ஜார்கண்டில் உள்ள குந்தி மற்றும் ராஞ்சி மாவட்ட விவசாயிகள் பழத் தோட்டத்தில் இலைதழை உற்பத்தி செய்யும் பயிர்களை சாகுபடி செய்து பயனடைகின்றனர்.மரத்தைச் சுற்றி இலைதழைகளை மூடாக்காக பயன்படுத்துவதால் மண்ணின் ஈரப்பதம், மண்ணின் சத்துக்கள் மற்றும் இயற்கைஉரம் அதிகாித்து, பயிர்களின் வளர்ச்சித்தன்மை மற்றும் மகசூல் அதிகாித்தன் மூலம் பிரதிபலித்தது.
இந்தியாவில் உள்ள கிழக்கு பீடபூமி மற்றும் மலைப்பகுதியில் இருக்கும் உகந்த சீதோஷண நிலையில் பல்வேறு வகையான பழமரங்கள் வெற்றிகரமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் தேவையான மழை பெய்தாலும், குறைந்த மண் இயற்கை கனிமம், குறைந்த நீர்பிடிப்புத் தன்மை, மண் அமிலத்தன்மை மற்றும் பாஸ்பரஸ், போரான் மற்றும் சிங்க் போன்ற சத்துக்கள் குறைபாடு ஆகிய பிரச்சனைகள், மானாவாரி நிலங்களின்கீழ், வளர்ச்சி மற்றும் பலவகை பழ மரங்களின் உற்பத்தி குறையும் நிலைக்கு வழிவகுத்தது. இந்த வறண்ட சுற்றுச்சூழலில் உள்ள மண்ணில், பெரும்பாலும் அதிக அமிலத்தன்மை மற்றும் அலுமினிய நச்சுத்தன்மை, அதிக ஆக்ஸைடுகள் மற்றும் குறைந்த சத்துக்கள் இருக்கும். அதனால் லைம் மற்றும் உரத்தை பயன்படுத்துவது வேளாண் உற்பத்தி செலவில் அதிக பங்கு வகிக்கிறது. எந்த முயற்சியும், இந்தப் பகுதியில் பழ மரஉற்பத்தித் தன்மையை அதிகாிப்பதற்கு மண்ணில் அதிகாிக்கும் இயற்கைகனிமத் தன்மையை, முதலில் தீர்வு காண வேண்டும். வறண்ட ஈரப்பதம் மற்றும் பாதி ஈரப்பதம் கொண்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மண்ணில் இயற்கைஉரம் மேம்படுத்துவது அல்லது உயர்த்துவது முக்கிய சவாலாக இருக்கிறது. வேளாண்மை முறைகளோடு குறைந்தமண் செயல்பாடு மற்றும் பயிர் கழிவுகளின் அதிக இடுபொருள் ஆகியவை, மண்ணின் இயற்கைத் தன்மை அழிந்துவருவதை தடுப்பதற்கு சிறந்த மாற்றாகக் கொண்டு, ஒட்டுமொத்த மண்ணின் தரம் அதிகாித்துள்ளது. சமீபகாலமாக இயற்கை உரத்தின் விலை அதிகாித்து வருவதால், வேளாண் வயல்களில் இதனை பயன்படுத்துவது குறைந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவின் கிழக்கு பீடபூமியில் உள்ள விவசாயிகள் எப்பொழுதும், கிடைக்கும் இயற்கை உரத்தை தானியப் பயிர்களுக்கும் இட்டு, பழ மரத்தோப்புகளுக்கு எப்போதாவதுதான் அளிக்கப்படுகிறது. செஸ்பேனியா போன்ற பசுந்தாள் பயிர்கள் கிடைக்கும் என்றாலும், இவர்களின் வருடாந்திர உற்பத்தி சுழற்சி, மானாவாரி சூழ்நிலையில் பழ மரத் தோப்புகளில் செயல்படுத்துவது,பெரும்பாலும் தடையாகவே இருந்தது. அதேபோல் இரசாயன உரங்களின் அதிகாிக்கும் விலையினால், அதன் பயன்பாட்டின் அளவும், பெரும்பாலான குறு விவசாயிகள் குறைத்துள்ளனர். இதனால் ஒருங்கிணைந்த மண் வள மேலாண்மை முறைகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
