புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படும் குளிர்பதன சேமிப்பு உள்கட்டமைப்பை நிறுவுவது, கர்நாடகாவின் சதலி கிராமத்தில் சிறு தோட்டப்பயிர் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமாக ஈடுபடுத்தும் இந்த முயற்சி, வீணாவதைக் குறைப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு பங்களிப்பதற்கும் ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது.
இந்தியாவில் விவசாயம் ஒரு முக்கிய துறையாகும். இது கிட்டத்தட்ட 60 விழுக்காடு மக்களை ஆதாிக்கிறது. நாட்டின் விவசாய உற்பத்தியில் சிறு மற்றும் குறு விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்ற மிகவும் விரைவில் அழுகும் பயிர்களை வளர்ப்பவர்களாக, அவர்கள் ஏராளமான சவால்களை எதிர்கொள்கின்றனர். போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாதது, நம்பகத்தன்மையற்ற மின்சாரம் மற்றும் அதிக அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் ஆகியவை இதில் அடங்கும். இவை பெரும்பாலும் விளைபொருட்களை வீணாக்குதல், குறைந்த வருமான வாய்ப்புகள் மற்றும் கிராமப்புற சமூகங்களில் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன. மறுபுறம், சூரிய சக்தி தொழில்நுட்பங்கள் விவசாய நடைமுறைகளில் விரைவாக ஒருங்கிணைந்து வருகின்றன. அவை விவசாய சமூகங்களில் மீள்தன்மையை வளர்ப்பது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல்; நட்பு நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் காலநிலை மாற்றத்தின் பரந்த தாக்கத்தைக் குறைப்பதற்கும் கணிசமாக பங்களிக்கின்றன. விரைவில் அழுகக்கூடிய வகையிலான பயிர்களை வளர்க்கும் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2023-24 ஆம் ஆண்டில், எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (டொி), கர்நாடகாவின் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள சதலி கிராமத்தில் ஒரு புதுமையான சூரிய சக்தியில் இயங்கும் குளிர் அறை திட்டத்தை இக்கோ எனர்ஜீ நிறுவனத்தின் நிதி உதவியுடன், பெண்களை மையமாகக் கொண்ட இந்தத் திட்டம், 5 கிராம பஞ்சாயத்துக்களை (34 கிராமங்கள்) உள்ளடங்கி, 5617 விவசாயிகளை உள்ளடக்கி, சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்முயற்சி:
சதலி திட்ட கிராமத்தில், அந்த கிராமத்தில் உள்ள மொத்த விவசாயிகள் 800 போில் 358 பேர் 2 ஹெக்டேருக்கும் குறைவான விவசாய நிலத்தைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளாவர். இந்தப் பகுதியில் பயிரிடப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களாக மா, திராட்சை, மாதுளை, சப்போட்டா, கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், எலுமிச்சை மற்றும் வெட்டப்பட்ட பூக்கள் போன்றவை உள்ளன. கிடங்குகள், குளிர்பதன சேமிப்பு சங்கலிகள், தரம் பிரித்தல் மற்றும் பேக்கிங் அறைகள் போன்ற அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு இல்லாததால், ஒழுங்கற்ற மின்சாரம் தவிர, விவசாயிகள் தங்கள் தோட்டக்கலை விளைபொருட்களை வேளாண் உற்பத்தி சந்தைக்குழு (ஏ.பி.எம்.சி) தளத்திற்கு அல்லது தனியார் வர்த்தகர்களிடம் உடனடி விற்பனைக்கான கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதன் விளைவாக விளை பொருட்களுக்கு குறைந்த விலை மட்டுமே கிடைத்து வந்தது.
கிராமத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில், மின் இணைப்புடன் இணைக்கப்பட்ட, அருகிலுள்ள வழக்கமான குளிர்பதன சேமிப்பு வசதிகள் அமைந்துள்ளன. ஐந்து நாட்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ. 2 என்ற சேவை கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இந்த வகையான குளிர்பதன சேமிப்பு வசதிகளை நிறுவுவது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. மேலும் 100 மெட்ரிக் டன் முதல் 1000 மெட்ரிக் டன் வரையிலான குறைந்தபட்ச கொள்ளளவுக்கு, செலவுகள் ரூ. 60 முதல் 275 வரை இருக்கும்.
