சமயங்களில் நமது எண்ணங்கள் மற்றும் வெற்றிகள் அளவில்லாமல் இருக்கும், ஆனால் விவசாயிகள் மற்றும் விதைகள் வரையறைக்கு உட்படுத்தி, உலக வாழ்க்கை அளவில்லாமல் பூக்கிறது-அதாவது வரையறைக்கு உட்படுத்தியும் மிகுதியாக பூக்கிறது. நாம் எதிர்ப்பார்க்கும் அனைத்து சொத்துக்களும் பரவலாக இந்த உடம்பில் முடங்கிக் கிடக்கின்றன – நம் உடம்பு மற்றும் பூமியின் உடம்பு. விவசாயிகள், இந்த மண்ணில் என்ன உருவாக்குகின்றனரோ அல்லது கற்று வைத்திருக்கின்றனரோ, அது உலக அக்கறை, ஈர்ப்பு, எதிர்ப்பு, வாழ்வு, பாதுகாவல், ஒற்றுமை மற்றும் தூய்மை போன்றவைகளை கூறலாம்.
மனித தொழில்நுட்பங்களால் இன்று சுற்றுச்சூழல் மற்றும் சமூக அழிவிற்கு தீர்வுகாணுதல்,வேளாண்மை மற்றும் இதர பூமி பாதுகாப்பு தொழில்நுட்பங்களோடு இணைந்து மறுமுறை உருவாக்குவது தேவையாகும். உணவு உற்பத்தியில் அறிவியல் பயன்பாட்டின் தொழில்நுட்ப செயல்பாடு என்று வேளாண்மை கூறமுடியாது. ஆனால் இது ஆழ்ந்த வேர் நிறைந்துள்ள சமூக-கலாச்சார தொழில்நுட்பத்தில், மக்கள் ஈடுபடுகின்றனர். வேளாண்மை என்பது சாகுபடி செய்தல் மற்றும் சாகுபடி என்பது பொறுப்பாக வைத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் வளர்த்தல். இது மண், விதை, வெப்பம், காற்று, அழியும் தன்மை மற்றும் பூச்சிகள், களைகள் மற்றும் தாக்குதல்கள். இது கண்காணிப்பு மற்றும் கவனமாக இருத்தல், மேலும் இது மக்கள் மற்றும் உறவுகள் சார்ந்தது. தொழில்துறை வேளாண்மை இதற்கு எதிராகும்.
இந்த அடிப்படையில், நாங்கள், ஒரு சிறிய கற்பனை மணங் கொண்ட குழுவாக, விவசாயிகளை ஒன்றிணைத்து, எப்.டி.எ.கே என்ற அமைப்பை உருவாக்கி அவர்களுடன் நேரத்தை செலவழிக்க முடிவு செய்தோம். மேலும் வேளாண் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு, பரவலாக இன்றைய உயிர்ச்சூழல் மற்றும் சமூக அடிப்படையிலான சூழ்நிலையை, கலையை பாிமாறிக் கொள்ளும் திட்டத்தில் பணிசெய்ய துவங்கினர். இந்தத் தலைப்பு கடந்த மூன்று வருடங்களாக, அவர்களுடன் பயணித்தபோது தடுமாறிய சில நிகழ்வுகளை தாங்கியிருக்கிறது. இது குறிப்பாக, பலதரப்பட்ட நலவிரும்பிகள், காட்சிக்கலைஞரான திரு.டி.எம்.அஜீஸ், கவிஞர். திரு.வி.டி.ஜெயதேவன், நாடகக் கலைஞர் திரு. ஷவ்தாஸ் மற்றும் கவிஞர் திரு.எம்.பி. பிரதீஷ் ஆகியோரைத் தாண்டி, என்னுடன் நடந்த பாிசோதனையாகும்.
