கோவிட் பெருந்தொற்று காலத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு சக்தியை கட்டமைப்பதற்கான முக்கியத்துவம் பெற்றுள்ளது. கேரளாவில் விவசாயிகள் மற்றும் குடிமக்கள் கொல்லைப்புற வீட்டுத் தோட்டத்திலும், மாடியிலும் தங்களுக்கான பாதுகாப்பான உணவை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு செயல்பாடுகளில் முயன்று,அதன் வழியாக ஆரோக்கியமாக மற்றும் சத்தான உணவை பெறுவதை அதிகப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2-3 தசாப்தங்களில் கேரளா மிக வேகமாக நகர்புற மயமாக்கப்பட்ட நுகர்வோர் மாநிலமாகி வருகிறது. எங்கள் நிறுவனமாக தணல் உள்பட கடந்த 10-15 ஆண்டுகளில் கேரளாவில் இயற்கை வழி காய்கறி உற்பத்தியை மேம்படுத்துவதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறைந்தபட்சம் தங்களின் சொந்த தேவைக்கான காய்கறிகளின் ஒரு பகுதியை வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடித் தோட்டங்கள் அமைத்து உற்பத்தி செய்யுமளவிற்கு நகர்புற மக்களிடத்திலும் மற்றும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட மக்கள் மத்தியிலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவர்களில் பெரும்பாலனோர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை அண்டை வீட்டாருக்கு பகிர்ந்துகொள்ளவும், இது போன்ற சிந்தனை கொண்ட மக்கள் வாரச் சந்தைகளை அமைத்தும் செயல்பட்டு வருகின்றனர்.
கோவிட் -19 – ஏற்படுத்திய மாற்றம்
கோவிட் – 19 பெருந்தொற்றின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு ஒரு வகையில் ஒரு பொிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது போன்ற நிச்சயமற்ற சூழல்களான ஊரடங்கு போன்றவற்றிற்கு மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மக்கள் உள்ளூர் உணவுகளை உற்பத்தி செய்வதற்காக, குறிப்பாக காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளில் “உணவில் தற்சார்பு” என்ற அழைப்பை விடுத்தார். வேளாண் இயக்குநர் முனைவர் கே. வாசுகி உள்ளூர் பண்ணைகளையும், இளைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் வீட்டின் அருகிலே உணவு உற்பத்தி என்பதற்கான ஒரு இயக்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். கடந்த மூன்று மாதங்களாக, அரசானது வீடுகளில் வேளாண்மையை ஊக்குவிக்கவும், தாிசு நிலங்களை புதுப்பிக்கவும், ஒரு ஒருங்கிணைந்த உணவு உத்திரவாதத் திட்டத்தை துவக்கியது. இது குறிப்பாக காய்கறி வேளாண்மையை தனிப்பட்ட அளவில் நுகர்வுக்காகவும், தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக கால்நடைகளை மேலாண்மை செய்வதை கொண்டிருந்தது. ஊடகங்கள், குறிப்பாக சமூக ஊடங்கள் மக்களை காய்கறி தோட்டங்கள் துவக்குவதற்கு ஊக்கப்படுத்துவதில் நல்லதொரு பங்கினை அளித்தது. வேளாண் துறையும் காய்கறி விதைகளை வினியோகம் செய்ய ஆரம்பித்தது. விவசாயிகளோடு பணிசெய்யும் பல குழுக்களும் உள்ளூர் அளவில் காய்கறி விதைகளை வினியோகித்தது. இது இயற்கை வேளாண் முறையில் இல்லாவிட்டாலும், இந்த பயிர்கள் அதிக கவனத்துடன் வளர்க்கப்பட்டு, உரங்கள் (குறிப்பாக காய்ந்த சாண உரம்) மற்றும் பூச்சிக்கொல்லிகள் ( மூலிகை கலவைகள், வேப்பெண்ணெய், காந்தா மிளகாய், பூண்டு மற்றும் சோப்பு) போன்றவையே அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஊரடங்கு காலத்தில் அக்கம் பக்கம் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ளப்பட்டு, அது ஊரடங்கு இல்லாத காலத்திலும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மக்கள் தங்களின் கொல்லைப்புறத்தில் சிறிய பகுதிகளில் சீனத்து உருளைக்கிழங்கு, கருனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்க, சேனைக்கிழங்கு போன்றவற்றையும் கூட பயிரிட ஆரம்பித்தனர்.
