உலகம் முழுவதும் “ உங்களுக்கான உணவை நீங்களே அறுவடை செய்யுங்கள்” என்ற கருத்து பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் விரைவான நகரமயமாக்கல் அதிகாித்ததால் நமது வீதிகள் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் திடக்கழிவுகள், வறுமை, எரிபொருள் மற்றும் நீர் பற்றாகக்குறைக்கு காரணமானது. ஓவ்வொரு வீட்டிலும் கொல்லைப்புறம் அல்லது வீட்டு சமையலைத் தோட்டம் அமைப்பது இந்த சவால்களை எதிர்கொள்ள உதவும். இது ஆரோக்கியமான நகர்ப்புறத்தை உருவாக்க மற்றும் மக்கள் மத்தியில் மாற்றத்தைத் தூண்டுவதற்கு,பசுமையான உட்கட்டமைப்பு உத்திகளின் ஒரு பகுதியாகும். உரம் தயாரிக்க குடிமக்களை ஊக்குவிக்க வேண்டும், அவற்றை காய்கறி தோட்டங்களில் பயன்படுத்துவதன் மூலம் நிலப்பரப்பில் செல்லும் கழிவுகள் குறைக்கப்படும். அத்தகைய தோட்டங்களை நிறுவுவது பல வழிகளில் பயனளிக்கும்.
பாதுகாப்பான, சத்தான உணவுகளை அதிகாிக்க உதவும். கழிவு வேளாண்மைக்கு உதவுகிறது. இது சுற்றுச்சூழல் சுத்தமாகவும் சுகாதார அபாயங்களை குறைக்கவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு கூடுதல் வருமானத்தை வழங்குகிறது. குடிமக்களை நேர்மறையாக ஈடுபட ஊக்குவிக்கிறது. வெப்பநிலை மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது.
வீட்டுத் தோட்டம் தொடர்பான எனது அனுபவம்:
நான் 2000 ஆம் ஆண்டு முதல் திருச்சியில் வசித்து வருகிறேன். ஆரம்பத்தில், நாங்கள் திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வாடகை வீட்டில வசித்து வந்தோம். நாங்கள் விரும்பியதை வளர்க்க எந்த இடமும் இல்லை. இருப்பினும், எங்கள் வீட்டின் முன்பக்கம் மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பிகள் மற்றும் பிற கொள்கலன்களை பயன்படுத்தி சில கீரைகள் மற்றும் மூலிகைகளை வளர்த்தோம். ஒரு வருடத்திற்கு முன்பு, நாங்கள் திருச்சியின் புறநகாில் அமைந்துள்ள எங்கள் சொந்த வீட்டிற்கு சென்றோம். 800 சதுர அடி பரப்பளவில் ஒரு வீட்டைக் கட்டினோம். 1600 சதுர அடி அல்லது மூன்றில் இரண்டு பங்கு இடம் காலியாக வைத்து இருந்தோம். அது எங்களுக்கான தோட்டத்தை உருவாக்க.
எனது கல்வி பின்னணி மற்றும் 1995 ஆம் ஆண்டு முதல் நான் பணியாற்றி வரும் “குடும்பம்” என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இருந்து இணைப்பு, நிலைத்த வேளாண் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு தொடக்கமாக அமைந்தது. முதலில், வீட்டைச் சுற்றி வேலி போடப்பட்டது. பின்னர்,எங்கள் தோட்டத்தை வடிவமைக்கத் தொடங்கினோம். எனது குடும்பத்தில் உள்ள நால்வரும், எனது மனைவி, கஜலெட்சுமி, எனது மகள் ஸ்ருதி, எனது மகன் ஹாிஸ் மற்றும் நானும் வடிவமைப்பில் ஈடுபட்டோம். வீட்டுத்தோட்டம் வடிவமைப்பதற்கான எங்களது யோசனை மிகவும் எளிமையானது. நாங்கள் சாப்பிடுவதற்கு விருப்பமாக இருந்தவற்றிலிருந்து சிறிது சிறிதாகத் தொடங்கினோம். நாங்கள் ஒரு எளிய பகுப்பாய்வு செய்தோம், சமையலறைக்கு தேவையான தாவரங்களை குறுகிய கால இலக்காகவும், சமையறை அல்லாத பிற தேவையான தாவரங்களை நீண்ட கால இலக்காகவும் வகைப்படுத்தினோம். எங்கள் தோட்டத்திற்கு செலவு செய்வதில் மிகவும் எச்சாிக்கையாக இருந்தோம். நாங்கள் இம்மூன்று தாரகமந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டோம். அவை,குறைத்தல், மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சி. இதன் மூலம்,எங்கள் கொல்லைப்புறத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஒரு சிறிய வீட்டுத் தோட்டத்தை நிறுவினோம்.
