விதை பாதுகாவலர்கள்- பெண்கள் வழிநடத்தும் ஒரு பண்ணைத் தொழில்


வழிகாட்டுதலோடும் பயிற்சி உதவியுடனும், மஹாராஷ்டிராவில் உள்ள பெண்கள் தொழில்முனைவோர்கள் தரமான விளைபொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவதற்கான நம்பிக்கையை வளர்த்துள்ளது. வீடுகளிலும், வயல்களிலும் அவர்கள் அளித்த பங்கை மறைக்கப்பட்ட நிலை மாறி,பெண்கள் தற்போது வெளியில் தொியும் அளவிற்கு, சமூகத்தால் அதிகளவில் ஏற்றுகொள்ளும் வெற்றிபெற்ற தொழில்முனைவோராக உருவாகி வருகின்றனர்.


இந்தியாவின் நாற்பது கோடி கிராமப் பெண்கள், கிராம பொருளாதாரத்தின் இதயமாக இருக்கின்றனர். தங்களின் வீடுகளை மேம்படுத்துவதை தாண்டி, பெண்கள் வேளாண்மை மற்றும் கால்நடை மேம்பாட்டிலும் ஈடுபடுகின்றனர். வேளாண்மை விரைவாக பெண்மயமாவதால், அவர்களின் பங்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 63 மில்லியன் மிக-சிறு, சிறு மற்றும் குரு தொழில்துரைகளில் 20 சதவிகிதம் பெண்களே உரிமையாளர்களாக இருக்கின்றனர். இதனால் 22 முதல் 27 மில்லியன் மக்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் விவரிக்கிறது. மேலும், நகரப்பகுதியை (18.42%) ஒப்பிடும்போது, கிராம பகுதிகளிலேயே அதிக அளவில் (22.24%) பெண் தொழில்முனைவோர் இருக்கின்றனர். எனினும் இந்த பெண் தொழில்முனைவோருக்கு அங்கீகாரம் அளிக்காதது கவலைக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது.

இதன் அடிப்படை என்னவென்றால் குறைந்த வருமானம் வரும் பண்ணைகளிலும்,வேளாண்மை சார்ந்த துணைத் தொழில்களை மையமாக வைத்து பெண்கள் தொழில்திறமையை காட்டுவதே காரணம். ஏன் பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. பொதுவான புரிதல் என்னவென்றால், வருமானம் தரும் வழிகளாக கருதாமல், இவற்றை அன்றாட செயல்பாடுகளாக எடுத்துக்கொள்கின்னா;. ஆறாவது பொருளாதார கணக்கீட்டின்படி, 34.3% பெண்கள் அனைவரும் செயல்படுத்தி வரும் மிகசிறு, சிறு மற்றும் குரு தொழில்கள் வேளாண் சார்ந்த செயல்பாடுகளே ஆகும். இதில் பெரும்பாலானோர் கால்நடைகளையும் (92.2%), அதைத்தொடர்ந்து வனத்தொழில்(4.5%), பயிரற்ற சாகுபடி (1.9%) மற்றும் மீன் வளர்ப்பு (1.4%) ஆகியவற்றில் ஈடுப்பட்டுள்ளனர். 99 சதவிகித பெண்களின் தொழில்கள், மிக சிறு / நுண்ணிய பிரிவை சார்ந்ததாக இருக்கிறது. பெண்கள் தலைமையிலான தொழில் மற்றும் தொழிலின் அளவிற்கு மத்தியில் உள்ள எதிர்மறை உறவின் தன்மை கண்காணிக்கப்பட்டது . தொழிலின் அளவு அதிகாிக்கும்போது, பெண்கள் தலைமையிலான தொழில்களின் விகிதம் குறைகிறது. தனி மனிதன், சமூகம் மற்றும் உயிர்ச்சூழல் அமைப்பு ஆகிய காரணிகள் இணைந்து, பெண் தொழில்முனைவோர்கள் குறைந்த வெற்றியை காண்பதற்கு காரணமாக இருக்கிறது. தனியாகவும், சமூக அளவிலும் பெண்கள் நடத்தும் தொழில்களில் சந்திக்கும் சவால்களை பெரும்பாலும் கலந்துரையாடப்படுகிறது. கூடுதலாக, பொியளவில் உயிர்ச்சூழல் தடைகள் இருப்பது கண்டுபடிக்கப்பட்டது, அவற்றில் சில பெட்டி 1 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தலைமையிலான முயற்சி
பைப் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற தொண்டு நிறுவனம், வேளாண் மற்றும் பெண்கள் வளர்ச்சி போன்ற அடிப்படை நோக்கங்களை மையமாக பணிபுரிந்து வருகிறது. இந்த நிறுவனம் செயல்பட்டுவரும் பகுதியில் 4000 திற்கு மேல் பெண்கள் சுய உதவி குழுக்கள் உருவாக்குவதற்கு வழிநடத்தியது. இந்தப் பெண்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கி, நாற்றங்கால் மையம், காளான் வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் தையல் மையம் போன்றவற்றை சொந்தமாக அமைப்பதற்கு உதவிப்புரிகின்றது. இதனால், பொருளாதார மற்றும் டிஜிட்டல் கல்வியை அதிகாிக்கும் நேக்கத்தில் செயல்பட்டு, சுய தேவைகள் மற்றும் விரிவடைந்த மகசூல் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. பெண்கள் விதை காவலர்களாக வெற்றி பெற்ற கதையை இங்கு பகிரப்பட்டுள்ளது.

