டிஜிட்டல் வழியாக செல்வது – தென்னை விவசாயத்தில் பாிசோதனை வழி கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பது


விவசாயிகளின் பேசப்படாத அறிவை மற்ற வழிகளில் இருந்து வரும் தௌிவான அறிவோடு ஒருங்கிணைக்கும்போது சிறுபண்ணைகளை திறனை அதிகாிக்கலாம். டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும் என்பதை ஐ.சி.ஏ.ஆர் -ன் முயற்சிகள் வெளிப்படுத்துகின்றது.


10 லட்சத்திற்கும் அதிகமான வேளாண் குடும்பங்கள் தென்னை மற்றும் தென்னையை அடிப்படையாக கொண்டு வேளாண் முறைகளை அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் மற்றும் குடும்ப ஊட்டச்சத்துக்கும் நம்பியுள்ளனர். தென்னையானது அதிகளவில் சிறு மற்றும் குறு விவசாயிகள் மத்தியில் பயிரிடப்படுகிறது. அங்கு குடும்பத்தின் பண்ணை உழைப்பின் பங்கு மிகவும் முதன்மையாானது. வுிவசாயிகள் தங்களின் வள ஆதாரங்களை மறு சுழற்சிக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வந்து செய்வதால் சாகுபடி செலவினங்களை அதன்மூலம் குறைக்க முடிகிறது.

பல தலைமுறை விவசாயிகளின் பாிசோதனை முறை கற்றல்களின் அடிப்படையில் வீட்டுத் தோட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டும், உள்ளூர் முறைக்கும் என வளர்ந்துள்ளது. சிறிய அளவிலான முறைகள் தங்களது சொந்த சமூகங்களிடமிருந்தும் மற்றும் வெளிப்புற ஆதாரங்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வகையில்  வெளிப்படையான முறையில் உள்ளது. இன்றைக்கு உள்ள விரிவாக்க முறைகளில் தென்னை சாகுபடி குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் மாறியும், ஒரு இடத்தில் இருந்து மட்டும் பெறவேண்டியதாக இல்லை.

தொழிற்நுட்ப வளர்ச்சி, பரவலாக்கம் மற்றும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முடிவுகள் ஒற்றை வழியிலே செல்லக்கூடிய எளிதான முறை இல்லை. இதற்கு எதிர்கருத்துக்கள், தொழிற்நுட்பங்களை தொகுப்பது, மேம்படுத்துவது, மற்றும் விவசாய சமூகங்களின் அறிவையும் திறமையையும் ஒருங்கிணைப்பது போன்றவை தேவைப்படுகிறது. டிஜிட்டல் தொழிற்நுட்பம் கருத்துக்கள் பாிமாற்றத்திற்கான தளத்தையும், அதிக தென்னை சாகுபடி செய்யப்படும் மாநிலங்களான தமிழ்நாடு (115.62) கேரளா (124.17) கர்நாடகா (109.57) மற்றும் ஆந்திரபிரதேசம் (97.21) விழுக்காடு அளவில் பார்க்கும்போது செல்பேசிகளை தகவல் பாிமாற்றத்திற்ககான சாதனங்களாக பயன்படுத்த முடியும் என்ற பொிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இ-கல்பா என்னும் விவசாயிகளுக்கு உதவக்கூடிய செல்பேசி ஆப் உருவாக்கம்:
டிஜிட்டல் வழி தொழிற்நுட்பம் சிறு மற்றும் குறு தென்னை விவசாயிகளுக்கு உண்மையான தகவல்களையும் விரைவான ஆலோசனைகளையும் கொடுக்கக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளதால், சாியான தகவல்களை, சாியான நேரத்தில் குறைவான செலவில் கொடுக்க உதவுகிறது. தென்னை விவசாய சமூகங்களுக்கு, பயிர் தொடர்பான ஆலோசனைகளை டிஜிட்டல் வழியாக பெறுவதற்கு ஐ.சி.ஏ.ஆர் -ன் சி.பி.சி.ஆர். ஐ. இ-கல்பா எனும் ஆண்ட்ராய்டு பயன்பாடுள்ள செல்பேசி வழியாக விவசாயிகளுக்கு எளிதான ஒரு ஒட்டுமொத்த ஆப்பை தென்னை, பாக்கு மற்றும் கோக்கோ பயிர்களுக்கு வடிவமைத்துள்ளது.

