சிறிய பண்ணை இலாபம் ஈட்டக்கூடியதாக இருக்கும்


ஒரு ஹெக்டேர் நிலத்திலிருந்து, ரூபாய் பத்து இலட்சம் ஈட்ட முடியும். சிறிய பண்ணை நிலத்தில் இலாபம் இருக்காது என்ற, நன்கு பரவியுள்ள கருத்திற்கு எதிராகவும், நம்பும் படியாகவும் இல்லை. இந்தக் கருத்தை, உண்மையாக திரு. ரமேஷ் சந்தர் தாகர் அவர்கள் மாற்றிக் காட்டியுள்ளார். ஹாியானா, சோனிபத் மாவட்டம், அக்பர்பூர் பரோட்டா கிராமத்தில் உள்ள இவரது பண்ணையை பார்வையிடுவது நமக்கு ஒருவழித் திறவுகோலாக அமைகிறது. இந்தப் பண்ணை நிலம் ஏதோ ஒரு வேளாண் விஞ்ஞானியின் ஆய்வுக்கூடம்போல் காட்சியளிக்கிறது. ‘நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு சாதாரண விவசாயி, சிறிய நிலப்பரப்பு, வேளாண்மைக்கு உகந்ததல்ல என அரசு கூறுவதை கேட்டுள்ளேன். அது என்னை சிந்திக்கவைத்தது. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், என்னுடைய விவசாய நிலத்திலிருந்து ஒரு ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கினேன். இன்று இந்த நிலத்தில், வருடத்திற்கு குறைந்தபட்ச வருமானமாக ரூபாய் பத்து இலட்சம் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக கூறுவேன்” என்று தாகர் கூறுகிறார்.

தொடர்ச்சியாக திரு.தாகர், ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் என்றால் என்ன என்பதை விளக்க துவங்கினார். இந்த விவசாயம் வெறும் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது என்று அர்த்தம் கிடையாது. இது பல்வேறு இதர தொழில்நுட்பங்களான தேனீ வளர்த்தல், கால்நடை வளர்ப்பு, சாண எரிவாயு உற்பத்தி, தண்ணீர் அறுவடை மற்றும் மக்கு உரம் தயாரித்தல் ஆகியவையும் அடங்கும். இந்த அனைத்து தொழில்நுட்பங்களை நல்ல முறையில் ஒருங்கிணைப்பதால், பொருளாதார மற்றும் உயிர்ச்சூழல் ரீதியாகவும், இயற்கை விவசாயத்தை உறுதிபடுத்தலாம் “ என மேலும் கூறுகிறார்.
இன்று அவருடைய சொந்த மாநிலத்தில் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் குறித்த கருத்தை பரப்புவதில் பாடுபடுகிறார். மற்ற விவசாயிகளின் உதவியோடு, மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஹாியானா விவசாய நலனுக்கான அமைப்பு மற்றும் கிளைகளை அமைத்துள்ளார். ஐந்தாயிரம் விவசாயிகளுக்கு நிகராக இந்த அமைப்பில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களாக சேர்ந்து, இந்த வார்த்தையை வேகமாக பரப்பி வருகின்றனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தற்போது இயற்கை விவசாய அமைப்புக் குழுக்களை பிரதிபலிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
1971 ஆம் ஆண்டு, 1.6 ஹெட்டர் நிலத்தில் மட்டுமே, செய்து பார்த்து கற்றல் முறையில் சாகுபடியை துவக்கினார். தற்போது அவர் 44 ஹெக்டேர் நிலத்தை சொந்தமாக்கியுள்ளார். அனைத்து நிலங்களும் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தின்கீழ் முழுமையாக மாற்றினார்.  சந்தைபடுத்துவதற்கான தேவை, இயற்கை ஆதாரங்களை கிடைக்கச்செய்தல் மற்றும் விளைபொருட்களின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய மூன்று காரணிகளை தௌிவாக புரிந்து கொண்டதால், அவரின் வெற்றிக்கு உதவியது. பெரும்பாலான இயற்கை விவசாயிகள், அவர்களுடைய விளைபொருட்களை சந்தைபடுத்துவது மிககடினமாக இருக்கும் ,ஆனால் தாகர் அவர்களுக்கு அந்த நிலையில்லை. புதிய பயிர் விதைக்கும் முன்பு, முதலில் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து, அதன் தேவையை புரிந்து கொள்வேன். அது 60 சதவிகிதம் வருமானம் பெறும் நிலையில், 40 சதவிகித கஷ்டத்தை சமாளிக்க முடியும் என்ற நிலையில் மட்டும் நான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறுகிறார். பெரும்பாலான சமயங்களில் இது நன்மையாக முடிந்திருக்கிறது.