சாகுபடி முறைகளில் இலைதழை உற்பத்தி செய்யும் பயிர்கள்
சாகுபடி முறைகளில் இலைதழை உற்பத்தி செய்யும் பயிர்களை சேர்ப்பதால், இலைதழைகள் கூடுதலாக கிடைப்பதன் மூலம் முக்கிய பயிருக்கு தேவையான மண் வளம் சிறப்பாக அதிகாிக்கும். இலைதழை உற்பத்தி செய்யும் தாவரங்களை முக்கிய பயிருடன், வரிசைப்பயிர் சாகுபடி முறையில் உறுதி செய்வதால், பின்வரும் பயன்கள் அளிக்கின்றன. அவை சத்துக்கள் மறுசுழற்சி, மண்ணில் உள்ள சத்துக்கள் வீணாவதை குறைக்கும், உயர்த்தப்பட்ட மண் பூச்சிகளின் செயல்பாடுகளை அதிகாிக்கும், மண் அரிமானத்தை கட்டுபடுத்தும், மண் வளத்தை மேம்படுத்தும் மற்றும் பயிர் உற்பத்தி நிலைத்திருக்கும். சத்துக்கள் மறுசுழற்சி முறை அடிப்படையில் வரிசை சாகுபடியின் வெற்றி, மரங்களிலிருந்து வெட்டப்பட்ட பாகங்களின் அளவு மற்றும் தரம், மக்கும் செயல்பாட்டின்போது கழிவுகளிலிருந்து வெளிவரும் சத்துக்களின் அளவு, சத்துக்கள் வெளியிடும் மற்றும் பயிர் தேவை ஒன்றாக இயங்கும் தன்மை ஆகியவை ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளது. ஆழமான வேர் அமைப்புகள் கொண்ட பயறுவகை பயிர்கள், ஆழமான மண் அடுக்குகளிலிருந்து சத்துக்கள் எடுப்பதை விரிவுபடுத்துவதற்கும், தழைச்சத்து மண்ணில் நிறுத்துவதன் மூலம் தழைச்சத்தின் இடுபொருளும் பூர்த்தி செய்கிறது. ஆகையால் இவை பண்ணையிலேயே சத்துக்கள் சுழற்சியை உயர்த்துவது, பெரும்பாலான சிறப்பான வழிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. பல வேளாண்- வன சாகுபடி முறைகளில் கிடைக்கும் இலைதழைகளில் மணிச்சத்து சேகாிக்கப்பட்டு, மண்ணில் இவற்றை மீண்டும் மக்க செய்கிறது. சுழற்சி மூலமாக மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்து செடிகளுக்கு கிடைக்கும் நிலைக்கு மாற்றமடைகிறது.
பூமிசுதா: இலைதழை உற்பத்தி செய்யும் மரங்கள்
பல்வேறு இலைதழை உற்பத்தி செய்யும் பலபயிர் மரங்கள், மறுசுழற்சி செய்து மண்ணில் சத்துக்கள் பெறுவதில் சிறப்பாக செயல்படுவதாக அறிக்கைகள் உள்ளன. ஈரப்பதம் குறைந்த மற்றும் வறட்சி குறைந்த பகுதிகளில், வரிசைப்பயிர் சாகுபடி முறைக்கு உகந்தபயிராக சுபாபுல் (லூசியானா ல்யுகோசபேலா) பயன்படுத்தப்படுகிறது. எனினும், இதன் ஆக்ரமிப்புத் தன்மை, பிரச்சனையாக உருவாகி வருவதால், வரிசைப் பயிர் சாகுபடி முறையில் சூபாபுல் சிற்றனத்திற்கு சிறப்பான மாற்று சிற்றனத்தை தேர்வு செய்து இந்தச் சாகுபடி முறையில் ஒருங்கிணைக்க வேண்டும்.