விதை பாதுகவலர்கள்
கல்சுபாய் பாிசார் பியானி சன்வர்தன் சமஜக் சன்ஸ்தா (கல்சுபாய் விதை சேமிப்பினர் குழு), மஹாராஷ்டிரா, அஹமத்நகர் மாவட்டம், அகோல் வட்டத்தில் 2015 ஆம் ஆண்டு வேளாண் உயிர்பல்வகைமையை பாதுகாத்து, புதுப்பிப்பதற்கு உருவாக்கபட்டது.
அகோல், உண்மையில் உயிர்ஆதாரங்கள் நிறைந்த இந்திய வேளாண் காலநிலை மண்டலம், சமீபகாலமாக வேளாண்மை ஒரு தொழிலாக வேகமாக மாறி வருகிறது. இது பயிர் வகை பல்வகைமை குறைந்து குறுகிய மரபணு அடிப்படை மற்றும் மகசூல் கிடைக்கிறது. மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்கம் அதிகாித்துள்ளது. மேலும் இங்கு நிலவிவரும் ஒற்றை பயிர் சாகுபடி முறை, மண் ஆரோக்கியத்தை அழித்துவிட்டது, அதிகாித்த பயிர் சாகுபடி செலவுகள், உள்ளூர் பழங்குடியின சமூகங்களின் வெளிப்பாடுகளில் தீங்கு விளைவித்தது. இது பாரம்பாிய அறிவு அழிவதோடு, மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த பாரம்பாிய செயல்பாடுகளுக்கு ஆபத்தான நிலை உருவாகிறது.
வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் மழையை நம்பி பயிர் சாகுபடி செய்வதே அகோல் விவசாயிகளின் முன்னிலை பணியாக திகழ்ந்தது. பனிகாலம் மற்றும் வறண்ட கோடை காலங்களில்போது உள்ளூர் மக்கள், பெரும்பாலும் மஹாதேவ் கோலி மற்றும் தக்கர் பழங்குடியினர், வேளாண் கூலிப்பணியான, சாதாரண பணியைத் தேடியோ அல்லது அருகில் உள்ள நகரப் பகுதிக்கு செல்வது, முழு வருடமும் குடும்பத்திற்கு வருமானம் மற்றும் உணவு உத்திரவாதம் இல்லாமல் இருப்பது தொிகிறது.
துவக்கத்தில் , மையப்படுத்தப்பட்ட குழு கலந்துரையாடல்கள், கள பார்வைகள் மற்றும் தனிநபர் நேர்காணல்கள் மூலம் முன்னிலை தகவல்கள் சேகாிக்கப்பட்டது. அகோல் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வரைப்படங்கள் மற்றும் நிலத்தின் பயிரினங்கள் சார்ந்த தகவல்களை சேகாித்தனர். விதை பாதுகாப்பாளர்களை தேர்ந்தெடுத்து, அனுவபம் பெற்ற மக்களோடு சேர்ந்து, பண்ணையிலேயே சேகாிக்கப்படும் 10 மையங்களை துாய்மைக்காகவும், விஞ்ஞான ஆராய்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்டது.

உள்ளூர் பாரம்பாிய காய்கறிகள் மற்றும் கிழங்குகள் ஆவணப்படுத்தப்பட்டு, மூலவுயிர்முதலுரு சேகாிக்கப்பட்டு, கிராமம் அல்லது கிராமங்களின் விதை வங்கிகளில் பாதுகாக்கப்படுகிறது. வருடம் முழுவதும் கிடைக்கூடிய மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடிப்படையில் பயிர்கள் தேர்வு செய்யப்படுகிறது. சமூக அளவில் தேர்வு செய்யப்பட்ட பயிர்களில் விதை உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
பாரம்பாிய சமூகங்களைச் சேர்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு 11 உறுப்பினர்கள் கொண்ட விதை பாதுகாப்பாளர் குழு 2017 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. இது உருவாக்கிய சமயத்திலிருந்து, இந்த பழங்குடியின பெண்கள் தலைமையிலான முயற்சி முன்னிலைக்கு சென்று வேளாண்உயிர்பல்வகைமையை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் முக்கியமாக பயிர் இரங்களின் பல்வகைமை, விதைகள் மற்றும் காட்டு உணவுப்பயிர்கள்.இயற்கை இடுபொருள் உற்பத்தி, முடாக்கு பயன்பாடு, விதை தேர்வு மற்றும் சாியான சேமிப்பு ஆகியவற்றை குறித்த கள அளவு பயிற்சியளிக்கப்பட்டது. விதை வங்கி அளவில் முளைப்புத்திறன் ஆய்வு மற்றும் விதைத் தூய்மை செய்யப்படுகிறது.