பெரும்பாலும் அனைத்து பருவக்காலக் காய்கறி, பழங்கள், நெல், கோதுமை, காளான் மற்றும் மலர்கள் தாகர் பண்ணையில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. பன்னாட்டு காய்கறிகள் மற்றும் பழங்களான லெட்டூஸ், பேபிகான் மற்றும் ஸ்ட்ராபர்ரி போன்ற பயிர்களையும் ஏற்றுமதிக்காக வளர்க்கத் துவங்கினார். இந்த விவசாயி ஆராய்ச்சிக்காக ஒரு ஹெக்டர் நிலத்தை ஒதுக்கி வைத்தார் (தாகருடைய ஆராய்ச்சி கூடம்).  இந்த நிலம் மூலம், இயற்கை வேளாண்மையின் இலாபம் குறித்து சந்தேகிப்பவர்களுக்கு, அவர்களது எண்ணம் தவறு என்பதை நான் நிரூபிக்க வேண்டும். கொஞ்சம் உழைப்பும், இயற்கை பற்றிய புரிதலோடு எந்த விவசாயியும் குறைந்தபட்சம் வருடம் ரூபாய் 10 இலட்சம் ஈட்டலாம். ஏன் வேலையைத் தேடி அனைவரும் ஓடுகின்றனர் என்று எனக்கு புரியவில்லை என கூறுகிறார்.
தாகர் ஆராய்ச்சி கூடம், தாகாின் ஆய்வுக் கூடத்தை நாம் பார்க்கும்போது, மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு பக்கம் மக்குஉரத் தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது, மற்றொரு பக்கம் மலர்கள் வளர்க்கப்படுகிறது, பண்ணைக் குட்டையுடன் மீன்கள் மற்றும் சாண எரிவாயு கலன் ஆகியவை காணமுடிகிறது. இந்த பண்ணையிலுள்ள இந்த காரணிகள் அனைத்தும் பல்வேறு வேளாண் சுழற்சி மூலம் ஒன்றிணைக்கப்படுகிறது. மேலும் ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்திற்கு ரூபாய் 13-14 இலட்சம் கிடைக்கிறது (பார்க்க அட்டவணை : வேளாண் தங்கம் ) மேலும் பண்ணையில் சூரிய சக்தியை பயன்படுத்தி விலைமதிக்க முடியாத ஆற்றலை சேமிக்கிறது.
தாகாின் பண்ணையில் பின்பற்றப்படும் மண்புழுஉரத் தயாரிப்பு சுழற்சியை நாம் காணலாம். கிட்டத்தட்ட அனைத்து இந்திய விவசாயிகளும் நெல் பயிர்க் கழிவுகளை எரித்து விடுகின்றனர். உண்மையாக, மண்புழுஉரம் தயாரிப்பதற்கு இது சிறந்த இடுபொருளாக கருதப்படுகிறது (மண் புழு பயன்படுத்தி மக்குஉரம் தயாரித்தல்). இதனைப் பயன்படுத்துவது வருடத்திற்கு 300 டன் மண்புழுஉரம் நான் உற்பத்தி செய்கிறேன் என்கிறார் தாகர். இதில் ஒரு பகுதி வயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, மீதமுள்ள உரத்தை ஒரு கிலோ ரூபாய் 3 க்கு விற்கப்படுகிறது என்றும் கூறுகிறார்.
