உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பைன் ஊசி உயிரி- பிரிக்கெட் முயற்சி, காடுகளில் அதிகாிக்கும் தேங்கும் பைன் ஊசிகள் காட்டுத்தீ அபாயத்தை அதிகாிக்கும் ஒரு சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருந்ததை, தூய்மையாக எரியும் உயிரி-பிரிக்கெட்டுகளாக மாற்றி மதிப்புமிக்க வளமாக மாற்றியமைத்தது. நீர்- ஆற்றல்-உணவு-காடுகள்-சுற்றுச்சூழல்-பாலினம் என்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றை திறம்பட ஒருங்கிணைத்த இந்த முயற்சி, நிலைத்த கிராமப்புற வளர்ச்சிக்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.
உத்தரகண்டின் மத்திய இமயமலைப் பகுதி, வேளாண்-சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார சவால்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் நோக்கில், சிர் பைன் மரங்கள் பரவலாக வளர்ந்ததன் விளைவாக, முன்பு காணப்பட்ட பல்வகை ஓக் மற்றும் அகன்ற இலைமரக்காடுகள் பெருமளவில் மாற்றமடைந்துள்ளன. இந்த மாற்றம் பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
பைன் மரங்களிலிருந்து உதிரும் ஊசிகள், உள்ளூர் மக்களால் பிருல் என்று அழைக்கப்படுகின்றன. இவை காட்டு நிலப்பரப்பில் அடர்த்தியான, பிசின் நிறைந்த மற்றும் நீரை ஊடுருவ விடாத ஒரு படலாமாக தேங்குகின்றன. இதன் காரணமாக மழைநீர் மண்ணுக்குள் ஊடுருவுவது தடைபட்டு, அருகிலுள்ள விவசாய நிலங்களில் நீர்ப்பற்றாக்குறை மேலுமும் தீவிரமடைகிறது. மேலும், மண் அரிப்பு வேகமடைகிறது. மிக முக்கியமாக, இவ்வாறு தேங்கும் உயிரிப்பொருள் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மையுடையதால், ஆண்டுதோறும் ஏற்படும் பேரழிவான காட்டுத்தீக்கு முக்கிய எரிபொருளாக செயல்படுகிறது. இதன் விளைவாக உயிரியல் பன்முகத்தன்மை அழிகிறது. அதிகளவு கார்பன் வளிமண்டலத்தில் வெளியேறுகிறது. மேலும் மண்ணின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
சமூக ரீதியாக, இப்பகுதியின் கிராமப்புற பொருளாதாரம் வாழ்வாதார வேளாண்மை மற்றும் காட்டு வளங்களைச் சார்ந்துள்ளது. இந்த அமைப்பு பெரும்பபாலும் பெண்களின் உழைப்பின் மீது தங்கியுள்ளது. பெண்கள் விவசாயப் பணிகளையும், கால்நடை பராமாிப்பையும் மேற்கொள்வதுடன், தினமும் பல மணி நேரம் விறகுகளைச் சேகாிக்கும் கடினமான பணியையும் மேற்கொள்கின்றனா;. இந்த கடின உழைப்பு, வருமானம் ஈட்டக்கூடிய தொழில்முனைவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அவர்களின் வாய்ப்புகளை குறைப்பதோடு அவர்களின் உடல் மற்றும் மனநலத்தையும் பாதிக்கிறது.
மேலும், வாழ்வாதாரத்தைத் தேடி ஆண்கள் அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்ததால், வேளாண்மை பெரும்பாலும் பெண்களைச் சார்ந்ததாக மாறியுள்ளது. இதனால், பெண்களின் பொறுப்புகள் அதிகாித்தாலும், முடிவெடுக்கும் அதிகாதரம் அல்லது வளங்களுக்கான அணுகல் அதே அளவில் அதிகாிக்கவில்லை. இதன் விளைவாக, ஒரு தீய சுழற்சி உருவானது. அதாவது, சுற்றுச்சூழல் சீரழிவு பெண்களின் பணிச்சுமையை மேலும் அதிகாித்தது. அதே நேரத்தில், அந்த அதிகப்படியான சுமை, நிலைத்த நில மேலாண்மை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதற்கான திறனை மேலும் கட்டுப்படுத்தியது.
