பல்வகைமை சாகுபடி – சிறு விவசாயிகளின் தற்போதைய தேவை


சீதோஷண மாற்றத்தின் விளைவுகளினால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வு மிக கடினமாக இருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பல்வகைமை சாகுபடி மட்டுமே வேளாண்மையை நிலைக்கச் செய்யும் நம்பிக்கையாக தொிகிறது. இதற்கு உப்பரஹள்ளி கிராமம் முன்னோடியாக இருக்கிறது.


தும்கூர் மாவட்டத்தில், சிக்கனயாகனஹள்ளி தாலுக்காவில் உள்ள உப்பரஹள்ளி கிராமம், 140 குடும்பங்களை கொண்டது. அனைத்து குடும்பங்களுக்கும் வேளாண்மையே முன்னிலை வாழ்வாதாரமாக இருக்கிறது. இவர்களில் 80 சதவிகிதம் குறு விவசாயிகள் மற்றும் 20 சதவிகிதம் சிறு விவசாயிகள் ஆவர். இந்த தாலுக்காவில் தென்னை முக்கிய பணப்பயிராக இருந்தாலும, இந்த கிராமத்து விவசாயிகள், தென்னையில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் சேதமடைவதால், காய்கறி சாகுபடியையே செய்து வந்தனர்.

காய்கறி சாகுபடி
உப்பரஹள்ளியில், தக்காளி, வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பீன்ஸ், கீரை வகைகள் மற்றும் மிளகாய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்வதில் சுமார் 50 முதல் 60 விவசாயிகள் ஈடுபட்டனர். நிலத்தின் பரப்பளவை அடிப்படையாக கொண்டு, விவசாயிகள் காய்கறிகளை ஐந்து குண்டாஸ் முதல் ½ ஏக்கர் வரை சாகுபடி செய்கின்றனர். பாசன வசதி இருப்பவர்கள் சாகுபடியை ஒரு ஏக்கர் வரை விரிவுபடுத்தினர். பருவமழைக் காலத்தின்போது, மேட்டு நிலத்தில் நாங்கள் காய்கறிகளை சாகுபடி செய்தோம். கோடை காலத்தின்போது தென்னை தோட்டத்தில் சாகுபடி செய்தோம். தென்னைத் தோட்டத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளுக்கு தண்ணீர் மிக குறைவாகவே தேவைப்படுகிறது. நம்மிடம் இருக்கும் ஆதாரங்களுடன் , எங்களுக்கு காய்கறிகள் கிடைக்கின்றன. மேலும் தென்னை தோட்டங்களையும் பராமாிக்க முடிகிறது என்று காய்கறி வளர்க்கும் ஸ்ரீ. ரங்கையா விளக்குகிறார்.
உறுதியாக தண்ணீர் கிடைக்கும் நிலையில், விவசாயிகள், தக்காளி, பீன்ஸ், புடலை, பாகற்காய், பீர்க்கன் போன்ற பல வகை காய்கறிகளை பொதுவாக வளர்க்கின்றனர். அதிக பல்வகைமையோடு, பயிர் சேதம் குறைகிறது. மேலும் விவசாயிகள் இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்றுகின்றனர். 2011 முதல் 2013 வரை, கர்நாடகா அரசு, வேளாண்மைத் துறை இந்த கிராமத்தில் இயற்கை சாகுபடி திட்டத்தை செயல்படுத்தும்போது, விவசாயிகள் இயற்கை வழி சாகுபடிக்கு அறிமுகமாயினர். விவசாயிகள் மண்புழு உரத்தை இட்டு, இரசாயன உரத்தின் பயன்பாடு 50 சதவிகிதம் குறைந்துள்ளது. பல விவசாயிகள், பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த மூலிகை பூச்சிவிரட்டி தயாரித்து இடப்படுகிறது. இதன் விளைவாக, விவசாயிகள் சராசாியாக ரூ.2500 முதல் 3000 வரை சேமிக்க முடிகிறது. இது இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு செலவு செய்யப்பட்டவை ஆகும்.

இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள ஹலியார், சி.என். ஹள்ளி மற்றும் கே.பி. டவுன்களில் காய்கறிகள் விற்கப்படுகிறது. முன்பு தனியார் பேருந்துகளில் இவை கொண்டு செல்லப்பட்டன. தற்போது உப்பரஹள்ளியிலேயே போக்குவரத்து வசதி இருக்கிறது. விவசாயிகள் மூன்று சக்கர வாகனங்களிலும் காய்கறிகளை கொண்டு செல்லலாம். இவர்கள் சந்தைக்கு தனியாக சென்று இடைத்தரகாிடம் பொருள்களை விற்கின்றனர். அனைத்து பொருள்களில், தக்காளி மட்டுமே தரம் பிரித்து, விற்கப்படுகிறது. தரம்பிரிக்கப்பட்ட தக்காளியை ஒரு பெட்டிக்கு கூடுதலாக ரூ.50 எங்களுக்கு கிடைக்கிறது என்று ரங்கையா கூறுகிறார். எனினும், அவரைக்காயை ஒன்று சேர்த்து விற்கப்படுகிறது. பருவத்தின்போது ஹலியார் சந்தையில் ஒரு நாளைக்கு ஒரு டன் அளவு விற்கப்பட்டது. உப்பரஹள்ளியிலிருந்து காய்கறிகள் பார்க்க ஈர்ப்புடனும், தேவையும் அதிகம் இருக்கிறது. மேலும் நுகர்வோர் விலையை பேரம் பேசுவதில்லை. சராசாியாக, ஒவ்வொரு சாகுபடியாளரும் ஒரு வாரத்திற்கு ரூ.4000 முதல் ரூ.5000 வரை வருமானம் ஈட்டுகின்றனர். அறுவடை மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளுக்கு சராசாியாக ரூ. 1500 ஆகிறது.
எங்கள் கிராமங்களில் அனைத்து குடும்பங்களும் இரண்டு முதல் 5 ஏக்கர் வரை நிலம் சொந்தமாக வைத்துள்ளனர். மேட்டு நிலத்தில், கேழ்வரகு வளர்க்கப்படுகிறது. பச்சை பயறு, கொள்ளு. துவரை போன்றவைகள் கேழ்வரகோடு கலப்புப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. சாதாரண மழை பொழியும் நிலையில், ஒரு ஏக்கருக்கு 6 முதல் 8 குவிண்டால் மகசூல் கிடைக்கிறது. பயறு வகைகள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எங்கள் கிராமம் சிறந்த தரமுள்ள காய்கறிகளுக்கு பெயர்போனதாக மாறியது என்று காய்கறிகள் மற்றும் உணவு பயிர்கள் சாகுபடி செய்யும், திம்மைய்யா விளக்குகிறார்.

ஒருங்கிணைந்த கால்நடை
பெரும்பாலான காய்கறி வளர்ப்பவர்கள், 2 முதல் 3 பசுக்களை வளர்க்கின்றனர் என்பது ஆர்வமுள்ள ஒன்றாகும். மேலும் 90 விவசாயிகளுக்கு கால்நடை வாங்குவதற்கு, இந்தத் திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டது. பைப், நிலைத்த வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம், திப்தூர், இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து சமூகத்தினரை வழிநடத்தியது. இதனால் பால் உற்பத்தி அதிகாித்தது. இந்த விவசாயிகள் ஒரு நாளிற்கு 8 முதல் 10 லிட்டர்கள் வரை விற்கின்றனர். ஒரு தனியார் பால் சேகாிப்பு மையம் உப்பரஹள்ளி கிராமத்தில் நிறுவப்பட்டது.