இந்த ஆப்பை உருவாக்குவற்கு ஒரு நீண்ட செயல்முறைகள் தேவைப்பட்டது. இந்த ஆப்பை உருவாக்குவதற்குமுன் மூன்று வருடங்களுக்கு இதன் தேவை மற்றும் இதற்கு விவசாய சமூகத்தினாிடம் கிடைக்கும் வரவேற்பு போன்றவை மதிப்பீடு செய்யப்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் 750 தென்னை விவசாயிகளிடத்தில் ஒரு மாதிரி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் 92 விழுக்காடு விவசாயிகள் தங்களிடத்தில் செல்பேசி வைத்திருந்ததும், அதில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு வசதிகொண்ட செல்பேசியை கொண்டிருப்பதும் தொியவந்தது. ஆனால் அவர்களில் ஒருவருக்குகூட அறிவை பெறுவதற்காக செல்பேசி ஆப்புகளை பயன்படுத்துவது குறித்தும், அதனைப்பற்றி எதுவும் அறியாதவர்களாக இருந்தனர்.

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் முயற்சியில் ஆங்கில மொழியானது பதிவேற்றப்பட்டிருந்தது. 30 விழுக்காடு தொழிற்நுட்ப துணுக்குகள் மட்டும் மலையாள மொழியில் இருந்தது. பயன்படுத்துபவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், விவசாயிகள் தொழிற்நுட்ப துணுக்குகளை அவர்களின் சொந்தமொழிகளில் இருப்பதற்கே பொிதும் விருப்பம் தொிவித்தனர். விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர்கள் அடங்கிய பலதுறை ஒழுக்காற்று குழுவானது, அந்த ஆப்பை பலமொழிகளில் கையாளும் வகையில் தொழிற்நுட்ப துணுக்குகளை தொகுத்தும், திருத்தியும், முறைப்படுத்தியும் பதிவேற்றப்பட்டது.
பெரும்பாலான தென்னை விவசாயிகள் சிறிய அளவிலான நிலப்பரப்பினை கொண்டவர்;கள். தென்னையை அடிப்படையாக கொண்ட வீட்டு அளவில் உள்ள முறைகளில், விவசாயிகளுக்கு அவர்களின் நிலத்தை நிலைத்த தன்மையோடு கூடிய உயிர்ச்சூழல் பண்ணையாக, குடும்பங்களின் உணவு மற்றும் பொருளாதார தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் ஊடுபயிர்கள், கலப்பு பயிர்கள், கால்நடைகள், கோழிகள், மீன்கள் போன்றவற்றின் தகவல்களை விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டியுள்ளது.
ஊடுபயிர் மற்றும் கலப்புப்பயிர் போன்ற பயிர் தகவல்கள் குறித்த பயனாளிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் “79 பயிர்கள் குறித்த தகவல்கள்” மற்றும் “தென்னைக்கான இடுபொருட்கள் கால்குலேட்டர்” போன்றவை அடுத்தடுத்து சேர்க்கப்பட்டன. ஐ.சி.ஏ.ஆர் மற்றும் சி.பி.சி.ஆர்.ஐ 2017 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வானது, விவசாயிகள் ஒருவருக்கொருவர் உள்ளூர் ஆதாரங்களை அதன்பின் பலவண்ண புகைப்படங்களோடு கூடிய எழுத்துப்படிவங்களை உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும் என விவசாயிகள் பொிதும் விரும்புவதை வெளிப்படுத்தியது. இதில் மாற்றங்கள், திருத்தங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்கவேண்டிய வேலைகள், தொழிற்நுட்ப துணுக்குகளின் தரம், பயன்பாடு மற்றும் உண்மைத்தன்மையை நிர்வகிப்பதற்கான ஒரு தொடர் செயல்பாடாக இருக்கும்.

