வேளாண்மை – உட்புற இணைப்புகளைக் கொண்ட வாழ்வு


பல்வகைமையை திடமாக நம்பும், கேரளாவை சேர்ந்த சுமார் 5000 விவசாயிகள், சில வருடங்களாக விதை பல்வகைமையை பாதுகாத்து, பெருக்கி வருகின்றனர். விதைகளைப் பராமாித்து மற்றும் சேமித்து வருவதோடு மட்டுமில்லாமல், அவர்களின் வருடாந்திர விதைத் திருவிழாவில் அறிவையும் சேர்த்து பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த 5000 பண்ணை குடும்பங்கள் தங்களின் சேகாிப்புகளோடு நிலைத்த வேளாண்மை மற்றும் இந்த கிரகத்தில் உள்ள வாழ்வில் மூலதனமாக உருவாக்குகின்றனர்.


தற்போது நாம் அனுபவித்து வரும் மண் மற்றும் வாழ்வின் செயல்முறைக்கு மத்தியில் வளர்ந்துவரும் பிரிவுடன், நம் எண்ணங்கள் மற்றும் வாழ்விற்கான அமைப்புகள் அதிகளவில் சுருங்கியது, அதனால் உடலளவில் மற்றும் உடனடியாக என்ற நிலையில் நம் திறமையை ஈடுபடுத்துவது குறைந்துள்ளது. இது பெரும்பாலும் அர்த்தமற்றது, என்னவெல்லாம் பிரிந்ததோ மற்றும் சுருங்கியதோ, அது நமக்கு உடனடியாகவும், உண்மையாகவும் இருப்பதாக உணர்கிறோம், இதனால் நமது வாழ்வை நிலைப்பதற்கு உறுதுணையாக இருக்கும் உண்மையான செயல்முறைகளை அவமதிக்கிறோம். மண் மற்றும் அதனோடு பணி செய்வது ஒன்றே உண்மையான இணைப்பு. மேலும் நமது உடல்கள் நிலைத்திருப்பதற்கு உதவும். நாம் இன்று செய்து கொண்டிருக்கும் கூடுதல் பணிகளை செய்வதற்கும் அனுமதிக்கும். இதுவே முழுமையும் மற்றும் நிறைவும் அடைகிறது.

கேரளா நியாய சந்தைகளின் ஒருங்கிணைப்பின் நிலையான முயற்சிகளோடு, கடந்த 12 ஆண்டுகளில் கேரளாவின் நான்கு வட மாவட்டங்களைச் சேர்ந்த 25000 உறுப்பினர்கள், கொள்முதல் செய்தல், பாதுகாத்தல், அனைத்து விதமான விதைகள், தாவர பொருட்கள், பாரம்பாிய கால்நடை, மூலிகை தாவரங்கள், பாரம்பாிய மற்றும் காட்டு மரங்கள் மற்றும் இதர உயிர் பொருட்களை நிலைத்த முறையில் பாிமாற்றம் செய்யப்படுகிறது.

கேரளாவில் விவசாய நிலப்பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது , எஃப்.டி.எ.கே என்ற அமைப்பு 2005 ஆம் ஆண்டு, கோழிகோட்டில் எலிமென்ட், என்ற மிக பழைய இயற்கை அங்காடியின் உரிமையாளரான டாமி மேத்யுவால் உருவாக்கப்பட்டது. வயநாடை சேர்ந்த 300 குடும்பங்கள் முதலில் இதில் உறுப்பினர்கள் ஆயினர். துவக்கத்தில் தங்களுடைய பண்ணை விளைபொருட்களுக்கு விற்பனை வசதியை அதிகாிக்க முயற்சி எடுக்கப்பட்டது. மேலும் நியாயமான விற்பனையை உறுதிசெய்ய, சிறப்பான விலைகளை பெறுவதற்கு கலந்துரையாட வேண்டும். விவசாயிகளின் தன்மானம் இந்த முயற்சிகளின் மத்தியில் உள்ளது. தற்போது இந்த குடைக்குள் சுமார் 5000 குடும்பங்கள், 25000 உறுப்பினர்களோடு அதன் வரலாற்று முயற்சிகளால் கேரளா மலை சார்ந்த விளைபொருட்களுக்கு நியாயமான விற்பனை வசதிகள் பெற்று, மலபார் மலைப்பகுதி தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நிலைத்த உற்பத்தி செலவை சமன் செய்யும் வகையில், தங்கள் உறுப்பினர்களுக்கு நியாயமான விலையில் வேளாண் விளைபொருட்களான முந்திரி, காபி கொட்டை, வாசனை பொருட்கள், தேங்காய் போன்றவைகளை கொள்முதல் செய்வதில், இந்த அமைப்பு முன்னுதாரணமாக இருக்கிறது.

