வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு, பகுதியை மையமாகவும், சமூக முக்கியத்துவமும் கொண்டுள்ளதை போன்ற சில பாதகங்கள் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பழங்குடியின சமூகங்கள் மத்தியில் ஆய்வு செய்தனர். அதன் மூலம் பெண் விவசாயிகளை மையப்படுத்தி திறன் வளர்ப்பு பயிற்சியளிப்பது சிறந்த அணுகுமுறை மதிப்புமிக்கதாக கருதப்பட்டது. இதன் பயிற்சியினால் நிலைத்த சாகுபடி தொழில்நுட்பங்கள் சிறப்பாக பின்பற்றுவர். அதனால் வாழ்வாதாரம் உயர்தல், குடும்ப ஊட்டச்சத்து மற்றும் பழங்குடியின வீட்டு உரிமையாளர்களின் திறன் உயர்தல் போன்ற பல்வேறு பயன்களை அடையலாம்.
பொதுவாக விவசாய சம்மந்தமான சவால்களை உணர்ந்து, அதனை முக்கிய பாதகமாக ஏற்று, இயற்கை வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்களை பரவலாக்கலாம். அறிவு அல்லது புதிய யுக்தியின் செயல்முறையின் பாதகங்கள், எப்போதாவதே உணரப்பட்டு சவாலாக ஏற்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை அதிக வேலை இருக்கும் முறையாக எப்பொழுதுமே கருதப்படுகிறது. விவசாயிகள் அதனை தேர்வு செய்ய மாட்டார்கள் என்று உணரப்பட்டது.
சூழ்நிலை விஷயங்கள்
தமிழ் நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயக் குழு மற்றும் கர்நாடகா, மைசூரு மாவட்டத்தை சேர்ந்த குழுவிடமும் கலந்துரையாடியபோது எந்த விஷயமும் காணமுடியவில்லை. விவசாயி, நல்ல தரமான எருவை தேடி, மாட்டுவண்டியில் பொருளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் கூலியாட்களை வாடகைக்கு கொண்டு வந்து அதனை நெல் வயலில் இடுவதைவிட, ஒரு மூட்டை யூரியாவை வாங்கி, அதை நிலத்தில் இடுதல் வசதியான தேர்வாக இருக்கிறது. சக விவசாயிகள் ஊக்கமில்லாமல் இருப்பதால், முன்னோடி விவசாயிகளும், இயற்கை விவசாயத்தை பரவலாக்கம் செய்வது மிகப்பொிய சவாலாக கருதுகின்றனர்.
ஒரு வெளிப்படையான எதிர்நிலையில், ஒடிசாவில் கந்தம்மாள் மற்றும் கொராபட் மாவட்டங்களில் உள்ள எட்டு கிராமங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில், விவசாயிகள் இயற்கை விவசாயத்தை அதிக வேலை நிறைந்த தொழில்நுட்பமாக பார்ப்பதில்லை அதனால் இந்தத் தொழில்நுட்பம் ஒரு தடையாக இல்லை என்று புலப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தானிய மற்றும் சிறுதானிய விதைகளை தூவி விதைக்கும் பழக்கத்தை பின்பற்றிய விவசாயிகள், தற்போது அதனை நாற்றுகளாக நடவுசெய்ய துவங்கியுள்ளனர். நடவு முறையை கடைப்பிடிக்கும்போது கூலியாட்கள் அதிகமாக தேவைப்படுவதை ஒப்புக்கொள்ளும் அதேநேரத்தில், அதிக மகசூல் மற்றும் வருமானம் அவர்களுக்கு கண்கூடாக கிடைப்பதால், இரண்டாம் பட்சயோசனையை அவர்கள் வைத்துகொள்ளவில்லை. ஒடிசா, கந்தம்மாள் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆண் விவசாயி ‘விவசாயம் எங்களது வாழ்வாதாரம், அதிகவேலை செய்யும் தொழிலாக நாங்கள் எப்படி பார்ப்போம்?” அதேபோல் கிராமங்களில் அனைவரும் இதே கருத்தையே வெளிப்படுத்தினர. எனினும் மற்ற இடங்களிலிருந்து இது வேறுபடவில்லை, அதாவது பெரும்பாலான தொழில்நுட்பங்களை குறிப்பாக அதிகவேலை அடங்கிய நுட்பங்களை பெண்களே செய்கின்றனர். கந்தம்மாள் மற்றும் கொராபட்டின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகள், குறிப்பாக பெண்கள், சமூக புரிதல் பெற்றிருக்கின்றனர். அதனால் ஒவ்வொருவரும், விதைப்பு மற்றும் அறுவடையின்போது, கூலியில்லாமல் சக விவசாயிகளின் வயல்களில் பணிபுரிகின்றனர். நிலத்தின் பரப்பளவு குறைந்த வித்தியாசத்தில் இருந்தாலும், சக விவசாயியின் பண்ணையில் கூடுதலாக சில மணிநேரங்கள் பணிபுரிவதில் தயக்கம் காட்டவில்லை. இந்த சமூக கூலியாட்கள் மேம்பாடு, புதிய தொழில்நுட்பங்களான நடவு மற்றும் வரிசை விதைப்பை கற்று, செயல்படுத்துவது சுலபமாகவும் இருக்கிறது.