மூலோபாய அணுகுமுறை: ஒருங்கிணைந்த இணைப்பு
பொதுவாக, காட்டுத் தீ, கிராமப்புற ஆற்றல் மற்றும்; பெண்களின் வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகள் தனித்தனியாகவே மேம்பாட்டு முயற்சிகளில் கையாளப்பட்டன. ஆனால், உத்தரகாண்ட் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட உத்தரகாண்ட் மாநில கிராமப்புற மக்களிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றலை ஊக்குவித்து வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை உருவாக்குவதற்காக சிர் பைன் இலைகளை அடிப்படையாகக் கொண்ட உயிரி -பிரிக்கெட்டுகள் தொழில்நுட்பத்தை செயல்விளக்கி விரிவுபடுத்தும் திட்டம். 2022-2024 காலப்பகுதியில் ஜி.பி. பந்த் தேசிய இமயமலைச் சுற்றுச்சூழல் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் வழக்கமான அணுகுமுறையிலிருந்து விலகி, ஒருங்கிணைந்த மூலோபாய அணுகுமுறையைப் பின்பற்றியது.
இந்தத் திட்டத்தின் மையக் கருத்து என்னவெனில், பொதுவான பிரச்சனையாகக் கருதப்பட்ட சிர் பைன் உதிர்ந்த இலைகளே தீர்வாக மாற முடியும் என்பதாகும். இந்த மூலோயம் நான்கு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது.
• எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய, குறைந்த செலவிலான பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயனபடுத்துதல்.
• பெண்களை மாற்றத்தின் முதன்மை முன்னோடிகளாக மையப்படுத்துதல்.
• குழுக்கள் மற்றும் கூட்டுறவுகள் மூலம் கூட்டுச் செயல்பாட்டை ஊக்குவித்தல்.
• திட்டம் முடிந்த பின்னரும் பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க, ஆரம்பத்திலிருந்தே தொழில்முனைவு மனப்பன்மையை உருவாக்குதல்.
முயற்சிகள்: செயல்விளக்கத்திலிருந்து தொழில்முனைவிற்கு
இத்திட்டம் ஒன்றுக்கொண்று துணைபுரியும் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது.
முதல் கட்டம், திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தியது. அல்மோரா மாவட்டத்தின் 30 கிராமங்களைச் சேர்ந்த 835 பேருக்கு, உயிரி-பிரிக்கெட்டுகள் தயாரிக்கும் முழுமையான செயல்முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த செயல்முறையில் உலர்ந்த பைன் இலைகளைச் சேகாித்தல், ஆக்சிஜன் இல்லாத கட்டுப்படுத்தப்பட்ட குழிகளில் அவற்றைக் காியாக்குதல், பின்னர் களிமண் பிணைப்புப் பொருளுடன் காியை கலந்து எளிய இருப்பு அச்சைப் பயன்படுத்தி பிரிக்கெட்டுகளாக அழுத்தி வடிவமைத்தல் ஆகியவை இடம்பெற்றன. பயிற்சி பெற்றவர்களில் 66 சதவீதம் பேர் பெண்கள் என்பதால், ஆற்றல் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களிடையே இத்தொழில்நுட்பம் வெற்றிகரமாக சென்றடைந்தது.
இரண்டாம் கட்டத்தில், திட்டத்தின் அறிவியல் மற்றும் பொருளாதார அடித்தளங்கள் வலுப்படுத்தப்பட்டன. இதில், எரிபொருளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதுடன், விரிவான பொருளாதாரப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள், ஒரு தொகுப்புக்கு ரூ. 165 நிகர இலாபமும், 1.49 என்ற நன்மை-செலவு விகிதமும் இருப்பதை நிரூபித்து, இத்தொழில்முயற்சியின் பொருளாதார சாத்தியத்தை உறுதிப்படுத்தின. மேலும், உள்ளூர் உரிமையையும், தொடர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் ஆறு பெண்களுக்கு முதன்மைப் பயிற்றுநர்களாக பயிற்சி அளிக்கப்பட்டது
மூன்றாம் கட்டம், ஆதரவானா சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. இதன் ஒரு பகுதியாக, தன்னார்வ அமைப்புகள், அரசு துறைகள் மற்றும் தனியார் சந்தைப்படுத்துநர்கள் ஆகியோருடன் 30 கூட்டாண்மைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் உயிரி-பிரிக்கெட்டுடகளின் விற்பனை எளிதாக்கப்பட்டதோடு, இந்த முயற்சி உள்ளூர் பொருளாதார அமைப்பில் நிலையான இடத்தைப் பெற்றது.
விளைவுகள்: பல பாிமாண மாற்றம்
இந்த முயற்சியின் தாக்கம் இயற்பியல், சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது.