இந்த அமைப்பு துவக்கத்தில் இலாபம் ஈட்டும் வகையில் விலையை உயர்த்துதல் மற்றும் நியாயமான விற்பனை வசதிகள் உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. இன்று இந்த நிறுவனம் இவற்றில் வளர்ச்சியடைந்து, ஓரினப்பயிர்ச்சாகுபடி முறையை ஒதுக்கி, உயிர்பல்வகைமைக்காக நிலைத்த மற்றும் இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்களை கொண்டு, ஒரு இயக்கமாக மாறியது. இது தவறான தொழில்நுட்ப உபயோகத்தை தடுத்ததற்கான வெற்றிக்குறி. இவர்கள் பொது நன்மைக்காக விதைகளை மீண்டும் சேகாித்தனர். மற்றொரு ரீதியில் இது உணவு சுதந்திரத்தை மையமாக வைத்து கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினாின் பண்ணையும், பல்வேறு பண்புகளை கொண்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளடக்கிய ஒரு சிறிய மழை காடாக, குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்.டி.எ.கே நிறுவனம், அதன் உறுப்பினர்களுக்கு, ஒரு மதிப்புமிக்க அமைப்பாக மாறியது. இது அவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது மட்டுமல்லாமல், திடமான ஜனநாயக முறையோடு அவர்களின் வாழ்வாதாரத்தை மற்றும் வாழ்வை, பகுதிக்கேற்றவாறும், உண்மையான வழியிலும் எப்படி உயர்த்திக்கொள்வது என்பது மத்திய மற்றும் நீண்ட கால திட்டங்களாக வழங்கப்படுகிறது.

விதைத் திருவிழா – விதை உரிமையாளர்களை ஒருங்கிணைத்தல்
இதன் அடிப்படையில், எப்.டி.எ.கே வின் விதைத்திருவிழா நகர்ந்து, மேலும் உறுதிசெய்கிறது. இது எதிர்க்காலத்தின் நாடித்துடிப்பிற்கு நம்பிக்கையளிக்கிறது. நிலம் மற்றும் சமூகத்தின் மேல் செயல்பாடு மற்றும் உத்வேகம் கொண்டு உயிர்த்திருப்பதற்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் பங்குதாரர்கள் வாழ்வு மிகுதியாகவும்-மிகுதியின் வாழ்வாகவும், கருதி முன் வைக்கின்றனர். மண், மழை, மரங்கள், செடிகள், பறவைகள், விலங்குகள் மற்றும் சத்துக்கள் போன்ற பல்வேறு உருவங்கள் மூலம் ஆசிரியர்களாக நம்மிடம் வந்து, வீணாக்காத அல்லது தேங்கி கிடக்கும் சொத்துக்களிலிருந்து திருப்தியடைதல் மற்றும் பகிர்தல் குறித்து, ஒவ்வொன்றும் ஒரு சமூகமாக இருந்து மற்றொன்றிற்கு ஞாபகபடுத்தியும், மீண்டும் கற்றுக்கொடுக்கவும் செய்தது. பண்ணைகளும், விதைத் திருவிழா ஏற்பாடு செய்யப்படும் இடமும், பாரம்பாிய விதைகளை சேகாித்து, அதனை பெருக்கும் முறை குறித்த அனுபவம் மற்றும் அறிவை பகிரும் இடமாக உருவாகியுள்ளது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம், வாழ்வு முழுவதும் இல்லாமை மற்றும் எழுதப்பட்ட வடிவில் உள்ள நம்பிக்கை ஆகியவற்றால் எரியூட்டப்பட்ட கோபம் தொடர்ந்து அதிகாித்து வருவதை உறுதிப்படுத்துகிறது. முரண்பாடாக, இயற்கை மற்றும் உயர்ந்துவரும் இயற்கையில் உள்ள இந்த நம்பிக்கை குறைந்து, மேலும் உற்பத்தி செய்யும் விதைகளில் அச்சுறுத்தலும் வெறுப்புமே இருக்கிறது. ஆனால் விதைத்திருவிழாவில் வாழ்வின் நிலைக்கும் விதைகள் பாதுகாப்பதோடு, அக்கறை, ஊக்குவித்தல், பாதுகாப்பது மற்றும் பாிமாறிக்கொள்வது ஆகியவற்றையும் முக்கிய மதிப்புகளாக ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் என்னுடைய எண்ணத்தில், இது வெறும் விதைகளை பாதுபாப்பது மட்டுமல்ல, அவற்றை யார், எப்படி பாதுகாக்கின்றனர் என்பதுதான் முக்கியம். பெரும்பாலும் வறுமையில் வாடும் மற்றும் பலவீனமாக இருப்பவர்களே இந்த பார்வைக்கு புலப்படாத இரகங்களை சேகாித்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையில் சுவாசம் பெறுகின்றனர். ஒவ்வொரு காட்சியத்திலும் நாம் வெறும் விதைகளை காணவில்லை, சேகாிப்பில் தியாகம் செய்தவரின் வலிமை புலப்படுகிறது. விதைகள் அவர்களின் அன்பிற்கான பணியாக தொிகிறது. அதனால்தான் இவை தங்கள் மனதிலிருந்து பேசுகிறது. இந்த விதை, பணியின் கவுரவத்தையும், ஒன்றாக இருப்பது, நம்பிக்கை மற்றும் பெருமை ஆகியவற்றின் அழகும் வெளிப்படுகிறது. அவர்கள் இந்தப் பணியை அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கான பங்களிப்பாக நினைக்கின்றனர்.

