ஒரிசாவில் மீன் வளர்ப்பு வயல் வெளிப்பள்ளியில் பங்கேற்ற விவசாயிகள் சிறிய அளவில் மீன்களை வளர்க்க துவங்கினர். மேலும், சமூக ஆதாரங்களிலும், மீன் உற்பத்தியை விரிவுப்படுத்துவதற்கும், சமூக ஒற்றுமையை பலப்படுத்தவும்,விவசாயிகள் இந்த மீன் வளர்ப்பினை எடுத்துள்ளனர்.
தேசிய பொருளாதாரத்தை பொருத்தவரையில் மீன் வளர்ப்பு ஒரு முக்கிய பிரிவாக கருதப்படுகிறது. வளரும் மக்கள் தொகையினால் இதன் தேவை அதிகாித்துள்ளதாலும், ஆரோக்கிய பயன்கள் குறித்த விழிப்புணர்வினாலும், மீன் முக்கிய உணவாக இருக்கிறது. மீன் வளர்ப்பின் மொத்த வளர்ச்சியும் முழுமையடைவதற்கு ஒரு முக்கிய தீர்வாகவும் சவாலாகவும் கருதப்படுகிறது. இயற்கை ஆதாரங்களில் உள்ள அழுத்தம் அதிகாித்து வருவதால், சீதோஷன மாற்றத்தின் அச்சுறுத்தலாலும், இதனை நிலைத்த தன்மையாக உருவாக்குவது மிகவும் முக்கியமாகும். மீன் வளர்ப்பு, வருமானம் பெருகுவதற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குவதில் குறிப்பாக உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குகிறது. சிறிய மற்றும் குறைந்த ஆபத்தையுடைய, சிறிய அளவிலான மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை, ஆதாரம் குறைந்த விவசாயிகள் சுலபமாக பின்பற்றலாம்.
நிலைத்த வாழ்வாதார அணுகுமுறை
கிராமப் பகுதியில் உள்ள மீன் பண்ணை குளத்தின் இயற்கை உற்பத்தித்திறனை நம்பியே இருக்கிறது. மேலும் தண்ணீரில் விலங்கு எருவை சேர்த்தால் விரிவடையும். இது குளத்தின் தாங்குதிறனை அதிகாிக்கும். இம்மாதிரி முறைகள் கிராம சமூகங்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டுகிறது, ஆனால் சிறிய அளவில் அதிகாித்தாலும், உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம் குறிப்பாக புரதச்சத்து கிடைப்பதால் கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுகிறது.
ஒரிசாவில், பெட்நோட்டி வட்டத்தில் 1654 தண்ணீர் டேங்குகள் 599 ஹெக்டர் பகுதியில் அமைந்துள்ளது. சில டேங்குகள் கிராம பஞ்சாயத்து சொந்தமாகவும், சில டேங்குகள் தனிநபர்களுக்கு சொந்தமாகவும் இருக்கிறது. இந்தப் பகுதி விவசாயிகள் பாரம்பாிய முறை முதல் பகுதி நேர முறை மீன் வளர்ப்பை பின்பற்றி வந்தனர். மீன் வளர்ப்பில் சிறந்து விளங்கும் இந்த வட்டத்தில், மயூர்பஞ் என்ற இடத்தில் உள்ள விவசாய பயிற்சி மையம், நிலைத்த வாழ்வாதார அணுகுமுறையை பின்பற்றி மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியை எடுத்தனர்.
நிலைத்த வாழ்வாதார அணுகுமுறையின் சிறிய அளவில் மீன் வளர்ப்பை சமூகத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வறுமை மற்றும் மோசமான நிலையை குறைப்பதே இதன் நோக்கமாகும். நிலைத்த வாழ்வாதார அணுகுமுறையின் மூலம் குளத்தின் தாங்குதிறனை அதிகாிப்பது, பண்ணை குடும்பத்தை ஈடுபடுத்துவது, ஆதார பயன்பாட்டை உயர்த்துவது, மீன் பண்ணையில் பல்வேறு கூறுகளை ஒருங்கிணைப்பது, பண்ணை பகுதிகள் மற்றும் பண்ணை கழிவுகளை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு (பசு உரம், மண்புழு உரம்) விவசாயிகளை ஊக்கப்படுத்தி அதன் மூலம் பண்ணை வருமானம் உயர்த்தி குடும்ப வாழ்வாதாரம் மற்றும் சிறப்பாக நிலைத்தத்தன்மையை அடைய முடியும்.