சதாலியம்மா தோட்டக்கலை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது சதலி கிராமத்தில் ஒரு தசாப்தத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு உள்ளூர் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பாகும். இந்த விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தில் முக்கியமாக விவசாயிகளுக்கு மொத்த விலையில் விவசாய உள்ளீடுகளை (விதைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள்) வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. குறைந்த தேவை உள்ள காலங்களில் அழுகக்கூடிய பொருட்களால் ஏற்படும் சவால்களுக்கு சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து, குறிப்பாக பெண்களிடமிருந்து விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் தொடர்ந்து கோரிக்கைகளைப் பெற்று வந்தது. இந்த தொடர்ச்சியான சிக்கல்களைச் சமாளிக்க, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அதன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி ஒரு நிலையான தீர்வை செயல்படுத்துவதில் உதவிக்காக டொி-ஐ அணுகியது.
செயல்முறை:
டொி இந்த திட்டத்தை மூன்று தனித்துவமான கட்டங்களாக செயல்படுத்தியது. திட்டமிடல் கட்டம், செயல்படுத்தல் கட்டம் மற்றும் திரும்பப் பெறும் கட்டம். ஒரு ஒருங்கிணைந்த நிறுவன அணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் டொி திட்ட செயல்படுத்தலுக்கான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றது. இதில் சூரிய சக்தியில் இயங்கும் குளிர் அறையை நிறுவுதல் மற்றும் பின்னர் அமைப்பை எஸ்.எச்.எப்.பி கோ.லிமிடேட்க்கு மாற்றுதல் ஆகியவை அடங்கும். தாலுகா அளவிலான தோட்டக்கலைத்துறையின் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை எளிதாக்கியது. சூரிய குளிர் அறையை நிறுவுவது மற்றும் வருடாந்திர பராமாிப்புக்கு சாதன சப்ளையர் பொறுப்பேற்றுக் கொண்டது. எஸ்.எச்.எப்.பி கோ.லிமிடேட் (பயனாளி) அமைப்பை நிறுவுவதற்கு தேவையான இடத்தை வழங்கியது.
ஆரம்பத்தில், பயிர் வளரும் பகுதி, தோட்டக்கலை பயிர்களின் வகை, நடைமுறைகளின் தொகுப்பு (அறுவடை, சுத்தம் செய்தல், வரிசைப்படுத்துதல், சேமித்தல், காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை பேக்கிங் செய்தல்), சந்தைப்படுத்தல் நடைமுறைகள், உள்ளூர் மட்டத்தில் எதிர்கொள்ளும் தேவை மற்றும்; விநியோக பிரச்சனைகள் பற்றிய இரண்டாம் நிலை தரவுகள் மாவட்ட மற்றும் தாலுகா மட்டங்களில் உள்ள துறைகளிடமிருந்து சேகாிக்கப்பட்டன. மேலும் வீடுதோறும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவசாய உறுப்பினர்களிடமிருந்து விரிவான தகவல்கள் சேகாிக்கப்பட்டன. வீட்டு கணக்கெடுப்பின் மாதிரி அளவு சுமார் 10 விழுக்காடு (100 விவசாயிகள்) ஆகும். கூடுதலாக, திட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் மேலாண்மை கட்டமைப்பை உருவாக்குவதற்கும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் கா;நாடக அரசின் தோட்டக்கலைத் துறையின் பெண் விவசாயிகள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அழிந்துபோகக்கூடிய பொருட்களை சேமிப்பதற்கான நிலையான தீர்வுகளுக்கான குறிப்பிடத்தக்க தேவை காரணமாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படும் குளிர் சேமிப்பு உள்கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க டொி முன்வந்தது.
முதற்கட்ட செயல்முறை விளக்க பகுதி:
பல்வேறு பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்களின் முடிவுகளின் அடிப்படையில், 5 மெட்ரிக் டன் சூரிய சக்தி கொண்ட குளிர் அறை வடிவமைக்கப்பட்டு திட்ட தளத்தில் செயல்விளக்கம் செய்யப்பட்டது. டோி 5 மெட்ரிக் டன் திறன் கொண்ட ஒரு ஆப் கிரிட் சூரிய சக்தியால் இயங்கும் குளிர் அறையை நிறுவியது. இது 5 கி.வாட் சூரிய ஒளிமின்னழுத்த (பி.வி) அமைப்பை பயன்படுத்தி செயல்படும். இந்த அமைப்பு பகலில் சார்ஜ் செய்து கொண்டு, பேட்டாிகள், டீசல் அல்லது வழக்கமான எரிசக்தி ஆதாரங்களை நம்பாமல் 24 மணி நேரம் குளிர் அறையில் குளிர்ந்த சூழலை பராமாிக்கும்.
தொழில்நுட்ப சப்ளையர் டொியின் குறுகிய பட்டியலிட்டப்பட்ட சப்ளையர்களிடமிருந்து தேர்தெடுக்கப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நல்ல தரமான சேவையை வழங்கவும், சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் நீண்ட கால ஆதரவை வழங்கவும் வல்லது.
