“போடி” சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை


மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்பட்ட “போடி” சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை, சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. அதன் பல்வேறு ஒருங்கிணைந்த கூறுகள் மூலம், இம்முறை வருமானம், குடும்ப ஊட்டச்சத்து, பண்ணையின் தாங்குதிறன் மற்றும் நிலைத்ததன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதை நிரூபித்துள்ளது.


இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குவதில் மீன்வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இது இந்தியாவில் சுமார் 1.45 கோடி (14.5 மில்லியன்) மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. கடல் மற்றும் பெருங்கடல் மீன்பிடிப்புடன், நன்னீர் மீன்வளர்ப்பும் வாழ்வாதாரத்தை ஆதாிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், வற்றிவரும் நீர் ஆதாரங்களும் அதிகாித்து வரும் நீர் மாசுபாடும் உள்நாட்டு மீன்வளத்திற்கு சவாலாக அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பல நீர்நிலைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மேலும் அவை மீன்வளத்தை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளன. மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள எடாபள்ளி மற்றும் பாம்ரகாட் ஆகிய பகுதிகளில் மீன்வளத்தை ஊக்குவிப்பதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளை கொண்ட பகுதிகளாகும்.
எடாபள்ளி மற்றும் பாம்ரகாட் பகுதிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். இப்பகுதியின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தற்சார்பு விவசாயம் மற்றும் சில வன வளங்களையே நம்பியுள்ளனர். இவை காலநிலை மாற்றத்தால் மேலும் பாதிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக அழிந்து வரும் இயற்கை வளங்கள் மற்றும் குறைந்த பயிர் பன்முகத்தன்மை ஆகியவை விவசாயிகளின் பாதிப்புத் தன்மையை மேலும் அதிகாித்துள்ளன.
மீன்வளர்ப்பு சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணை முறை: ஒரு முக்கிய வாய்ப்பு

இப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகங்கள் “போடி” உட்பட சில செழுமையான பாரம்பாிய முறைகளைப் பராமாித்து வருகின்றனா;. இப்பகுதியில் நிலம் வைத்துள்ள குடும்பங்களில் பெரும் பகுதியினா; “போடி” என்று அழைக்கப்படும் சிறிய நீர்நிலைகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளனா;. விவசாய நிலங்களில் இந்த போடிகள் அமைந்திருப்பது இப்பகுதியின் ஒரு சிறப்பியல்பாகும். காரிப் பருவத்தில் வறட்சியான காலங்களில் நெற்பயிர்களுக்குப் பாதுகாப்பான நீர்ப்பாசனத்தை இந்த போடிகள் வழங்குகின்றன. சில விவசாயிகள் வீட்டு உபயோகத்திற்காக இந்த போடிகளிலிருந்து மீன்களையும் பிடிக்கின்றனர்.

ஆரம்பகட்ட கணக்கெடுப்பின்போது, இந்த போடிகள் முறையாகப் பராமாிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. மேலும், பயிர்ச் சாகுபடி முறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியமும் இருந்தது. எனவே, நபார்டு (தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி) ஆதரவுடன் “பயாப் அறக்கட்டளை” மூலம் “போடி” சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணை முறை ஊக்குவிக்கப்பட்டது. பண்ணை பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் தேவையுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் தாங்குதிறனையும் மேம்படுத்துவதே இதன் குறிக்கோளாக இருந்தது. இந்த முன்முயற்சி தற்போது 8 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுழற்சித்தன்மை மற்றும் மீள்தன்மை பற்றிய கருத்து

“போடி” சார்ந்த இம்முறை, விவசாய அமைப்பில் சுழற்சித்தன்மையை ஏற்படுத்த உதவும். இந்தச் சுழற்சித்தன்மையானது போடி சார்ந்த விவசாய முறையை மையமாகக் கொண்டே அமையும். போடிகளைத் தூர்வாருவது (ஆழப்படுத்துவது) அவற்றின் நீரைத் தக்கவைக்கும் திறனையும், அதை ஒட்டியுள்ள நிலங்களின் மண் ஈரப்பதத்தையும் மேம்படுத்த உதவும். போடிகளில் உள்ள நீர்வாழ் தாவரங்களை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இது உள்நாட்டு மீன் வளர்ப்பிற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். போடி நீர்நிலைகளை ஒட்டி கோழி மற்றும் வாத்து வளர்ப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. கோழி மற்;றும் வாத்துக்களின் கழிவுகள் (எச்சங்கள்), போடி நீரின் ஊட்டச்சத்தை அதிகாித்து, நீர்வாழ் தாவரங்கள் மற்றும் மீன்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவும். மீன்வளர்ப்புக் கழிவுகள் நீரில் தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை மேலும் மேம்படுத்தும். இந்த நீர் தோட்டக்கலைத் தாவரங்கள் மற்றும் காய்கறிப் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும். இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நீர், தாவரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகாிக்கவும் உதவும். அதே வேளையில், செயற்கை உரங்களின் மீதான தேவையைக் குறைக்கும்.