வளர்ச்சியின் மையத்தில் மக்களுடன், பெண்களின் குழுக்கள் மற்றும் மீன் வளர்ப்புக் குழுக்கள் 15 -20 உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் சிறிய மற்றும் பருவகால குளங்கள் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உணவை விரிவுபடுத்துவதற்கு குளத்துத் தண்ணீரை வளமாக்கப்படுகிறது (பசுமைத் தண்ணீர்). சமையல்அறை கழிவுகள் பண்ணையில் உருவாகும் கழிவுகள் ஆகியவற்றை உணவாக பயன்படுத்தலாம். குளக்கரைகளில், அதன் வளமான தண்ணீரைப் பயன்படுத்தி காய்கறிகள் வளர்க்கப்படுகின்றது.
நீர்வாழ் உயிரின வளர்ப்பின் வயல் வெளிப் பள்ளி
நீர்வாழ் உயிரின வளர்ப்பின் வயல் வெளிப் பள்ளி என்பது விவசாயி, விவசாயிக்கு விரிவாக்கம் செய்யும் முறையாகும். மீன் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கும், விவசாயிகள் வருமானத்தை விரிவுபடுத்துவதற்கும், ஐ.சி.ஏ.ஆர்-சி.ஐ.எப்.ஏ அமைப்பு இந்த முறையை கையாள்கிறது. இந்த வயல் வெளிப்பள்ளி, மீன் வளர்ப்புச் சமூகத்தின் முடிவெடுக்கும் திறனை உயர்த்தும், ஒரு சுவரற்ற பள்ளியாகும். இனப்பெருக்க மேம்பாடு, நாற்றங்கால் மற்றும் உணவு மேலாண்மை, நோய் அறிதல், உணவின் அளவுகள், ஒருங்கிணைந்த சாகுபடி, மண் மற்றும் தண்ணீர் ஆய்வு மற்றும் துாய்மையான தண்ணீரில் வளர்க்கும் இறால் உட்பட 25 மீன் இரகத்திற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் திறன்களை உயர்த்துவதற்காக, நீர்வாழ் உயிரின வளர்ப்பின் வயல் வெளிப் பள்ளி, மீன் விவசாயிகளுக்கு ஒரு கற்றல் மையமாக திகழ்கிறது.
நீர்வாழ் உயிரின வளர்ப்பின் வயல் வெளிப் பள்ளி மூலம் ஒடிசா திறன் வளர்ப்பு மையத்தின் உதவியோடு மயூர்பன்ஜ் மாவட்டத்தை சேர்ந்த, வருடம் 2000 விவசாயிகளுக்கு கற்பிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 2017 ஆம் ஆண்டு ஒடிசாவில், மயூர்பன்ஜ் மாவட்டத்தில் பெட்நோட்டி வட்டத்தின் கீழ் உள்ள அஸ்தாபுரா என்ற இடத்தில் கைலாஷ் மீன் பண்ணையில் ஐ.சி.ஏ.ஆர்-சி.ஐ.எப்.ஏ அமைப்போடு இணைந்து ஜூலை 24, 2017 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
நீர்வாழ் உயிரின வளர்ப்பின் வயல் வெளிப் பள்ளி வாரத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது. வலைத்தொட்டி மூலம் இனப்பெருக்கம், நடமாடும் மற்றும் சீன வகை வட்ட குஞ்சு பொறிக்கும் அமைப்பு மூலம் இனப்பெருக்கம், இந்தியாவில் பெரும்பான்மையாக பயன்படுத்தும் மீன்கள் மற்றும் குறைந்தளவு மற்றும் காணக்கிடைக்காத இரகங்களுக்கு பயன்படுத்த வேண்டிய, குஞ்சு பொறித்தல் முதல் வளர்த்தல் போன்ற குறிப்பிட்ட திறன்கள் வளர்க்கும் தொழில்நுட்பங்களை பயனாளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. பயனாளிகளுக்கு மேலும் சாிவிகித திட உணவை தயாரிப்பதற்கும், குளம் மற்றும் ஏரிகளில் மீன்களை விடுவதற்கு முன்னரும், பின்னரும் மேம்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. இவற்றைத் தாண்டி, பயனாளிகள் மீன் குஞ்சுகளை தேர்ந்தெடுத்தல், உணவுமுறைகள் மற்றும் உணவளிக்கும் நேரத்தை தயார் செய்தல், மீன் வளர்ப்பில் பயன்படுத்தக்கூடிய இயற்கை மற்றும் இரசாயன உரங்களின் பயன்கள், மேலும் சந்தைப்படுத்தும் அணுகுமுறையான அறுவடை செய்யும் நேரம் மற்றும் விற்பனை நேரம் போன்ற தொழில்நுட்ப அறிவில் நன்கு பயின்றுள்ளனர். பயிற்சி முடிந்த பிறகு, விவசாயிகள் பருவகால குளத்திலிருந்து கிடைக்கும் சிறிய கருவாடு உற்பத்தி மற்றும் நடமாடும் கார்ப் வகை மீன் குஞ்சு பொறிக்கும் இயந்திரம் மூலம் குஞ்சு உற்பத்தித் திட்டங்கள் போன்ற சிறியளவில் வருமானம் பெறும் செயல்பாடுகள் குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது.
