நாட்டு இரகங்களை வைத்து கொல்லைப்புற கோழி வளர்ப்பு, ஏழைக் குடும்பங்களை மேம்படுத்த சுலபமாக இருக்கும், ஆபத்து இல்லாத, சிறந்த வருமானம் பெறக்கூடிய தொழிலாகும். இந்தத் தொழில் கிராம வறுமையை போக்கவும், சத்துக் குறைபாடு பிரச்சனையை ஒழிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகாிக்கும் திறன் கொண்டது. வெளிப்புற உதவி சிறியளவே பெற்று, சிறிய பண்ணைத் தொழில் துவங்கியதன் மூலம் ஆந்திர பிரதேசத்தின் பழங்குடியின சமூகங்கள், ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களை உயர்த்த முடியும் என்று காட்டியுள்ளனர்.
பாரம்பாியமாக, கொல்லைப்புற கோழிவளர்ப்பு, நாட்டில் கிடைக்கும் மாமிசம் மற்றும் முட்டை உற்பத்தியில் 70 சதவிகிதம், பல்வேறு சீதோஷண நிலை மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ற நாட்டு இரகங்களை உள்ளடக்கியிருக்கும். கடந்த முப்பது வருடங்களில், இந்தியாவில் கோழி வளர்ப்பு கொல்லைப்புற வளர்ப்பிலிருந்து முழுமையான வியாபார உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. உலகளவில், பரவலாக, வேகமாக வளர்ந்துவரும் தொழிலில் ஒன்றாக நவீன கோழி வளர்ப்பு திகழ்கிறது. எனினும், இதில் பெருமளவு வியாபார நோக்கத்தில் கலப்பின இரகங்களே ஈடுபடுத்தப்படுகிறது. முழுமையான வியாபார நோக்கத்தோடு பொியளவில் கோழி உற்பத்தி அதிகாிக்க செய்து நாட்டின் மாமிசம் மற்றும் முட்டை சுலபமாக கிடைக்கச் செய்தாலும், இது மிக மோசமான ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கொல்லைப்புற கோழி வளர்ப்புத் திட்டம்
சிறியளவே அமைந்த, பெரும்பாலும் சுலபமான கொல்லைப்புற கோழி வளர்ப்பு, இன்னும் இந்தியாவில் கால்நடை உற்பத்தி முறையில் பரவலாக இருந்து வருகிறது. கொல்லைப்புற கோழி வளர்ப்பு அதிகத்திறன் கொண்டதாகும், குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டி தருவதற்கும், சத்துக்கள் அதிகாிக்கவும் உதவி புரிகிறது. நம் நாட்டில் குறிப்பாக மானாவாரி பகுதியில் இதனை வியாபாரமாகவும் அல்லது ஒருங்கிணைந்த மாதிரியின் ஒரு பகுதியாகவும், சிறு, குறு விவசாயிகளை ஈடுபடுத்தி செயல்படுத்த ஊக்குவிக்கலாம்.
இந்தக் கருத்தைக் கொண்டு, 2016 ஆம் ஆண்டு கால்நடைத்துறை மற்றும் ஆந்திர பிரதேச அரசின் கீழ் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நலத் துறையும் சேர்ந்து கிராம உள்ளூர் கொல்லைப்புற கோழி வளர்ப்புத் திட்டத்தை வடிவமைத்தனர். இதன் முக்கிய நோக்கமாக 13000 ஆதிவாசி குடும்பங்களுக்கு வருமானமும், சத்துக்களும் உயர்த்துவதாக, இருக்கிறது. உற்பத்தி முறைகளில் மாற்றங்கள், தடுப்பூசிகள் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்புக்கான சேவை மையம், இனப்பெருக்கப் பண்ணைக் கூடம் உருவாக்குதல் மற்றும் கூட்டு கிராம அளவில் பொது ஆர்வக் குழு அமைத்தல் ஆகியவை உள்ளடக்கியது. வாசன் அமைப்பு, முன்னோடி தொழில்நுட்ப முகமையாக இருந்து, இந்தத் திட்டத்தை ஸ்ரீக்காகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 129 கூட்டு கிராமங்களில் துவக்கப்பட்டது.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெடகொடப்பள்ளி கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் அனுபவம் குறித்து இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு முயற்சி
பெடகொடப்பள்ளி கிராமம், பெடபயாலு மண்டலில், உள்ள 102 குடும்பங்களைக் கொண்ட கிராமமாகும். வறுமையில் இருக்கும் இவர்களில் பெரும்பாலானோர் வேளாண்மை மற்றும் கூலி தொழிலையே அவர்களின் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். முன்னர் சில குடும்பங்கள், அவர்களின் கொல்லைபுறத்தில் கோழிகளை வளர்த்தனர். எனினும், உள்ளூர் கோழி இரகங்களின் வினியோகம் குறைபாடு, இரவு கூடாரம் இல்லாத நிலையில் சூறையாடப்படுதல், ஆரோக்கிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததால் இறப்பு விகிதம் அதிகாித்தல் மற்றும் அறிவின்மை போன்ற பல காரணங்களால் கோழி வளர்ப்பை தொடராமல் கைவிட்டனர். அப்போதிலிருந்து இந்த சமூகங்கள் இலாபத்திற்காக உற்பத்தி செய்யும் ப்ராய்லர் கோழியின் மாமிசம் மற்றும் முட்டைகளை அவர்களின் தேவைக்கு கொணர்கின்றனர்.
