மரங்கள் வளர்த்தல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல்


மரங்களை வளர்க்கலாம்.காம் என்ற சமூக அமைப்பு, உலகளவில், தனிநபர் மற்றும் கம்பெனிகளுக்கு மரங்கள் வளர்ப்பதை சாத்தியமாக்க, செலவு குறைந்த சேவைகளை செய்து வருகின்றனர். இந்த பாதுகாக்க வாய்ப்பு வழங்கி வருகிறது.


இந்தியாவில் உள்ள கிராமச் சமூகங்கள், குறைபாடுகளோடு நீண்டகாலம் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வதற்கு அடிப்படை வசதிகளில் மட்டும் குறைபாடில்லாமல், தண்ணீர், உணவு மற்றும் வருமானமில்லாமல், அவற்றை பெறுவது மிகபொிய சவாலாக எடுத்து பூர்த்தி செய்ய முற்படுகின்றனர். பெரும்பாலான சமூகங்கள், மண் வளம் குறைந்த, வேலைவாய்ப்பு இல்லாத மற்றும் மாசடைந்த தண்ணீர் ஆதாரங்கள் உள்ள பகுதியில் வாழ்கின்றனர். மரங்களை வளர்க்கலாம்.காம் என்ற சமூக அமைப்பு, 2010 ஆம் ஆண்டு இந்தியாவில், பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார நிலை உயர்த்துவதற்கு, மரங்கள் வளர்க்கும் முயற்சியை துவங்கியது. இதன் முக்கிய குறிக்கோள் இந்த சமூக உறுப்பினர்கள், வாழ்க்கையின் அடிப்படை தேவைகளோடு இணைப்பதேயாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில், இந்த அமைப்பு 20 மாநிலங்களில் விரிவுபடுத்தியது. ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், அருணாசல் பிரதேசம், உத்திர பிரதேசம், சட்டிஷ்கர், குஜராத், தமிழ் நாடு, சிக்கிம், தெலுங்கானா, உத்திரகண்ட், டெல்லி, புதுச்சோி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. சேரன் கனிமலை, கென்யாவில் சமீபத்தில் காடு உருவாக்கும் திட்டம், உலகளவில் எடுத்து சென்றது.