இந்த திட்டம், சாதனத்தின் முழு செலவையும் உள்ளடக்கியது. அதாவது ரூ. 14 லட்சம் நிறுவவதற்கான இடத்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வழங்கியது. மற்றும் நிறுவியதற்குப் பிறகு அதன் பராமாிப்பை உறுதி செய்தது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பெண் விவசாயிகளை ஆதரிப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு சூரிய சக்தி குளிர் அறையை வாடகைக்கு வழங்கியது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தயாரிப்பு சப்ளையர்களால் நிர்வகிக்கப்படும் சூரிய சக்தி குளிர் அறையின் பழுது மற்றும் பராமாிப்பிற்கான ஒரு சேவையை டொி செயல்படுத்தியது.
பெண்கள் தலைமையிலான மேலாண்மை:
திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் முதல் மேலாண்மை வரை ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் ஈடுபாட்டிற்கு இந்த திட்டம் வலுவான/முக்கியத்துவம் அளித்தது. சூரிய குளிர் அறையின் தினசாி செயல்பாடுகள் மற்றும் பராமாிப்பை மேற்பார்வையிட பெண்கள் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது திட்டம் பாலின உணர்திறன் மற்றும் நிலையானது என்பதை உறுதி செய்கிறது. சூரிய குளிர் அறைக்கான உதிரி பாகங்களை பராமாிக்கவும், மாற்றவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்துவதற்கான ஆதரவையும் ஒப்புதலை வழங்கவும், அமைப்பைக் கண்காணிக்கவும், பெண் உறுப்பினர்களை உள்ளடக்கிய இக்கோ எனர்ஜி சூரிய அடிப்படையிலான குளிர் அறை குழு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பெண் உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிக்கு இந்த அமைப்பை மேற்பார்வையிடவும், குளிர் அறையின் பயன்களை மதிப்பிடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கோ எனர்ஜி சூரிய குளிர் அறை குழு உறுப்பினர்களுக்கும் எஸ்.எச்.எப்.பி கம்பெனி லிமிடெட் விவசாய உறுப்பினர்களுக்கும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் உள்ளடக்கிய இரண்டு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் பயிற்சி குளிர் சேமிப்பு வசதிகளின் செயல்பாடு மற்றும் பராமாிப்பு மீது கவனம் செலுத்தியது. இந்த திட்டம் முதன்மையாக குழு உறுப்பினர்களை தினசாி அடிப்படையில் அமைப்பை நிர்வகிக்க தேவையான திறன்களுடன், இதில் பொருட்களை ஏற்றுவது மற்றும் இறக்குவது, தயாரிப்பு தரத்தைப் பாதுகாக்க வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் அமைப்பை சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும். கூடுதலாக, பங்கேற்பாளர்களுக்கு மின் இணைப்பு மற்றும் மேகமூட்டம் மற்றும் மழைக்காலங்களில் சூரிய சக்தியிலிருந்து வழக்கமான மின்சாரத்திற்கு மாற்றுவது, அத்துடன் பல்வேறு நிலைகளில் சாிசெய்தல் மற்றும் ஆன்லைன் வழி கண்காணிப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டது. இரண்டாவது திட்டம் பல்வேறு தோட்டக்கலை பயிர்களுக்கான செயலாக்கம், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்துதல் நுட்பங்களை கையாண்டது. அறுவடை, சுத்தம் செய்தல் மற்றும் தரப்படுத்தல் உள்ளிட்ட செயலாக்க முறைகள் குறித்த நுண்ணறிவுகளை வழங்கிய பல நிபுணர்களை இந்தப் பயிற்சி உள்ளடக்கியது. பேக்கேஜிங் பிரிவில், போக்குவரத்தின்போது சேதத்தைக் குறைப்பதற்கான உத்திகளை பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர். மேலும், சந்தைப்படுத்தல் கூறு மின் சந்தைப்படுத்தல் தளங்கள் மற்றும் பல்வேறு சந்தைப்படுத்தல் உத்திகளை உள்ளடக்கியது.
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 6 தொழில்முனைவோர் மற்றும் திட்ட இடத்தைச் சேர்ந்த 10 பெண் விவசாயிகளை உள்ளடக்கிய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டம் முதன்மையாக சூரிய சக்தியில் இயங்கும் குளிர்பதன சேமிப்பு வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தொடரக்கூடிய பல்வேறு வணிக வாய்ப்புகளில் கவனம் செலுத்தியது. காளான்கள், பால் பொருட்கள் மற்றும் பிற அழுகக்கூடிய பொருட்களைப் பாதுகாப்பது இதில் அடங்கும். இது புதிய வருவாய் வழிகளைத் திறந்து, கூடுதலாக சூரிய சக்தி குளிர் பதன சேமிப்பு தீர்வுகளில் முதலீடு செய்ய விரும்பும் தொழில்முனைவோருக்கு கிடைக்கக்கூடிய வங்கிக் கடன் விருப்பங்கள் மற்றும் கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறையால் வழங்கப்படும் ஆதரவு பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியது.