2016 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியின்போது, உள்ளூரில் உள்ள தொண்டு நிறுவனத்துடன் கள செயல்பாடுகளை கண்காணித்து, வாசன் நிறுவனம் இந்த கிராமத்தில் பணி செய்துவந்தது. பெண்கள் மற்றும் சுயஉதவி குழுக்களை கொண்டு சமூக கூட்டங்கள் ஏற்பாடு செய்து, அதில் கொல்லைப்புற கோழி வளர்ப்பு குறித்து விளக்கினர். இதன் விளைவாக, பொது ஆர்வக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அனைத்து உறுப்பினர்களும் ரூ. 300 செலுத்த வேண்டும். இதில் ரூ.100 வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாகவும், ரூ.200 கோழிகளின் ஆரோக்கிய பாதுகாப்பிற்காக முன்பண கட்டணமாகவும் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பொது ஆர்வக் குழுவில் உள்ள குடும்பத்திற்கு ரூ.3000 (ரூ.2700 இரவு கூடாரம் கட்டுவதற்கும், ரூ.300 45 வயது குஞ்சுகள் வாங்குவதற்கும்) கொல்லைப்புற கோழி வளர்ப்பு துவங்குவதற்கு அளிக்கப்பட்டது.
கொல்லைப்புற கோழி இனப்பெருக்கப் பண்ணை
உள்ளூர் உற்பத்தியை உறுதிப்படுத்தவும், உள்ளூர் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு நாட்டு கோழிகளை தொடர்ந்து விநியோகம் செய்யவும், இனப்பெருக்கப் பண்ணை உருவாக்கப்பட்டது. திரு. கொடா அபைடோரா, பெடகோடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுக் குழு உறுப்பினருக்கு கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்கு தேவையான இனப்பெருக்க பண்ணையை துவக்கும் வாய்ப்பை அளித்து, பொதுக் ஆர்வக் குழு உறுப்பினர்களுக்கு குஞ்சுகள் வினியோகம் செய்யப்பட்டது.
இந்தப் பண்ணைக்காக திரு. கொடா அவர்கள் அரை ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஒதுக்கினார். அவர் ரூ. 30000 முதலீடு செய்த, அதேவேளையில் ரூ. 96,500 இனப்பெருக்க பண்ணையை துவக்குவதற்கு திட்டம் சார்பாக உதவியளிக்கப்பட்டது. இந்தத் தொகையை கூடாரம், வேலி, தண்ணீர் மற்றும் தீவனம் வைக்கும் குவளைகள், குஞ்சுகள் வாங்குவதற்கும், ஒரு வருடத்திற்கான தீவனம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த முறையை 2016 ஆம் ஆண்டு இரண்டாம் பாகத்தில் துவக்கப்பட்டது. இந்த முறையை முழுமையாக முடிப்பதற்கு ஆறு மாதங்கள் ஆயின. கொல்லைப்புற கோழி வளர்ப்பு இனப்பெருக்க பண்ணையை, 60 குஞ்சுகள் வைத்து மே 2017 முதல் செயல்படுத்தப்பட்டது.
கொல்லைப்புற கோழி வளர்ப்பு இனப்பெருக்கப்பண்ணை, சொந்த குஞ்சுகளை உற்பத்தி செய்து உள்ளூரிலேயே வினியோகம் செய்யும் அளவிற்கு நிலைமையை மாற்றியது. திரு. கொடா அவர்கள் இதுவரை 480 ஒரு மாத குஞ்சுகளை 86 பொது ஆர்வக் குழு உறுப்பினர்களுக்கு , ஒரு குஞ்சு ரூ.80 என்ற விகிதத்தில் விற்றார். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது 5-10 குஞ்சுகள் கொல்லைப்புறத்தில் வளர்க்கப்படுகிறது. பொது ஆர்வக் குழு உறுப்பினர்களையும் தாண்டி , உள்ளூர் சந்தைகளில் நாட்டுக் கோழிகள் விற்கப்பட்டது. சுமார் 45 கரும் குஞ்சுகள் மற்றும் 11 கோழிகள் விற்றதில், ரூ.11,650 வருமானம் கிடைத்தது. மிக குறைவான வாடிக்கையாளர்களுக்கே முட்டைகள் விற்பனை செய்யப்பட்டது, ஏனெனில் முட்டை விற்பனை செய்வதை விட குஞ்சுகளாக விற்பனை செய்வதற்கே முன்னுரிமை அளித்தார், திரு. கொடா அவர்கள். 2017 ஆம் ஆண்டு திரு. கொடாவின் குடும்ப வருமானமாக, இனப்பெருக்கப் பண்ணையிலிருந்து சுமார் 65 % ஈட்டுகிறார்.
