ஒருங்கிணைந்த விவசாய முறை – செழுமைக்கான திறவுகோல்


பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு அங்கங்கள் விவசாய அமைப்பில் ஒருங்கிணைப்பது பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது – உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம், வருமானம் மற்றும் வளங்களின் உகந்த பயன்பாடு திருமதி. மஞ்சுளாவின் வெற்றிக்கதை நிரூபிக்கிறது.


சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் மையமாகவும், மொத்த விவசாய சமூகத்தில் 85 சதவீதம் உள்ளனர். ஒருங்கிணைந்த வேளாண்மை அமைப்பு (ஐ.எப்.எஸ்) உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, மேம்பட்ட வருமானம் மற்றும் வளங்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் (சில நேரங்களில் கழிவுகளாகக் கருதப்படும்) மற்றொரு அமைப்பிற்கான உள்ளீடாக மாறுவதன் மூலம் வளங்களைத் திறம்பட பயன்படுத்துவதற்கான வழியாக அங்கீகாிக்கப்பட்டுள்ளது. ஐ.எப். எஸ் என்பது தானியங்கள், பருப்பு வகைகள், தோட்டக்கலைப் பயிர்களான காய்கறிகள், மா, கால்நடை வளர்ப்பு-பால், தீவனப்பயிர்கள் மற்றும் பண்ணைக் குளத்தில் மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற விவசாய நிறுவனங்களின் கலவையாகும்.

திருமதி. மஞ்சுளா பொக்னேகர் கதை
கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், தார்வாட் தாலுக்காவின் கும்பர்கொப்பா கிராமத்தை சேர்ந்தவர் 43 வயதாகும் திருமதி. மஞ்சுளா பொக்னேகர். அவருடைய குடும்பம் பாரம்பாியத்தில் வேரூன்றியும் வறுமையிலும் உள்ளது. அவர் படிக்காதவர் மற்றும் 18 வயதிலேயே விவசாயத் தொழிலாளியான ஸ்ரீ நாராயண் போக்னேகரை திருமணம் செய்துகொண்டார். அவர் இப்போது ஆறு குழந்தைகளின் பாட்டி.
விவசாய குடும்பத்தில் வளர்ந்த திருமதி. மஞ்சுளா தனது கணவருக்கு வயலில் உதவத் தொடங்கினார். வங்கியில் கடன் வாங்கி, கடந்த 1999 ஆம் ஆண்டு கும்பர்கொப்பா கிராமத்தில் 4 ஏக்கர் 3 குண்டா பாசன நிலத்தை கடன் வாங்கினார். ஒரு ஏக்கர் மாம்பழத் தோட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஆண்டுக்கு இரண்டு பயிர்கள் வளர்க்கப்பட்டன. மேலும், அனைத்து வகையான காய்கறிகளும், பருப்பு வகைகளான தட்டைப்பயிறு, பச்சைப் பயிறு, கொள்ளு போன்றவை வீட்டு உபயோகத்திற்காக பயிரிடப்படுகின்றன.

ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு ஆகியவற்றை சமாளிக்க அவர்கள் கரும்பில் காய்கறிகளை கலப்பு பயிராக சாகுபடி செய்ய ஆரம்பித்தனர். துவக்கத்தில், காய்கறிகள் வீட்டு உபயோகத்திற்காக வளர்க்கப்பட்டன. தேவையை உணர்ந்து, விரைவாக காய்கறி சாகுபடி பரப்பை விரிவுபடுத்தினார். ஆரம்பத்தில் அவர்கள் உபாியை அருகிலுள்ள கிராமங்களில் விற்று, படிப்படியாக பெல்காம் நகருக்கு வழங்கினர். இருப்பினும், அதிக பரப்பளவில் பயிரிடப்படும் தக்காளி மற்றும் கொடி காய்கறிகளை அறுவடை செய்வது விவசாயிக்கு கடினமாக இருந்தது.

நியூட்ரி-ஸ்மார்ட் கிராமம் திட்ட முன்முயற்சியின் கீழ் (பெட்டியைப் பார்க்கவும்), பொிய அளவிலான காய்கறி விவசாயம் மற்றும் மேம்படுத்தப்பட்ட காய்கறி சாகுபடி நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறைகளை அறிமுகப்படுத்த விவசாயிகளுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு விஞ்ஞானி பண்ணைக்கு வருகை தந்தார். வழிகாட்டுதலை தவிர, பல்வேறு காய்கறிகள் மற்றும் இலை காய்கறிகளின் விதைகள் மற்றும் தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. நம்பிக்கைக்குப் பிறகு, மஞ்சுளா தனது துறையில் இந்த தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டார்.