மாறும் மதிப்புகள்
இந்த நாட்டில், பெரும்பாலான மக்கள் வேளாண் சாகுபடி செய்வது அல்லது அவர்களுடன் ஏதாவதொரு வகையில் இணைப்பது அல்லது விவசாயிகளுடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்த நிலை, நீண்ட நாட்களுக்கு முன்பு நடைபெற்றதல்ல. இன்று இந்த இணைப்பு தொலைந்துவிட்டது. நமது கலாச்சாரம், உயிர்ச்சூழல், உட்கொள்ளுதல், உணவினை புரிந்துகொள்ளுதல் மற்றும் வீணாதல் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் முக்கியமானவை. மேலும் பொதுமக்கள் மற்றும் வேளாண்மைக்கும் மத்தியில் இந்த இணைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
வேளாண்மையோடு மக்கள் இணையும்போது, நமது கலாச்சார சம்பரதாயங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இது உணவை நிலையாக புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. இது உணவோடு ஆழ்ந்த இணைப்பில் உள்ளது. நீண்ட நாட்களாக, நம் வீடுகளில், பூமியிலிருந்து உற்பத்தியாகும் ஒவ்வொரு தானியத்தையும் மதிக்கக் குழந்தைகளுக்கு கற்றுகொடுத்தனர். ஒரு தானியத்தின் அரிசி தரையில் விழும்போது, நாம் அதனை கையால் எடுப்போம். இதனை துடைப்பத்தைக் கொண்டுகூட்டுவது, உணவிற்கும், பூமிக்கும் மாியாதை குறைவான செயலாகக் கருதப்பட்டது. நம்மிடம் உணவு நிறைய இருந்தாலும், இதனையே நாம் பின்பற்றி வருகிறோம். நம் கையில் பிடித்திருக்கும் உணவு, நாம் கொடுக்கும் பணத்திற்கு சமமாக கிடைப்பது என்று கருதப்படுவதில்லை. ஆனால், பூமித்தாயின் பாிசாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சில சூழ்நிலைகளில் ஒவ்வொரு தானியமும் விதைகளாக இருக்கிறது. மேலும் உணவாக நமது வாழ்க்கையை நிலைக்க செய்கிறது. இன்று,உணவை வீணாக்குவது, மனநிலை சாியில்லாத நிலைக்கு எடுத்துச்செல்லும்.
தேசிய கனவு வளர்ச்சி திட்டங்கள், தங்களது நிலத்தோடு அழிந்தபோதிலும், இன்னமும் சிலர், வெட்டிய மரத்திலிருந்து புதிய கிளைகள் முளைப்பதுபோல், தொடர்ச்சியாக தங்களது பணியை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களது பண்ணை உயிர்பெறும் முயற்சியை செய்து வருகின்றனர். இதனை தனக்கும், விதைக்கும் மத்தியில் எடுத்துகொண்ட உறுதிமொழியாக நினைத்து, இந்தக் கலாச்சார கடமையை ஆற்றி வருகின்றனர். நாட்டின் சட்டம்,சந்தை மற்றும் பொருளாதாரத்தை பாதுகாத்து, ஊக்கப்படுத்தும்போது, விவசாயிகள் சட்டம் கௌரவிப்பது, வாழ்க்கை மற்றும் ஆரோக்கிய சட்டத்தையே. விவசாயிகளின் சட்டம், வாழ்வின் பரஸ்பர இணைப்பு மற்றும் பரஸ்பர சார்புத்தன்மை மற்றும் அதன் பொறுப்பும், வேண்டி கேட்கப்படும் கௌரவமாக கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று நமது நாட்டில் பலவகையான இலாபம் பெற்றுவருவது, மீன் பிடிப்பதற்கு குட்டையை விஷமாக்குவதற்கு சமம். இது உயிர்ச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்து அக்கரையில்லாமல் குறுகிய காலத்தில் இலாபம் ஈட்டுவதேயாகும். ஒரு நல்ல விவசாயி மற்ற வகை உறவு மற்றும் இணைப்பில் இருக்கிறார். அவர்கள் வாழும் மண்ணின் பாதுகாவலர்களாகவும் இருக்கின்றனர்.இவர்கள் மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாத்தால் மட்டுமே, அவர்களின் பிள்ளைகள் அந்த மண்ணிலேயே தொடர்ந்து வாழலாம். அவர்களுடைய குடும்பம், தலைமுறை மற்றும் சமூகத்தை தாண்டி, அவர்களுடைய நம்பிக்கையின் நியாயம், பொறுப்புத்தன்மை, அவர்கள் ஆழ்தன்மையை சேமித்து வைக்கின்றனர்.
ஆனால் விவசாயிகள் இன்று தங்களுடைய அடிப்படை தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்வித் தேவைகள் போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக அதிக வருமானம் ஈட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்கள், குழந்தைகளின் கல்விக்காக அதிக கடன்கள் எடுப்பது, வேளாண்மையை விடுத்து, உலகத்திற்கு தகுந்தாற்போல் அவர்களை பொறுத்திக்கொள்ள கற்றுக்கொண்டனர். சேமிப்பிற்கான சட்டம் மற்றும் நிலையான வாழ்விற்கான வழியை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காத நாடு பற்றி என்ன உரையாட வேண்டும். நாம் அவர்கள் வாழ்வதற்கு என்ன செய்யக் கூடாது என்பது,வேறு எந்த தேர்வும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது காலத்தின் மிக மோசமான ஒன்றாகும்.