நாம் பொருட்காட்சி காண சென்று, மற்ற நிகழ்ச்சிகளை காணும் முறையில் பல்வேறு அர்த்தங்களை தொலைத்து விடுகிறோம். சுமார் 60 காட்சியங்களிலும், அசாதாரணமான பல்வகைமையை கொண்ட விதைகளை பார்வைக்கு உள்ளது. சாதாரண, அசாதாரண, தனித்துவம், கிட்டதட்ட அழிவில் உள்ள மற்றும் பொதுவான பண்புகள் கொண்ட 6000 திற்கும் மேற்பட்ட இரகங்கள் அனைத்தும் இருந்தது. கிட்டதட்ட 200 நெல் இரகங்கள், 150 பயறு வகைகள், பல வகையான கத்திரி, மிளகாய், மிளகு, கருணைக்கிழங்கு, கீரை, கிழங்கு வகைகள், பழங்கள், கொட்டைகள், மூலிகைச் செடிகள், உருவாக்கப்பட்ட கால்நடைகள், அனைத்தும் ஆதாரமாக இருக்கிறது. யார் அக்கறை எடுத்து இவற்றை உயிரோட்டமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களே இவற்றை வழங்கினர். வெறும் உயிரோடு அல்ல, ஆரோக்கியத்துடனும், தூய்மையாகவும் இருக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது. நம்பிக்கை சமூகங்கள் தூய்மைக்காக போராடிக்கொண்டிருக்க, இங்கு இந்த விவசாயிகள் அமைதியாக, அவசரத்துடனும், அறிவுடனும், கண் மற்றும் கைகளை திறந்து கொண்டு, வருடாவருடம் விதைகள் மீண்டும் ஆரோக்கியமாக கிடைப்பதற்கு தேவையான ஈரப்பதம், நுண்ணுயிர்கள், காற்று, வெப்பம் ஆகியவற்றோடு மண்ணை மேம்படுத்தி வளர்க்கின்றனர். அனைத்து மிகுதியான பல்வகைமை மற்றும் வாழ்வில் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் வடிவங்கள் மற்றும் இதர வடிவங்களோடு, நமது வாழ்வில் மீண்டும் ஆரோக்கியம் மற்றும் சுத்தம் பெறலாம். பாரம்பாிய இயற்கை விவசாயம் அவர்களின் புரிதல் நல்ல அறிவை அளிக்கும். இது பெண் விவசாயிகளாக இருந்தால், பின் நிறுவனத்தின் உள்ளே திறமை வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் வல்லுனர்களாக உருவாகி ஒரு சொத்தாக இருக்கின்றனர் என்பதை நான் உணர்கிறேன். இதில் முக்கியமானது என்னவென்றால், விதைத் திருவிழாவை பார்வையிட வரும் பெரும்பாலான மக்கள், வாழ்வில் அக்கறை காட்டி, மேலும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாய் இருந்து இந்த வாழ்வை விரிவடைய செய்கிறது. அதனால், தங்கள் விதைகள் மற்றும் பாதுகாப்பதற்கான அறிவை பாிமாறிக்கொள்ளும் எண்ணங்கள் ஒன்று சேரும் இடமாக உள்ளது. என் எண்ணம் வருத்தப்படக்கூடிய வகையில்தான் நான் பணி செய்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன். நமது காலத்தில் இது உண்மையான பணி, வேளாண்மை மற்றும் வாழ்வு இந்த மண்ணில் தொடர்வதற்கு இதுவே முதலீடு.
ஏதேனும் ஒரு பண்ணைக்கு ஒருவர் பார்வையிடும்போது, அரை ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை, பலவகை பயிர்களான காபி, வாசனை, தேங்காய், பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் ஒரே பண்ணையில் காணலாம், மேலும் ஒன்றுக்கு மத்தியில் இன்னொன்று என வளர்கிறது. பூமிக்கடியில் உள்ள கிழங்கு முதல் உயரத்தில் உள்ள தென்னை மரம் வரை, மண் முதல் வானம் வரை, பல பல வகையான உணவு மற்றும் பணப்பயிர்கள். இந்த பண்ணை மிகப்பொிய வெப்பமண்டல பூமியாக காணலாம். 5000 பண்ணை குடும்பங்களின் ஈடுபாட்டுடன், அவர்கள் சேகாித்த விதைகளோடு, நாங்கள் மிகப்பொிய பாரம்பாிய விதை பாதுகாப்பு முயற்சியை இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலையில் காணலாம். தற்போது விதைத் திருவிழாவானது விதை சுதந்தரத்தை ‘வித்து ஸவராஜ்” நோக்கி செல்கிறது.