விதைகளை பொட்டலமிடுவது மற்றும் விற்பனை செய்வது என அனைத்தும் கல்சுபாய் பாிசார் பியானே சன்வர்தன் சன்ஸ்தா குழு மூலமே செயல்படுத்துகிறது. இந்தக் குழு தரமான விதை உற்பத்தி, விதை பாிமாற்ற மேலாண்மை மற்றம் விற்பனை இணைப்புகள் உருவாக்குவதை உறுதுப்படுத்துகிறது. கூடுதலாக, ஆராய்ச்சி செய்யப்பட்ட வேளாண்மை செயல்பாடுகளை, கல்விச்சுற்றுலாவோடு இணைத்து, உள்ளூர் சமூகத்திற்கு கள பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. உறுப்பினர்களுக்கு விதை வாங்கும் கையெடு, கொள்முதல் மற்றும் விதை விற்பனை கையேடு , மற்றும் தானிய உற்பத்தி கையேடு ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் ஆவணப்படுத்தும் முறைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும் தற்போது ஒவ்வொரு நாட்களின் செயல்பாடுகளை கையாள்வதில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பெண் விதை பாதுகாப்பாளரான பத்மஸ்ரீ ராஹிபாய் பாப்பேர் மற்றும் தேசிய மரபணுவை காப்பாற்றும் விவசாய விருதைப் பெற்ற மம்தா பாங்கேர் பாரம்பாிய விதைகள் மற்றும் காட்டு காய்கறிகளை பாதுகாக்கும் முயற்சிகளில், இவர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்பாடுகள் மூலம் முன்வழிபடுத்துகின்றனர். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து, அதன்மூலம் அடித்தளத்திலிருந்து உலகளவில் மற்றும் ஆராய்ச்சி பயன்பாடு வரை வெற்றியை கண்டுள்ளனர்.
இந்தக் குழு மூன்று விதை வங்கிகளை உருவாக்கியது. மேலும் 40 பயிர்களில் அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் போன்ற 118 வகைகள் பாதுகாக்கப்பட்டது. இந்தக்குழு உற்பத்தி செய்து 21,600 வீட்டுத்தோட்ட கிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 39 மெட்ரிக் டன்கள் தரமான விதைகளும் விற்பனை செய்யப்பட்டன.அவர்களுடைய பகுதியில் மட்டும் தங்களின் வெற்றியை நிர்ணயிக்கவில்லை. இவர்கள் புதிய அனுகுமுறைகளை கையாண்டு மாடித்தோட்டத்திற்கான விதைகளையும் வெற்றிகரமாக விற்பனை செய்து, இதன்மூலம் கிராம – நகர இணைப்பை விரிவுப்படுத்தினர். இவர்களின் முயற்சியினால், இன்றுவரை, தொழில் இலாபமாக பெற்ற மதிப்பு சுமார் ரூ.46 இலட்சங்கள் ஆகும்.

பெண் ஆதார உதவியாளர் என்று கூறப்படும் போஷன் சகி, போன்றவர்கள் மூலம் சமூகத்திற்கு திறன்வளர்ப்பு பயிற்சியளிப்பது ஒரு பொிய சவாலாக இருந்தது. போஷன் சகிகளின் முயற்சியாலும், விதை சேமிப்புக் குழுவால், வினியோகிக்கபட்ட தரமான வீட்டுத் தோட்ட கிட்டுகளாலும், ஊட்டச்சத்து தோட்டங்கள் இந்த பகுதியில் பிரபலமடைந்துள்ளனர். ஊட்டச்சத்து தோட்ட கிட்டில், 12-15 விதைகள் மற்றும் நாற்றுகள் உள்ளடக்கி, சுமார் 10 மாதங்களுக்கு உணவுத்தேவையை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதோடு உணவு பல்வகைமையை அதிகாிப்பதையும் உறுதிப்படுத்துகிறது. பெண்கள் சுய உதவிக்குழு மத்தியில் விதை பாதுகாப்பை ஊக்கப்படுத்துகிறது, இதனால் அடுத்த சுழற்சி வரும் வரை அதன் உற்பத்தி உறுதிப்படுத்துகிறது. தொடக்க நாட்களில், இந்த முயற்சிக்கு மஹாராஷ்டிரா அரசு, ராஜுவ் காந்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழு உதவியளித்தது. பின்னர் பரவலாக்கம் செய்வதற்கு ஷபாி ஆதிவாசி விட்டா வா விகாஸ் சன்ஸ்தா மர்யாதித், நாசிக், மஹாராஷ்டிரா அரின் பழங்குடியின வளர்ச்சி துறை மூலம் உதவிக் கிடைத்தது.

