குடும்ப கை தோட்டாஸ் அல்லது குடும்ப சமையலறை தோட்டங்கள் இந்த குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து தேவையை அளிப்பதற்காகவும், கூடுதல் வருமானத்திற்காக ஒரு ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் கர்நாடகாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நமது உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாித்துவரும் விழிப்புணர்வின் காரணமாக, நுகர்வோரின் கவனம் காய்கறிகளின் மீது அதில் உள்ள புத்துணர்ச்சி, சுத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மீது அதிகாித்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள சிறு விவசாயிகள், தொழிற்விற்பன்னர்கள் மற்றும் பொழுதுபோக்காக செய்பவர்களும் காய்கறி வேளாண்மையை செய்து வருகின்றனர். இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு இல்லாமல், இயற்கை உணவாக உட்கொள்ளவற்காக தங்களுக்கான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள விரும்புபவர்களின் கொல்லைப்புறங்களிலும், மாடித் தோட்டங்களிலும் காய்கறி உற்பத்தியானது ஊடுருவியுள்ளது.
கிரீன் பவுண்டேஷன் என்பது கர்நாடகா மாநிலத்தின் கனகபுரா தாலுக்காவில் விவசாயிகளோடு பணி செய்யும் ஒரு அரசு சாரா நிறுவனமாகும். பெரும்பான்மையான விவசாயிகள் ஒன்றிலிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை சொந்தமாக கொண்டு அதில் ஒரினப்பயிர் சாகுபடியை செய்து வருபவர்கள். ஆண்டு சராசாி வருமானமாக ரூ.30000த்தை சம்பாதிப்பதற்கு விவசாயிகள் மானாவாரி வேளாண்மையையே நம்பியுள்ளனர்.
அவர்களோடு செய்யும் வேலையின் ஒரு பகுதியாக, கிரீன் பவுண்டேஷன் உள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களோடு இணைந்து மருத்துவ சேவை முகாம்கள் ஆரோக்கிய பாிசோதனைகள் நடத்தி அதன்மூலம் மக்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து வருகிறது. இந்த முகாம்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் தொடர்புடைய நிறைய நோய்கள் அடையாளம் காணப்படுகின்றன. சராசாியாக ஒரு குடும்பம் காய்கறி வாங்குவதற்கு மாதம் ரூ. 400 செலவு செய்ய வேண்டியிருந்தது.
வேளாண்மை என்பது முன்கூட்டியே தீர்மானிக்க இயலாததாகவும் அதிலிருந்து அவர்கள் பெறும் வருமானம் குறைவாக இருப்பதாலும், அவர்களின் உணவில் காய்கறிகளை எடுத்துக் கொள்வது மிகவும் கடினமானதாக உள்ளது. அதன் காரணமாக வீட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழலில் இருந்தனர்.
இந்த சூழ்நிலையின் அடிப்படையில் கிரீன் பவுண்டேஷன் “குடும்ப கை தோட்டாஸ்” அல்லது வீட்டுச் சமையலறை தோட்டங்களை அமைக்க சிறு விவசாயக் குடும்பங்களை உற்சாகப்படுத்தியும், ஆதரவு அளித்தும் அதன்மூலம் இந்த குடும்பங்களுக்கு தேவைபடும் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு மற்றும் கூடுதல் வருமானத்திற்கு ஆதரவாகவும் விளக்க உதவியது.
திறமைகளை கட்டமைப்பது:
காய்கறிகளை அவர்களின் வீட்டு கொல்லைப்புறத்தில் வளர்க்கும் அளவிற்கு போதுமான இடவசதியுள்ள வேளாண் குடும்பங்கள் களப்பணியாளர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அந்த பெண்களுக்;கு ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார பயன்கள் குறித்து நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. காய்கறி உற்பத்தியிலும் விதைகளை சேமிப்பதிலும் பெண்கள் எப்போதும் முன்னணியில் இருப்பார்கள். காய்கறிகளை அவர்களின் கொல்லைப்புறத்தில் இயற்கை வழி வேளாண்மையில் வளர்ப்பதற்கு பெண்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். மரபுவகை நாட்டு விதைகளை பயன்படுத்துவதில் விவசாயிகள் பயிற்றுவிக்கப்பட்டு அவைகள் எவ்வகையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களுக்கு எதிர்ப்புசக்தி கொண்டுள்ளன என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டனர்.