சுபாபுல் சிற்றனத்திற்கு மாற்றுப் பயிரை தேர்வு செய்வதற்கு, 2014 ஆம் ஆண்டு முதல், ராஞ்சியில், ஐ.சி.ஏ.ஆர் ஆர்.சி.இ.ஆர், ஆராய்ச்சி மையம் பல்வேறு விவசாயிகளின் பங்கேற்புடன் கூடிய ஆய்வை மேற்கொண்டது. ராஞ்சி, குந்த்தி மற்றும் ராம்கர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் பண்ணையிலும், விவசாயிகளின் வயல்களிலும் பாிசோதனை மற்றும் செயல்பாட்டு முறையில் இந்த ஆய்வுகள் செய்து பார்க்கப்பட்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பூமிசுதா (தெப்ரோசியா கேன்டிடா),சூபாபுல் சிற்றினத்திற்கு சிறந்த மாற்றாக தேர்வு செய்யப்பட்டது. இது பழமரத் தோப்புகளில், இலைதழைகள் மறு சுழற்சி மூலம் சத்துக்கள் மறுசுழற்சி பூர்த்தியடைகிறது.
பழமரத்தோப்புகளில் சத்துக்கள் சிறப்பாக மறுசுழற்சி செய்யப்பட்ட மாதிரி
இந்தியாவின் கிழக்கு பீடபூமி மற்றும் மலைப்பகுதியில், நிலைத்த வில்வமரம் (ஏக்லி மார்மலஸ்) அடிப்படையிலான உற்பத்தி முறை கொண்ட மாதிரி, ஐந்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பாிசோதனைகளில் கிடைத்த ஆவணங்களிலிருந்து உருவாக்கப்பட்டது. வரிசைப் பயிர் சாகுபடி செய்யப்பட்டப் பகுதிகளில் வளர்க்கப்பட்ட வில்வ மரங்களிலிருந்து கிடைக்கும் இலைதழைகளை, முக்கியப் பயிர்களை சுற்றி போட்டு புத்துயிர் அளிப்பதே இதன் அணுகுமுறையாகும்.
இந்த மாதிரியில் வில்வமரம் 2.5 மீ x 5.0 மீ இடைவெளியில் நடப்பட்டது. வரிசைக்கு மத்தியில் 3 மீஅகல இடத்தில் வில்வ மரத்தை விதையிலிருந்து வளர்க்கப்பட்டது. ஜூலை மாதத்தில் 15 செ.மீ. x 30 செ.மீ. இடைவெளியில் விதைகள் விதைக்கப்பட்டது. பூமிசுதா கிளைகள் வருடத்திற்கு இரண்டு முறை வெட்டப்பட்டு, இலைதழைகளை (செப்டம்பர் மற்றும் மார்ச்) வில்வமரத்திற்கு மூடாக்காக பயன்படுத்தப்படுகிறது. பூமிசுதா மற்றும் சூபாபுல் மரங்களை ஒப்பிடுகையில் மகசூலிலும், சத்துக்களும், பூமிசுதா மரங்கள் சிறப்பாக காணப்பட்டது. (அட்டவணை 1)
மரத் திசுக்களில் உள்ள சத்துக்களின் அடிப்படையில், முதல் மூன்று வருடங்களுக்கு பூமிசுதா மரக்கழிவுகள் வில்வமர வேர்ப்பகுதியில் இட்டு மறுசுழற்சி செய்வதனால் கிடைக்கும் சத்துக்களின் அளவு 1.17 டன் /ஹெக்டர் தழைச்சத்து, 0.06 டன் / ஹெக்டர் மணிச்சத்து மற்றும் 0.42 டன்/ஹெக்டர் சாம்பல் ஆகியவையாகும். சூபாபுல் பொருத்தவரையில் மொத்தமாக 0.41 டன் தழைச்சத்தும், 0.03டன்/ஹெக்டர் மணிச்சத்து மற்றும் 0.16 டன்/ஹெக்டர் சாம்பல் சத்து ஆகியவை இலைதழை மறுசுழற்சியில் பெற முடியும். பொருளாதார ரீதியில், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தின் செலவு, முதல் மூன்று வருடங்களில், பூமிசுதா இலைதழைகளை மறுசுழற்சி செய்ததன் மூலம் ரூ.23400/-, ரூ.23600/- மற்றும் ரூ.25200/- மதிப்பு கொண்ட உரம் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் கிடைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மூடாக்கு போடுவதால் ஏற்படும் தாக்கம்
பூமிசுதா இலைதழைகளை வில்வமரவேருக்கு அருகில் மூடாக்கு போடுவதன் மூலம் செடிகளுக்கு கிடைக்கக்கூடிய நிலையில் சாம்பல் சத்தின் அளவு அதிகாித்துள்ளது, இயற்கை கனிமம் மற்றும் மண்ணில் மொத்த அடர்த்தன்மை குறைந்துள்ளது ஆகியவை மூன்று வருடங்களுக்குப்பிறகு முக்கிய மாற்றங்களாக காணப்பட்டது.