சமையறைக்கு தேவையான தாவரங்கள்:
எங்கள் சமையலறையில் பயன்படுத்த கொடிப்பசலை, பொன்னாங்கண்ணி, குத்துப்பசலை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை போன்ற கீரை வகைகள் நட்டோம். நாங்கள் காலை மற்றும் மதிய உணவிற்கு கீரைகளை பயன்படுத்துகிறோம். நாங்கள் பொதுவாக இரவு உணவோடு கீரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கிறோம். சுவையூட்ட பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை எங்களிடம் உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், கொத்தவரை, முருங்கைக்காய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை எங்கள் தோட்டத்தில் இருந்து சாம்பார் மற்றும் பொரியல் போன்ற உணவுகளில் பயன்படுத்துகிறோம்.
ஆரோக்கியத்திற்கான தாவரங்கள்:
நாங்கள் கருப்பு துளசி, கற்றாழை, ஆடாதோடா, அருகம்புல், திருநீற்றுப்பச்சிலை, தூதுவளை, பிரண்டை, வெற்றிலை, எலுமிச்சைபுல், ரணகள்ளி, ஓமவல்லி, கீழாநெல்லி, நாய்கடுகு, கறிவேப்பிலை, இன்சுலின் செடி, மருதாணி, குப்பைமேனி ஆகியவற்றை தோட்டத்தில் வைத்துள்ளோம். இவற்றை எங்கள் மருந்தகம் என்று அழைக்கிறோம். இந்த தாவரங்கள் பொதுவான நோய்களுக்கு சிகிச்சைக்கு உதவுகின்றன. சளி, இருமல், மூக்கு ஒழுகுதல், காய்ச்சல், உடல்வலி, மலச்சிக்கல், தலைவலி, போன்றவற்றிற்கு உதவுகிறது. மேலும் உடல் சுடு, இரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவும். இந்த மூலிகைகள் பச்சையாக அல்லது மூலிகை தேநீர், சூப், சாம்பார், சட்னியாகவும் சாப்பிடலாம்.
தெய்வ வழிபாட்டிற்கு உதவும் தாவரங்கள்:
எங்கள் தோட்டத்தில் மல்லிகை, செம்பருத்தி, அந்திமந்தாரை, பிட்சிப்பூ, காகிதப்பூ, அரளி செடி, மல்லிகை பூ போன்றவற்றை எனது மனைவி மற்றும் மகள் வைத்துக் கொள்வார்கள் . மற்ற பூக்கள் அனைத்தும் கடவுளுக்கு படைக்கப்படும். தினமும் காலையில், முந்தைய நாளின் மலர்கள் பூஜை அறையிலிருந்து சேகாிக்கப்பட்டு செடிகளுக்கு போடப்பட்டு உரமாகிறது. செம்பருத்தி பூ இரத்த சுத்திகாிப்புக்கு நல்லது. எனவே,அதனை நாங்கள் சாப்பிடுகிறோம்.
மரங்கள்:
நாங்கள் பல பயன்கள் உடைய பல வகையான மரங்களை நட்டுள்ளோம். பழ மரங்களாகிய மா, பப்பாளி, முந்திரி, பலாப்பழம், கொய்யா, கொடுக்கா புளி, வாழை, நெல்லிக்காய் ஆகியன உள்ளது. தேக்கு, செம்மரம், சவுக்கு, வேம்பு, பூவரசு போன்ற மரங்கள் உள்ளது. பழ மரங்கள் இரண்டு ஆண்டுகளில் விளைச்சல் தர ஆரம்பிக்கும். மற்ற மரங்கள் எங்கள் குடும்பத்திற்கு நீண்டகாலம் நன்மையை தரும்.