தாிசு நிலத்திலிருந்து உணவு நிலங்களாக:
கடந்த இரண்டு தசாப்தங்களில் விவசாயிகளோடு பணிசெய்யும் ஒரு நிறுவனமாக தணல் நிறுவனம் உணவு ஸ்கேப் என்னும் ஒரு திட்டத்தை ஏப்ரலில் துவக்கியது. இந்த திட்டமானது கிராமப்புற பகுதிகளில் உள்ள தாிசு நிலங்களை உணவு நிலங்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தது. இந்த யோசனைப்படி மக்களிடம் இருந்து நிதியை திரட்டி,விவசாயிகள் பயிர் அறுவடை செய்தபின் அந்த நிதியை உணவு பொருட்களாக திருப்பிக் கொடுப்பதாகும்.
விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு விதை, இயற்கை இடுபொருட்கள், பயிற்சிகள் மற்றும் பூச்சி மற்றும் நோய்களை வேளாண் உயிர்ச்சூழல் தொழிற்நுட்பங்களை மற்றும் நடைமுறைகளை பயன்படுத்தி மேலாண்மை செய்வதில் ஆதரவுகள் கொடுக்கப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களாக கிட்டத்தட்ட 800 விவசாயிகளுக்கு நாங்கள் இந்த வகையான இடுபொருட்கள் மற்றும் இயற்கை வழியில் மண், பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் பயிற்சிகள் அளித்தோம். இதில் பழங்குடியின சமூகத்தினர் உள்ள இரண்டு மாவட்டங்களான பாலக்காடின் அட்டப்பாடி மற்றும் பத்தனம்திட்டாவின் நாரண மொழி உள்ளடக்கி, கடந்த 20-30 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் எங்கெல்லாம் உணவு உற்பத்தியானது மிகவும் அதிகமாக குறைந்துள்ளதோ அந்தப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து அட்டப்பாடியில் உள்ள 19 கிராமங்களில் “வேளாண் உயிர்ச்சூழல் வழியாக ஊட்டச்சத்தில் தன்னிறைவு” என்பதில் பட்டியலின பழங்குடியினர் வளர்ச்சி துறையோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த முதன்மை திட்டமானது பஞ்சகிருஷி எனப்படும் பாரம்பாிய வேளாண்மையை புதுப்பிப்பதும், மேலும் சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட உணவு முறையை புதுப்பிப்பதையும் நோக்கமாக கொண்டது. நாங்கள் இதனை துவக்கும்போது முதியவர்கள், ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளித்தது. சாியான ஒரு வாழ்வாதாரம் இல்லாமல் இருந்து அநேகபடித்த கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் சிலர் ஒன்றாக இணைந்து பஞ்ச கிருஷியையும், புதிய வேளாண் உயிர்ச்சூழல் கருத்தாக்கத்தை பற்றிய கூடுதலாக புரிந்துகொள்வதற்கு ஆரம்பித்தனர். அவர்கள் ஒரு முதன்மை திட்டமாக பாரம்பாிய விதைகள் மற்றும் நடைமுறைகளையும் அங்குள்ள சமூகத்தினாின் முதியவர்கள் வழியாக பாதுகாக்கும் முயற்சியை துவங்கினர். அதற்கு அவர்கள் விதை கூடை எனப் பொருள்படும் வகையில் “வித்தேவாளி” என பெயாிட்டனர்.