ஒரு அணுகுமுறை
மரம் வளர்க்கலாம் என்ற அமைப்பு, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மரம் நடும் பங்கீட்டாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள், காடு உருவாக்குவதற்கு, சமூக நிலங்களை தேர்வு செய்து மரங்கள் நடுவதை துவங்கினர். பொது இடங்களில் மட்டுமே மரங்கள் நடுவது, அந்தப்பகுதியை பிறப்பிடமாக கொண்டவர்களுக்கு அதிகபட்ச பயன்கள் அளிக்கப்படுவதை உறுதிபடுத்துகிறது.
விழிப்புணர்வு கிராம சமூகங்களை மரம் வளர்க்கும் செய்முறையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பஞ்சாயத்து மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு மரங்களின் பயன்கள், அவற்றை நிரந்தரமாக பதிய முக்கிய அளவீடுகள் எடுக்கப்பட்டு, மரங்கள் வளர்க்கும் செயல்முறை குறித்து கிராம அளவில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கூட்டங்களின்போது, மரங்களின் மதிப்பை சமூக உறுப்பினருக்கு விளக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. நிலங்களை அதிக படியாக பயன்படுத்துவதில் அல்லது மேய்ச்சலுக்கு பயன்படுத்துவதிலிருந்து விலகி மரத்தின் மதிப்பு குறித்து, சமூக உறுப்பினர்களுக்கு உணர்த்த வேண்டும். நீண்ட ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் சமூக உறுப்பினர்களோடு கலந்தாலோசித்த பின்னர் சமூகத்தேவையின் அடிப்படையில், நடபோகும் மரத்தின் சிற்றினங்களை தேர்வு செய்வர். பெரும்பாலும், இன, ஆயுர்வேத மற்றும் பொருளாதார மதிப்பு கொண்ட மர சிற்றனங்களை உள்ளூர் கிராம சமூகங்களுக்காக நட்டு உள்ளூர் உயிர் பல்வகைமையை பாதுகாக்கப்பட்டது. மண்ணின் இயல்பு, இந்தப் பகுதியில் மழையின் இயல்பு மற்றும் கிராம சமூகத்தின் பொருளாதார, மூலிகை மற்றும் சமுதாய தேவைகள் மற்றும் காட்டினம் ஆகியவற்றின் அடிப்படையில், சாியான மர சிற்றனங்கள் கண்டுபிடித்து, உள்ளூர் நாற்றங்காலில் வளர்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு, மேற்குவங்கம், சுந்தர்பன் தேசிய பூங்காவின் சுற்றுப்புறத்தில் சதுப்புநிலக் மரங்கள், நடப்பட்டது. இது வங்காள விரிகுடாவில் தொடர்ந்து சுழல்கள் தாக்குவதால், இதை போிடர் மேலாண்மைக்காக செய்யப்படுகிறது. சமீப ஆய்வில், சுந்தர்பன் தேசிய பூங்காவிலும், அதைச்சுற்றியும் மரங்களால் ஆன கவசம் இருந்ததால், கொல்கத்தாவில் இயற்கை போிடாிலிருந்து அதிக சேதங்கள் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிக வளர்ச்சி சதவிகிதத்தை அடைவதற்கு, நாற்றங்காலில் நாற்றுகளை வளர்த்து, பின்னர், முதிர்நிலை பொறுத்து நடவு செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும். மரங்கள் நடும் செய்முறையில், நாற்றங்காலில் நாற்றுகள் வளர்த்தல், இடத்தை சுத்தம் செய்தல் மற்றும் குழி எடுத்தல், நாற்றுகளை நடுதல், வயலுக்கு பாசனம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் கிராம சமூகத்தினரை ஈடுபடுத்தினர். பழங்குடியின கிராம சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குகிறது குறிப்பாக பெண்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலை கிடைக்கிறது. மரங்கள் அனைத்தும் சமூகத்தை சார்ந்தது, இந்த மரங்களிலிருந்து சமுதாய பொருளாதார பயன்கள் பெறும் ஒரே பயனீட்டாளர், இவர்கள்தான். உள்ளூர் சந்தைகளில், அறுவடை செய்யப்பட்ட பழங்கள் மற்றும் மரங்கள் இல்லா வன விளைபொருட்களை விற்பனை அல்லது சொந்த தேவைக்காக சமூகங்கள் முடிவு செய்தனர். ஒரு முறை முற்றிய பின்னர், மரமல்லாத காட்டு விளைப்பொருள், அவர்களின் வாழ்க்கை முழுவதும் உறுப்பினர்களுக்கு வருமானமளிக்கும் நிலைத்த ஆதாரமாக இருக்கிறது.

முடிவு மற்றும் தாக்கம்
உலக சுற்றுச்சூழல் தினம் 2010 ஆம் ஆண்டு தேசத்திற்கு பாிசாக, இந்த நிறுவனம் 4.5 மில்லியன் மரங்கள் இந்தியாவில் 20 மாநிலங்களில் நடப்பட்டது. இது கிராம சமூகத்தினருக்கு 3,70,000 பணி நாட்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

மரங்கள் நடும் செயல்முறையின்போது உருவாகும் கிராம வேலைவாய்ப்பும், மரமல்லாத காட்டு விளைபொருட்கள் சொந்த பயன்பாட்டிற்கு மற்றும் விற்பனைக்கும் பயன்படுத்தப்பட்டது. இவை வருமானமளிக்கும் மாற்று ஆதாரமாக இவர்களுக்கு கிடைக்கிறது. எனது மகன்கள் எங்களைக் கைவிட்டாலும், இந்த மரங்கள் என்னோடு எப்போதும் இருக்கும், எங்கள் வயோதிக காலத்தில் என்னையும் என் மனைவியையும் பார்த்துக்கொள்ளும் என்று மரங்கள் நடுவதில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்களில் ஒருவர் கூறினார். இந்தத் திட்டங்கள் மூலம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பாலைவன கிராமங்களுக்குத் தண்ணீர் வழங்குவதில் வெற்றி கண்டது, மரங்கள் வளர்க்கலாம் அமைப்பு. உதாரணத்திற்கு, சாிஸ்கா புலிகள் சரணாலயம் அருகில் உள்ள நமது மரங்கள் நட்டப்பகுதியில், நிலத்தடிநீர் 40 அடிக்கு உயர்ந்துள்ளது. மரங்கள் வளர்க்கும் திட்டம் துவக்கியபோது நிலத்தடிநீர் 400அடியில் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 4,00,000 மரங்கள் நடப்பட்டது. இது கிராம சமூகத்தினர் பயனடைந்தது மட்டுமல்லாமல் புலிகள் வாழ்விடமும் உயரும்.