முயற்சிகள், சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான ஆதாரங்களுக்கு வழி வகுக்கிறது. இன்று நமது சுவையில் நாம் கட்டுபாட்டை இழக்கிறோம். சந்தை இன்று என்ன செய்கிறது? நமது சொந்த சுவையை எடுத்து சென்றுவிட்டது. இன்று வரை சுவை என்பது வயல்களில் நாம் என்ன வளர்க்கிறோம் என்பதேயாகும். இன்று சந்தை நமது உற்பத்தி செய்வதை எடுத்து, நமக்கு அவர்களின் சுவையை திரும்ப கொண்டு வருகிறது. உதாரணமாக, பலாபழ பர்கர், ரோல் போன்றவை. நம் சமையலறை வெறும் சமையல் செய்யும் இடமாக இல்லாமல், உணவு மற்றும் விதைகள் பாதுகாப்பதற்கான இடமாகவும் இருக்கிறது. இன்று, நிலத்தில் நாம் செய்யும் வேலை மற்றும் இதன் சுவை, வீட்டிலும், சமையலறையிலும் குறைந்த இடம் பெற்றுள்ளது. நம் நிலத்தில் நாம் செய்வது அந்த சிறிய சந்தை மற்றும் வீட்டில் உள்ள வாழ்க்கை, உலக வாழ்க்கை வெளியில் இருப்பதை பொறுத்தே இது அமையும். இந்த இணைப்பு அதன் கூட்டு வாழ்வுத் தன்மையை இழந்துள்ளது.
மாறிவரும் புரிதல்கள்
இன்று, எழுதப்பட்டவை என்பது அறிவாக கருதப்படுகிறது. விவசாயிகள் பெற்றிருக்கும் அறிவு, புத்தகத்திலோ அல்லது நூலகத்திலோ இருக்காது, ஆனால் அவர்களோடே வாழ்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் அறிவு மற்றும் ஞானத்தின் சரணாலயமாக கருதப்படுகின்றனர். விவசாயிகள் மற்றும் இதர தொழில் முனைவோரின், பங்கு, இலாபங்கள் மற்றும் வீணானவைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தணிக்கை செய்து பார்ப்பது இன்றைய காலக்கட்டத்தில் மதிக்கக்கூடிய ஒன்றாகும். இது நமது வாழ்வின் நிலைத்தத்தன்மை, அதிக உயிர்ச்சூழல் பிரச்சனைகள், ஆற்றலின் சிறந்த பயன்பாடு ஆகியவற்றின் பங்கு மற்றும் இதர பலபொருள்கள் மத்தியில் வீணாண கழிவுகள் போன்றவையும் கண்டிப்பாக உட்படுத்த வேண்டும். ஒருவருக்கு பொருளின் ஒருங்கிணைந்த இயல்புத்தன்மை தொிந்து கொள்ளாவிட்டால், அவர் பணியின் வளர்ச்சியோடு ஈடுபடுத்த முடியாது. இயல்பாகவே, விவசாயிகள் இயற்கையோடு இணைந்துள்ளதால், தொடர்ந்து வாழ்வதற்கான வழி மற்றும் நிலைத்தத்தன்மை ஆகியவை அவர்களின் ஆழ்மனதின் அங்கமாக மாறிவிட்டது.