இ-கல்பா ஆன்லைன் முறையிலே துவங்கப்பட்டது. இருப்பினும், கிராமப்புறங்களில் இணையதளங்களின் சார்புதன்மையை குறைக்கவும்,செலவினங்களை குறைக்கவும் இதன் உள்ளடங்கங்கள் ஆப்லைன் முறையிலும் கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. குகிள் பிளே ஸ்டோரில் இலவசமான இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். (https:// goo.gl/b3GTk0)

இ-கல்பாவின் சிறப்பியல்புகள்:

இ-கல்பாகீழ்;வரும் சிறப்பியல்புகளைகொண்டுள்ளது.
அ) தொழிற்நுட்ப துணுக்குகள்/அறிவு தளம் தென்னை, பாக்கு மற்றும் கோக்கோ
தொழிற்நுட்ப துணுக்குகள் ஒரு விஞ்ஞானிகளின் குழுவால் வடிவமைக்கப்படடது. உள்ளடக்கங்கள் எளிய மொழியில் வாக்கியங்களாக அதனுடன் பொருத்தமான படங்களோடு கொடுக்கப்பட்டது. தென்னை, பாக்கு மற்றும் பாக்கு போன்றவற்றில் மொத்தமாக 271 தொழிற்நுட்ப துணுக்குகள் அவற்றின் வகைகள், உற்பத்தி தொழிற்நுட்பம், பயிர் பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள், பயிர் முறைகள், அறுவடை, அறுவடைக்கு பிந்திய தொழிற்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் செயலாக்கம் உள்பட சேர்த்து உருவாக்கப்பட்டது. அதன் உள்ளடக்கங்கள் பல மொழிகளில் – ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடா மற்றும் பெங்காளி போன்றவற்றில் உள்ளது.
தவறுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை கண்டறிந்து பல துறைகள் அடங்கிய வல்லுநர் குழு சாிசெய்யும். பயனாளிகளின் கருத்துக்கள் முறைப்படி கேட்டறியப்பட்டு அதற்கேற்றாற் போல் தொழிற்நுட்ப துணுக்குகள் அவ்வப்போது சாிசெய்யப்பட்டது.

தென்னைக்கான இடுபொருட்கள் கால்குலேட்டர்
தென்னையின் வயது மற்றும் பண்ணையின் அளவு ஆகியவற்றை பொருத்து தென்னை சாகுபடிக்கான இடுபொருட்கள் செலவினங்கள் மாறுபடுகிறது. இடுபொருள் கால்குலேட்டாில், ஒரு விவசாயி தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை அதன் வயதுக்கு ஏற்றவகையில் பதிவு ஏற்றம் செய்தால், ஒவ்வொரு பயிருக்கும் தேவைப்படும் இடுபொருட்களின் அளவு பற்றிய அறிக்கை (உ-ம் – இயற்கைஉரங்கள்,டோலமைட்/ சுண்ணாம்பு, இரசாயன உரங்கள், தட்டைபயிறு அடிஉர மேலாண்மைக்கு) என ஒட்டுமொத்த தேவையும் அதில் காட்டப்படும். மேலும் உரப் பயன்பாட்டுக்கு நினைவில் கொள்ள வேண்டிய விவரங்களும் வழங்கும்.
காயங்குளம் கொட்டி நடுவீட்டை சேர்ந்த திருமதி. உஷா கோபாலகிருஷ்ணன் குறிப்பிடும்போது இந்த எளிய வசதியான எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது எந்த ஒரு தென்னை விவசாயிக்கும் தேவையான இடுபொருள் அளவினை மதிப்பீடு செய்வதற்கும் மிகவும் சௌகாியமாக இருக்கும் என நான் காண்கிறேன்.