சமூக அமைப்பு மற்றும் திறன் மேம்பாடு

விவசாயிகள் “கிராம நயோஜன் சமிதி” என்று அழைக்கப்படும் 8 கிராமத் திட்டக்குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத் திட்டக் குழுக்கள், போடி விவசாயிகளுக்கான கிராம அளவிலான முன்முயற்சிகளைத் திட்டமிடுவதிலும், அவற்;றைத் தொடர்ந்து கண்காணிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்வுகளுக்காக விவசாயிகளை ஒன்றிணைப்பதில் இக்குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், இக்குழுக்களை ஒன்றிணைத்து வட்டார அளவில் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, விவசாய உள்ளீடுகளைக் கூட்டாகக் கொள்முதல் செய்யவும், விவசாய விளைபொருட்களுக்கான சந்தை இணைப்புகளை ஏற்படுத்தவும் உதவும்.
மீன் வளர்ப்பின் பல்வேறு மேம்பட்ட முறைகள் குறித்து விவசாயகளுக்கு விழிப்புணர்வும் பயிற்சியும் அளிக்கப்பட்டன. இப்பயிற்சிகளில், போடியை தயார் செய்தல், நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல், குளங்களில் மீன் குஞ்சுகளை விடுதல், தீவன மேலாண்மை, நோய்களைக் கண்டறிதல் மற்றும் மீன் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்தல் போன்றவற்றிற்கான நேரடி களச் செயல்விளக்கங்களும் அடங்கும். இதில் கிட்டத்தட்ட 300 விவசாயிகள் பயிற்சி பெற்றனர்

ஆரம்பத்தில், பயிற்சி அளித்தவர்களால் பங்கேற்பாளர்களின் பொது மொழியான “மடியா” மொழியில் பேச முடியவில்லை. இந்தச் சவாலை எதிர்கொள்ள, பயாப் நிறுவனம் மராத்தி மொழியைப் புரிந்துகொள்ளக்கூடிய சமூகத் தன்னார்வலர்களை கிராமங்களிலிருந்து கண்டறிந்தது. இந்தச் சமூகத் தன்னார்வலர்கள் பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்களின்போது மொழிபெயர்ப்பிற்கு உதவினர். பயிற்சிப் பொருட்களும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பட விளக்கங்களுடன் “மடியா” மொழியில் மொழிபெயர்க்கப்பட்டனர்

கள அளவிலான முன்முயற்சிகள்
பாரம்பாியமாக, போடிகள் நெல் வயல்களுக்குப் பாதுகாப்புப் பாசனத்திற்கான நீர் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான போடிகள் தூர்ந்த போயுள்ளதால், அவற்றின் நீர் சேமிப்புத் திறன் குறைவாக உள்ளது. எனவே, முதலில் போடிகள் தூர்வாரப்படுகின்றன. தோண்டி எடுக்கப்படும் வண்டல் மண் வயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த போடிகள் மேம்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இச்செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன், குளத்தின் அளவு மற்றும் குளத்தைத் தயார் செய்யும் சாியான முறைகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. குளத்தைத் தயாரிப்பதில் உழுதல் மற்றும் சுண்ணாம்பு இடுதல் போன்ற தகுந்த நடைமுறைகள் சேர்க்கப்பட்டிருந்தன. வளர்க்கப்படும் முக்கிய மீன் வகைகளில் ரோகு, கட்லா, புல் கெண்டை மற்றும் சாதாரண கெண்டை ஆகியவை அடங்கும். இச்செயல்பாட்டின் மூலமாக வருவாயை அதிகப்படுத்த, நீரின் மேல்மட்டத்டதில் உண்பவை, அடிமட்டத்தில் உண்பவை மற்றும் நடுமட்டத்தில் உண்பவை ஆகிய மீன் வகைகளின் கலவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குளத்திலும் உள்ள நீர் இருப்பின் அடிப்படையில் விரால்மீன்களின் எண்ணிக்கையைக் கணக்கிட விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாட்டுச்சாணம், புண்ணாக்கு மற்றும் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மீன் தீவனத்தை முறையாக நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இப்பகுதியில் சாியான நேரத்தில் மற்றும் தரமான விரால்மீன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தப் பகுதியில் ஒரு மீன் குஞ்சு பொரிப்பகம் ஊக்குவிக்கப்பட்டது.

