ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொராபுட் மாவட்ட விவசாயிகள், தோட்டக்கலை விளைபொருட்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், ஒருங்கிணைந்து விற்பனை செய்தல் போன்ற பணிகளை தாங்களாகவே மேற்கொள்ள ‘ விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை” உருவாக்கினர். விரிவடைந்த திறன்களை பண்ணை முதல் சந்தை வரை பயிர் அறுவடையை மேம்படுத்துவது, விவசாயிகளின் வருமானத்தை அதிகாிப்பது மட்டுமில்லாமல், அவர்களின் வாதாடும் திறன் மற்றும் ஊக்கப்படுத்தும் நிலையும் அதிகாித்துக் கொண்டே இருக்கிறது.
கொராபுட் மாவட்டம் தஸ்மந்த்பூர் வட்டத்தை சேர்ந்த விவசாயிகள், காரீப் பட்டத்தின்போது முதலில், பாரம்பாியமாக, நெல், சிறுதானியங்கள், மக்காச்சோளம் மற்றும் பேயள் போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வந்தனர். சமமற்ற நிலப்பகுதி, குறைந்த மண்ணின் தரம் மற்றும் பாசன வசதி குறைந்ததால் விவசாயிகள் வருடத்திற்கு ஒரு முறையே அறுவடை செய்ய முடிந்தது. இயற்கை தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால், விவசாயிகள் பழைய முறையை கடைப்பிடித்து குறைந்த மகசூல் பெறுகின்றனர். விவசாயிகள் குறைந்த வாதாடும் திறன் பெற்றிருப்பதால் குறைந்த வருமானமே பெறுகின்றனர். நிலையான வருமானம் இல்லாததால், விவசாயிகள் மாற்று வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அக்ரகாமி என்ற தேசிய தொண்டு நிறுவனம், உற்பத்தியாளர்கள் தாங்களாகவே சிறந்த ஈடுபாட்டுடன் இந்த சவால்களை அவர்களே, முறையாக, நிலையான தீர்வு எடுப்பதில் உறுதியாக நம்பினர். கே.கே.எஸ், நபார்ட் மற்றும் ஒடிசா அரசு ஆகிய நிதி நிறுவனங்களுடன் இணைந்து, அக்ரகாமி நிலைத்த வாழ்வாதார திட்டத்தை துவக்கியது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில், உயிர்ச்சூழலியல் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க செய்வதில் கொராபுட் மாவட்டத்தை சேர்ந்த 4500 சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தியது.
விவசாயி உற்பத்தியாளர் நிறுவனத்தின் வெற்றிக்கதை
விவசாயிகளுக்கு நியாயமான வருமானம் கிடைப்பதற்கு 87 கிராமங்களைச் சேர்ந்த விவசாய மற்றும் பெண் குழுக்களை ஈடுபடுத்தி, அக்ரகாமி நிறுவனம், தஸ்மந்த்பூர் முந்திரி பதப்படுத்தும், மற்றும் சந்தைப்படுத்துவதற்கான உற்பத்தியாளர் நிறுவனத்தை ஊக்குவித்தது. விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம், பொருளாதாரத்தில் ஏழ்மையாக உள்ள, சமூகத்தில் நலிவடைந்த பெண்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் முனைவதை ஊக்கப்படுத்துதல் மற்றும் தொழில் வளர்ச்சி மூலம் திறமையை இலாபமாக மாற்றுவதற்கும் உதவுகிறது. தஸ்மந்த்பூர் முந்திரி பதப்படுத்தும், மற்றும் சந்தைபடுத்துவதற்கான உற்பத்தியாளர் நிறுவனம், மே 2016 ஆம் ஆண்டு, 87 கிராமங்களைச் சேர்ந்த, 2050 முன்னோடி விவசாயிகளை கொண்ட 87 விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்களை (37 உத்யான் விகாஸ் சமிதி மற்றும் 50 பெண் குழுக்கள்) உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.
2009 மற்றும் 2011 ஆம் ஆண்டிற்கு மத்தியில் கிராமத்திலிருந்த உத்யான் விகாஸ் சமிதி மற்றும் பெண் குழுக்கள் கொண்டு, விவசாயிகள் உற்பத்தியாளர்கள் குழுவாக ஒருங்கிணைக்கப்பட்டது. அவர்கள் சேமிப்பு கணக்கை துவக்கி, உறுப்பினர்களுக்கு தேவைப்படும்போது, கடன் வழங்கப்பட்டு வந்தது. மெதுவாக, உறுப்பினர்கள் வேளாண்-தோட்டப்பயிர்கள் உற்பத்தி முறைகளில் முந்திரி, மஞ்சள், எண்ணெய்வித்து பயிர்கள், பயறு வகை பயிர்கள், மா, மரவள்ளிக்கிழங்கு, மலையில் வளரும் ஒரு வகை புதர் செடி மற்றும் சிறுதானியங்கள்.
விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தில், உற்பத்தித்திறனை விரிவுப்படுத்துவதற்கே முதலில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தோட்டக்கலை விவசாயிகள் மத்தியில் நிலைத்த தொழில்நுட்பங்கள் குறித்து ஊக்கப்படுத்தி வருகிறது. டிசம்பர் 2017 ஆம் ஆண்டு இறுதியில், சுமார் 1850 குடும்பங்கள், 2115 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை உணவு சாகுபடிக்கு மாறிய பின், ஹெக்டேருக்கு 5-10% உற்பத்தி அதிகாித்துள்ளது.
ஒட்டுரக நாற்றுகள், குழி உரம், மண்புழுஉரம், திரவ எரு, பசுந்தாள் உரம், பானை உரம் போன்ற இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறது. பயிற்சிகள், செய்முறை விளக்கம் மற்றும் கல்விச்சுற்றுலா மூலம் கற்றுக்கொண்ட, மூடாக்கு, வட்ட பாத்தியமைத்தல், தௌிப்பு பாசனம், தாவரங்களை கட்டுதல் போன்ற தொழில்நுட்பங்களையும் பின்பற்றுகின்றனர். 56 கிராமங்களிலிருந்து, கிட்டதட்ட 1275 விவசாயிகள் முந்திரி தோட்டத்தை வளர்த்து, ஒரு மரத்திற்கு 5-7 கிலோ முந்திரியை அறுவடை செய்கின்றனர். அதேமாதிரி, 53 கிராமங்களிலிருந்து 1109 விவசாயிகள் மா தோட்டத்தை வளர்த்து, ஒரு மரத்திற்கு 12-15 கிலோ என்ற ரீதியில் மகசூலை அறுவடை செய்கின்றனர் இடுபொருள் விற்பனையாளர்களான ஒரிசா மாநில முந்திரி கூட்டுறவு வளர்ச்சி மையம், வேளாண் சேவை மையம் மற்றும் உத்கல் விதைகள் மற்றும் நாற்றுகள் ஆகியவற்றோடு விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் இணைக்கப்பட்டது. 58 கிராமங்களில் உள்ள சுமார் 1250 விவசாயிகள் மலை குவையல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். முன்பு இதன் சாகுபடி வீணான நிலத்தில் செய்யப்பட்டது, ஆனால் தற்போது தனிப்பட்ட மற்றும் பொது நிலத்திலும் முறையாக செய்யப்படுகிறது. பல்வேறு பதப்படுத்தும் முறைகளில் திறன் வளர்ப்பு பயிற்சி மூலம் மலை குவையல் சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த விரிவடைந்த திறன் மற்றும் அறிவு கொண்டு விவசாயிகள் ஏக்கருக்கு 400-450 கிலோ அறுவடை செய்ய முடியும். ஆறு கிராமங்களில் உள்ள 79 விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டனர். மஞ்சள் சாகுபடியில் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் ஆகிய ஒருங்கிணைந்த முயற்சிகள் ஏக்கருக்கு கிட்டத்தட்ட 10000-12000 கிலோ மகசூல் கிடைத்தது. சேகாித்தல், பதப்படுத்துதல், மதிப்புகூட்டுதல் ஆகியவற்றை தாண்டி, தற்போது 32 கிராமங்களில் 407 விவசாயிகள் நிலைத்த தொழில்நுட்ப சாகுபடியில் ஈடுபட்டதனால், ஏக்கருக்கு 18000-22000கிலோ மகசூல் கிடைக்கிறது.
மதிப்பு கூட்டுதல் மற்றும் விற்பனை
விவசாய உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சிக்கு பிறகு, பல்வேறு மதிப்பு கூட்டுதல் முறைகளை செய்தனர். (அட்டவணை 1 ஐ பார்க்க) உள்ளூர் சின்னம் உருவாக்கப்பட்டது. விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தில், விவசாய விற்பனைக்குழுவால், மா மற்றும் முந்திரியை மதிப்பு கூட்டுதல் செய்த அதே நேரத்தில், மலை குவையல் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பதப்படுத்துதலை பெண்கள் சங்கம் செய்தது.
விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விவசாய உறுப்பினர்கள் தங்கள் விளைபொருட்களை ஒன்றுசேர்த்து, அவற்றை உள்ளூர் மற்றும் நகரச் சந்தைகளுக்கு எடுத்து செல்கின்றனர். அக்ரகாமி நிறுவனத்தால் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள பிரதிநிதிகளுக்கு கொள்முதல் முறையை கையாளும் பயிற்சியை வழிநடத்தியது.
விற்பனை கொள்கை மற்றும் கையேடுகளில் விதிக்கப்பட்ட வரையறைகளை கொண்டு கொள்முதலை நியாயமான முறையில் தரக்கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டது. இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். மதிப்புக் கூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்திய பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கு, தஸ்வந்த்பூரில் விற்பனையகம் அமைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு இறுதியில் 255 டன் முந்திரி, 145 டன் மாம்பழம் மற்றும் 41 டன் மலை குவையல் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு, ஒவ்வொரு உற்பத்தியாளர் / பங்குதாரருக்கும் ரூ.53,840 வருமானம் கிடைத்தது. விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம், ஒடிசா கிராம வளர்ச்சி மற்றும் விற்பனை சமூகம் மற்றும் பி.சி.எம் ஏற்றுமதியாளர்களோடு இணைக்கப்பட்டது. இந்த முயற்சியோடு, விவசாய உறுப்பினர்களின் வருமானம் 40% சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, இடைத்தரகர்களிடம் விற்பனை செய்யும்போது, தஸ்மந்த்பூர் வட்டத்தில் உள்ள மாிச்சகுடா கிராமத்தை சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8000 மட்டுமே கிடைக்கிறது. தற்போது மதிப்புகூட்டபட்ட பின்பு ஒரு குவிண்டால் மஞ்சள் தூள் ரூ. 15000, நேரடியாக சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கிறது. அதே மாதிரி, முந்திரி, மாம்பழம் மற்றும் மலை குவையல் விவசாய உற்பத்தியாளர்களுக்கு 40% வருமானம் உயர்ந்துள்ளது.
சந்தை இணைப்புகளோடு, நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யவும், விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம், விவசாய திருவிழாவை ஏற்பாடு செய்கிறது. மேலும் இது, எல்லோராலும் பார்க்கப்படும். விற்பனையை தாண்டி விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம், அவசர கடன், உற்பத்திக் கடன் நுகர்பொருள்களுக்கான விற்பனை சேவைகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர்களுக்குத் தேவையான இதர வேளாண் உற்பத்திக்கான உதவி மையங்கள் ஆகியவையும் அளிக்கபடுகிறது.
முடிவுகள்
முயற்சிகளை ஒருங்கிணைத்து பண்ணை இடுபொருள்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது, மேலும் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதை அதிகாித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகாிக்க உதவுகிறது. இது அவர்களின் பேரம் பேசும் திறனை விரிவுபடுத்துகிறது. இந்த கொள்முதல் முறைகள், இந்தப் பகுதியில் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு உதவி அலைகளாக, விவசாயிகள் மத்தியில் மட்டுமில்லாமல் அலுவலக மட்டத்திலும் அடித்தன.
எனினும், இன்னும் சில சவால்கள் உள்ளன. விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம், ஒரு பாிந்துரைக்கும் மையமாக வளர்த்தெடுப்பதற்கு தொண்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இவர்கள் சமூக பணிக்கான தத்துவத்தை அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றனர். விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் வளர்வதற்கு, விற்பனை மற்றும் தொழில் திறன் குறித்த புரிதல் இருப்பது அவசியம். மேலும், இது உள்ளூர் தொண்டு நிறுவனத்தின் திறமையையும் தாண்டிய செயலாகும். விவசாய உற்பத்தியாளர்கள் சங்க வளர்ச்சிக்கு சாதகமான உயிர்ச்சூழல் அவசியமாகும். ஏனெனில், இது மிக முக்கிய பங்குவகிக்கும் வேளாண்-மதிப்பு சங்கிலியானது, பண்ணையில் தொடங்கி தொலை தூரம் இருக்கும் சந்தையில் முடியும் வரை, பல கட்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளது.
பயணம் தற்போதுதான் துவங்கியுள்ளது.