ஒரு முறை எங்களுடன் நடைபெற்ற விவாதத்தில் சமூக அளவில் மேலாண்மை செய்யும் இயற்கை வேளாண்மை குறித்து கேள்விப்பட்டு, அவர்கள் அதனை முயற்சித்துப் பார்க்க நினைத்தனர். திடீரென்று கோவிட் 19 அனைத்திற்கும் முட்டுக்கட்டையானது. முதலாவது ஊரடங்கின்போது நாங்கள் அதன் முக்கிய குழு உறுப்பினர்களோடு தீவிரமாக விவாதித்தோம். ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டபோது, நாங்கள் இந்த உணவு அளவீடு திட்டத்தினை பாரம்பாிய உணவு மற்றும் வேளாண்மையை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணந்திருந்த இந்த இளைஞர்கள் மற்றும் வயதான உழவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் துவக்கினோம். அவர்களுக்கு எல்லாவிதமான ஆர்வம் மற்றும் மனித வளமும் இருந்தது, ஆனால் அதற்கான நிதி ஆதாரம் இல்லாமல் இருந்தது. ஒரு ஏக்கருக்கு அவர்களுக்கு முன் பணமாக ரூ. 5000 தேவைப்பட்டது. இந்த உணவு அளவீடு திட்டத்தின் வாயிலாக, தணல் அதற்கான நிதியை திரட்டியது. நிறைய நண்பர்கள் மற்றும் நுகர்வோர்கள் நிதிஆதாரங்களை போடுவதற்குமுன் வந்தனர். எங்களது சலுகையாக அவர்களிடம் பணத்தை தானியங்களாகவும், பயறு வகைகளாகவும் மற்றும் காய்கறிகளாகவும் திருப்பி கொடுப்பதாக சொன்னோம். நிறைய மக்கள் எதையும் திருப்பி வாங்க விரும்பவில்லை என்பதை பார்க்கும்போது அது மனதை கவருவதாக அமைந்தது.
விவசாயிகள் நிலத்தை உழுது விதைகளை விதைக்கத் துவங்கினர். இளைஞர்கள் திட்டத்தை ஒருங்கிணைத்தனர். அவர்களும் சில நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் இயற்கை வழியில் காய்கறி உற்பத்தி செய்யத் துவங்கிய அதேவேளையில் மற்ற விவசாயிகளுக்கு உதவினர். இளைஞர்கள் குழுவிற்கு நாங்கள் இணையவழியாக இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் உயிர்ச்சூழல் போன்றவற்றில் பயற்சிகளை நடத்தினோம். அதிலும் குறிப்பாக 6 வகுப்புகளில் பூச்சி மற்றும் நோய்கள் நிர்வாகம் மற்றும் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயிற்சி அளித்தோம். மற்ற நிறுவனங்கள் இணையவழியாக நடத்தும் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளிலும் கலந்துகொள்ளுமாறு நாங்கள் அவர்களை ஊக்கப்படுத்தினாம்.
பந்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மற்றொரு பழங்குடியின சமூகத்தினர் கொரோனாவின் காரணத்தால் வெளியே வேலைக்காக செல்லமுடியாமலும், அங்கும் பொியஅளவில் வேலை கிடைக்காமலும் இருந்தனர். சுமார் 480 மக்கள் 13 வகையான காய்கறி விதைகளை, இடுபொருட்கள் மற்றம் இயற்கை வழிமுறையில் எப்படி காய்கறி உற்பத்தி செய்ய வேண்டும் என வழிகாட்டுதல் மூலம் ஆதரவு கொடுக்கப்பட்டனர். பெருமழையின் காரணமாக பெரும்பான்மையானோர் வேலையை ஆரம்பிக்க முடியவில்லை. இதற்கிடையில், இந்த குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு பயிற்சியை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.
சமூக சமையலறை
உள்ளூர் உணவு உற்பத்தியின் மதிப்பை உணர்ந்திருந்ததினால், கேரளாவில் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களிலும் ஊரடங்கின்போது சமூக சமையலறை துவங்கப்பட்டது. நாங்கள் திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள காரகுளம் பஞ்சாயத்தில் ஆரம்பித்தோம். இது மாநகரத்திற்கு அருகில் இருந்தபோதிலும் நிறைய சிறு மற்றும் குறு விவசாயிகளை கொண்டிருந்தது. எங்களோடு இணைந்து செயல்பட இந்த பஞ்சாயத்து மிகுந்த ஆர்வமோடு இருந்தது.