தோட்டக்கலை விளைபொருட்களின் உள்வரும் மற்றும் வெளியேறும் அளவு, வெப்பநிலை தரவு, மேகமூட்டமான சூழ்நிலைகளில் மின்சார நுகர்வு, அலகு வாடகைக்கு எடுப்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் தோட்டக்கலை விளைபொருட்களின் தரம் மற்றும் விளைபொருட்களின் அடுக்கு வாழ்க்கை அதிகாிப்பால் கிடைக்கும் கூடுதல் லாபம் பற்றிய தரவுகளைச் சேகாிக்க உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில் ஒரு பதிவு புத்தகம் வைக்கப்பட்டு பராமாிக்கப்பட்டு வருகிறது.
செயல்பாடு மற்றும் பராமாிப்பு குறித்த தொழில்நுட்ப கையெட்டை உருவாக்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. சூரிய குளிர் அறைக்கான செயல்பாடு மற்றும் பராமாிப்பு தேவைகள் மிகக் குறைவு. வாரத்திற்கு 20 லிட்டர் குடிநீர் சேமிப்பு மற்றும் சூரிய பேனல்களை மாதாந்திர சுத்தம் செய்வதை மட்டுமே உள்ளடக்கியது. இந்த அமைப்பை ஒரு மொபைல் பயன்பாடு மூலம் இயக்க முடியும். இதனால் பயனர்கள் தங்கள் விளைபொருட்களுக்கான சேமிப்பு வெப்பநிலையை அமைக்கவும், அமைப்பு செயல்பாடுகளை கண்காணிக்கவும், அதில் எழக்கூடிய சிக்கல்கள் ஏதேனும் வந்தால் அடையாளம் காணவும் அனுமதிக்கிறது. தற்போது, இந்த அமைப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பெண் தலைமை நிர்வாக அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது. திட்டப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் சூரிய குளிர் அறையை அணுக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளனர். இந்த வசதியை வாடகைக்கு எடுப்பதற்கான தொடர்பு எண்களைக் காண்பிக்கும் அறிவிப்பு பலகையை நிறுவனம் தங்கள் அலுவலகத்தில் வைத்துள்ளது. இது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கிறது.
முடிவுகள்:
பாரம்பாிய மின் இணைப்புடன் கூடிய குளிர்பதன சேமிப்பு வசதிகளில் ஐந்து நாட்களுக்கு விளைபொருட்களை சேமிப்பதற்கான செலவு ஒரு கிலோவிற்கு ரூ. 2 ஆகும். அதே நேரத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினால் அதே காலத்திற்கு ஒரு கிலோவிற்கு ரூ. 1 மட்டுமே வசூலிக்கிறது. டிசம்பர் 11, 2023 மற்றும் டிசம்பர் 30, 2024க்கு இடையில், சுமார் 60 விவசாயிகள் தனிப்பட்ட வகையில் சூரிய குளிர்பதன அறையைப் பயன்படுத்தி வெள்ளரி, ரோஜா மற்றும் சாமந்தி உள்ளிட்ட மொத்தம் 15 மெட்ரிக் டன் தோட்டக்கலைப் பொருட்களை சேமித்து வைத்தனர். இதன் விளைவாக, எஸ். எச். ஏப்.பி கோ லிமிடெட் வாடகை வருமானமாக ரூ. 40000 ஈட்டியது.
குளிர்பதன அறை குறித்து விவசாயிகள் திருப்தி தொிவித்துள்ளனர். இது சீரான வெப்பநிலையை பராமாிப்பதாகவும், விளைபொருட்கள் கெட்டுப்போவதைத் தடுப்பதாகவும், அவற்றின் அடுக்கு ஆயுளை நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சூரிய சக்தி குளிர்பதன அறையைப் பயன்படுத்துவதில் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இது வழக்கமான குளிர்பதன சேமிப்புக்கான அதிக செலவுகள் காரணமாக முன்னர் சவால்களை எதிர்கொண்ட சிறு விவசாயிகளுக்கு ஒரு சாத்தியமான தர்வாக அமைகிறது.