இன்றைய அறிவு அவர்களின் பரந்த அனுபவத்தின் சுருக்கமே. அறிவு, வாழ்க்கை வாழ்வதற்கு உபயோகப்பட்டால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இது பார்வையற்றவராக மாற்றி வாழ்வின் கொள்கையை அங்கீகாிக்க தவறிவிட்டது. விருப்பத்திற்காக வெற்றிபெற்று, அதிக இலாபம் பெருக்கிகொள்ளும் களைகளைப் போல்,பெரும்பாலான எண்ணங்கள், செயல்கள் மற்றும் வகைகள் அனைத்தும் சுற்றி வைக்கப்பட்டிருப்பதால், இன்று இதனை நாம் சந்தித்து வருகிறோம். நீங்கள் ஒரு விளைபொருளை, சந்தையில் தடை செய்யுங்கள், அது மற்றொரு இடத்தில் வேறொரு உருவத்தில் வெளியிடுவர். இதேமாதிரி, பிரச்சனைக்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு தீர்வும், மற்றொரு பிரச்சனையாக உருவாகிறது, அதற்கு மீண்டும் ஒரு தீர்வை காணுவது அவசியமாகிறது. இந்த வாழ்விற்கான தனித்தன்மையான அணுகுமுறையானது, நாம் அனைவருக்கும் தொிந்ததுபோல், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் மற்றும் உணர்வு மற்றும் எண்ணங்கள் ரீதியிலான பிரச்சனைகள், நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
ஐம்பது வருடங்களுக்குமுன், வீண் என்று கூறும் அளவிற்கு எந்த பொருளும் கிடையாது. இது ஒரு வெளி எண்ணம். அனைத்துப் பொருளும் ஏதாவது ஒன்றை செழிக்க உதவுகிறது. இன்று வீணானபொருட்கள் மாதிரி வேறெந்த பொருளும் சூழ்ந்திருக்கவில்லை. நாம் வீண்பொருட்களால் சூழ்ந்துள்ளோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் , 25940 டன்கள் பிளாஸ்டிக் மட்டும் வீணாகக் கொட்டப்படுகிறது. ஒவ்வொரு பிரச்சனையும் மற்றொரு தொழிலுக்கு வழிகாட்டுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். நாம் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகள் காணுவதற்கு, ஒரு முறை இடம் பெறுகிறது என்றும் நாங்கள் நம்புகிறாம். நாம் அனைத்தையும் இழந்தால் கூட, நம் கனவுகளை முன்னெடுத்து செல்கின்றோம். எவ்வளவு காலத்திற்கு நாம் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட போகிறோம்?
வாழ்க்கையோடு மீண்டும் இணைவதற்கான கற்றல்
நமக்கு, சந்தையில் இயந்திரத்தின் ஒரு அங்கமாக மாறி மற்றும் இலக்குகளை முடிப்பதற்கு ஓடி, நம்மை நாமே தொலைக்கும் செயல்முறையை செய்து வருகிறோம். விவசாயிகள் வாழ்வை வித்தியாசமாக வாழ்ந்து காட்டுகின்றனர். அவர்கள் வேறு காலத்திலும், வேகத்திலும் வாழ்கின்றனர். மண், விதைகள், முளைப்புகள் மற்றும் மகசூல் ஆகியவற்றின் வழி வித்தியாசமானது. இதில் பல்வேறு வகையான உஷார்தனம், காத்திருப்பு, நிதானம் மற்றும் கடந்து செல்லுதல் ஆகியவை அடங்கியுள்ளது.
நிதானமான பணம் மற்றும் உணவு என்பதை நாம் எப்படி புரிந்து கொண்டுள்ளோம். மேலும் நமது காலத்தில் நிதானமாக இருப்பது என்பது என்ன?
விதைகள் மற்றும் மண்ணோடு விவசாயிகள் வாழ்க்கையில் உண்மையை காத்து கடைப்பிடிக்கின்றனர். விவசாயம் என்பது உஷார்த்தன்மை மற்றும் கண்காணிப்பு. நாம் என்ன நடைபெறுகிறது என்று காண முடியும். தோடர் வாழ்வின் உண்மைத்தனத்தை பாதுகாக்க, தொிந்தோ, தொியாமலோ, இதன் மூலம் கை மற்றும் பாதம், பணிசெய்கிறது. நமது காட்சிக்காக அமைக்கும் பாரம்பாியம், பன்னாட்டு நிதியில் கண்காட்சிகள் மற்றும் இதர பொழுதுபோக்குகளைத், தாண்டி விதை மற்றும் மண்ணின் அழகை காண செல்லுதல் பாத யாத்திரை பயணமாக மாறுகிறது. வேளாண்மை மற்றும் பொதுமக்களின் இடையில் மீண்டும் இணைப்பை ஏற்படுத்துவதற்கு, ஒவ்வொரு குடிமகனும் முப்பது வயதிற்கு முன்னர் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஒருங்கிணைந்த வேளாண்மை பண்ணையில் செலவழிக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்.
வேளாண்மை, விதை மற்றும் மண்ணை சிறந்த தெய்வீக அம்சமாகவும் கருதுகின்றனர். மண்ணின் ஊடே நடப்பது, வித்தியாசமான வெளிச்சம் மற்றும் உடல் பந்தத்தோடு நடப்பதாகும். இறைவன் செயலாக, விதைகளை பிரித்தல், வைத்தல், காத்தல், நடுதல் மற்றும் பாிமாற்றுதலோடு, விவசாயிகளின் கைகள், பாதம், கண்கள் மற்றும் இதயம் ஆகியவற்றின் இருள் விலகும். விதைகளை மண்ணில் வைக்கும்போது, இறைவன் செயலாக, பண்ணை நிலங்களில் அமைதியாக வேண்டுதல்கள் நடைபெறுகிறது.