சுமார் 130 விவசாயிகள்,பெரும்பான்மையானோர் பெண்கள் இந்த திட்டத்தில் ஒரு வேளாண் தொகுப்பாக பல்வேறு வகையான காய்கறி விதைகள் மற்றும் இயற்கை இடுபொருட்களை கொடுத்து மண்ணை வளப்படுத்துவதற்கான வேலைகள் துவக்கப்பட்டன. இயற்கை வேளாண் முறையில் காய்கறி உற்பத்திக்காக சில தந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரண்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கடந்த மாதத்தில் கொரோனாவின் பரவல் காரணமாக நகரத்திற்கு அரசு அறிவித்த கட்டுப்பாடுகளினால் பதிவு செய்து எங்களிடம் இருந்து விதைகளை பெற்றுச் சென்ற உழவர்களை நேரடியாக தொடர்பு கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் அவர்கள் சாகுபடியை ஆரம்பித்துவிட்டனர். இந்த பஞ்சாயத்தில் ஒரு நகரும் இயற்கை வேளாண் சேவையை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட உள்ளோம்.
எனது உணவு தோட்டத்தின் சவால்கள்:
இந்த பெருந்தொற்றானது, எங்கள் குழுவிற்குள்ளும், எங்களோடு மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்ட விவசாயிகள் மத்தியிலும் நிறைய குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், அவர்கள் வெளியே செல்லவோ, சில வேலைகளை முடிக்கவோ, விவசாயிகளை சந்திக்கவோ, ஆவணப்படுத்தவோ, அவர்களை இயற்கை வேளாண்மையில் ஈடுபடுத்தி, அவர்களின் நிபுணத்துவத்தை நாங்கள் ஆரம்பித்திருந்து “எனது உணவு தோட்ட வேளாண்மை என்ற திட்டத்தில் அவர்கள் அனைவரையும் தீவிரமாக பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. நாங்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவை அமைத்து அதில் பூச்சிகளை கையாளுவது, மண் மேலாண்மை, இடைவெளி பிரச்சனைகள் போன்றவை தொடர்பான நிழற்படங்களை பகிர்ந்து கொண்டோம். ஒவ்வொருவரும் ஒரு வெற்றிக்கதைகளை மற்றும் நம்பிக்கைகளை பகிர்ந்து கொள்வதால் இது மிகவும் சுவாரஸ்யமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்தது.
இங்கே, சில உதாரணங்கள்
இயற்கை வேளாண் காய்கறி தோட்டத்திற்கான எனது ஆர்வம் 12 வருடங்களுக்கு முன்னால் தணல் அமைப்பில் நான் சேரும்போது துவங்கியது. கடந்த வருடம் ஒரு புதிய இடத்திற்கு நான் மாறிவிட்டாலும்,அங்கும் மாடி தோட்டத்தை அமைத்து காய்கறிகளை வளர்த்து வருகிறேன். தணலில் இருந்து நான் பெற்ற சில காய்கறிகள் வளர்ப்பு பைகள் மற்றும் விதைகளை எனது அண்டை வீட்டார்களுக்கு பகிர்ந்துகொண்டு அவர்களை காய்கறி வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறேன். வெண்டைக்காய், மிளகாய், கத்திரிக்காய் மற்றும் சுரைக்காய் போன்றவற்றை நான் வளர்த்துவருகிறேன். தற்போது நாங்கள் விதைகள், கன்று கள மற்றும் அறுவடை என அனைத்தையும் எங்களுக்கு பகிர்ந்துகொண்டு ஒரு நெருக்கமான சமூகமாகிவிட்டோம். வேளாண்மையில் கிடைத்த முந்தைய அனுபவம் மற்றும் தணலின் திட்ட அலுவலர், அருண் அவர்களின் ஆலோசனை போன்றவற்றால் அவர்களுக்கு என்னால் இயற்கை வழி பூச்சிக் கட்டுப்பாடு, இயற்கை இடுபொருட்கள் குறித்து சில யோசனைகளை கொடுக்க முடிகிறது. அடுத்தகட்ட முயற்சியாக, எனது விவசாய சுற்றத்தை இன்னும் விரிவுபடுத்தி எங்கள் சமூகத்திற்கு தணல் நகரும் வேளாண் ஆலோசனை குழுவை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டு வருகிறேன். இந்த பெருந்தொற்று நிலை மாறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன், அப்போதுதான் மேலும் நிறைய மக்களை எங்கள் வேளாண் சமூகத்தோடு இணைத்து தற்சார்பு அடைய முடியும்” என கூறுகிறார் கோவளத்திற்கு அருகில் உள்ள வெள்ளார் கிராமத்தை சேர்ந்த பிரமிளா.