ஆ. பயிர் விபரங்கள்;
வீட்டு அமைப்பு முறையில் சாகுபடி செய்யப்படும் தென்னையானது பெரும்பாலும் முதன்மை பயிராகவும், அதோடு மற்ற பயிர்கள் வேளாண் காடுகளின் ஒரு அலகாக கொண்டு பயிரிடப்படும். எனவே, சிறு விவசாயிகளுக்கு பல்வேறு பயிர்களுக்கான தகவல்கள் தொடர்ச்சியாகவும், தவறாமலும் தேவைப்படுகிறது. இ-கல்பா இந்த அடிப்படையான தகவல்கள் மற்றும் அறிவு மற்றும் பயிரிகளின் பருவங்கள், விதைஅளவு, இடைவெளி மற்றும் 79 பயிர்களுக்கான உர மேலாண்மை தொடர்பான பாிந்துரைகளை வழங்குகிறது. இந்த சிறப்பியல்புகள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது கள அளவில் உள்ள பணியாளர்கள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இ. நிகழ் சிக்கல் அறிக்கையிடல் மூலம் பண்ணை பிரச்சனை மேலாண்மை
இது இ-கல்பாவில் உள்ள ஒரு ஊடாடும் அம்சமாக கள பிரச்சனைகளை அறிக்கையிடுவதும் மற்றும் விஞ்ஞானிகளிடம் இருந்து தீர்வுகளை அணுகி அதனை ஆல்லைன் மூலம் கிடைக்கச் செய்வதாகும். அவ்வப்போது விவசாயிகள் சந்திக்கும் கள சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை புகார் செய்யலாம். இவைகள் செய்திகள், படங்கள், ஒலிப்பதிவு அல்லது காணோளி வடிவிலோ அனுப்பலாம். பிரச்சனைகளை கண்டறிந்து அவைகளுக்கு ஐ.சி.ஏ.ஆர் – சி.பி.சி.ஆர். ஐ விஞ்ஞானிகள் அல்லது பல்வகை ஒழுங்க காற்று விஞ்ஞானிகள் குழு நேரடியாக தீர்வுகளை கொடுக்கின்றனர். கொடுக்கப்பட்ட புகார் தானாக கைபேசி எண்ணில் குறிக்கப்பட்டு அதில் உள்ள ஜீ.பி.எஸ் களத்தில் உள்ள பிரச்சனைகளை கண்காணிக்கிறது.

ஐ.சி.ஏ. ஆர் சி.பி.சி.ஆர் ஐ – யிடம் இ-கல்பாவிற்கும் அப்பால் மற்ற டிஜிட்டல் வழியில் தென்னை பற்றிய தகவல்களாக ஐ.சி.ஏ.ஆர் – சி.பி.சி.ஆர்.ஐ யூ.டியிப் சேனலானது தென்னை பற்றிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆலோசனை சேவைகளை பலமொழியில் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் வழியாக வழங்குகிறது.