பல்வேறு துறையை சேர்ந்த பிரபலமானவர்களை நாம் கொண்டாடும் அதேவேளையில், நமது பொது பெருமையாக அவர்களை தாங்கும்போது, நிலத்தில் நடந்து, பெயர், முகவரி மற்றும் அங்கீகாரம் இல்லாமல், இரவு பகலாக பணி செய்து உற்பத்தியை நாம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல், பூமியை பாதுகாக்கவும் உதவுகிறது. இவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். நமது உணர்வில் இவர்களை இன்னமும் வெளியில் வைத்திருக்கிறோம்.
நமது காயங்களை ஆற்ற வேண்டுமென்றால், அவர்களுடைய காயங்களுக்குள் நாம் நுழைய வேண்டும். இவர்களின் வாழ்க்கை, இயற்கையோடு சார்ந்திருப்பதால், நாம் குணமாவதை காணலாம். நமது காயங்கள், வேதனைகள், மகிழ்ச்சி, ஒன்று சேர்தல் மற்றும் பூத்தல் ஆகியவை வாழ்வின் உண்மையில் வேரூண்ரட்டும்
பெட்டிசெய்தி
எப்.டி.ஏ.கே, கேரளாவில் வேளாண் சட்டப்பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது, பிறந்தது. கேரளாவின் பழைய இயற்கை அங்காடி, எலிமன்ட்ஸ், கோழிக்கோட், டோமிமேத்யூவால் 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வயநாட்டிலிருந்து 300 குடும்பங்கள் முதல் உறுப்பினர்களாக துவக்கத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களின் பண்ணை விளைபொருட்களுக்கு சந்தைக்கு சுலபமாக கொண்டு செல்லும் நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் வணிக நீதியை உறுதிப்படுத்த, சிறப்பு விலைகள் பேரம் பேசப்பட்டது. இதனால் விவசாயிகளின் மதிப்புக் கூட்டுகுழுவின் மையத்தில் மேம்படுத்துகிறது. தற்போது, இந்த குடையின்கீழ் 5000 குடும்பங்களுக்குமேல்,சேர்ந்துள்ளனர். இவர்கள் மலபார் மலைப்பகுதியில் நியாயவிலை சந்தையில் மலைசார்ந்த விளைபொருளை சேர்ப்பதற்கு சிறந்த முயற்சியினால் இலக்கை அடைந்தனர்.
இந்த நிறுவனம் துவக்கத்தில், இலாபம் ஈட்டக்கூடிய விலை மற்றும் நியாயவிலை சந்தையை சுலபமாக அடைதல் ஆகியவை மையமாக வைத்துள்ளனர். இன்று இந்த நிறுவனம் இதனை வளர்க்க மேம்படுத்த முடிந்தது. நிலைத்த மற்றும் இயற்கை சாகுபடி தொழில்நுட்பங்களுக்கு குழுவாக மாறி உயிர் பல்வகைமைக்காக தனிப்பயிர் சாகுபடியை ஒதுக்கிவைத்தது. பொதுநலனுக்காக இவர்கள் விதைகளை சேகாிக்கின்றனர். மற்றொரு மட்டத்தில், உணவு இறையாண்மையை மீண்டும் மையப்படுத்தி கொண்டு வரப்பட்டது. கூட்டாக, முக்கிய சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்றுவதனால், 4500 விவசாய உறுப்பினர்கள், எப். டீ.ஏ.கேவில் சேர்ந்து, மேற்கு தொடர்ச்சிமலையில் 15000 ஏக்கர் பண்ணை நிலத்தை சீதோஷண நிலைக்கு உகந்த வீட்டுத்தோட்டமாக மாற்றினர். ஒவ்வொரு உறுப்பினாின் பண்ணையை சிறிய மழைக்காடாக, பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளுடன், சாியான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியாக மாற்றுவதே இதன் நோக்கமாக இருக்கிறது. தற்போது பாதுகாக்கப்பட்ட உயிர்ச்சூழல் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
சி. எப். ஜான்
C F John 25, 1st Cross, 1st Main Byraveshwara Layout, Hennur Bande, Kalyanagar Post, Bangalore - 560 043, India. E-mail: cfjohn23@gmail.com www.cfjohn.com
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2019, வால்யூம் 21, இதழ் 3