இன்று ஒவ்வொரு சேமிப்பும் விதை வங்கியாக மாறியது. இந்த குழுவில் உள்ள ஒரு விதை காப்பாளர் ‘இன்று நான், சர்க்கரை, உப்பு மற்றும் டீ தூள் தவிர மளிகை பொருட்கள் ஒன்றும் வாங்க வேண்டிய தேவை இல்லை. அனைத்தும் என்னுடைய அல்லது எனது சுற்றத்தார் பண்ணையிலேயே கிடைக்கிறது.”
விதைத் திருவிழாவின் துவக்கத்தில் ஒருவரிடமே இருக்கும் விதை, தற்போது பலரிடம் இருக்கிறது. விவசாயிகள் பேசும்பொழுது, விதைகள் எப்படி அக்கறையோடு, தனிப்பட்ட கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் என்பதை கேட்கலாம். ‘அனைத்தும் தன் சொந்த கைகளால் செய்ய வேண்டும், இதை தனியாக அனுபவிப்பது அவசியம்“ என்று அவர்கள் கூறுவர். விதைகாப்பாளர் இருக்கும் உஷார்த்தன்மைக்கு நிகரான உஷார் நிலை பார்வையாளரிடம் இல்லையென்றால், உடல் ரீதியான செயல்பாட்டில் புரிதல் தவறிட நோிடும் என்ற வாழ்வின் இரகசியத்தை கூறுகிறார்.

‘நீங்கள் கவிஞராக இருந்தால், ஒரு காகிதத்தில் மேகங்கள் மிதந்திருப்பதை தௌிவாக காணலாம். மேகங்கள் இல்லாமல் மழை இருக்காது, மழை இல்லாமல், மரம் இல்லை, மரம் இல்லாமல் காகிதம் இல்லை” என்று ஒரு முறை திச் நேட் ஹான் கூறினார். ஒரு முறை நாம் இந்த கதையை தலைகீழாக சிந்தித்து பார்த்தால், இந்த கவிதையை நாம் மேகங்களில் காணலாம், காகிதத்தில் எழுதவேண்டிய அவசியம் இல்லை. அதனால் மரங்கள், மழை மற்றும் மேகங்கள் அனைத்தும் திரும்பலாம். இந்த விதை காப்பாளர்கள் மண் மற்றும் விதைகளையே கவிதைகளாக பார்க்கின்றனர். இது உடல் ரீதியான இணைப்பில் கொண்டாடும் கவிதை.

