சிறிய முயற்சிகள் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். கால்நடை கொட்டகை மேம்படுத்துவதற்கு அரசு அளித்த சிறிய உதவியால், நேபாளில் உள்ள சிந்துளி மாவட்டத்தின் விவசாயிகள் விவசாயம் செய்யும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் பின்பற்றும் விவசாயம், நீண்ட காலமாக பிழைப்பிற்கான விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. குறிப்பாக மலை பகுதிகளில், கடினமான நிலையிலும் சிறிய நிலத்தில் சாகுபடி செய்வதையே விவசாயிகள் நம்பி உள்ளனர். வேளாண் உற்பத்தி அதிகாிப்பதற்கு, அரசு பாசனத்தை அதிகாிப்பதும், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அதிகளவு பயன்படுத்தச் செய்வதும், புதிய கருவி அறிமுகப்படுத்துவதும், அதிக மகசூல் அளிக்கும் இரகங்களின் புதிய விதைகள் மற்றும் நிதியுதவி அளிப்பது ஆகியவற்றின் வாயிலாக உதவி செய்கின்றது. எனினும் அளவுக்கு அதிகமாக இரசாயனங்கள் பயன்படுத்துவதும், பயிர் சுழற்சி, இயற்கை உரம் பயன்படுத்துவது ஆகிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் போனதால், மண்ணின் ஆரோக்கியம் அழிந்து, மேலும் உணவு உத்திரவாதம் பாதிப்படைந்துள்ளது.
உணவு உத்திரவாதத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு இயற்கை உற்பத்தியை முன்னேற்றவும், இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்களின் சார்புத்தன்மையை குறைக்கவும், மண் மேம்பாட்டு இயக்ககம், மாவட்ட வேளாண்மை வளர்ச்சி அலுவலகங்களோடு ஒருங்கிணைந்து, மண்புழு உரம் தயாரிப்பு, கால்நடை கொட்டகை மேம்பாடு, இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தல், வேளாண்மை துறையின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை உரங்களுக்கான மானியம் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை துவக்கியது.
கால்நடை கொட்டகையை முன்னேற்றும் திட்டம்
பாரம்பாியமாக, விவசாயிகள் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளை பராமாித்ததால், புல்வெளிகளில் மேய்வதற்கு அனுமதிப்பர். வேலை வாய்ப்பிற்காக இளைஞர்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலை அதிகாித்து வருவதால், கால்நடைகளை மேம்படுத்துவதற்கு கூலியாட்கள் கிடைப்பது குறைந்துவிட்டது. இதன் விளைவாக கிராம சமூகங்களில் கால்நடைகளை வளர்ப்பதும், அவற்றின் கழிவுகளை சுத்தம் செய்து பராமாிக்கவும், முன்பைவிட மிக சவாலான ஒன்றாக இருக்கிறது. இதனால் கால்நடை வளர்ப்பு கால்நடை கொட்டகைக்கு மாறியது. குறைந்த தரமுடைய கால்நடை வளர்ப்பு கொட்டகைகள் ஆரோக்கியமற்ற நிலைகள் ஏற்படுவதோடு, சிறந்த ஆதாரமான கோமியம் மற்றும் சாணம் போன்றவைகள் வீணாகும் நிலையும் ஏற்படுகிறது. கொட்டகைகளை சாியான முறையில் கட்டப்படாததால், கோமியம், தண்ணீர் ஆகியவை கால்நடைகள் இருக்கும் இடத்தில் குளம் போல் தேங்கி, கோமியம் மற்றும் தொழு உரம் ஆகியவற்றின் தரம் அழிந்துவிடுகிறது. இது மேலும் தயாரிக்கப்படும் மக்குஉரத்தின் தரத்தில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தொழுஉரம் தயாரிக்கும் முறையில் பல சத்துக்கள் இழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்தக் காரணிகளை உணர்ந்து வேளாண்மைத் துறை, கால்நடை கொட்டகையை முன்னேற்றும் விதமாக, ஒரு மாதிரித் திட்டம் 2013 -2014 ஆண்டில் துவக்கியது. கொட்டகையின் தரையை முன்னேற்றுவதன் மூலம் கால்நடை உரம் மற்றும் சேகாிக்கும் கோமியம் சிறப்பாக மேம்படுத்தி, அதன் மூலம் நல்ல தரமான தொழுஉரம் மற்றும் கால்நடை கோமியத்தை பயன்படுத்துவதன் மூலம் மண் ஆரோக்கியம், தாவர பாதுகாப்பு மற்றும் கொட்டகை மேலாண்மையை உறுதிசெய்வதே திட்டத்தின் நோக்கமாகும்.
மாவட்டத்தின் விவசாயக் குழு அல்லது கூட்டுறவு மையங்கள் அதன் மாவட்ட வேளாண்மை வளர்ச்சி மையத்துடன் ஒருங்கிணைந்து கால்நடை சிறுநீர் சேகாிப்புத் தொட்டி மற்றும் கால்நடை சாணத்திற்கான கொட்டகையுடன், கால்நடை கொட்டகையை மேம்படுத்துவதற்கு உதவிபுரிகின்றனர். ஒரு குடும்பத்திற்கு ரூ.5200 மானியம் அளிக்கப்பட்டது.