ஆர்கானிக் பஜாரில் மேலாளராக உள்ள தீபக் கூறும்போது “ நாங்கள் ஏழு பேர் சேர்ந்து 1.5 ஏக்கர் நிலத்தை ஒரு இயற்கை விவசாயி நண்பாிடம் குத்தகைக்கு எடுத்து “வேநாட் இயற்கை பண்ணை” என்ற முயற்சியை துவக்கினோம். இதில் முக்கியமான பயிர்களாக வாழை, இஞ்சி, மஞ்சள், சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மற்றும் காய்கறிகளாக, தக்காளி, மிளகாய், கத்திரிக்காய், பாகற்காய், கோவைக்காய், பரங்கி, பூசணி போன்றவைகள். இடுபொருட்களுக்காக எந்த ஒரு செலவினங்களும் ஏற்பட்டுவிடாமல், மொத்த பண்ணையில் உள்ள அனைத்துப்பணிகளையும் நாங்களே மேற்கொண்டு, சுயசார்பை அடைவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம். எங்களுக்கான கன்றுகளை நாங்களே எங்களிடம் உள்ள விதைகளில் இருந்தும், இடுபொருட்களை, உயிரியல் பூச்சிக்கொல்லி விரட்டிகளையையும், பூச்சட்டிகளுக்கான மண்,என அனைத்தையும் சொந்தமாக நாங்களே தயாரித்துக் கொள்கிறோம். குளத்தில் மீன் வளர்க்கிறோம் அந்த தண்ணீரை மாற்றும்போது அதனை உரமாக செடிகளுக்கு வரும்படி பாத்தி அமைத்து நீர் பாய்ச்சுகிறோம். ஊடுபயிர் முறை பின்பற்றப்பட்டு வாழைப் பயிர்களுக்கு இடையில் கருணை மற்றும் சேனைக்கிழங்குகளை அதனுடன் கத்திரிக்காய் மற்றும் வெள்ளரிக்காயோடு பயிரிடப்பட்டது. பூச்சிகளை கட்டுப்படுத்தும் காரணத்திற்காக மஞ்சள் மற்றும் இஞ்சி குறுக்கு வெட்டாக பயிரிடப்பட்டது. மூடாக்கின் அவசியத்தை உணர்ந்ததன் காரணமாக நாங்கள் சணல் சாக்கையும், காய்ந்த இலைகளையும் பயன்படுத்தினோம். வாழை மற்றும் இந்த காய்கறிகளை வளர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு காரணம் இவை ஆர்கானிக் பஜாரில் பற்றாக்குறையாக இருந்ததேயாகும். நாங்கள் பூச்சட்டிக்கான மண் கலவையையும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளோம் இது ஒரு பகுதி செலவினத்தை எடுப்பதற்கு உதவியது. நாங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் காலையில் குறைந்தபட்சம் 3 மணிநேரம் வேலையில் ஈடுபடுவது என முடிவெடுத்தோம். பல வருடங்களாக நாங்கள் அனைவரும் வேளாண்மையில் துடிப்புடன் இருந்து வந்துள்ளபோதிலும், அதிகாலையில் இயற்கையோடு வேலை செய்வது அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் இருப்பதற்கு உதவியது. எங்களின் ஆரோக்கியமும், ஆற்றல் நிலையும் பெருமளவில் அதிகாித்தது.