எல்லை, பயன்பாடு மற்றும் பதில்
கைபேசி ஆப் -பின் பயன்பாடு ஆரம்ப கட்டத்தில் மிகவும் மெதுவாக இருந்தது. முதல் இரண்டு வருடங்களில் 1000 முதல் 1600 வரை மட்டுமே இருந்தது. அதன் பின் கிட்டத்தட்ட 30 விழுக்காடு முன்னேற்றம் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் ஊரடங்கு காலத்தில் அதிகாித்திருந்தது. நபார்டு மற்றும் ஐ.சி.ஏ.ஆர் உதவியோடு ஓடநாடு உழவர் உற்பத்தியார் நிறுவனம் என ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தொலைபேசியின் வழியாக ஒரு துரித ஆய்வினை அதன் பங்குதாரர் மத்தியில் அவர்களின் டிஜிட்டல் தயார்நிலையை கண்டறிய நடத்தியது. அதில் பெரும்பாலும் குறிப்பாக சுய உதவிக்குழுக்களை சேர்ந்த முதிய மற்றும் பெண்கள் மத்தியில் முற்றிலும் பயன்பாடில்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கைபேசிகளில் முகநுால், வாட்ஸ்அப், இணையதளத்தில் தேடுதல், யூ டியுப் மற்றும் விவசாயம் தொடர்பான அறிவு தேடல் மற்றும் கூட்டமைப்புகளை திறன்பட கையாளுவது போன்றவற்றிற்கான திறன் அடிப்படையிலான பயிற்சியை நடத்தியது. பாடத்திட்டமானது குடும்பத்தை அடிப்படையாக கொண்டு திட்டமிடப்பட்டு அதனால் பரஸ்பர கற்றல் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், எடுத்துக்கொள்ளக் கூடியதாகவும் ஆனது. ஆப்பை பரந்த வகையில் பயன்படுத்துவதற்காக, உழவர் உற்பத்தியாளர் நிறவனம் அதன் அனைத்து பங்குதாரர்கள் கூட்டங்களிலும் அதனை ஊக்குவித்தது. தற்போது 5000 பதிவிறக்கங்கள் விவசாயிகள் அல்லது விரிவாக்க அலுவலர்கள் அறிவு தேவையை அடிப்படையாக கொண்டு தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டது.
2018ல் ஒரு ஆய்வானது 100 பயன்படுத்துவோர் மத்தியில் அவர்கள் விரும்பும் பண்பு கூறுகளில் நடத்தப்பட்டு அதில் 93.20 விழுக்காடு பயன்படுத்துவோர் உணரப்பட்ட அறிவு/தொழிற்நுட்ப துணுக்குகள் உள்ளூர் மொழிகளில் கொடுப்பதே மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பியல்பாகவும், அதனைத் தொடா;ந்து ஆப்லைன் பயன்பாடு (84.4 விழுக்காடாகவும்) விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்களுடனான நேரடி விவாதம் (73 விழுக்காடாகவும்) களப் பிரச்சனைகளுக்கான உரிய நேர ஆலோசனைகள் (71.3 விழுக்காடாகவும்) மற்றும் தகவல்களை விரைவாக புதுப்பிப்பது (64.90 விழுக்காடாகவும்) இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வானது விவசாயிகளிடையே ஐ.சி.டி கருவிகளை திறம்பட பயன்படுத்துவதில் திறன்களில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. பாலின முன்னோக்குகள் சமபங்கு மற்றும் அனைத்தையும் பராமாிக்க ஆழமான பகுப்பாய்வு தேவை.

உரிய நேர கள பிரச்சனைகளாக, அதன் பிரச்சனைகளின் வகைகள், தென்னை, பாக்கு அல்லது கொக்கோ மட்டுமல்லாது பயிர்சாகுபடியில் உள்ள மற்ற பயிர்களிலும் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 80 முதல் 85 விழுக்காடு களப் பிரச்சனைகள் பல்வேறு காரணிகளை உள்ளடக்கி இருந்தது. (2-ம் இலைகள் மஞ்சளாவது),விவசாயிகளால் கண்டறிவதில் கடினமானவை (2-ம் இலை அழுகலோடு இணைத்திருந்த சிவப்பு பணை) புரிந்துகொள்ளவது கடினம் அல்லது கண்டறியப்பட்டது (2-ம் நுண்ணுட்டச்சத்து பற்றாக்குறை அல்லது மண் பிரச்சனைகள்.