நிலப்பரப்பை களப்பணியாளர்கள் மதிப்பீடு செய்து அதற்கேற்றாற்போல் மேட்டுப்பாத்தி முறை, நிரந்தர வேளாண் முறை மற்றும் தடுப்பு வரப்பு அமைப்பு முறை போன்ற பல்வகையான முறைகளை பாிந்துரைத்தனர். விவசாயிகளுக்கு 22 வகையான காய்கறி விதைகள் அளிக்கப்பட்டு அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்யவும், அதற்கு உதவியாக களப்பணியாளர்கள் அந்தந்த சூழ்நிலைகள், இடவசதி, மண் தன்மை, பூச்சிகள் தாக்குதல் சாத்தியக்கூறு மற்றும் ஒட்டுமொத்த ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் பாிந்துரைத்தனர். சில விவசாயிகள் தங்களின் வீட்டுத்தோட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட காய்கறிகளை வளர்த்தனர். கடந்த சில வருடங்களாக இந்த செயல்பாடுகளில் குறிப்பாக மிளகாய்,கொத்தமல்லி, கீரை, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, தங்காளி வெள்ளரி, சுரைக்காய், பீர்க்கங்காய், மற்றும் பாகற்காய் போன்றவற்றை வளர்ப்பதில் பெண்கள் முன்னின்று செயல்படுகின்றனர்.
எனினும்,மக்களின் ஆரோக்கிய விபரங்களை பார்க்கும்போது, நாங்கள் முருங்கை, கறிவேப்பிலை மற்றும் இதர காய்கறிகளை வளாப்பதற்கு நாங்கள் அழுத்தம் தந்து கொண்டிருப்பதும்,அது எவ்வகையில் அவர்களின் ஊட்டச்சத்திற்கு குறிப்பாக இரத்தசோகை, சர்க்கரை மற்றும் இரத்தஅழுத்தம் போன்ற நோய்களை தடுப்பதற்கான அம்சங்களை குறித்தும் சொல்லி வருகிறோம்.
விவசாயிகள் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பதிலும் பயிற்சிகள் பெற்று அதன் அதிக செலவுமிக்க இரசாயன உரங்களின் மேல் உள்ள சார்புத்தன்மையை குறைத்துள்ளனர். இங்கு தொழுஉரம், திரவ ஜீவாமிர்தா, பூச்சி மருந்து,பஞ்சகவ்யா, மிளகாய்-பூண்டு கரைசல், எலுமிச்சை கசாயம், கன ஜீவாமிர்தம் போன்ற இடுபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இடுபொருட்கள் ஜன தான்யா உழவர் உற்பத்தியாளர் கம்பெனியால் நேரடியாக வாங்கப்படுகிறது. இந்த ஜெ.எப்.பி.சி.எல் உழவர் சமுதாய உறுப்பினர்களுக்கான அமைப்பாக உருவாக்கப்பட்டு அதில் அவர்களை கூட்டாக வேளாண் உயிரினப் பன்மயத்தை பாதுகாப்பது, விவசாய பொருட்களுக்கு சந்தை தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவது போன்றவற்றை நோக்காக கொண்டு செயல்படுகிறது.
ஆர்வமுடைய விவசாயிகள் உபாியாக விதைகளை உற்பத்தி செய்வதில் பயிற்றுவிக்கப்பட்டு அவை அடுத்த பயிர் சாகுபடி சுழற்சிக்கு போதுமானது என உறுதிப்படுத்திக்கொண்டு அவற்றை ஜெ.எப்.பி.சி.எல் -க்கு விற்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்திற்கான ஆதாரமாக விளங்குகிறது.
வீட்டுத்தோட்டங்களை வளர்ப்பதற்காக கிரீன் பவுண்டேஷன் ராமநகரா மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலூக்காவில் உள்ள 160 விவசாயக் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறது.