மண்ணில் மொத்த அடர்த்தன்மை குறைந்ததனால், மண்ணின் ஈரப்பதம் மற்றும் கனிமப்பொருள் அதிகாித்தது. இதனால் வேர் நன்றாக மண்ணில் ஊடுருவி செல்வதற்கு உதவிபுரியும். குந்த்தி மற்றும் ராஞ்சி மாவட்டங்களில் உள்ள மாந்தோப்புகள் இதேபோல் கொழுஞ்சி இலையுதிர்வது மற்றும் கிளைகழித்தல் மூலம் பயன்கள் காணப்படுகிறது. குந்த்தி மாவட்டத்தில், டோர்பா வட்டத்தின் குபூ கிராமத்தை சேர்ந்த பிம்லாதேவி, 2014 ஆம் ஆண்டு முன்னோடி பயனாளியாக ஏற்றுக் கொண்டார். இந்தத் தொழில்நுட்பம் டோர்பா வட்டத்தில் 20 தோப்புகளுக்கு மேலாக பரப்பப்பட்டது, மேலும் முர்ஹூ வட்டத்தில் உள்ள சில பேருக்கும் பிரதான் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியால் சாத்தியமானது.
பூமிசுதா இலைதழைகளை மூடாக்கு போடுவதன் மூலம் மரவளர்ச்சி காரணிகளான மரவிட்டம், உயரம், கிளைகளின் படர்த்தன்மை மற்றும் ஐந்து வருட வில்வமரத்தின் மகசூல் ஆகியவை அதிகாித்துள்ளது. மாந்தோப்பில் அம்ராபாலி இரகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு பூமிசுதா இலைதழைகளை மூடாக்கு போட்டதனால் 10 வருட மாமரங்களின் வீரியம் குறிப்பிட்ட அளவிற்கு உயா;ந்துள்ளது. கிராம விவசாயிகள் ஆய்வு முறைகளின் தாக்கம் எண்ணிக்கையில் அளவிட முடியவில்லை என்றாலும், அவர்களின் பார்வையில் இலைகள் மற்றும் பழங்களின் தரம் மற்றும் மகசூல் ஆகியவற்றில் மாற்றங்கள் உணர்ந்தனர். சக விவசாயிகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இந்த விதைக்கு உடனடி தேவை இயற்கையாகவே ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் அவர்கள் உர மரம் என்ற பொருள் தரும் ‘மைந்த் கச்”என அழைக்கத் தொடங்குவதில் ஆச்சர்யம் இல்லை. பிரதான் நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தை கொண்டு சென்ற முறை, சுலபமாக இதனைப் பின்பற்றும் முறையும், இந்தப் பகுதியில் நிரந்தர செயல்பாடாக மாறிவிடும் என்ற நம்பிக்கையுள்ளது.
நிலக்காி சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொழுஞ்சி மூலம் நிலத்தை சீரமைக்கலாம். நிலக்காி சுரங்கக் கழிவுகள் வெளியிட்டப் பின்னர், பரந்துவிரிந்த நிலப்பரப்பை சாகுபடி செய்ய முடியாமல் கைவிடப்பட்டது. நிலத்தை பண்படுத்துவதற்கும், மறுவாழ்வளிப்பதற்கும் முயற்சிகள் எடுக்ககோரப்பட்டது. காட்டுமரம் மற்றும் பழமரங்கள் நடப்பட்டது, விவசாயிகள் கொழுஞ்சி மரத்தை வரிசை மற்றும் ஓரங்களில் நடுவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டது. ராம்கார் மாவட்டத்தில் உள்ள பூஸ்ரீ கிராமத்தை சேர்ந்த திரு.சுனில் முர்மு அவர்களின் ஒரு ஹெக்டர் நிலத்தின் ஓரங்களில் 2014 ஆம் ஆண்டு நடப்பட்டது. தற்போது, மற்ற விவசாயிகள் இந்த மரத்தை வரிசையில் நட்டு பெருக்குவதற்கு துவங்கியுள்ளனர். அவர்கள் கால்நடை மற்றும் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுத்துகிறார்கள்.