மண்ணிற்கு சிறந்த சத்தை அளிக்கும் மண்புழுஉரம், மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள உதவுவது மட்டுமல்லாமல் தண்ணீர் தேவை 25 சதவிகிதம் குறைகிறது என்கிறார் தாகர். இயற்கை விவசாயத்தை பின்பற்றுவதாக உறுதி கூறும் விவசாயிகளுக்கு 2 கிலோ மண்புழுக்கள் இலவசமாக வழங்குகிறார். இவர் வைக்கோலை காளான் வளர்ப்பதற்கும் பயன்படுத்துகிறார், இதன் மூலம் வருடத்திற்கு ரூபாய் 3 இலட்சம் பெறுகிறார். மண்புழுஉரத்தை தவிர, தாகர் சாதாரண மக்குஉரம் உற்பத்தியும் செய்கிறார். மொத்த மக்குஉர உற்பத்தி வருடத்திற்கு 600டன் தனது பண்ணையிலிருந்து கிடைக்கிறது. தாகர் இந்த வருடத்திற்குள் மக்கு உர அளவை 1000 டன்னாக அதிகப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.
பண்ணையில் மற்றொரு வேளாண் சுழற்சி, கால்நடை, சாண எரிவாயு மற்றும் மக்குஉரம் ஆகியவை அடங்கும். தாகாின் பண்ணையில் 50 எருமைகள் இருக்கின்றன. இதன் கழிவுகள் 85 க்யூபிக் மீட்டர் அளவுள்ள சாண எரிவாயு கலனில் பயன்படுத்தப்படுகிறது. இந்த கலன் அமைப்பதற்கு ரூ.1 இலட்சம் ஆனது. இதனை அவருடைய தனிப்பட்ட சமையலறையில் பயன்படுத்தினார். மேலும் தீவனம் வெட்டும் கருவியை இயக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கலனிலிருந்து கிடைக்கும் கழிவு மக்குஉர குழியில் போடப்படுகிறது.
தாகாின் பண்ணைக் குட்டை மேலும் ஒரு சுழற்சியாகும். நிலம் வீணாகிப்போகும் என்ற காரணத்தினால், பெரும்பாலான விவசாயிகள்  பண்ணைக்குட்டை அமைப்பதை தவிர்க்கின்றனர். ‘தண்ணீர் அறுவடை செய்யும் தொழில்நுட்பங்களை பின்பற்றுமாறு நாங்கள் விவசாயிகளிடம் கூறுகிறோம், ஆனால் பொருளாதார ரீதியாக அவர்களிடம் நாங்கள் உறுதிபடுத்த முடியவில்லை. இந்தக் குழப்பம் என்னை சிந்தனையில் ஆழ்த்தியது. உடனடியாக பயன் தரும், தண்ணீர் அறுவடை தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கு முடிவு செய்தேன்” என தாகர் கூறுகிறார். இவருடைய பண்ணைக்குட்டை மழைநீரை சேகாிக்கிறது. இது கால்நடையான, எருமைகளை சுத்தம் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. ‘பண்ணைகுட்டையில் மீன்களை நான் அறிமுகம் செய்தேன், இது எனக்கு வருடம் ரூ.30,000 வருமானம் அளிக்கிறது. ஆகையால், இந்த பண்ணைக் குட்டை நிலத்தடி நீரை அதிகாிப்பதோடு மட்டுமில்லாமல், வருமானமும் அதன் மூலம் ஈட்டலாம்” என இயற்கை விவசாயி கூறுகிறார்.