முடிவு
வேளாண்மை பிரிவில் பெண்கள் வழிநடத்தும் பசுமை மற்றும் புதிய தொழில்களை ஊக்கப்படுத்துவதற்கான நிறைய வாய்ப்புகள் இங்கு இருக்கிறது. இது ஏதேனும் ஒரு முக்கிய விளைபொருளோ அல்லது சேவை அடிப்படையிலான தொழில் அல்லது இரண்டும் இணைந்து செயல்படுத்துகின்றனர். பொருள் மற்றும் சேவைகளுக்கு கிராம மற்றும் நகர பகுதிகளில் இருக்கும் தேவையை கருத்தில் கொண்டு, கிராம – நகர இணைப்பின் மூலம் தேவைகளை அதிகபடுத்துவது அவசியம். சில உதவிகளாலும், பயிற்சியோடும், பெண்கள் தொழிலாளர்கள் தரமான பொருள் மற்றும் சேவைகளை அளிப்பதில் நம்பிக்கை வளர்த்துகொண்டனர். செலவழிக்கக்கூடிய பொருட்களிலிருந்து அதிக வருமானம், ஒட்டு மொத்த வீட்டிற்கான இரண்டாம்நிலை சிறந்த பயன்களாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த தொழில்கள் பல்வேறு பழங்குடியின வசிப்பிடங்களில் பிரதிபலிக்கும் அளவிற்கு ஆற்றல் இருக்கிறது. மேலும் இது பரவலாக்கம் செய்து பெண்களுக்கு அதிக இலாபத்தை உறுதிப்படுத்துகிறது. விவசாய பெண்கள் இந்தியாவில் அதிகம் இருப்பதால் இம்மாதிரியான பெண்கள் வழிநடத்தும் பண்ணைத் தொழில்கள் இந்திய பொருளாதாரத்தில் பெரும்பங்கு அளிக்கும் நிலையும் உருவாகும்.

பெட்டி 1 :
பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உயிர்ச்சூழுல் தடைகள்
அ. தொழில்சார்ந்த ஊக்கம், இதில் பல்வேறு தொழில் வாய்ப்புகளை குறித்து விழிப்புணர்வு மற்றும் அறிவையும் உருவாக்குதல்.
ஆ.நிதியை சுலபமாகவும், கிடைக்கக்கூடிய சூழலும் இருக்கும்
இ.தொழில்நுட்பம் மற்றும் தொழில் திறன்களுக்கான பயிற்சி மற்றும் திறனை வளர்த்தல்
ஈ. தொழில்துறை வல்லுனர்களிடமிருந்து பெற்ற பாடங்கள் மற்றும் இணைப்புகள், இவர்களின் வளர்ந்துவரும் தொழிலுக்கு வழிகாட்டியாகவும், ஊக்கப்படுத்தவும் உதவும்.மேலும் சமமானவர்களை இணைத்துக்கொள்வது
உ.உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளோடு விற்பனை இணைப்பை ஏற்படுத்திகொள்வது.
ஊ.சிறப்பாக செயல்படுவதற்கும், உற்பத்தியை பெருக்கவும், தொழில், சட்டம், டிஜிட்டல் மற்றும் இதர உயர்ந்த உதவி சேவைகள் கிடைக்கும்நிலை.

ராஜஸ்ரீ ஜோஷி மற்றும் சந்தர்பனா சௌத்ரி


Rajashree Joshi
Programme Director
BAIF Development Research Foundation, Pune.
E-mail: rajeshreejoshi@baif.org.in

Santarpana Choudhury
Associate Programme Manager
BAIF Development Research Foundation, Pune.
E-mail: santarpana.choudhury@baif.org.in

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2024, வால்யூம் 26, இதழ் 1

அண்மைய இடுகைகள்
மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணா;தல்

மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணா;தல்

திறன்களை வளர்ப்பதன் மூலமும், ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் சிறு அளவிலான மீன் உற்பத்தியை...

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகள் பயிர் உற்பத்தியில் பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்புச் சவால்களையும்,...