சூழலியல் ரீதியாக, உலர்ந்த பைன் இலைகளை முறையாகச் சேகாித்தால் காடுகளில் எரிபொருள் சுமை குறைக்கப்பட்டு, காட்டுத்தீ அபாயம் தணிக்கப்பட்டது. மேலும், விறகிற்கு மாற்றாக சுத்தமாக எரியும் உயிரி-பிரிக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டதால், உயிருடன் நிற்கும் மரங்களின் மீது இருந்த அழுத்தமும் குறைந்தது.
சமூக ரீதியாக, திட்டத்தின் தாக்கம் மிகவும் ஆழமானதாக இருந்தது. திட்டம் நிறைவடைந்த பின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார நிலை 100 சதவீதம் உயர்ந்ததாக பதிவானது. மேலும், 87.5 சதவீத பெண்கள், குடும்ப முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் குறுந்தொழில் முனைவில் தங்களின் பங்கு அதிகாித்துள்ளதாக தொிவித்தன. அதே சமயம், சமூக வன மேலாண்மை மற்றும் கிராமக் கூட்டங்களில் பெண்களின் பங்கேற்பும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது.
பொருளாதார ரீதியாக, இம்முயற்சி புதிய வருமான வாய்ப்பை உருவாக்கியது. 30 பயனாளர்களின் வருமானத்தை கண்காணித்தபோது, அவர்களின் மொத்த வருமானம் சுமார் 50 சதவீதம் உயர்ந்தது. தனிநபர் அளவில், வருமான உயர்வு 8 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருந்தது. பெண்கள், உயிரி-பிரிக்கெட்டுகளை உள்ளூர் குடும்பங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து மாதாந்திர வருமானம் ஈட்டத் தொடங்கினர். இதன் மூலம் கழிவுப் பொருளாகக் கருதப்பட்ட பைன் இலைகள் மதிப்புமிக்க பொருளாக மாற்றப்பட்டதுடன், உள்ளூர் தொழில்முனைவு உணர்வும் வளர்ச்சியடைந்தது.
வெற்றிக்கான இயக்க சக்தி:
இயற்கை வள மேலாண்மையில் சூழலியல் பாதுகாப்பும் சமூகப் பங்கேற்பும்
இந்த முயற்சி காட்டுத்தீ அபாயத்தைக் குறைத்து, மண் வளத்தை மேம்படுத்தியதுடன், கார்பன் சேமிப்பு, உயிரின வாழிடப் பாதுகாப்பு, மண் நிலைத்ததன்மை போன்ற முக்கிய சூழலியல் சேவைகளையும் வழங்கியது. இதன் மூலம் பல்லுயிர் பாதுகாப்பும் சூழலியல் சமநிலையும் வலுப்பெற்றன.
மேலும், வீடுகளுக்குள் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் அதனால் உருவாகும் உடல்நல அபாயங்கள் குறைக்கப்பட்டதால், சமூகத்தின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டது. இம்முயற்சி சூழலமைப்பு அடிப்படையிலான தகவமைப்பு அணுகுமுறைக்கும் பங்களித்தது. இதன் மூலம் காடுகளின் மீள்திறன் அதிகாிக்கப்பட்டது. நுண்ணிய காலநிலை கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் காட்டுத்தீ, வறட்சி போன்ற காலநிலை மாற்ற விளைவுகளுக்கான பாதிப்புகள் குறைக்கப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த நன்மைகள், காலநிலைத் தாங்குதிறன், சூழலியல் நிலைத்ததன்மை மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இம்முயற்சியின் முக்கிய பங்கினை வெளிப்படுத்துகின்றன. இது சூழலமைப்பு அடிப்படையிலான அணுகுமுறைகளின் அடிப்படைக் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது.
இந்த முயற்சியின் வெற்றிக்கு பல முக்கிய காரணிகள் உள்ளன. முதலாவதாக, சமூகத்தினர் அனைவரும் உணர்ந்து வந்த உலர்ந்த பைன் இலைகள் என்ற பொதுவான பிரச்சனையை நேரடியாகத் தீர்க்க முயன்றதால், மக்கள் உடனடியாக இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இரண்டாவதாக, பொருத்தமான தொழில்நுட்பம், பெண்களின் முன்னணி பங்கு மற்றும் தௌிவான தொழில்முனைவு நோக்கம் ஆகியவற்றை சிறப்பாக இணைத்ததால், இது ஒரு திறன் பயிற்சியாக மட்டுமின்றி இலாபகரமான தொழில் வாய்ப்பாகவும் மாறியது. மூன்றாவதாக, குழுக்கள் வழியாக கூட்டுச் செயல்பாட்டை ஊக்குவித்ததன் மூலம் வளங்கள் பகிர்வு, கூட்டு உழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் சாத்தியமானது. இதனால், தனிநபர் முயற்சிகளின் வரம்புகள் கடக்கப்பட்டன. இறுதியாக, அரவு, தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களைக் கொண்ட விரிவான ஆதரவு வலையமைப்பு உருவாக்கப்பட்டதால், சந்தை இணைப்புகள் வலுப்பெற்று, இம்முயற்சி நீண்டகாலம் நிலைத்திருக்கும் வலுவான அடித்தளத்தைப் பெற்றது.