ஆதாரங்களை மறுசுழற்சி செய்வது:
விவசாயிகள் ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கு ஆதாரங்களை மறுசுழற்சி செய்கின்றனர். தீவனச் சோளம், சணப்பை மற்றும் கேழ்வரகு ஆகியவை கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கிறது, இதற்கு பதிலாக, சாணம் மறுசுழற்சி செய்து வயல்களுக்கு கொண்டு இடப்படுகிறது. சாணம் எருவாக மாற்றி காய்கறி வயல்களில் அதிகளவில் இடப்படுகிறது. சில விவசாயிகள், வண்டல் மண்ணை வயல்களில் இடுகின்றனர். இதனால் இரசாயன உரம் பயன்படுத்துவது குறைந்துள்ளது. பால் மட்டுமே இந்த அமைப்பிலிருந்து வெளியே செல்கிறது. அதனால் ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கு இடுபொருளாக பயன்படுத்துவதால், இது ஒரு முழு வளையமாக கருதப்படுகிறது.

முடிவு
உப்பரஹள்ளி கிராமத்தில் 140 குடும்பங்களில், 50-60 பண்ணை குடும்பங்கள் பலவகை தொழில்கள் ஒருங்கிணைத்து, குடும்பத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வருமானமும் கூடுகிறது. காய்கறி சாகுபடி மற்றும் கால்நடைகள் போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு பல்வகைமை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு உறுதியான வருமானம் கிடைக்கிறது. சீதோஷண மாற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால், பல்வகைமை சாகுபடி குறையும். அதேசமயத்தில் வருமானம் நிலைத்து, வாழ்வாதாரத்தின் அடித்தளம் பரவியிருக்கிறது.

பெட்டி செய்தி
ரெங்கய்யா ஒரு சிறு விவசாயி. இவர் வீட்டு உபயோகத்திற்காக கேழ்வரகு, காராமணி, துவரை மற்றும் பாசிப்பயறு ஆகியவை வளர்த்து வந்தார். சில வருடங்களுக்கு முன்னர், முதன்முதலில் இவரே காய்கறி சாகுபடி செய்யத் துவங்கினார். ரெங்கய்யா வருமானம் ஈட்டுவதை கண்ட மற்ற விவசாயிகள் மெதுவாக சாகுபடி செய்யத் துவங்கினர். ரெங்கய்யா காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த சத்து மேலாண்மையை பின்பற்றுகிறார். இவர் தொழுஉரம் அதிகம் இடுகிறார். மண்புழுஉரத்தை பாசன நீரில் கலந்து தௌிக்கிறார். சொட்டுநீர் பாசனத்தையும் அமைத்துள்ளார். இவர் திரவ உரத்தை ஒரு லிட்டர் கோமியத்துடன் கலந்து 10 லிட்டர் தண்ணீரில் சாியான இடைவெளியில் தௌிக்கிறார்.
இந்த வருடம் 5 குண்டா நிலத்தில் புடலங்காய், 2 குண்டாவில் பாகல், 2 குண்டாவில் மிளகாய் மற்றும் 10 குண்டாவில் அவரையும் வளர்த்தார். புடலங்காய் மகசூல் அளிக்க துவங்கியது, இவர் ஒரு மாதத்தில் ஒரு டன் விற்று ரூ.20000 வருமானம் பெற்றார். புடலங்காயிலிருந்து ரூ.60000, பாகற்காயிலிருந்து ரூ. 24000, மற்றும் அவரையிலிருந்து ரூ. 45000, இவை, காய்கறியிலிருந்து ரெங்கய்யா பெற்ற மொத்த நிகர வருமானமாகும். இதைத் தவிர, பயிர்கள் மற்றும் தென்னை தோட்டத்திலிருந்தும் வருமானம் பெறுகிறார்.

எம்.என்.குல்கர்னி மற்றும் டி.சுரேஷ்


M N Kulkarni
BAIF Office, Kusumanagar
Kelageri road, Dharwad-580008
E-mail: mnkulkarni65@gmail.com

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2018, வால்யூம் 20, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...