கேரளாவில் இது மிகவும் ஒரு வரவேற்றை பெறும் போக்காக மாறியுள்ளது, ஏனெனில் எதிர்ப்புசக்தியை வளர்த்துக்கொள்வது ஒரு முக்கியமான ஆரோக்கிய விசயமாக மக்களிடையே வளர்ந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்வை நடத்துவதற்கு ஊட்டச்சத்துள்ள உணவை உண்பது, குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகமுக்கியமானவை. கேரளாவில் இடவியல் அமைப்பு, மண் ஆகியன பழங்கள் மற்றம் காய்கறி பயிரிடுவதற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. வேளாண் துறையானது மாநிலத்தில் 1 லட்சம் ஹெக்டர் தாிசு நிலங்களை உணவு உற்பத்திக்காக கண்டறிந்துள்ளது. “எனது உணவு எனது பொறுப்பு” என பேசும் படித்த இளைஞர்களை காணுவது சுவாரஸ்யமாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.
தணல் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இயற்கை வேளாண் காய்கறி சாகுபடி
2001 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துக்களில் நாங்கள் விவசாயிகளுடன் வேலை செய்ய ஆரம்பித்தோம். கோவளத்திற்கு அருகில் உள்ள பெண் விவசாயிகளிடத்தில் இயற்கை வேளாண்மைக்கான ஒரு முன் மாதிரி திட்டமாகும். அப்போது கேரளாவில் பொதுவாக பூச்சிக்கொல்லிகளைப் பற்றியும்,குறிப்பாக எண்டோசல்பான் பற்றி தீவிரமாக விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது. எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி பற்றிய தரவுகளை கொண்டு வருவதில் தணல் மிக முக்கியமாக பணியை மேற்கொண்டிருந்தது. இந்த திட்டமானது,வேளாண்மையை பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாமல் செய்ய முடியும் என்பதை செய்து காட்டியது. உணவு உற்பத்தி மற்றும் உணவில் சுய சார்பு அடைவது என்ற விவாதங்கள் பெரும்பாலும் நிறைய விஞ்ஞானிகளால் விமர்சிக்கப்பட்டது. கேரளா சிறிய நிலப்பரப்பு இதனை அடைவதில் பிரச்சனையாக இருக்கும் என்பது அதில் மிகவும் முக்கிய வாதமாக வைக்கப்பட்டது. இது ஒரு கட்டுப்படுத்தும் காரணியாக பார்க்கப்பட்டதால், சிறிய நிலப்பகுதிகளில் எவ்வளவு உற்பத்தி செய்ய முடியும் என்பதையும், எவ்வகையில் ஒரு சிறு விவசாயி போதுமான அளவு காய்கறி உற்பத்தியை செய்ய முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கு எங்கள் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக வைக்கப்பட்டது. கேரளா கொண்டுள்ள சீதோஷ்ண சூழலும், மண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்வதற்கு உகந்ததாக இருந்தது. 3 பெண்கள் சுய உதவிக் குழுக்களோடு நாங்கள் துவங்கியதில் அவர்களுக்கு பொியஅளவில் நிலம் இல்லை. ஒரு வருட காலத்தில் அவர்கள் பொிய வெற்றியை காண்பித்தார்கள். பஞ்சாயத்து எங்களை அழைத்து இயற்கை வழி காய்கறி மற்றும் வாழை சாகுபடி உற்பத்திக்கான திட்டமிடுவதற்கு எங்களை அழைத்தது. அதன் பின் இது மாநில அரசாங்கத்தோடு மாநிலத்திற்கான இயற்கை வேளாண் கொள்கையை உருவாக்கும் பணியில் தணல் ஈடுபடுவதற்கு பொிதும் உதவியது.
உஷா எஸ், மஞ்சு எம். நாயர் மற்றும் தேவிகா ஏ.எஸ்
Usha S Thanal, OD- 3, Jawahar Nagar, Kowdiar P.O Thiruvananthapuram - 695003 Kerala. E-mail: ushathanal@gmail.com
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 3



