செலவில்லா சாகுபடி


கர்நாடகா, தார்வாட் மாவட்டத்தில் கங்கால் தாலுக்கா, ஹிரேகுஞ்சால் கிராமத்தை சேர்ந்தவர் திரு. மல்லேஷ பாகுலப்பா பிசேரோட்டி என்ற விவசாயி. 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதி மிக மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்தது.


கடந்த பத்து வருடங்களாக இவர், இயற்கை விவசாயத்தை செயல்படுத்தி வருகிறார். பிசேரோட்டி துவக்கத்தில் தொழுஉரம், மக்குஉரம் மற்றும் மண்புழுஉரம் ஆகியவற்றை பயன்படுத்திவந்தார். சுமார்,நான்கு வருடங்கள் பயன்படுத்திய பின்னர், அவருடைய பயிர் நன்றாக வளர்வதை கண்டார். நுண்ணுயிர் தயாரிப்பான, ஜீவாமிர்தா திரவத்தை பயன்படுத்த துவங்கினார். ஆனால் திரவ ஜீவாமிர்தத்தை தயாரிக்க தண்ணீர் நிறைய தேவை. தண்ணீர் பற்றாக்குறையை மனதில் கொண்டு திட ஜீவாமிர்தா பயன்பாட்டிற்கான பாிசோதனைகள் துவங்கினார்.அதில் அவர் வெற்றியும் பெற்று கடந்த ஆறு வருடங்களாக பயிர் சாகுபடி செய்து வருகிறார்.

திட ஜீவாமிர்தத்தை, உள்ளூர் மாடு அல்லது எருவிலிருந்து கிடைக்கும் 10 கிலோ பசுஞ் சாணம், 250 கிராம் பருப்பு மாவு, 250 கிராம் வெல்லம், 500 கிராம் மண் மற்றும் 1.5 முதல் 2 லிட்டர் மாட்டுகோமியம் ஆகியவற்றை சேர்த்து கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களையெல்லாம் நன்கு கலந்து, நிழலில் குவியலாக வைத்து, சாக்குப் பையைக் கொண்டு 24 மணிநேரத்திற்கு மூட வேண்டும். அடுத்தநாள், சாக்குப் பையை எடுத்து 25-30- நாட்கள் வரை நிழலில் உலர்த்த வேண்டும்,பின்னர் சிறுகற்கள் போன்ற உருமாறிதிட ஜீவாமர்தமாக கிடைக்கிறது. பின்னர், கற்களாக இருப்பதை சலித்து சிறிய மற்றும் பொிய துகள்களாக பிரிக்கப்படுகிறது. இதை விதைகளோடு சேர்த்து விதைப்பின்போது நேரடியாகவோ அல்லது மேலுரமாகவோ இடப்படுகிறது. இந்த முறையோடு, திரு. பிசேரோட்டி, இயற்கை விவசாயத்தை புது நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் பல எண்ணிக்கையிலான மண்புழுக்கள் வளர்வதை கண்டார்.
தட்டுகளில் மண் புழுக்களை வளர்க்க துவங்கினார். 20 கிலோ திட ஜீவாமிர்தாவில் 2.5 லிட்டர் தண்ணீரைக் கலந்து மூன்று நாட்கள் வைக்கப்பட்டது. 45 நாட்கள் பிறகு, தட்டில் 1000 மண்புழுக்களை கண்டார். மண்புழு தயாரித்து 71 நாட்களுக்கு பிறகு, தட்டுகளில் பல மண்புழுக்களின் காலனிகள், கூட்டுப்புழுக்கள், சிறிய புழுக்கள் மற்றும் 1500 நன்கு வளர்ந்த மண்புழுக்கள் காண முடிந்தது. ஒவ்வொரு தட்டிலிருந்து 20 கிலோ மண்புழுக்கள் கிடைக்கிறது. இதை மக்குஉரம் மற்றும் திட ஜீவாமிர்தத்தோடு கலந்து பயிருக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு தட்டுக்கு 15 கிலோ திட ஜீவாமிர்தா தயாரிக்கப்படுகிறது. இது வருடத்திற்கு, கூட குறைய 5 மெட்ரிக் டன் அளவு ஜீவாமிர்தா கிடைக்கிறது. திரு.பிசேரோட்டிக்கு ஒவ்வொரு வருடமும் 10 மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது. இந்த இயற்கை பொருட்களோடு, இவரால் நிலைத்த பயிர்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இது, இரசாயன சாகுபடி தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தியாகும் பொருளைக்காட்டிலும், இயற்கையாகவே நன்றாக இருக்கிறது. இவர் 17 வேப்ப மரங்களிலிருந்து விதைகளை சேகாித்து, 200 கிலோ வேப்பம் புண்ணாக்கை தயாரிக்கிறார்.மேலும் வேப்ப இலைகளை பயன்படுத்தி மண்புழுஉரத்தை தயாரிக்கிறார்.
திரு.பிசேரோட்டி நிலைத்த வேளாண்மையை உள்ளூரில் கிடைக்கும் இயற்கை ஆதாரங்களோடு, மக்குஉரம், மண்புழுஉரம் மற்றும் உள்ளூர் விதைபொருட்களை கொண்டு செயல்படுத்தினார். குறைந்த மழை பெய்யும் காலத்திலும், இந்த முறையில் இயற்கை சாகுபடி செய்வதால், அவருடைய நிலத்தில் பயிர் மகசூல் அதிகாிக்கிறது, மேலும் சமையலறை மதிப்பு மற்றும் இறுதி பொருட்களை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியும். இந்த முறைகளின் மூலம் நிலைத்த வேளாண்மையை மேம்படுத்தி சிறந்த பயனை பெறமுடியும் என நம்புகிறார். எதிர்பாராத சூழ்நிலை மற்றும் மானாவாரி நிலங்களிலும், வேளாண்மையிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கிறது.

கே.வி. பாட்டில் மற்றும் ஐ.எஸ். ராவ்


K V Patil
Ph. D. Scholar

I S Rao
Professor and University Head,
Extension Education Institute (EEI),
PJTSAU, Hyderabad, Telangana, India.
This is an edited version of the original published in Dr. Muttanna, Dr.Lakshmi Murthy, Dr.Saravanan Raj
(eds.), Inspiring Stories from Innovative Farmers, 2018, National Institute of Agricultural Extension Management
(MANAGE), Rajendranagar, Hyderabad- 500030, Telangana State, India.

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2019, வால்யூம் 21, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...