சூரிய சக்தி அடிப்படையிலான குளிர் அறை அமைப்பின் பயன்பாட்டிலிருந்து உருவாகும் புதிய வணிக வாய்ப்புகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவதன் மூலம், சதாலி கிராமத்தைச் சோ;ந்த ஐந்து பெண் விவசாயிகள் குழு, 5 மெட்ரிக் டன் சூரிய சக்தி அடிப்படையிலான குளிர் அறையை வாங்குவதற்கு மானியம் பெற தோட்டக்கலைத் துறையின் உதவியை நாடியுள்ளது.
உணவு வீணாகுவது குறைக்கப்பட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சார்ந்திருத்தல் மற்றும் அதிகாித்த உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம், இந்த திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் பங்களிக்கிறது.
சூரிய சக்தி குளிர்பதன அறை வடிவமைப்பு உட்பட, திட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் ஆண் மற்றும் பெண் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து தீவிரமாக ஈடுபடுவது, பங்கேற்பாளர்களிடையே உரிமை உணர்வை வளர்த்துள்ளது. விவசாயிகள் சூரிய சக்தி குளிர்பதன அறையை ஒரு சமூக சொத்தாக கருதுகின்றனர். அதே நேரத்தில் அரசுத் துறையின் ஈடுபாடு அடிமட்டத்தில் கூட்டு முயற்சிக்கான திறனை எடுத்துக்காட்டுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய விளைவாக, சூரிய சக்தி மற்றும் சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அதன் நன்மைகள் குறித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடையே அதிகாித்த விழிப்புணர்வாகும்.
முன்னேறிச் செல்வதற்கான வழி:
இந்த தொழில்நுட்பங்களை மிகச் சிறிய மற்றும் குறு விவசாயிகளுக்கு அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், இந்தப் பகுதியில் சூரிய சக்தியால் இயங்கும் குளிர்பதன சேமிப்பு வசதிகளின் கிடைக்கும் தன்மையை அதிகாிக்க டொி குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆறு தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, டொி இந்த தொழில்முனைவோர் மற்றும் சப்ளையர்களுக்கு இடையேயான இணைப்புகளை எளிதாக்கியுள்ளது. அதேபோல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற தேசிய மயமமாக்கப்பட்ட வங்கிகளும் தங்கள் வணிகங்களை நிறுவ கடன்களைப் பெறுவதில் அவர்களுக்கு உதவுகின்றன. தற்போது, தொழில்முனைவோர் தங்கள் முயற்சிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
சிக்கபல்லாப்பூரில் டொி ஏற்பாடு செய்த பங்குதாரர் கருத்துப்பட்டறைத் தொடர்ந்து, பிற தாலுகாக்களைச் சர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினா;கள் மானியங்களைப் பெற தோட்டக்கலைத் துறையை அணுகியுள்ளனா;. சூரிய சக்தி அடிப்படையிலான குளிர் சேமிப்பு அலகுகளை வாங்குவதற்குத் தேவையான நிதியில் 60 விழுக்கான முதலீடு செய்வதற்கான திட்டத்தை அவர்கள் வகுத்துள்ளனர். இந்த பரவலாக்கப்பட்ட சமூக மையப்படுத்தப்பட்ட தீர்வை விரிவுபடுத்துவதற்கான பிற வழிகளையும் நாங்கள் பார்ப்போம்.
சதலி கிராமத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சூரிய குளிர் அறை திட்டம், பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமாக ஈடுபடுத்தியது. கர்நாடகாவின் பிற பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் இந்த மாதிரியைப் பிரதிபலிக்க ஒரு வலுவான கட்டமைப்பை நிறுவியுள்ளது. பெண்களை உள்ளடங்கிய தன்மைக்கு முன்னுரிமை அளித்தல் இளைஞர்களை ஈடுபடுத்துதல் மற்றும் சமூகத்தின் தலைமையிலான கண்டுபிடிப்புகளை வளர்ப்பதன் மூலம், இந்தத் திட்டம் கிராமப்புற விவசாய சமூகத்தின் நம்பிக்கையை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. இது சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தயாரிப்பு வீணாவதைக் குறைத்து, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி, விவசாயத் துறையின் நிலையான முன்னேற்றத்திற்கும் பங்களித்துள்ளது.
யப்பாட்டி நாகராஜூ, நிவ்யா பேபி மற்றும் வருண் குரோவர்
Y. Nagaraju Senior Manager, Sustainable Services Management (SSM) The Energy and Resources Institute (TERI) Southern Regional Centre, 4th Main, Domlur II Stage, Bangalore - 560 071, Karnataka E-mail: nagarju@teri.res.in Website: www.teriin.org
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2024, வால்யூம் 26, இதழ் 4