இலட்சக்கணக்கான வாழ்க்கை சாதகமான தாக்கம் ஏற்பட்ட நிலையில், மரங்கள் வளர்க்கலாம் அமைப்பு, இவர்களின் திட்டங்கள் மூலம் எப்போழுதும் அதிகபட்ச தாக்கத்தை உறுதி செய்கிறது. பொியளவில் மரம் வளர்ப்பு முயற்சிகள், நாட்டின் கற்பனை செய்யப்படாத பகுதிகளில் துவக்கப்படுவது மூலம் பெரும்பாலும் உதாசினப்படுத்துபவர்களுக்கு சென்று சேரும். அவர்கள் கூடுதல் செயல்பாடுகளிலிருந்து கிராம சமூகத்தினருக்கு அதிக வருமானம் பெறுவதற்கு பலவழிகள் ஆராயப்படுகிறது.

பெட்டி 1 திருமதி. தேவியின் வெற்றிக்கதை
இந்தத் திட்டம், 35 வயது நிரம்பிய திருமதி. தேவி அவர்களது வாழ்வில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. இவர் விழுப்புரத்தில் இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேரர்ந்தவர். இவர் மூன்று ஆண் பிள்ளைகளை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. முன்பு, தினக் கூலியாக 13 மணிநேர கடின வேலையில், இவர் குடும்பத்தில் சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாது அல்லது தனது பிள்ளைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் நலத்திற்கு நேரம் ஒதுக்க இயலாது. மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பணியாளராக நியமித்தப்பின்னர், திருமதி.தேவி கட்டுபாட்டு சுற்றுச்சூழலில் பணிப்புரிவது பெருமையாக உணர்கிறார். தற்போது தனது பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியத்தை கவனிக்க முடிகிறது. மேலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதால் அவரது வாழ்க்கை முழுமையடைந்துள்ளது. இவரது பணியை சமூகத்தினர் பலர் கவனிக்கின்றனர்.

பெட்டி 2: மரங்களுடன் வாழ்த்துவது
மரங்கள் வளர்க்கலாம் அமைப்பு.காம் என்ற வலைதளத்தில், மரங்களுடன் வாழ்த்துவது என்ற அம்சம் உருவாக்கப்பட்டது. இதில் தனிநபர் நேரலையில் மரங்களை நடலாம். தாம் விரும்புபவரை ஒரு மரசான்றிதழுடன் வாழ்த்து தொிவிக்கலாம். மாதந்தோறும் மரங்கள் நடலாம், எந்த நேரமும் வாழ்த்து தொிவிக்கலாம். சந்தா, மரங்கள் வளர்க்கலாம்.காம் இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் மரம் வளர்க்கும் பழக்கத்தை உறிஞ்சுவதற்கு முயற்சிக்கிறது. இந்த மர சான்றிதழ் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு, அவர்களது பிறந்தநாள், பண்டிகைகள், திருமணநாள் மற்றும் இதர சிறப்பு நிகழ்வுகளின்போது பாிசளிக்க பயன்படுத்தலாம். அவர்களோடு ஒவ்வொரு மரம் நடும்போது கிராம சமூகங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறது. இது நாட்டை பசுமைப்படுத்தும் முயற்சியாகும், மேலும் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகன்களுக்கு சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.

சுப்ரியா பாட்டீல்


Supriya Patil
G3, Scheherazade Building,
Colaba, Maharashtra – 400005
E-mail: supriya.patil@grow-trees.com
www.Grow-Trees.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2019, வால்யூம் 21, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...