சிறு துளி பெரு வெள்ளம்:
எங்கள் தோட்டத்தில் பல இடங்களில், தாகமுள்ள பறவைகளுக்கு (பிளாஸ்டிக்) மறுசுழற்சிக்கான நெகிழி குப்பிகளில் தண்ணீர் வைத்திருக்கிறோம். பறவைகள் தண்ணீர் குடிக்க வரும்போது, தோட்டத்தில் உள்ள புழு மற்றும் பூச்சிகளை சாப்பிடுவதன் மூலம் பூச்சி மேலாண்மையை அவை செய்கின்றன. எனவே பூச்சிகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. ஏனெனில் தோட்டம் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும், மயில்கள், மைனாக்கள் மற்றும் சிட்டுக்குருவி என எங்கள் தோட்டத்திற்கு வழக்கமாக வரும் விருந்தாளிகள். சிட்டுக்குருவிக்கு கூடு கட்ட ஒரு அமைதியான இடம் அமைத்துள்ளோம். எங்கள் தொட்டத்தில் எங்கு தோண்டினாலும் ஏராளமான மண்புழுக்களைக் காணமுடியும். இதுமண் ஆரோக்கியமாகவும், உயிர்ப்புடனும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்த வீட்டுத் தோட்டத்தின் மூலம் எங்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. காலை நாங்கள் தோட்டத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் வேலை செய்வதால் இதை உணர்கிறோம். இது ஆரோக்கியமாகவும், எங்கள் குடும்பத்தை இயற்கையுடன் நெருக்கமாக இருக்கவும், இயற்கை கொடுப்பதை அனுபவிக்க கற்றுக்கொடுத்துள்ளது. மறுசுழற்சி செய்து பார்த்து, அனுபவிக்க போதுமான இடம் உள்ளது. சமையறைக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் எங்கள் இருந்தே வருகின்றனது. முற்றும் சமையலறைகழவுகள் தோட்டத்திற்குரமாகபயன்படுகிறது. மேலும்,முக்கியமாக,நாங்கள் எங்கள் சொந்தவிதைகளைபாதுகாக்கத் தொடங்கினோம். மேலும்,பராமாித்துகாய்கறிகள்,பருப்பு வகைகள், மூலிகைகள்,கீரைகள்,பூக்கள் ஆகியவற்றைகொண்டவிதைவங்கிவைத்துள்ளோம். இதுஒருசுற்றுச்சூழல் மற்றும் மீளுருவாக்கம் செய்யும் வாழ்க்கைமுறை. குறைப்பு, மறுசுழற்சி, மறுபயன்பாடு ஆகிய கொள்கைகளில் மிகவும் கவனம் செலுத்துகிறோம். அனைத்து தாவரங்களும் முன்பு பயன்படுத்தப்பட்ட (பிளாஸ்டிக்) நெகிழித் தொட்டிகள் மற்றும் குப்பிகளில் வளர்க்கப்படுகின்றன.
எங்கள் தோட்டக் கருவிகள்
பெரும்பாலானவை . கோழி,மீன் மற்றும் ஆடு போன்ற கூடுதல் கூறுகளை எங்கள் தோட்டங்களில் ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறோம். எங்கள் தோட்டத்தில் விளைந்தவற்றை நண்பகள், பக்கத்து வீட்டுக்காரர்கள்,உறவினர்கள், பால்காரர்கள்,தோட்டக்காரர்கள் எனன அனைவருடனும் இலவசமாக பகிர்ந்து கொள்கிறோம். இது அனைவரிடமும் நட்பு உருவாக்க உதவுவதோடு அவர்களும் தங்கள் சொந்த தோட்டத்தை தொடங்க ஊக்குவிக்கிறது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் அதன் விளைவாக ஊரடங்கு அமல்படுத்தியதால்,எங்கள் குடும்பத்தை தோட்டத்தில் அதிக நேரம் செலவிடச் செய்துள்ளது. இதன் விளைவாக, தோட்டம் எங்களுக்கு ஏராளமான தயாரிப்புகளை வழங்கியுள்ளது. பழங்கள், பூக்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் என பலவகைகளில். புறவைகளின் ஒலி எங்களுக்கு அதிகாலை எழுப்பும் ஒலியாக மாறியுள்ளது. இவ்வாறு, எங்கள் தோட்டம், எங்கள் வாழ்க்கை என எங்கள் குடும்பம் இதனை வளர்த்து வருகிறோம்.
கே. சுரேஷ் கண்ணா
Suresh Kanna Kudumbam, No. 113/118, Sundaraj Nagar, Subramaniyapuram, Trichy - 620 020, Tamil Nadu, India E-mail: sureshkanna_kudumbam@yahoo.in
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 3