பெட்டி செய்தி 1 : எங்கே பெண்கள், தங்களுடைய சுய சார்புத்தன்மை கொண்ட சொந்த பாதையை உருவாக்கி கொள்வர்
ஒடிசாவில் உள்ள பழங்குடியின பகுதியில், மலை புற்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். ராயகுடா வனப்பகுதி உள்ள வேளாண் சீதோஷண நிலை சிறந்த தரமுடைய மலை குவையலை உற்பத்தி செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது. பெரும்பாலான பழங்குடியின மக்கள் மலை புற்களை சேகாித்து, விற்பனை செய்வதையே நம்பியிருக்கின்றனர். இதன் தேவையை கருதி, துடைப்பம் தயாரித்து விற்பனை செய்வதில், அதிக வளர்ச்சியில் திறன் உள்ள இந்த தொழில், வருடத்தில் சில காலங்களில் நிலைத்த வாழ்வாதார தேர்வாக இருக்கிறது.
அமா சங்காத்தன்(பெண்கள் கூட்டமைப்பு) 1992 ஆம் ஆண்டிலிருந்து ராயகுடா மாவட்டம் காஷிபூர் வட்டத்தில் உள்ள 1225 பெண்களின் முயற்சியால் வளர்த்து பதிவு செய்யப்பட்ட சங்கமாகும். பழங்குடியின சமூகங்கள், அவர்களாகவே மக்கள் சங்கமாக ஒருங்கிணைக்க முடிந்தது. பெண்கள் தலைமையை கிராம மற்றும் பஞ்சாயத்து மட்டத்தில் சிறந்த முறையில் ஊக்குவிக்கப்படுகிறது. அமா சங்காத்தன் சமூகம், காசிபூர் வட்டத்தில் உள்ள பல்வேறு பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 17 மகளிர் குழுக்கள் இணைப்பில் இருக்கிறது.
ராயகுடா மாவட்டத்தில் உள்ள மன்டிபிசி கிராமத்தில், மத்திய பதப்படுத்தும் மையம் மற்றும் சேமிப்பு கிடங்கும் அமா சங்காத்தன் கீழ் செயல்பட்டு வருகிறது. இது விளைபொருட்களை சேகாித்து, பதப்படுத்தி, இறுதிகட்டத்திற்கு தயார் செய்த பொருட்களை மேம்படுத்தி, பதப்படுத்தப்பட்ட பொருளை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விளைபொருட்கள் பதப்படுத்தப்படுகிறது. மலை புற்களை சேகாித்த பின்னர், மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டு இறுதிகட்ட பதப்படுத்துதல் மேற்கொள்ளபடுகிறது. ஐந்து வருடங்களில் 312 க்விண்டாலிலிருந்து 411 குவிண்டால் வரை அதிகாித்துள்ளது. இதன் விளைவாக, வருட வருமானம் ஒரேமாதிரியான காலத்தில் ரூ.12,50,000 லிருந்து ரூ. 17,20,000 ஆக அதிகாித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இலாபத்தை உறுப்பினர்கள் மத்தியில் சமமாக பிரித்து கொள்வர். பெண் தொழிலாளர்கள் சுயசார்புத்தன்மையை அடைவதில் வெற்றிபெற்றுள்ளனர்.
அட்டவணை 1 மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்கள்
| வ.எண் | விளைபொருளின் பெயர் | மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருள் | உள்ளூர் சின்னத்தின் பெயர் | செயல்படுத்தியவர் |
| 1 | முந்திரி | முந்திரி பருப்பு | தஸ்மந்த்பூர் முந்திரி பருப்பு | விவசாய தொழிற் குழு |
| 2 | மாங்காய் | ஊறுகாய், அம்சூர், உலர்ந்த மா கேக் | தஸ்மந்த்பூர் ஊறுகாய் | விவசாய தொழிற் குழு |
| 3 | மலை துடைப்பம் | துடைப்பம் (ஜாது) | ஆமா ஹால்டி | மகளிர் குழு |
| 4 | மஞ்சள் | மஞ்சள் தூள் | ஷ்ரத்தா | மகளிர் குழு |
குலசுவாமி ஜகன்னாத் ஜேனா
Kulaswami Jagannath Jena Project Coordinator -Eco Village Development Agragamee Kashipur, Rayagada, Odisha, India. www.agragamee.org E-mail: kulaswami13@gmail.com
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2018, வால்யூம் 20, இதழ் 1