நீர்வாழ் உயிரின வளர்ப்பின் தொழில்நுட்பங்களுக்கான நிரந்தர கண்காட்சி மையம் ஒன்று திரு.அக்ஷெய் குமார் சாஹூ அவர்களின் பண்ணையில் அமைக்கப்பட்டது. இங்கு எந்த விவசாயியும் எந்த நாளிலும் பார்வையிட்டு, நீர்வாழ் உயிரின வளர்ப்பின் தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுகொள்ளலாம். விவசாயிகள் தொடர்ந்து ஐ.சி.ஏ.ஆர்-சி.ஐ.எப்.ஏ, ஒடிசா அரசின் மீன்வளத்துறை மற்றும் அந்த மாவட்டத்தின் விவசாய பயிற்சி மையத்துடன் தொடர்பை மேம்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் மத்தியில் புதிய தொழில்நுட்பத்தை கற்று, அதனை செயல்படுத்துவதற்கு வழிநடத்துனராக சேவை புரிகிறார். வழிநடத்துனருக்கு மேலும் வாத்து வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் கொல்லைப்புற கோழி வளர்ப்பு மற்றும் பருவகாலமல்லாத காய்கறி சாகுபடி போன்ற பல்வேறு தலைப்புகளில் விவசாயப் பயிற்சி மையத்தினால் பயிற்சியளிக்கப்படுகிறது.
திட்டத்திற்கு பிறகு, தொடர் கண்காணிப்பும் செய்யப்படுகிறது. திரு. அக்ஷெய் குமார் சாஹூ, வழிநடத்துனரான இவர், ஒவ்வொரு 25-30 பங்கேற்பாளர்கள் குழுவிலிருந்து 5-7 பங்கேற்பாளர்களை தேர்வு செய்தார். அவர்களை, தனது பண்ணையிலேயே ஒரு மாத காலத்திற்கு தொழில்நுட்பங்களை செய்து பார்ப்பதற்கு அனுமதியளிக்கிறார்.
இந்த வயல்வெளிப் பள்ளி மூலம், சுமார் 800 பங்கேற்பாளர்கள் பயிற்சித் திட்டத்தை முடித்துள்ளனர். இதில் நான்கு பேர் சொந்தமாக நடமாடும் குஞ்சு பொறிக்கும் இயந்திரம் மூலம் இனப்பெருக்கம் செய்ய துவங்கியுள்ளனர். 200-250 விவசாயிகள் தனது சொந்த குளத்திலும், குத்தகையில் எடுத்த சமூக குளத்திலும், மீன் சாகுபடி தொழில் நுட்பங்களை பின்பற்றுகின்றனர். 70-80 விவசாயிகள் மீன் விதை வளர்ப்புத் தொழில்நுட்பங்களை பின்பற்றுகின்றனர்.