போடிகளின் மீது “மச்சான்” வடிவிலான கோழிக் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. மீன் வளர்ப்பிற்கு ஆதரவளிப்பதில் இக்கோழிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இக்கோழிகளின் கழிவுகள் மீன்களுக்கான தீவனக் கிடைப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன. இது தவிர, கோழி முட்டைகளும், கோழிகளும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமான ஆதாரமாக விளங்குகின்றன. கோழிகளுக்கு முறையான தடுப்பூசி மற்றும் பராம்பாிய வைத்திய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்பகுதியில் நெல் முக்கியப் பயிராக இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இரகங்கள்; உட்பட மேம்பட்ட சாகுபடி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சீத்தாப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் பண்ணை வரப்புகளிலும், போடிகளின் வரப்புகளிலும் நடப்பட்டன. அவர்களின் விளைநிலத்தின் சிறிய பகுதிகளில் ஊட்டச்சத்துத் தோட்டங்கள் வடிவில் பல்வேறு வகையான காய்கறிப் பயிர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீன் வளர்ப்பின் காரணமாக போடிகளில் உள்ள நீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த நீர் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படுவதன் மூலம், தாவரங்களுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. மட்கவைத்தல் நடைமுறைகள் மற்றும் மண்புழுஉரம் தயாரிப்பு மூலம் காிமப் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காடுகளின் மரங்களைப் பராமாிப்பது மற்றும் மரமில்லா காட்டுப் பொருட்கள் நிலையான முறையில் அறுவடை செய்வது குறித்து விழிப்புணா;வும், திறன் மேம்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டன.

வெளிப்பாடுகள்/முடிவுகள்
போடி சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணை முறையின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு.
ஓவ்வொரு போடியிலும் உற்பத்தி செய்யப்படும் மீனின் சராசாி அளவு குடும்பத்திற்கு சுமார் 30 கிலோவாக இருந்தது. மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம், விவசாயிகள் ஒரு போடிக்கு ஆண்டுக்கு சுமார் 128 கிலோ மீன் அறுவடை செய்ய முடிந்தது. இது அவர்களின் வருமானத்தை மேலும் உயர்த்த வழிவகுத்துள்ளது. சராசாி பண்ணை வருவாய் ஆண்டுக்கு ரூ. 45000 த்திலிருந்து கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை அதிகாித்துள்ளது. எதிர்காலத்தில் பழ மரங்கள் இந்த வருவாயை மேலும் அதிகாிக்கும். விவசாயிகள் சிறந்த திறன்களைப் பெறப் பெற, மீன்வளர்ப்பு மற்றும் கோழிவளர்ப்பு மூலமான வருமானமும் மேம்படும். இந்தத் முயற்சிக்கு முன்னும் பின்னும் உள்ள ஆதாரம் வாரியான வருவாய்  வழங்கப்பட்டுள்ளது.

சவால்களை எதிர்கொள்ளுதல்
தொடக்கக் கட்டத்தில், போடி சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணை முறையை ஊக்குவிக்கும்போது பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன. இந்தச் சவால்களில் பங்கேற்பாளர்களிடையே இருந்த குறைந்த அளவிலா நம்பிக்கையும் ஒன்றாகும். இது முறையான கலந்துரையாடல்கள் மற்றும் செயல்விளக்கங்கள் மூலமாக களையப்பட்டது.

இப்பகுதியில் தரமான மீன் குஞ்சுகள் கிடைப்பது மற்றொரு சவாலாக இருந்தது. அண்டை பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற மீன் குஞ்சு பொரிப்பகங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் இந்தச் சவாலுக்குத் தீர்வு காணப்பட்டது. மேலும், நீண்ட காலத்திற்குத் தரமான மீன் குஞ்சுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இப்பகுதியிலேயே ஒரு புதிய மீன் குஞ்சு பொரிப்பகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேய்ச்சல் விலங்குகள் போடி கட்டமைப்புகளுக்கும் பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி வந்தன. இதனால், கிராம அளவில் கட்டுப்படுத்தப்பட்ட மேய்ச்சல் முறையைப் பின்பற்றுவது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம பஞ்சாயத்துகள் எடுத்த இந்த முடிவு, மேலும் பல விவசாயிகளை இந்த போடி சார்ந்த அணுகுமறையைப் பின்பற்றவும், ரபி பருவப் பயிர்களைச் சாகுபடி செய்யவும் ஊக்குவித்துள்ளது. சில விவசாயிகள் மீன்கள், காய்கறிகள் மற்றும் வளர்ப்புப் பறவைகள் திருடப்படுவதையும், அதே சமயம் வனவிலங்குகளால் வளர்ப்புப் பறவைகள் தாக்கப்படுவதையும் எதிர்கொண்டனர். விவசாயிகள் தங்கள் குடியிருப்புகளை போடிகளுக்கு அருகிலேயே மாற்றிக் கொள்வதன் மூலம் அல்லது தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்வதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், பண்ணைகளைச் சுற்றி குறைந்த செலவிலான வேலிகளை அமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யோகேஷ் சாவந்த், ஷெலேஷ் பகத், கைலாஷ் கும்பரே மற்றும் சாகர் ஜாதவ்


Yogesh Sawant
Chief Thematic Programme Executive
(Farm Based Livelihoods and Climate Action)
BAIF Development Research Foundation
BAIF Bhavan, Dr. Manibhai Desai Nagar Warje
Pune – 411058. E-mail: ygsawant@baif.org.in

மூலம்:
லீசா இந்தியா, மார்ச் 2025, வால்யூம் 27, இதழ் 1