ஆரோக்கிய பாதுகாப்பு மற்றும் இதர சேவைகளுக்கான வசதி
கிராமத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் படேரு என்ற இடத்தில்தான் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது, இது உள்ளூர் சமூகங்களுக்கு ஆரோக்கிய சேவை பெறுவதில் சிரமமாக இருந்தது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, உள்ளூர் உப கால்நடை மருத்துவர்களுக்கு திட்டம் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது. தோ;வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குறிப்பாக, பெண்கள் கோழி மற்றும் இதர கால்நடைகளின் ஆரோக்கிய பாதுகாப்பு செய்முறைகள் குறித்து 2-3 நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது.
உள்ளூர் கால்நடை மருத்துவத்திலிருந்து, கால்நடை மருத்துவர்களும், முன்னெடுத்து செல்லும் முகமை மற்றும் வாசன் அமைப்பின் அலுவலர்களும், உப மருத்துவர்களை உருவாக்கும் பயிற்சியின் ஆதாரமாகவும் திகழ்கின்றனர்.
பயிற்சி பெற்ற உப மருத்துவர்கள் கால்நடை ஆரோக்கிய சேவைகளை சமூகங்களுக்கு வழங்கினர். 100 குடும்பங்களுக்கு 2 உப மருத்துவர்களின் சேவை வழங்கப்பட்டது. உப மருத்துவரின் சேவைக்கு ரூ.2 கட்டணம் செலுத்துவதால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. பொது ஆர்வக் குழு உறுப்பினர்களின் பறவைகள் ஒவ்வொன்றையும், நோய் அல்லது தொற்றை பாிசோதிப்பதற்கு, செலுத்தப்பட்ட முன்பணத்திலிருந்து ரூ.2 பிடிக்கப்படுகிறது. பொது ஆர்வக் குழு உறுப்பினர், மீதமுள்ள தொகை தீரும்போது, குறைந்த தொகையை மீண்டும் செலுத்தி சமன் செய்ய வேண்டும். உப மருத்துவர்கள் ஏற்பாடு செய்தது முதல், ஆரோக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பின்பற்றுவது அதிகாித்ததால், கோழிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
ஆரோக்கிய பாதுகாப்பு மற்றும் சிறந்த மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து தகவல் மற்றும் அறிவு சேவைகள் லயா மற்றும் வாசன் அமைப்பு உதவி புரிகிறது. கூடுதலாக, ஒரே நோக்கம் கொண்ட தனிநபர்கள், நண்பர்கள் அடங்கிய சமூக அமைப்புகள் உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்கும் மற்றொரு ஆதாரமாக திகழ்கிறது.
தாக்கங்கள்
கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் கொல்லைப்புற கோழி வளர்ப்பதால், பாரம்பாிய கலாச்சாரமான நாட்டுக் கோழி வளர்ப்பு பெடகொடாபள்ளி கிராமத்தில் உயிர்பெற்று வருகிறது. தற்போது தொடர்ச்சியாகவே கொல்லைப்புறத்தில் கிடைக்கும் முட்டைகள் மற்றும் மாமிசம் உற்பத்தி செய்து உள்ளூர் சமூகங்கள் உண்ண முடிகிறது. தொழில் ரீதியாக வளர்க்கப்படும் கோழிகளைக் காட்டிலும், தங்கள் கொல்லைப்புறத்தில் உற்பத்தி செய்யும் கோழிகள் மற்றும் முட்டைகள் ஆரோக்கியமானவை, எனவே, குடும்பத்தில் சிறந்த ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இனப்பெருக்க பண்ணை துவக்கியதால், குடும்பங்களுக்கு குஞ்சுகள் சுலபமாக கிடைப்பது மட்டுமில்லாமல், குஞ்சுகள் மற்றும் கோழிகள் விற்பதன் மூலம் தொழிலாளர்கள் கௌரவமான வாழ்க்கையை வாழ்கின்றனர். கோழியின் எச்சங்கள் மறுசுழற்சி செய்து பயிர்களுக்கு உரமாக இடுகின்றனர். இதனால் மண்ணின் வளமும் விரிவடைகிறது. பெடகொடாபள்ளி கிராமத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பு மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
கண்ணா கே. சிரிப்புரப்பு, அனீதா கனுக்கோலனு, சப்யசச்சி தாஸ் மற்றும் சந்தரசேகர் நிமேனி
Aneetha Kanukolanu WASSAN, #12-13-452,Street No 1,Tarnaka, Secunderabad - 500017 E-mail: aneethak@wassan.org
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2018, வால்யூம் 20, இதழ் 3