ஊக்குவிக்கும் ரீதியில் காணக்கூடிய பயன்கள்
கந்தம்மாள் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடியதன் மூலம், கிட்டதட்ட அனைத்து விவசாயிகளும் நிலைத்த சாகுபடியை பின்பற்றி, இடுபொருளுக்கோ அல்லது பண்ணை விளைபொருளை விற்பதற்கோ சந்தையோடு எந்த இணைப்பும் பெற்றிருக்கவில்லை. எனினும், நான்கில் மூன்று பங்கு விவசாயிகள், பயிர்பட்டம் இல்லாதபோது, தங்கள் வீட்டுச் செலவுகளை சந்திக்க அருகில் உள்ள டவுன் அல்லது இதர மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து, கூலித்தொழிலாளியாக பணி செய்கின்றனர். நடவு தொழில்நுட்பம் இந்த விவசாயிகளுக்கு புதிது. இவர்களில் 70 சதவிகித விவசாயிகள், ஒட்டுமொத்த சாகுபடி செய்முறையில் நடவு செய்வது மிகவும் கடினமான பணியாக கருத்து தொிவித்துள்ளனர். எனினும், மகசூல் மற்றும் அதிக விளைபொருள் கிடைப்பதன் மூலம் பெற்ற வருமானம், நடவு தொழில்நுட்பத்தை 100 சதவிகிதம் பின்பற்றி, பாிந்துரைத்த நிறுவனம் சென்ற பின்னரும் தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பத்தை செய்து வருகின்றனர்.
கொராபட் மாவட்டத்தில் பல பெண் குழுக்கள், சில இயற்கை தொழில்நுட்பங்களை பின்பற்றியதால் அதிக மகசூல் அறுவடை செய்வதற்கு உதவியது. மேலும் தங்கள் பண்ணையில் சுய பயன்பாட்டிற்காக பயிர் உற்பத்தியின் எண்ணிக்கையை அதிகாித்துள்ளனர். இது சிறந்த முறையில் ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், மொத்த குடும்பத்திற்கு உணவு உட்கொள்ளவும், மேலும் பணவருமானமும் அதிகாித்தது.
அதேபோல், காலாஹண்டி மாவட்டத்தில் பல நூறு விவசாயக் குழுக்கள், பி.டி. அல்லாத பருத்தி பயிரை, விதைகள் குறைந்து நிலையிலும் தொடர்ந்தனர். பாரம்பாிய பருத்தி இரகங்களின் விதைகளை முன்கூட்டியே வாங்கியோ அல்லது சேகாித்து பாதுகாத்து மற்றும் மீண்டும் பயன்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுத்தனர்.
திறன் வளர்ப்பு பயிற்சி தேவை
பத்து ஆண்டுகளாக, சராசாி மகசூல் குறித்து ஒடிசாவில் ஆய்வு செய்ததில், தேசிய சராசாியைவிட முக்கியப் பயிர்களில் குறைந்த அளவே மகசூல் கிடைத்தது. மேலும், இரண்டு கி.மீ. இடைவெளியில் உள்ள தும்டிபந்த் வட்டத்தில், கச்சேர்கன் மற்றும் சொடகியா போன்ற கிராமங்களில் பின்பற்றும் சாகுபடி தொழில்நுட்பங்களில், மகசூல் பண்ணை வருமானத்தில் வெளிப்படையான வித்தியாசங்கள் நம்மால் காண முடிகிறது. இரண்டு கிராமங்களிலும், ஒரேமாதிரியான சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்விடமாக பெற்றிருந்தாலும்,கச்சேர்கன் விவசாயிகள் பல்வேறு இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் பண்ணை விளைபொருளை விற்கப்படும் சந்தை குறித்தும் சிறந்து விளங்குகின்றனர்.
சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த அறிவு, அவர்கள் வளர்ச்சிக்கு தடையாகும் முக்கியமான காரணி. சோடகியா கிராமத்தில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த இரண்டு விவசாயிகளிடம் உரையாடும்போது, 8-10 பெண் விவசாயிகளை கொண்ட குழு, எங்களுடன் வந்த சமூக ஆதார பணியாளராக சூழ்ந்து கொண்டு, காளான் வளர்ப்பிற்கு தேவையான வைக்கோல் படுக்கையை தயாரிப்பது குறித்து செய்து காண்பிக்குமாறு அவரிடம் வேண்டினர். இன்னும் சிலர் கையில் வைக்கோலை பற்றிக்கொண்டு இந்தக் குழுவோடு கலந்துகொண்டனர். சுமார் அரை மணிநேரம் ஒரு நல்ல செயல்முறை விளக்க பயிற்சியாக மாறியது. இது அவர்கள் கற்றுக்கொள்ளும் நிலையின் தீவிரத்தை காட்டுகிறது.
பல்வேறு கிராமங்களில் ஆய்வு செய்ததன் மூலம், செயல்பாட்டை கிட்டதட்ட 85 சதவிகிதம் ,பல்வேறு வளர்ச்சி நிறுவனங்கள் செய்துகாட்டிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் பின்பற்றுவதை காண முடிகிறது. எனினும், இயற்கை மேலாண்மை தொழில்நுட்பங்களில் எந்த வகையாக இருந்தாலும், எந்த பயிற்சி அல்லது செய்முறை விளக்கங்கள் நடத்தினாலும், அதனுடைய பயன் 40 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது. தேசிய மாதிரி ஆய்வில் வெளிப்படுவது என்னவென்றால், வெறும் 40 சதவிகித விவசாயிகள் ,பொது பயன்பாட்டை 10 சதவிகிதம் மட்டுமே கொண்டு, எந்த ஒரு ஆதார அமைப்போடும் கலந்துரையாடுகின்றனர். திறன் வளர்ப்பு பயிற்சி மூலமாக, பின்பற்றும் விகிதம் மற்றும் மதிப்பு கூட்டுதல் ஆகியவை அதிக நம்பிக்கை அளித்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்துவதோடு, மற்ற மாநிலங்களை காட்டிலும் ஒடிசாவில் மகசூல் இடைவெளி குறைந்து வருகிறது. மிக மோசமான நிலையில் இருந்த பழங்குடியின சமூகங்கள், இப்பொழுது, இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்களுக்கான முறையான திறன் வளர்ப்பு பயிற்சியோடு சிறப்பாக காணப்படுகிறது.
பெண் விவசாயிகள் முக்கிய அங்கமாக திகழ்கின்றனர்
குறைந்த விரிவாக்க செயல்பாடுகளுக்குள் ,பெரும்பாலான பெண் விவசாயிகள், மோசமான சமூக-கலாச்சார கட்டுபாடுகளினால், ஆண் விவசாயிகளுக்கு உதவி மட்டுமே செய்துவந்தனர். எனினும் கடந்த நான்கு வருடங்களாக, பெண் விவசாயிகள் அதிகமாக பங்கேற்கின்றனர். மையப்படுத்திய குழு கலந்துரையாடலின்போது, சிலவருடங்களுக்கு முன் வெளியாட்கள் யாராவது இருந்தால் வீட்டிலிருந்துகூட வெளியே வரமாட்டோம் என்று திடீரென நின்று சத்தமாக ஒருவர் கூறினார். ஆனால் இப்பொழுது, மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு சென்று பயிற்சியில் கலந்துகொள்கின்றனர், சாகுபடி மேலாண்மை முடிவுகளை கூறுகின்றனர். ஆகையால், பயிற்சி திட்டங்கள் பெண்களை நடமாட செய்து, இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் அவர்களின் சுய நம்பிக்கை உயர்ந்துள்ளது.
பெண் விவசாயிகள், வீட்டிற்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உண்ணுதல் ஆகியவற்றிற்கு, ஆண் விவசாயிகளைக் காட்டிலும் அதிக முக்கியத்துவத்தை அளிக்கின்றனர். அதனால், கந்தம்மாள் மற்றும் கொராபட் போன்ற மாவட்டங்களில் பெண் விவசாயிகளை மையமாக வைத்து திறன் வளர்ப்பு செயல்பாடுகளை ஏற்பாடு செய்வது நல்ல அணுகுமுறையாக கருதுகின்றனர். இது பல்வேறு பயன்களான, வாழ்வாதாரம் உயர்தல், நிலைத்த சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்றுதல் மற்றும் பெண் விவசாயிகளின் திறன் உயர்தல் ஆகியவை பெற முடிகிறது.
சிவமுத்துபிரகாஷ் மற்றும் ஷெஷாங்க் டியோரா
Siva Muthuprakash and Shashank Deora Vikas Anvesh Foundation, 6th Floor, Galore Tech Park, LMD Chowk, Bavdhan, Pune 411021 www.vikasanvesh.in E-mail: sivam@vikasanvesh.in
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2019, வால்யூம் 21, இதழ் 3