மூடாக்கு மற்றும் ஸ்டேக்கிங் முறையைப் பயன்படுத்துவதன் மூலம், மஞ்சுளா பொிய அளவில் பீர்க்கு மற்றும் புடலங்காய் சாகுபடியில் வெற்றி பெற்றுள்ளார். கீரை, கொத்தமல்லி, சேப்பு, போன்ற இலைக் காய்கறிகளையும் அவர் பயிரிடுகிறார். அவைகளுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. கரும்பில் தக்காளி ஒரு கலப்பு பயிராக பயிரிடப்பட்டது. அதே சமயம் கத்திரி ஸ்டேக்கிங் முறையைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டது.

பால் விற்பனை, பட்டு வளர்ப்பு போன்ற கூறுகள் அவர் பின்பற்றினார். அவர் ஒரு பசுவைக் கொண்டு பால் விற்பனையை தொடங்கினார். ஆனால், இன்று அவரிடம் ஒரு பசுமாடு மற்றும் இரண்டு காளைகள் என மூன்று உள்ளன. அவர் அதிகப்படியான பாலை விற்று, பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் ஊட்டமேற்றிய தொழு உரத்தை பயன்படுத்துகிறார். மல்பொி சாகுபடியும் தொடங்கியுள்ளார். பின்னர், அவர் பட்டுப்புழு வளர்ப்பு பகுதிகளையும் சேர்க்க திட்டமிட்டுள்ளார். தற்போது மல்பொி செடிகள் சிறியதாக இருப்பதால், மல்பொி சாகுபடியில் காய்கறிகளை கலப்பு பயிர்களாக பயிரிட்டு வருகிறார்.
வீட்டு உபயோகத்திற்காக, அவர் மூன்று முதல் நான்கு வகையான பருப்பு வகைகளை பயிரிடுகிறார்: கொள்ளு, பச்சைப் பயிறு, தட்டைப்பயிறு மற்றும் மாத் பீன். சந்தையில் கிடைக்கும் வருமானத்திற்காக மக்காச்சோளம், நெல், கரும்பு பயிரிடுகிறார். ஒரு ஏக்கர் மா பண்ணை. ஆரம்பத்தில், வீட்டு உபயோகத்திற்காக காய்கறிகளை பயிரிட்டு வந்தார். இப்போது அவற்றை பொிய அளவில் பயிரிட்டு வருகிறார். மேலும், அவர் எலுமிச்சை, கறிவேப்பிலை, கொய்யா, தென்னை மற்றும் சப்போட்டா பழ மரங்களையும் வைத்துள்ளார். மாம்பழங்கள் விற்கப்பட்டது போக, மீதமுள்ள அனைத்தும் தன் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துகின்றார்.

அவர் இயற்கை உரங்களைத் தயாரிக்கிறார். இயற்கை திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம், அவர் உரம் தயாரிக்கிறார். அவரிடம் ஒரு உரம் தயாரிக்கும் பகுதி உள்ளது. அதற்கு தேவையான மூலப்பொருட்கள் திட்டத்தால் வழங்கப்பட்டது. வேளாண்மைத் துறையால் ஆதாிக்கப்படும் மற்றொரு திட்டத்தின் கீழ், வறட்சியான காலத்தின்போது சுமார் ஐந்து ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாய்ச்சுவதற்கு உதவும் வகையில் மழைநீரைச் சேமித்து வைப்பதற்காக அவர் க்ரிஷி ஹோண்டாவை உருவாக்கியுள்ளார்.

திருமதி. மஞ்சுளா பொக்னேகாின் விவசாய வருமானம் கணிசமாக சுமார் இரண்டு லட்சத்திலிருந்து – 297500 வரை அதிகாித்துள்ளது. பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பண்ணை விளைபொருட்களை அணுகுவதைத் தவிர, பண்ணையின் புதிதாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அவர் பெருமிதத்துடன் கூறுகிறார். இவரது வயலுக்கு ஏராளமான விவசாயிகள் வந்துள்ளனர். பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த அனுபவத்திலிருந்து , ஒருங்கிணைந்த பண்ணை முறை மாதிரியானது, சிறிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் கிடைக்கவும், மேம்பட்ட நிகர வருமானம் பெறவும் உதவுகிறது என்பதைக் காட்டுகிறது.