தாகர் பண்ணையின் மிக முக்கிய காரணி, தேனீ வளர்ப்பது. இது பயிர் மகசூலை 10-30 சதவிகிதம் அதிகாிக்கிறது (இயற்கையாக மகரந்த சேர்க்கை சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிபுரிகிறது). தயாரிக்கப்பட்ட தேனிற்கு சிறந்த தேவையும் இருக்கிறது. தாகர் 150 தேனீ பெட்டிகள் வைத்திருக்கிறார். ஒவ்வொரு பெட்டியும் 35-40 கிலோ தேன் உற்பத்தி செய்கிறது. தேனிலிருந்து அவருடைய மொத்த ஆண்டு வருமானம் ரூ. 4 இலட்சம் ஆகும். நிலமற்ற விவசாயியும் மிக அதிக இலாபம் ஈட்டக்கூடியத் தொழில் தேனீ வளர்ப்பு. ஒரு தேனீ 2-3 கி.மீ பரப்பளவை பொதுவாக கவரும்  என்பதால், அதன்மூலம் ஒவ்வொரு விவசாயியும் பயன் பெறுவார் என தாகர் கூறுகிறார்.
தாகர், சூரிய ஈர்ப்பு தகடுகளையும் ரூ. 4 இலட்சம் செலவில் அமைத்தார். இதில் ரூ.67000 இவர் பங்காக அளித்தார், மீதமுள்ள தொகையை அரசு மானியம் பெற்றார்.  இந்த பண்ணையில், சூரிய சக்தியைக் கொண்டு பம்பை இயக்கச் செய்து நிலத்தடி நீர், பாசனம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அளவுக்கு அதிகமாக உள்ள சக்தியை பேட்டாிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த பண்ணை நிலத்தில் 500 சதுரமீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விலையுயர்ந்த பயிர்களை வளர்த்து, அதன்மூலம் வருடத்திற்கு ரூ.1 இலட்சம் ஈட்டுகிறார்.
வார்த்தையை பரப்புதல்
தற்போது, தாகர் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த பண்ணை என்ற வார்த்தையை பரப்புவதில் மும்மரமாக உள்ளார். ஹாியானா விவசாயிகள் இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஹாியானா கிசான் நலவாழ்வுக் குழு, இயற்கை சாகுபடி குறித்து செய்முறை பயிற்சியளிக்கிறது. மாவட்டக் குழுக்களுக்கு பெரும்பாலான விவசாயிகளால் செல்ல இயலாது என்பதால் கிராம அளவில் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வருடம், பிப்ரவரி மாதம் சோனிபத் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் சுமார் 4000 விவசாயிகள் கூடினர்.
ஆனால் தாகர் அரசு கருவிகள் ஒருங்கிணைந்த இயற்கை சாகுபடியை நோக்கி ஊக்குவிப்பது மிகவும் பொிய சவாலாக ஒப்புக்கொள்கிறார். அரசு பணிகள் எப்பொழுதும் மெதுவாக ஊர்ந்து செல்கிறது என இவர் இயல்பாக கூறுகிறார்.