பாதுகாப்பு -நெக்சஸ் ஒருங்கிணைப்பு மற்றும் தாக்கத்தை விரிவுபடுத்துவதற்கான பாிந்துரைகள்
கள மட்டத்தில் செயல்படும் நிபுணர்களுக்காக, அடுத்த கட்டமாக பெண்களுக்கு ஏற்ற, பல நிலை இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்த வேண்டும். உதாரணமாக, உடல் சுமையைக் குறைக்கும் பணிச்சூழலியல் வடிவடைப்புடைய ரேக்குகள் மற்றும் பைன் இலைகளை சேகாிக்கும் கருவிகள் பயன்படுத்தப்படலாம். இது பெண்களின் உடல் உழைப்பைக் குறைத்து, செயல்திறனை மேம்படுத்தும். மேலும், உயிர்ச்சத்து நிறைந்த பிரிக்கெட் சாம்பலை இயற்கை உரமாகப் பொதியிட்டு சந்தைப்படுத்துதல் போன்ற துணை தயாரிப்புகளில் ஈடுபடுவதன் மூலம் கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்கலாம். வெற்றிகரமாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை பெண்கள் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பதிவு செய்ய உதவுவது, அவர்களுக்கு நிதி வசதிகள், சந்தை அணுகல் மற்றும் நுகர்வோர் மையப்படுத்தப்பட்ட மதிப்புச் சங்கிலிகளில் இணையும் வாய்ப்புகளை அதிகாிக்கும்.
கொள்கை வகுப்பாளர்களுக்கு, இந்த மாதிரியை தேசிய அளவிலான திட்டங்களுடன் ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியமானது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டத்தின் கீழ் “காட்டுத் தீ தடுப்பதற்காக உலர்ந்த பைன் இலைகளை சேகாித்தல்” என்ற பணியை அங்கீகாிக்கப்பட்ட பணியாக சேர்ப்பது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பையும், உயிரி-பிரிக்கெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பையும், உயிரி-பிரிக்கெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருளையும் வழங்கும். மேலும், காடுகளின் தரைப் பகுதியில் சுத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு ஹெக்டேருக்கும் சமூகங்களுக்கு “பசுமைக் கடன்” அல்லது நேரடி நிதி ஊக்கத்தொகையை வழங்குவதன் மூலம் அவர்கள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவையை அதிகாரப்பூர்வமாக அங்கீகாித்து ஊக்குவிக்கலாம். அதோடு, பிரிக்கெட் தயாரிப்பு கருவிகளுக்கான இலக்கு மானியங்கள் வழங்குதல் மற்றும் மாநில அரசுத் துறைகள் பெருமளவில் பிரிக்கெட்களை கொள்முதல் செய்ய வசதிகளை ஏற்படுத்துதல், இந்த முயற்சியின் விரிவாக்கத்தையும் நீண்டகால நிலைத்ததன்மையையும் உறுதி செய்யும்.