2015-2016 வரையில், சுமார் 33746 மேம்படுத்தப்பட்ட கால்நடை கொட்டகைகள் கட்டப்பட்டது. ஆகையால் 33746 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். கால்நடை கழிவுகளை முறையாக தயாரிக்கப்படும் மக்குஎரு மண்ணில் இடுவதன்மூலம் மண் ஆரோக்கியமும் பயிர் உற்பத்தியும் சிறப்பாக இருக்கும்.
சிந்துளி மாவட்டத்தின் வெற்றிக் கதை
மூன்றாவது மாகாணத்தின் அங்கமான, சிந்துளி மாவட்டம் நேபாளத்தில் உள்ள எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்துளி மதி, மாவட்ட தலைநகராகும். இந்த மாவட்டம் 2491 கி.மீ பரப்பளவை கொண்டது. 2011 ஆம் ஆண்டு இதன் மக்கள் தொகை 2,96,192 ஆகும். நேபாளத்தில் உள்ள மத்திய மலைப்பகுதி மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இங்கு வேளாண்மையே வருமானத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது.
மண் மேம்பாட்டு இயக்ககத்தின் உதவியோடு மாவட்டத்தில் 2014-2015 முதல் சிந்துளி, மாவட்ட வேளாண்மை வளர்ச்சி மையம் கால்நடை கொட்டகை மேம்பாட்டு திட்டத்தை துவக்கியது. இந்தத் திட்டத்திற்கு முன்பு, விவசாயிகள் பாரம்பாிய முறை மக்கு உர தயாரிப்பு, கால்நடை சாணங்களை சேகாித்து பராமாிக்கப்படாத வழியில் சிறு மலைக்குவியல்களாக வைத்து, நேரடி சூரியஒளி மற்றும் மழையில் விட்டுவிடுகின்றனர் . கால்நடை சிறுநீர் சேகாிக்கப்படுவதில்லை. சாதாரணமாக கொட்டகை தரையிலேயே ஊறிவிடுகிறது. ஏனென்றால் கொட்டகை தரை சிமெண்டால் கட்டப்பட்டது அல்ல. மேம்படுத்தப்பட்ட கொட்டகை மேலாண்மையின் பயன்கள் குறித்து விவசாயிகள் அறியவில்லை.
ஒருங்கிணைக்கப்பட்ட கிராமங்களை தேர்வு செய்து, தொழு உரத்தின் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. தவறான முறையில் மேலாண்மை தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால் தொழுஉரத்திலிருந்து சத்துக்கள் இழப்பதை பற்றி விவசாயிகளுக்கு கற்றுத்தரப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும், கால்வாய் வசதியுடன் சிறுநீர் சேகாிப்புத் தொட்டி கட்டுவதற்கும், சிமெண்ட்டை பயன்படுத்தி கட்டப்பட்ட கொட்டகைத் தரை, மேலும் நிழல் வசதியுடன் கூடிய நிரந்தர சாணம் சேகாிப்பு அகழி தயாரிப்பதற்கும் உதவி செய்யப்பட்டது. இந்தச் சாதாரண திருத்தப்பட்ட தொழில்நுட்பம், கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகள், மேம்பாட்டு தொழில்நுட்பத்தை பின்பற்றும் அளவிற்கு பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரு. புத்திராஜ் ஷெரெஸ்தா, சிந்துளி மாவட்டத்தில் நாணிச்சூரி விடிசி – 5 என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகளில் ஒருவர். அவர் கால்நடை கொட்டகையை மேம்படுத்தினார். மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களில் அதிக விழிப்புணர்வு பெற்ற இவர், உரம் மற்றும் சிறுநீரை பயிர் வயல்களுக்கு பயன்படுத்த துவங்கினார். மண் ஆரோக்கியம் உயர்வதையும், பயிர்கள் ஆரோக்கியமாக இருப்பதையும் கண்டார். மகசூலையும் சிறப்பாக பெற்றார்.
சஜன் அம்கை மற்றும் சாலிக் ராம் பௌடல்
References DADO, Annual Progress Report - 2014-15, District Agriculture Development Office, Sindhuli, Nepal. Jaishy, S.N., N. Mahato, R. Manandhar and K.H. Maskey, Study on use of Compost at farmers level, 1997, a report published in Annual Report 20.53154, Soil Testing and Service Section, Dept. of Agriculture. MoAD, Annual Progress Report - 2015-16, Ministry of Agricultural Development. Singha Darbar, Kathmandu, Nepal. MoAD, Statistical Information on Nepalese Agriculture, 2015-16, Ministry of Agricultural Development. Agri- Business Promotion and Statistical Division. Singha Darbar, Kathmandu, Nepal. Sherchan, D.P. and G.B. Gurung, Production and management techniques of compost to sustain the hill agricultural production system, 1996, PAC Technical paper No. 171. Pachribas Agricultural Centre, Nepal SMD, Annual Progress Report, 2015-16, Soil Management Directorate, Hariharbhawan, Lalitpur, Nepal. Organic Farming: Manures, http://agritech.tnau.ac.in/ org_farm/orgfarm_manure.html. Sujan Amgai Senior Plant Protection Officer Department of Agriculture, Hariharbhawan, Lalitpur, Nepal Salik Ram Paudel Agriculture Extension Officer Department of Agriculture, Hariharbhawan, Lalitpur, Nepal
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர்; 2017, வால்யூம் 19, இதழ் 3



