளத்தை உடைத்த பிறகு, இயந்திரம் பயன்படுத்தாத நிலையில் இருப்பதால், இயந்திரத்தை மற்ற பயிர்களான சூரியகாந்தி, கேழ்வரகு, செஞ்சோளம் போன்ற பயிர்களுக்கு பயன்படுத்தும் தேவையை வெளிகொண்டு வர வேண்டும். மேலும், தற்போது வேளாண்மை தொழில் ஊக்குவிக்கும் மையம் அனைத்து மேம்பாட்டு பிரச்சனைகளை மேற்கொள்கிறது. இந்தப் பணியை சமூகம் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும். கதிர் உடைக்கும் தொழில் மற்றும் கதிர்களை விற்பதில் , கூட்டாக ஒன்று சேர்வதில் வெற்றியை கண்டதால், எதிர்வரும் பட்டத்திற்கு, குழு ஒன்றாக சேர்ந்து இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கு பணிபுரிகின்றனர். ஆகையால், விவசாயிகள் கடன் வாங்காமல், சாியான நேரத்தில், குறைந்த விலையில் இடுபொருட்கள் கிடைத்தது.
இதனை சார்ந்த மற்றொரு தொழிலாக விவசாயிகள் தற்போது பாிசோதனை செய்வது, பசுந்தழைகளை துண்டுகளாக வெட்டும் கருவி. கால்நடைக்கு தீவனம் அளிப்பதற்கு முன் மக்காச் சோள பயிர்க் கழிவுகளை சிறு துண்டுகளாக இந்த கருவி வெட்டும். இதுபோல் செய்வதால், மக்காச் சோள பயிர் கழிவுகள் வீணாவது குறிப்பட்ட அளவிற்கு குறைக்கலாம். மேலும், இந்தக் குழு மொத்தமாக கோழி மற்றும் கால்நடை தீவன கம்பெனிகளுக்கு மக்காச் சோளத்தை விற்க முயற்சி செய்து வருகின்றனர். மக்காச் சோளம் குறித்து பயிற்சியளிக்கும் திருமிகு. பி.எம். வித்யா என்ற எம்.ஜி.சி. ஒருங்கிணைப்பாளர் பயிற்சியின்போது பங்கேற்காளர்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை மட்டுமே கற்காமல் வேளாண்மையை தொழிலாக பார்க்கும் முயற்சியை எடுத்துள்ளனர். இவர்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடும்போது, விவசாயிகள் குழுவாக ஒன்றுசேர்ந்து பணி புரிவதனால் ஏற்படும் பலத்தை இவர்கள் உணர்ந்தனர். இதனால் இவர்களின் பிரச்சனைகளை புதிய தொழிலுக்கான வாய்ப்பாக மாற்றமுடிகிறது. ஆயிரம் மைல்கள் கொண்ட பிரயாணத்தை ஒரு அடி வைத்து துவக்கியுள்ளனர். இந்த விவசாயிகள், அவர்களின் எதிர்காலம் மற்றும் எதிர்கால வேளாண்மை அவர்களின் திடமான தோல்களில் இருக்கிறது என்ற சுய நம்பிக்கையை வைத்து ஒரு சிறு துவக்கத்தை எடுத்துள்ளனர்.
கதிர் உடைக்கும் இயந்திர செலவு ரூ.88,000.00 (மானியத்தின் கீழ் வாங்கப்பட்டது) .
கதிர் உடைக்கும் இயந்திரத்தின் மொத்த செலவு ரூ.188,000.00
 36,280
 
செலவு
                      வருமானம்
வ.எண் விபரங்கள்எண்ணிக்கைஎண்ணிக்கை விலைமொத்த தொகைfவிபரங்கள்எண்ணிக்கைஎண்ணிக்கை விலைமொத்த தொகை
1டீசல் விலை (லிட்டா;)15066.009900.00உடைக்கப்படும் மக்காச் சோளம் (க்விண்டால்)288150.00144050.00
2எண்ணெய் விலை (லிட்டா;)15110.001650.00
3சேவை விலை21300.002600.00
4கூலி மொத்த செலவில் 45 %57000.00
5குழுவிற்கு செலுத்தப்பட்ட தொகை (விவசாய ஆர்வக் குழு)36000.00
மொத்தம்107770.00
மொத்தம்
144>050.00
இயந்திரம் இயக்குபவருக்கான லாபம்36,280
தொழிலின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
 
வ.எண்கொள்முதல் செய்யப்பட்ட உடைத்த மக்காச் சோளம்விலை ரூ./டன்
மொத்த தொகை
(ரூ.)
 விபரங்கள்
15.5 டன்2400.0013,200.001 லாரி
26.2 டன்2400.0014,880.001 லாரி
36.5 டன்2500.0016,250.001 லாரி
46.00டன்2500.0015,000.001 லாரி
மொத்தம்
59,330.00
முதல் லாரியின் செலவின விபரங்கள்
 
வ.எண்விபரங்கள்அளவுசெலவின விபரங்கள்விபரங்கள்
1உடைத்த மக்காச் சோளத்தின் விலை24.2 டன்17,450.00விவசாயிகளிடம் மொத்த விலையில் வாங்கப்படுகிறது
2போக்குவரத்து4 முறை26,000.00
3கூலி செலவு1911,500.00ஏற்றுதல்/இறக்குதல்
மொத்தம்
54,950.00
காயத்ரி வேளாண்மை எரிவாயு மையத்திற்கு மக்காச் சோளம் விற்கப்படுகிறதுரூ.59,330
செலவின விபரங்கள்ரூ.54,950
நிகர இலாபம்ரூ.4380/- 24.2 டன்
எச்.ஆர். மல்லேஷ் மற்றும் டி. பார்த்தசாரதி

T Parthasarathy
Project Coordination (Green Colleges – Karnataka
and Maharashtra)
Welthungerhilfe
Project Office, Myrada
#2, Service Road, Domlur,
Bengaluru, Karnataka 560071


மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2018, வால்யூம் 20, இதழ் 3
அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...