விதைகள் ஒன்றுசேர்ந்து ஒன்றுக்கொன்று பாிட்சியம் செய்துகொள்ளும்.
எண்ணம் முழுவதும் ஆர்வமிக்க உத்வேகத்தை வைத்துக்கொண்டு, நாம் சாதாரணமாக பார்க்கும் திருவிழாவே, பொருட்காட்சியிலிருந்து வேறுபட்டது. சில நேரங்களில் நம்மை அரியாமலேயே நவீன உலகத்தின் பார்வை ஈர்க்கும், ஆனால் விதைத் திருவிழா இந்த நவீன பண்புகளையெல்லாம் எதிர்க்கிறது. இங்கு வரும் அனைவரும் ஏதேனும் ஒரு பொறுப்பில் பங்கெடுக்கின்றனர். இந்த நிகழ்வு நியாயமான காரணத்தை தாங்கி, நிகழ்ச்சி மேலாளர், முகமைகள் மற்றும் ஊடகத்தின் தலையீடு இல்லாமல் நடத்தப்பட்டது. ஒரு உண்மையான விவசாயிக்கு, என்ன தேவை, எது வீணாகும், எப்படி சில விஷயங்களை செயல்படுத்துவது என்பது தொியும். அதனால் இது பிரிக்கப்பட்டவற்றை உண்பதற்கான திருவிழா இல்லை, நம்முடைய சுலபமான சுவைகளை ஞாபகப்படுத்துகிறது, மேலும் ஒருவர் எப்படி பிரகாசிக்க முடியும் என்பதை நமக்கு காட்டுகிறது. நாம் ஒற்றுமை வழியை மறந்திருப்பதை காட்டுகிறது. மேலும் பொருளாதார வழியைத் தாண்டி எப்படி ஒருவர் சமூக பொருளாதாரத்தில் பங்கேற்பார்.
விழித்திருக்கும் நுகர்வோர்

சில பகுதி மக்கள் தற்போது, நுகர்வோர் பண்புகளின் மாற்றங்களுகேற்ப அதிக விழிப்புணர்வு ஏற்படுகிறது. மேலும் படிப்பாளர்கள் தோ;வு செய்யும் உயர் மதிப்பு சங்கிலியில் எதிர்மறை தாக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. விழித்திருக்கும் நுகர்வோர், விளைபொருளின் உண்மை மதிப்பை புரிந்துகொள்வதற்கு இதுவே சாியான நேரம், இதனால் இவர்கள் பேரம்பேசுவதை தவிர்ப்பர்.

நியாயமான சந்தை என்பது வளைந்த சந்தை, நுகர்வோர்களின் நியாயமான, விருப்பப்படி விளைபொருட்கள் வழங்குவதற்கான முயற்சியாகும். நுகர்வோரின் கோட்பாடுகள் வைத்து, உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக உதவிபுரிகிறது. மேலும், சாதாரண சந்தை விலை மாற்றாக ஆரோக்கிய விளைபொருட்களுக்கு அதிக விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். எப்.டி.எ.கே. வின் முயற்சி, சிறு விவசாயிகளின் பணி மற்றும் அறிவை மையமாக இருக்கும் நிலைத்த உணவு மற்றும் நிலையற்ற தொழிற்சாலை சார்ந்த உணவு முறையை, ஆட்சி செய்யும் எண்ணக்கூடிய அளவில் உள்ள கார்பரேட் கம்பெனிகள், மத்தியில் அவதிப்படுகிறது என்று ஒரு பார்வையாளர் கூறினார்.
சமூகத்திற்கு எதிராக உள்ள நிதியின் வழி பொருளாதாரம், பொிய கார்பரேட் கம்பெனிகன் பரவலாக்க உருவாக்கும் புதிய யுக்தியில் இல்லை, பதிலாக சிறிதாக இருந்தாலும் முழமையான உதாரணமாக, மக்களுக்கு சென்றடையும் நிலையில் இருக்க வேண்டும். இவர்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் இருப்பர், மேலும் காயிலிருந்து விதைகள் படர்வதுபோல் படர்வர் .எப்.டி.எ.கே குறைந்த காலமாக இருந்தாலும் , அவர்கள் முன்னோடியாக இருக்கின்றனர்.

சி.எஃப்.ஜான்


For References, contact author C F John can be contacted at cfjohn23@gmail.com

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2018, வால்யூம் 20, இதழ் 1

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...