சமூக அடிப்படையிலான மேலாண்மை
சமூக அடிப்படையிலான மேலாண்மை அணுகுமுறைகள் மூலம் பொது சொத்து ஆதாரங்களை பயன்படுத்தி மீன் வளர்ப்பதற்கு முயற்சி செய்யப்பட்டது. அரசு உதவியுடன் குழு அணுகுமுறையில் கிராம சமுதாயகுளத்தில் மீன் சாகுபடி மேற்கொண்டனர். வயல் வெளிப் பள்ளி அணுகுமுறை போல, பாதாஷி வட்டத்தில் உள்ள மூன்று பெண் சுய உதவிக் குழு, உதலா வட்டத்தை சேர்ந்த இரண்டு பெண் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மூன்று ஆண் குழு பங்கேற்பாளர்கள் ஆகியோர் சமூக மீன் சாகுபடி அணுகுமுறையில் ஈடுபடுத்தப்பட்டனர். விவசாய பயிற்சி மையத்துடன் அரசு துறையும் சேர்ந்து உகந்த மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்களை மேற்கொள்வதற்கு, தொழில்நுட்ப உதவி வழங்கியது. சமூக அணுகு முறையை பின்பற்றும்போது, குழுக்கள் ஒரு ஏக்கருக்கு 8-12 க்விண்டால் மீன்கள் உற்பத்தி செய்ய முடிவதன் மூலம் ஏக்கருக்கு ரூ.58000 வருமானம் 6-8 மாத காலத்திற்குள் கிடைக்கிறது. மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை கூலி நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலாபங்களை பொதுவாக பங்கிடப்படுகிறது. சிறந்த சமூக ஆதார மேலாண்மைக்கு, முக்கியமாக பயனீட்டாளர்கள் சில காரணிகளை தேந்தெடுத்துள்ளனர். பல்வேறு காரணிகளில், சிறியளவில் குழுக்களாக பிரித்து, ஒன்றாக ஒப்புகொண்டவற்றை பார்வையிட்டு அதனைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும், சமுதாய ஈர்ப்பு ஏற்படவும் வழிநடத்தப்படுவதும் இதில் அடங்கும். சிறப்பான கிராம சமூக அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம், இந்தப் பகுதியில் உள்ள பருவகால நன்செய் நிலங்கள், வெள்ளம், வெள்ளம் சூழ்ந்த காடுகள் மற்றும் சதுப்புநிலக் காடுகள் நிலையான தன்மையில் பயன்படுத்தும்போது அதில் சிறந்த வெளிப்பாடு உருவாகிறது.
இறுதி குறிப்பு
நிலைத்த வாழ்வாதார அணுகுமுறை மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்பில் வயல் வெளிப் பள்ளி பின்பற்றுவது, மீன் சமூகங்களின் வாழ்வாதாரங்களை விரிவுபடுத்துவதற்கு ஒருவரம் என்று உறுதிப்படுத்துகிறது. அறுவடை செய்யப்பட்ட மீன்களில் 40 சதவிகிதம் வீட்டிற்கும், 60 சதவிகிதம் மீன்கள் சந்தையில் விற்கப்படுகிறது. இதனால் மீன் சாகுபடி குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் வருமான உத்திரவாதத்தை உறுதியளிக்கிறது. சாியான முறைகளோடு சாியான தொழில்நுட்பங்கள், கிராம பெண்களை நீர்வாழ் உயிரின வளர்ப்பு செயல்பாடுகளை நிலைத்த வழியில் கொண்டு செல்ல இந்த முயற்சி நிரூபித்துள்ளது. மேலும் சமூக ஆதாரங்கள் மேலாண்மை, வாழ்வாதாரங்கள் மற்றும் இயற்கை ஆதாரங்கள் பாதுகாக்கப்பதற்கு இன்னும் நீண்ட வழி செல்ல வேண்டும். கிராம நீர் வாழ் உயிரின சாகுபடி உப மேலாண்மை மற்றும் சமூக அடிப்படையிலான மேலாண்மை அணுகுமுறைகள் மூலம், தொழில் முனையும் செயல்பாடாக வளர்ந்து, நிதியை ஈட்டும் தேர்வாகும்.
பெட்டி 1: மீன்களின் பங்கு நலமான வாழ்விற்கான ஊட்டச் சத்தாக பாிந்துரைக்கப்படுகிறது:
மீன்களிடம் அதிகம் விரும்பத்தக்க சத்துக்களின் பின்னணி இருக்கிறது. இது சுலபமாக ஜீரணமாகக்கூடிய மற்றும் அதிக உயிரியல் தன்மை கொண்ட உயர்தர விலங்குபுரதச்சத்தை அளிக்கும் சிறந்த ஆதாரமாகும். மீன்கள் குறிப்பாக, அடிப்படை கொழுப்பு அமிலங்களான ஒமேகா -3 பாளிஅன்சேசுரேடட் கொழுப்பு அமிலங்கள் என்று கூறப்படும் நிறைவுறா பலபடிகக் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆதாரமாகும். அதனால் இவை சாதாரண வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு குறிப்பாக கற்ப காலத்திலும், இளம் குழந்தை பருவத்தின்போதும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் (கடல் பொருட்களில் உள்ள குறிப்பாக கால்சியம், பாஸ்பரஸ் , இரும்பு, செலினியம் மற்றும் ஐயோடின் ) நிறைந்த ஆதாரமாகவும் மீன்கள் இருக்கிறது. ஆகையால் மீன்கள் விலங்கு சார்ந்த உணவுபொருட்கள் அல்லாத, ஒரே வகையான உணவுகளை உண்பவர்களுக்கு, மீன்கள் சத்துக்கள் அளிக்கும் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. உணவில் அதிக மீன்கள் சேர்ப்பதனால், அதன் முக்கியத்துவம் அதிகாிக்கிறது. உணவு வகைகளில் அதிகம் உண்ணக்கூடிய அளவிற்கு மாறி, அதனால் ஒட்டுமொத்த உணவு மற்றும் சத்துக்கள் உட்கொள்ளும் அளவும் உயர்ந்துள்ளது.