பயன்கள்:
அவர்கள் வீட்டைச்சுற்றி இருக்கக்கூடிய இடத்தை கொண்டும், இயற்கையில் கிடைக்கும் ஆதாரங்களை கொண்டும் வீட்டுத் தோட்டங்கள் வளர்ப்பது அவர்களின் கூடுதல் செலவினங்களை குறைக்கவும், குடும்பங்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவியுள்ளது. மிளகாய், கொத்தமல்லி, கீரை, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, தக்காளி, முள்ளுக்கீரை, வெண்டை, வெள்ளரி, சுரைக்காய், பீர்க்கங்காய், மற்றும் பாகற்காய் என சில வகை காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க முடிந்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு, அவர்களின் நில அளவைப் பொருத்து வேறுபடுகிறது. ஆனால், சராசாியாக ஒரு குடும்பம் 100 கிலோ முதல் 200 கிலோ அளவிலான காய்கறியை ஒரு வருடத்திற்கு உற்பத்தி செய்ய முடிகிறது. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அடிப்படையில் வீட்டுத் தேவைக்காக என்றாலும், மிஞ்சும் உபாிபொருட்கள் பக்கத்து வீட்டார் மற்றும் உறவினர்கள் போன்றவர்களுக்கு பகிர்ந்தளித்தும், மீதம் உள்ளவை ஜெ.எப்.பி.சி.எல் மூலமாகவோ அல்லது உள்ளூர் சந்தையிலோ விற்கப்படுகிறது. ஆகவே,வீட்டுத் தோட்டம் என்பது ஊட்டச்சத்திற்கான ஆதாரமாக மட்டுமல்லாது, விரைவான வருமானத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது. கூடுதலாக அவர்களால் ஒரு மாதத்திற்கு ரூ.400 வரை சேமிக்க முடிகிறது. இந்தத் தொகையானது முன்பு காய்கறிகளை வாங்குவதற்கு செலவிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து அம்சத்தையும் தாண்டி, காய்கறி உற்பத்தியானது ஏழைக் குடும்பங்களுக்கு விரைவாக வருமானத்தை ஈட்டுவதற்கு ஆதாரமாக விளங்குகிறது. தானியங்கள் மற்றும் பழ வகை பயிர்களைக் காட்டிலும், காய்கறி உற்பத்திற்கு குறைந்த காலஅளவு தேவைப்படுவதோடு, குறைந்த இடுபொருட்கள் போதுமானதாக உள்ளதால் அது விவசாயிகளை (லீசா) குறைந்த வெளியிடுபொருள் நிலைத்த விவசாயம் போன்ற வழிகளில் ஈடுபட வைக்க உதவுகிறது. செலவு மிகுந்த இரசாயன உரங்களுக்கு பதிலாக விவசாயிகள் உயிர் இடுபொருட்களை பயன்படுத்துகின்றனர். அந்த வகையிலான இடுபொருட்களை தயாரிப்பதற்கு அவர்களின் பாரம்பாிய அறிவு மிகுந்த உதவியாக உள்ளது.
இன்னும் அதிகளவிலான மக்கள் தங்களின் வீடுகளுக்கு சொந்தமான காலி இடங்களை நல்ல ஒரு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும், அவர்களின் குடும்பத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். கிட்டத்தட்ட 380 விவசாயிகள் தங்களின் கிராம பஞ்சாயத்துக்களில் வீட்டுத் தோட்டங்களை உருவாக்க மாநில அரசின் திட்டங்களை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் ஒரு பயனாளிக்கு தொகுப்பாக விதை உட்பட ரூ. 2750 கொடுக்கப்பட வழிவகை உள்ளது.
பெட்டிச்செய்தி:
தாய் முடம்மா நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்தை சர்ந்த சிறு விவசாயி. முரசரகள்ளியில் உள்ள அவரது வீட்டுகொல்லைப்புறம் அவர் வீட்டுத் தோட்டத்தை வளர்ப்பதற்குமுன் காலியாக இருந்தது. வீட்டுத் தோட்டத்தை எவ்வாறு பராமாிப்பது, என்ன வகையான காய்கறிகளை அவர் உற்பத்தி செய்வது என்பதில் அவருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இன்று அவர் 15 வகையான காய்கறிகளை 2.2 செண்ட் நிலத்தில் நிரந்தர வேளாண் முறையில் செய்து வருகிறார். ஜனதான்யா அவருக்கு பஞ்சகவ்யா, மண்புழு உரநீர், அக்னி அஸ்தரா, மற்றும் புங்கை இலை பொடி போன்ற இடுபொருட்களை அளித்தது. 9 கிலோ உள்ளூர் கத்திரி, 8 கிலோ பீர்க்கங்காய், 6 கிலோ சுரைக்காய், 13 கிலோ பரங்கி, 25 கிலோ வெண்டை, 40 கிலோ தக்காளி, மற்றும் 12 கிலோ மிளகாய் அறுவடை செய்தார். எஞ்சிய காய்கறிகளை தனது உறவினர்கள் மற்றும் பக்கத்துவீட்டாருக்கு கொடுத்தார். தாய் முடம்மா விதை உற்பத்தியிலும் பயிற்சி பெற்றுள்ளார்.
கிரீன் பவுண்டேஷன்
GREEN Foundation
#25, ACES Layout,1st Main Road, Ashwath Nagar,
RMV 2nd stage, Bangalore-560094
E-mail: contact@greenfoundation.in
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2020, வால்யூம் 22, இதழ் 3