முடிவு
இலைதழைகளை உற்பத்தி செய்யும் மரங்களான மிசுதா எனப்படும் கொழுஞ்சியை, வரிசை சாகுபடி முறையில் உள்ள பழ மரதோப்புகளில் ஒருங்கிணைப்பதால், பழ மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் உயா;த்துவதற்கு சிறப்பான முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து வருடத்திற்கு பிறகு ஐ.சி.ஏ.ஆர் ஆர்.சி.ஈ.ஆர்,ஆர். சி, ராஞ்சி இறந்த கொழுஞ்சி மரங்களுக்கு பதிலாக மாற்று விதைகளை நடுவதற்கு உறுதி செய்தனர். இவ்வாறு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். தேவைப்படும்போது இதனை சுலபமாக அழிக்கலாம் என்பதால், இது சூபாபுல் வகைக்கு சிறந்த மாற்றாக இருக்கிறது. ஐ.சி.ஏ.ஆர் ஆர்.சி.ஈ.ஆர்,ஆர். சி, ராஞ்சி, கொழுஞ்சி விதைகளை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஜார்கண்ட்டில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள், தங்களின் தோப்புகளில் கொழுஞ்சி மரங்களை ஏற்கனவே நட்டுவிட்டனர். விரிவாக்க முகமை மூலம் சாியான உதவியுடன், பழ மரத் தோப்புகளின் உற்பத்தித் திறனை பொியளவில் அதிகாிப்பதற்கு இந்தமரம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் இமயமலையின் மலையடிவாரத்தில் வறண்ட பகுதியை பிறப்பிடமாக கொண்டது கொழுஞ்சி, பல்வேறு பயன்களுக்காக, வடகிழக்கு ஆசியாவில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இதில் மருத்துவ பயன்களும் இருக்கிறது. அதிக இலைதழை உற்பத்தி, அடர்த்தியான பசுமை போர்வை, ஆழமான வேர் அமைப்பு, ஆக்கிரமிப்பு செய்யாத தன்மை, மேலும், தழைசத்தை மண்ணில் நிலைநறுத்தும் தன்மை ஆகிய பயன்களால் வறண்டப் பகுதியில் வேளாண்காடு உருவாக்குவதற்கு இந்த சிற்றினம் முக்கியத்துவம் பெறுகிறது. தெப்ரோஷியா வோகிலி மற்றும் தெப்ரோஷியா கேன்டிடா ஆகிய செடிகள், ஆப்ரிக்கா கண்டத்தில் ஏற்கனவே உரத்தின் மரமாக பயன்படுத்தப்படுகிறது. பாழான நிலத்தை மறுவாழ்வு பெறுவதற்கு இந்த மரம் பயன்படுகிறது மேலும் கனிமபொருள் அளவும் அதிகாிக்கும் அதே விகிதத்தில் மண்ணில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தும் உயர்ந்துள்ளது.
அட்டவணை 1
கொழுஞ்சி மற்றும் சூபாபுல்லின் ஒப்பீடு
| வ.எண். | காரணிகள் | கொழுஞ்சி | சூபாபுல் |
| 1 | உலர் இலைதழை மகசூல் (டன்/ஹெக்டோ;) | 12.8 | 10.2 |
| 2 | சத்துக்கள் அளவு (%) | ||
| தழை | 2.94 | 2.94 | |
| மணி | 0.24 | 0.24 | |
| சாம்பல் | 1.06 | 1.16 | |
| 3 | நுண்ணூட்டச்சத்துக்கள் (பிபிஎம்) | ||
| துத்தநாகம் | 35.35 | 39.97 | |
| தாமிரம் | 19.18 | 14.07 | |
| மாங்கனீசு | 177.60 | 79.54 | |
| இரும்பு | 203.20 | 159.07 |
பிகாஷ் தாஸ், பிரதீப் குமார் சர்கார், மகேஷ் குமார் தகார், சுஷாந்த குமார் நாயக்,சுதர்ஷன் மௌரியா, பிரியாரஞ்சன் குமார், ஷிவேந்திர குமார், அருண் குமார் சிங், பி.பி.பட்
Priya Ranjan Kumar ICAR Research Complex for Eastern Region, Ranchi, Jharkhand – 834010 (India) E-mail: ourprk@gmail.com
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2019, வால்யூம் 21, இதழ் 2