தாகர், அரசு உதவிக்காக காத்திருக்கவில்லை. அவர் இயற்கை சாகுபடியை தனது கடமையாக ஏற்றுக்கொண்டார். நான் என்னுடைய பண்ணையில் பல்வேறு பயிர்களை பாிசோதனை செய்துகொண்டே இருப்பேன். உதாரணமாக, தற்போது சீன தாவரத்தை வளர்த்து வருகிறேன். இந்தத் தாவரம் சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பானது, கொழுப்பு இல்லாதது. இந்த முயற்சி வெற்றிடைந்தால் நான் அதை மற்றவர்களுக்கு பாிந்துரைப்பேன். இந்த தாவரத்தில் மருத்துவ குணம் கொண்டுள்ளதால் இதற்கு பொிய சர்வதேச சந்தை இருக்கிறது என்று இவர் கூறுகிறார். 1987 ஆம் ஆண்டு, சோனிபத்தில் பேபிகான் பயிரை 0.40 ஹெக்டேர் நிலத்தில் அறிமுகப்படுத்தினார், தாகர். இன்று சோனிபத் கிட்டதட்ட 485 ஹெக்டர் நிலத்தில் பேபிகான் பயிரைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
எதிர்கால சவால்கள்
வெற்றியுடன் புதிய சவால்கள் வரும். இரசாயனம் பயன்படுத்தி வளர்க்கப்பட்ட உணவை காட்டிலும் இயற்கை உணவின் விலை அதிகமாக உள்ளது. தாகர் இந்த பன்மயத்தை பயனுள்ளதாக மாற்ற முயற்சித்தார். நல்ல சந்தைபடுத்தும் அணுகுமுறையை பயன்படுத்தி அவர் இயற்கை உணவை அதிகவிலைக்கு விற்க முயற்சித்தார். அவர் மேலும் இயற்கை உணவை சந்தைப்படுத்தும் தொண்டு நிறுவனங்களோடு நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். இரண்டு மடங்கு உறுதிசெய்ய, பல்வேறு இயற்கை உணவுகளின் தேவையை, அவர் தானே சந்தை நிலவரத்தை ஆராய்ச்சி செய்தார்.
தாகர் போன்ற இயற்கை விவசாயிகளுக்கு மற்றொரு பிரச்சனை என்னவென்றால், இயற்கை உணவுகளுக்கு சான்றிதழ் பெற, இந்தியாவில் கட்டுபடுத்தப்பட்ட வரைமுறைகள் எதுவுமில்லை என்பதுதான். ஒரு சான்றிதழ் அனைத்து நாடுகளுக்கும் ஒத்துபோவதில்லை. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுபொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பு, சர்வதேச சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முக்கிய முகமை. இதன் கீழ், மொத்தம் 10 நிறுவனங்கள் பதிவு செய்திருக்கின்றனர். இவற்றில் இந்திய நிறுவனம் ஒன்றே ஒன்று ஆகும். இந்த நிறுவனத்தை அலுவலக ரீதியாக பார்வை இடுவதற்கு ரூ.15000 செலவு ஆகும். எந்த இந்திய விவசாயி இவ்வளவு பணத்தை வைத்திருக்கின்றனர்? என்று தாகர் கேட்கிறார்.
ஹாியானா கிசான் நலவாழ்வு அமைப்பு அரசுடன் தீர்வுகாண முயற்சித்தனர் ஆனால் வெற்றியடையவில்லை. இறுதியாக, கர்கயானை அடிப்படையாக கொண்ட சான்றிதழ் அளிக்கும் தனியார் நிறுவனத்தை அணுகினர். இந்த நிறுவனம் ஒரு மாதத்திற்குள் தனது பணியை துவங்கவுள்ளது. குழுவானது, குழு சான்றிதழ் திட்டத்தை பின்பற்றுகின்றனர். இதில் செல்வசெழிப்பான விவசாயிகள் ஏழை விவசாயிகளுக்கு சான்றிதழ் செய்முறையில் மானியம் வழங்க இயலும். இந்திய அரசு,செயல்முறையை வழிநடத்தி, தாகர் போன்ற விவசாயிகளுக்கு உதவிபுரிவதற்கு இதுவே சாியான தருணம்.
பண்ணையின் தங்கம் 
வருமானஆதாரம்வருட வருமானம் (ரூ இலட்சத்தில்)
மண்புழுஉரம்5
கால்நடை1
காளான்3
தேன்4
மீன் வளர்ப்பு0.3
மொத்தம்13.3
ஆதாரம்: ரமேஷ் சந்தர் தாகர் 2004, அக்பர்பூர் பரேட்டா கிராமம், சோனிபத், ஹாியானா,மார்ச் 30, நேரடி கலந்துரையாடல்
நிதி ஜம்வால்

Source: Originally published at https://
www.downtoearth.org.in/coverage/small-farms-canbeprofitable-11182

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2019, வால்யூம் 21, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...