பெண்கள் தலைமையிலான இந்த பைன் இலை உயிரி-பிரிக்கெட் முயற்சி, மலைப்பகுதிகளின் சமூக-சுற்றுச்சூழல் அமைப்பில் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் ஆகிய ஒன்றோடொன்று சார்ந்த துறைகளை இணைக்கும் ஒருங்கிணைந்த நெக்சஸ் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். காடுகளில் பிரச்சனையாகக் காணப்படும் பைன் இலைக் கழிவுகளை நிலையான எரிசக்தியாக மாற்றுவதன் மூலம், இது காட்டுத் தீ அபாயத்தைக் குறைக்கிறது. (சுற்றுச்சூழல்), உட்புற காற்று மாசுபாட்டைக் குறைக்கும் தூய்மையான எரிபொருளை வழங்குகிறது (ஆற்றல்), மேலும் கிராமப்புற பெண்களுக்கு புதிய தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை பொருளாதார ரீதியாக (வாழ்வாதாரம்)வலுப்படுத்துகிறது. விரிவுபடுத்தப்பட்ட நீர்-ஆற்றல்-உணவு-காடுகள்-சுற்றுச்சூழல் அமைப்புகள் – பாலின சமத்துவம் நெக்சஸ் நிலையான வளர்ச்சியின் பரஸ்பர தொடர்புகளை தௌிவாக வெளிப்படுத்துகிறது. காடுகளைப் பாதுகாப்பது நீரியல் சமநிலையை (நீர்) நிலைநிறுத்துகிறது. தூய்மையான எரிசக்தி சமூக நலனை மேம்படுத்துகிறது.(ஆற்றல்). நிலையான வேளாண்மை உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது (உணவு), உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் அமைப்புகள்). இத்துறைகளுடன் பாலின சமத்துவத்தை மையப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், சமூகத் தாங்குதிறன் அதிகாிக்கிறது. வளங்கள் சமமாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சமூக-சுற்றுச்சூழல் தொடர்புகளை முழுமையாக நிர்வகிக்கும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு உருவாகிறது. இவ்வாறு, நெக்சஸ் அடிப்படையிலான தீர்வுகள் சுற்றுச்சூழல் நிலைத்ததன்மை, காலநிலைத் தாங்குதிறன் மற்றும் சமூக-பொருளாதார சமத்துவத்தை ஒரே நேரத்தில் முன்னேற்றக்கூடியவை என்பதை இந்த மாதிரி நிரூபிக்கிறது.
இந்தக் கட்டமைப்பு, ஒரு துறையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது அழுத்தங்கள் மற்ற துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்துகிறது. எனவே, நிலையான வள மேலாண்மையை உறுதி செய்யவும், சமூக சமத்துவத்தை மேம்படுத்தவும், கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் பல்துறை ஒத்துழைப்பு அவசியம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. துறைகளுக்கிடையிலான சமநிலைகள் மற்றும் பரஸ்பர நன்மைகளை அடையாளம் காணுதல், சுற்றுச்சூழல் சேவைகளின் மதிப்பீடு, உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதுமைகள் மூலம் தாங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவை இந்தக் கட்டமைப்பின் முக்கிய இயக்க சக்திகளாகும்.
பைன் உலை உயிரி-பிரிக்கெட் முயற்சியில் இந்த நெக்சஸ் அணுகுமுறையைப் பயன்படுத்தும்போது, குறிப்பாக பைன் இலை உயிரித் திரளின் அகற்றல் மற்றும் பயன்பாடு எவ்வாறு தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஆதாிக்கிறது என்பதை தௌிவாகக்காட்டுகிறது. இந்த அணுகுமுறை காட்டுத் தீ அபாயத்தைக் குறைப்பதோடு, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் சார்ந்த தழுவல் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. அதே நேரத்தில், பைன் இலை சேகாிப்பு ,செயலாக்கம் மற்றும் பிரிக்கெட் உற்பத்தி போன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி, மலைப்பகுதிய சமூகங்களின் சமூகத் தாங்குதிறனை வலுப்படுத்துகிறது.
இந்த பரஸ்பர சார்புகளை அங்கீகாித்து அவற்றை ஒருங்கிணைந்த முறையில் அணுகுவதன் மூலம, இந்த நெக்சஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமூக நலன் மற்றும் பாலின சமத்துவத்துடன் இணைக்கிறது. இந்த அணுகுமுறை, வளங்களை திறம்பட பயன்படுத்தும், சமூக-சுற்றுச்சூழல் தாங்குதிறனை வலுப்படுத்தும், மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதாிக்கும் உள்ளூர் சூழலுக்கு ஏற்ற தீர்வுகளை வடிவமைக்க உதவுகிறது. இதன் விளைவாக, பிரூல் உயிரி-பிரிக்கெட் திட்டம், காலநிலைத் தாங்குதிறன் கொண்ட, பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட உலகின் மலைப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தக்கூடிய மற்றும் மீளப் பயன்படுத்தக்கூடிய முன்னோடி மாதிரியாக திகழ்கிறது.
ஹர்ஷித் பந்த்
Harshit Pant, Scientist Centre for Socio-economic Development (CSED) G.B. Pant National Institute of Himalayan Environment (GBP-NIHE), Kosi-Katarmal, Almora-263643, Uttarakhand, India E-mail: harshit.pantj@gbpihed.nic.in
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2025, வால்யூம் 27, இதழ் 3