நீர்வாழ் உயிரின வயல்வெளிப் பள்ளி
நீர்வாழ் உயிரின வயல்வெளிப் பள்ளிகள் உருவாவதற்கு செய்முறையில் ஈடுபடுத்தப்பட்ட வழிகள்
- தொழில் முனையும் விவசாயியை தேர்ந்தெடுப்பது. இவர் மூலம் இந்தத் தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கொண்டு செல்லுதல்.
- சமூக குளங்களின் குத்தகைக்கு எடுத்த காலம், நீர்வாழ் உயிரின வளர்ப்பின் மேலாண்மை தொழில்நுட்பங்கள், உற்பத்தி, விற்பனை போன்று அந்தப்பகுதியில் உள்ள அடிப்படை மீன் வளர்ப்பு நிலையை சேகாிக்க வேண்டும்.
- சிபாஅமைப்பு, மீன்வளத்துறை மற்றும் விவசாய பயிற்சி மையப் பணியாளர்கள் தொழில் முனையும் விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கின்றனர்.
- நீர்வாழ் உயிரின வயல்வெளிப் பள்ளியில் அடிப்படை கல்வி வசதிகளுக்கு உதவி பெறுதல்.
- நீர்வாழ் உயிரின வயல்வெளிப் பள்ளியில் மீன்களை தூய்மையான தண்ணீரில் வளர்ப்பதற்கு செயல்படுத்த வேண்டும்.
- விவசாயிகளை மையமாக கொண்டு பாடங்களை தயார் செய்தல்.
- வளர்ப்பு / சாகுபடிக் காலம் முழுவதும் பயின்ற விவசாயிகளுக்கு தொழில்நுட்பத்தில் உதவ வேண்டும்.
- பயின்ற விவசாயிகளின் பண்ணைகளுக்குத் தொடர்ந்து கண்காணித்து புதிய செயல்பாடுகளை வலியுறுத்துதல்.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில், உதலா வட்டத்தில் பிம்தளி கிராமத்தில், ஏற்கனவே ஒரு பெண்கள் குழு மற்றும் மீன் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வக் குழு. பெண்கள் குழுவில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். பல குறுகிய கால குளங்கள் இருக்கின்றன. விவசாயப் பயிற்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியை வைத்து பெண்கள் குழுக்கள் ஆறு தனியார் குளங்களை (0.6 ஹெக்டேர;) குத்தகைக்கு எடுத்திருந்தனர். இரண்டு பருவ குஞ்சு உற்பத்தி தொழில்நுட்பங்கள் மேற்கொண்டு, நான்கு மாதத்தில் ரூ. 42000/- நிகர இலாபத்தை ஈட்டினர். விவசாய ஆர்வக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் இரண்டு சமுதாய கிராமக் குளங்களை குத்தகைக்கு எடுத்து மேசை அளவு மீன்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்கள் எட்டு மாதத்தில் ரூ.71000/- நிகர இலாபம் ஈட்டினர். பெண்கள் குழுக்கள் இந்த விவசாய ஆர்வக் குழுவிற்கும், அருகிலுள்ள கிராமங்களுக்கும் மீன் குஞ்சுகளை வினியோகிக்கின்றனர். அதனால் தரமான குஞ்சுகளின் வினியோகம் உறுதி செய்யப்படுகிறது.
பிஸ்வாரஞ்சன் சமந்தரே,சத்யஜித் குமார், புயன் சுந்தரக் குமார் கடே
Biswa Ranjan Samantaray Scientist (Fishery Sc.), Krishi Vigyan Kendra Mayurbhanj-1 Shayamakhunta, Mayurbhanj-757049, Odisha E-mail: brsamantaray@yahoo.co.in Satyajit Kumar Bhuyan Associate Professor, College of Fisheries, OUAT, Rangeilunda, Berhampur, Odisha Surendra Kumar Ghadei District Fisheries Officer , Mayurbhanj, Odisha-757049
மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2019, வால்யூம் 21, இதழ் 1