ஆப் ஆனாது விவசாயிகளுக்கு தகவல்களை பெறுவதில் உதவியதோடு மட்டுமல்லாமல், விவாதிக்கும் சிறப்பில்புகளை கொண்டவற்றால் விவசாயிகளையும் விரிவாக்க அலுவலர்களையும் அறிவை நம்பிக்கையோடு பாிமாற்றிக் கொள்வதில் பலப்படுத்தியது. கேரளாவின் பதியூர் பஞ்சாயத்தை சேர்ந்த இளம் தென்னை விவசாயி திரு. ஜெகதீஸ் குமார் கே.டி. சதனம் குறிப்பிடும்போது, “ விவசாயம் என்பது நேரத்திற்கு செய்வதும் அறிவு தீவிரமானதாகும்”. இ-கல்பா என்பது தகவல்களை பலமொழிகளில் கிடைப்பதற்கு செய்யும் ஒரு சாியான கருவி. அதோடு மிகவும் நல்ல சிறப்பில்புகளாக தென்னையில் ஊடுபயிர்கள்/கலப்புபயிர்கள் பயிர்களை பற்றிய தகவல்கள் அளிப்பது, தென்னைக்கு இடுபொருட்கள் கால்குலேட்டர் என்பது தனிப்பட்ட விவசாயிகளின் தேவைகளுக்கு உள்ளூர் மொழியில் பொருத்தமான எளிய வாக்கியங்கள் மற்றும் நிழற்படங்களோடு கூடிய தொழிற்நுட்ப துணுக்காக உள்ளது.
சிறப்பான பண்ணைகளை உருவாக்க டிஜிட்டல் பண்ணை முறைக்கான தேவை மிகவும் விசாலமாக உள்ளது. சிறிய பண்ணைகள் கூட சிறப்பாக அமைவதற்கான தேவை உள்ளது அது டிஜிட்டல் கருவிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் சாத்தியமானதே. விவசாயிகளின் மறைந்துள்ள அறிவை ஒருங்கிணைப்பது, சேர்ப்பது போன்றவற்றை டிஜிட்டலில் உள்ள வெளிப்படையான அறிவு மற்றும் மற்ற மறையான ஆதாரங்கள் வழியாக செய்வது மாறிவரும் பருவநிலை மாற்றம் மற்றும் சந்தை சவால்கள் போன்ற நிலைகளில் செயல்முறையில் திறமையாக முன்னெடுக்கும் ஒருவழியாகும். அண்மை அனுபவங்கள் டிஜிட்டல் அறிவு ஆதாரங்கள் செயல்முறையில் மதிப்புமிக்கவையாகவும், குறிப்பாக இந்த பெருந்தொற்று காலக்கட்டத்திலும், அது நுகர்வோர் மற்றும் விவசாயிகளை அடையக் கூடியதாய், தொலைதூர பகுதிகளை சென்றடைவதாக உள்ளது.

இருப்பினும், இது சவால்கள் இல்லாதது இல்லை. மோசமான இணைய இணைப்பு பல பயனாளர்களால் மிகப்பொிய வரம்பாக கருதப்படுகிறது. தீர்வுகளுக்கு பல நிபுணர்களின் ஆலோசனைகள் தேவைப்படுவதால், நேரடி தொடர்புகளுக்குத் தேவையான நேரம் மற்றும் விரைவான பதில்களுக்கான காலக்கெடுவைச் சந்திப்பது ஆகியவை பிற முக்கிய சவால்களில் அடங்கும். பல மொழி பயன்முறையில் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது மிகவும் சவாலானது என்று கண்டறியப்பட்டது. இடைவெளியைக் குறைப்பதற்கான சில புதுமையான தீர்வுகள், “உள்ளூர் புள்ளிகளில் வைப்பை இடங்களை கொண்ட பொதுவான டிஜிட்டல் வசதி மையங்கள் மற்றும் சமூக டிஜிட்டல் மாஸ்டர் விவசாயிகள் பயிற்சித் திட்டங்கள் ஆகியவை அடங்கும். டிஜிட்டல் அடிப்படையிலான தகவல் பயன்பாடுகள் தென்னை விவசாயத்தில் பல பங்குதாரர்களை ஆதாிக்கவும் சேவை செய்யவும் முடியும்.

அனிதா குமாரி. பி


Anithakumari P
Principal Scientist (Agricultural Extension),
ICAR Central Plantation Crops Research Institute (CPCRI),
Regional Station, Krishnapuram P.O.,
Kayamkulam – 690533

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2020, வால்யூம் 22, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...