பெட்டி செய்தி 1:
அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் தலையீடு விவசாயத்தில் பெண்களுக்கான செயல்பாடுகள்
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை நினைவுகூறும் வகையில், போஷன் அபியானை வலுப்படுத்த “ஊட்டச்சத்து ஸ்மார்ட கிராமம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 13 மையங்களில் செயல்பட்டு வரும் விவசாயத்தில் பெண்களுக்கான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கூட்டமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமங்களுக்கு சென்றடைவதை இந்த புதிய முயற்சி இலக்காக கொண்டுள்ளது.

விவசாயப் பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு, கல்வி மற்றும் நடத்தை மாற்றத்தை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உள்ளூர் செய்முறையின் மூலம் பாரம்பாிய அறிவைப் பயன்படுத்துதல் மற்றும் வீட்டுத் தோட்ட விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து – உணவுத் தோட்டம் மூலம் ஊட்டச்சத்து உணர்திறன் கொண்ட விவசாயத்தை செயல்படுத்துதல் ஆகியவை இந்த முயற்சியின் நோக்கங்களாகும். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத கிராமங்கள் என்ற இலக்கை அடைய தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள், களப்பணிகள், காய்கறி விதைகள் மற்றும் பழச் செடிகள் விநியோகம், ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியின் கீழ், 2020-21 ஆம் ஆண்டில் நியூட்ரி-ஸ்மார்ட் கிராமத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், யு ஏ ஏஸ், தார்வாட் கும்பர்கொப்பா கிராமத்தை தத்தெடுத்தது.

ஸ்டாக்கிங் மற்றும் மூடாக்கு:
காய்கறி ஸ்டாக்கிங் முறையில், தரையில் படரும் தாவரங்கள் புமியில் படாதவாறு செங்குத்தாக கொம்புகள் கொண்டு நிற்க வைத்து தாவரங்களை பாதுகாக்க பயன்படுகிறது. தாவரங்கள் அவற்றின் பழங்கள் அல்லது பூக்களின் எடைகள்  வலுவான காற்று, மழை அல்லது பிற தடைகளுக்கு எதிராக மேல்நோக்கி தள்ள முடிகிறது. ஏனெனில் ஸ்டாக்கிங் கொடுக்கும் சக்தி மற்றும் ஆதரவின் காரணமாக குறிப்பாக கனமான இலைகள், பழங்கள் அல்லது மலர் தலைகள் கொண்ட தாவரங்கள் வளைந்து அல்லது உடைவதை தடுக்கலாம். . கூடுதலாக, அவற்றை நிமிர்ந்து வைத்திருப்பது சிறந்த காற்று சுழற்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இது தாவரங்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ஸடாக்கிங் தக்காளிகளுக்கு கொம்புகள் அளிப்பதால் தாவரங்களை தரையிலிருந்து விலக்கி வைக்க உதவும். அதே வேளையில் அவற்றை மேல்நோக்கி வளரும் பழக்கத்திற்கு உதவுகிறது. பல நோய்கள் மற்றும் பூச்சிகள் தரை மட்டத்தில் தொடங்குவதால், அவற்றை தரைத் தொடர்புகளிலிருந்து விலக்கி வைக்க ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பைப் பயன்படுத்துவது விவேகமானது.
மூடாக்கு என்பது களைகளைக் கட்டுப்படுத்தவும், தாவரங்களுக்குக் கிடைக்கும் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும், மண்ணின் மேற்பரப்பை மூடி வைக்கும் செயல்முறையாகும். விவசாயத்தில் மூடாக்கு இடுவதன் சாத்தியமான நன்மைகள், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல் மண்ணின் இறுக்கம் மற்றும் அரிப்பைக் குறைத்தல், மண்ணின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல், உப்பு அழுத்தத்தைத் தணித்தல், தாவர வளர்ச்சி மற்றும் மகசூல், நோய் தாக்கங்கள் குறைவது மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

ராஜேஸ்வரி தேசாய் மற்றும் கீதா சேனல்


Dr. Rajeshwari Desai
Senior Scientist (FRM)

Dr. Geeta Channal
Senior Scientist (Extn)
All India Coordinated Research Project-Women in
Agriculture
University of Agricultural Sciences, Dharwad,
Karnataka

மூலம்: லீசா இந்தியா, மார்ச் 2024, வால்யூம் 26, இதழ் 1

அண்மைய இடுகைகள்
மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணா;தல்

மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணா;தல்

திறன்களை வளர்ப்பதன் மூலமும், ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் சிறு அளவிலான மீன் உற்பத்தியை...

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகள் பயிர் உற்பத்தியில் பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்புச் சவால்களையும்,...