குறுகிய காலமான மூன்று வருடங்களில் இயற்கை விவசாயத்தில் முதுநிலைப் பயிற்சியாளராக மாறிய இந்த உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களை சந்தியுங்கள்.இவர்கள் சிறுதானியங்களை மட்டும் தங்களின் வயல்களில் சாகுபடி செய்வதற்கு அறிமுகபடுவதோடு விட்டுவிடாமல் பல்வேறு சிறுதானியங்களை புதிய உணவு வகைகளை உருவாக்கி அவற்றை உட்கொள்ளவும் ஊக்கப்படுத்துகின்றனர்.
ஹிமாச்சல பிரதேச பெண்கள், அவர்கள் வைத்திருக்கும் சிறிய நிலத்தில் (மேட்டு திடலாக) உள்ளூர் உயிர்ச்சூழல் அமைப்பிற்கு உகந்தவாறு, சில பயிர்களும் ,பயிர் இணைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். பொதுவாக பாரம்பாிய இணைப்புப் பயிர்களை பின்பற்றி, தற்போது இவர்கள் சிறுதானியப் பயிர்கள் வரிசைமுறையில் சாகுபடி செய்வதற்கு முக்கிய பயிரோடு சேர்த்துள்ளனர். இரண்டு வருடத்திற்கு முன்னிருந்து இவர்கள் ராகி / கோடா / கோட்ரா குறித்து அறிந்திருந்தனர் (Finger Millet, Eleusine coracana) – உள்ளூரில் இதை மண்டல் என்பார்கள். தற்போது கங்னி/ கௌனி/ சௌங்க் (தினை, Foxtail millet, Setalia italica), குதிரைவாலி/ சானவா (Echinochloa esculenta) மற்றும் சாமை / குட்கி (Panicum sumatrense) ஆகியவற்றை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். இந்தப் பெண்கள் பலவருடங்களாக அவர்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் வேளாண்மையை செய்து வருகின்றனர். இவர்கள் சமீப வருடங்களில் சுயமாக இயற்கை சாகுபடிக்கு மாறியுள்ளனர். தற்போது இவர்கள் முதுநிலை வேளாண் விஞ்ஞானிகளாக ஏற்கனவே நன்கு விழிப்புணர்வு பெற்று, பண்ணையிலேயே உயிர்பல்வகைமையை பாதுகாத்து, புதிய அறிவை பாிசோதனை செய்து, வளர்த்து, மேலும் சிறுதானிய நிகழ்ச்சிகள் மற்றும் இணைப்புக் கூட்டங்களில் நம்பிக்கையோடு இதனை பகிர்ந்துகொள்கின்றனர். ஹிம்ரா இணைப்புக் குழுவில், ஆர்.ஆர்.ஏ இணைப்புக் குழுவின் ஹிமாச்சல் பகுதி, இந்த வார்த்தையை பொிதாக பரப்புவதற்கு ஊக்கமளிக்கிறது.
ஆச்சாியப்படக்கூடிய கண்டுபிடிப்பாளர்கள்
மண்டி மாவட்டத்தில், சாவாரி கிராமத்தை சேர்ந்த திருமதி.பிம்லா தேவி ஒரு பிகா நிலம் மட்டுமே சொந்தமாக வைத்திருந்தார். ஆனால் பல்வேறு பயிர்களை வளர்க்கிறார். தற்போது, காரீப் பட்டத்தில், மக்காச் சோளம், சோயா, கத்திரி, சாமந்தி, வெண்டை, பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளரி, பாகற்காய், சேனைக்கிழங்கு, சூரியகாந்தி, எலுமிச்சை புல், விதானியா (அஷ்வகந்தா), மஞ்சள் ஆகிய அனைத்தும் அடிப்படையில் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வளர்க்கிறார். இவர் கடந்த 4 வருடங்களாக 3 சிறுதானிய பயிர்களான, கேழ்வரகு, தினை, குதிரைவாலி ஆகியவற்றை கூடுதலாக சேர்த்துள்ளார்.
தற்போது சிறுதானிய விதைகளை வரிசையாக நடுவதால் விதைகள் சேமிக்கப்படுகிறது, மேலும் களைகள் எடுப்பது சுலபமாக இருக்கிறது.” என்று கூறுகிறார். தற்போது இயற்கை சாகுபடியில் முதுநிலை பயிற்சியாளராக அவர் சிறுதானிய சாகுபடி மற்றும் பசு சாகீஸ், கிரிஷி சாகீஸ் ஆகிய சிறுதானிய உணவு வகைகளுக்கான பயிற்சியை வழங்குவதற்காக அழைக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டிலிருந்து பழைய விதைகளையே மேம்படுத்தி வருகிறார். முக்கியமாக நெல் மற்றும் பார்லி விதைகளைஅதில் ஐந்து நெல் இரங்களை மேம்படுத்தி வருகிறார். வேளாண் துறை 5 குவிண்டால் கேழ்வரகு வினியோகம் செய்வதற்கு கொள்முதல் செய்தனர் மற்றும் 20 கிலோ தினை விதைகளையும் வாங்கிக் கொண்டனர் என்று கூறினார்.
சிறுதானிய தயாரிப்பில் சுய பயிற்சி பெற்று, தற்போது சிறுதானியத்தைக் கொண்டு (ராகி இட்லி, ராகி தோசா,பார்லியின் கீர் மற்றும் பொறித்த சோளம் ) பல்வேறு பொருட்களை தயாரிக்கிறார். ராகி மற்றும் பார்லியை வைத்து கிச்சடி,ராகி டாலியா,ராகி சூப், ராகி லட்டு, பார்லி லட்டு ஆகியவை தயாரிப்பது குறித்த பயிற்சியும் மற்றவர்களுக்கு அளிக்கிறார். நான் சிறுதானிய டீ தயாரிப்பேன், இது என்னுடைய பயிற்சிகளில், பெறும் வரவேற்பை பெற்றது, என்னுடைய வீட்டிலும் கூட குழந்தைகளுக்கு சிறுதானியங்களை தயாரிப்பேன் என்று விளக்கினார். கூடுதலாக, ராகி அல்வா, ராகி அப்பளம், கம்பு லட்டு, சோளம் பாப் கார்ன் ஆகியவற்றையும் தயாரிக்க முயற்சி செய்துள்ளேன். இந்த முறை சிறுதானிய சாட்டையும் நாங்கள் தயாரித்தோம். மாநிலம் வழங்கும் ஆத்மா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கண்காட்சியில் இவருக்கு காட்சிப்படுத்தும் பகுதி அளிக்கப்பட்டது, அங்கு ராகி சப்பாத்தி, பார்லி லட்டு,சோளம் லட்டு மற்றும் தினை லட்டுவும் தயாரித்தார்.
மண்டி மாவட்டம், கத்தியோ கிராமத்தை சேர்ந்த கலா தேவி 4 பிகா மேட்டு வேளாண் நிலம் இருக்கிறது. ஆப்பிளை முக்கியப் பயிராக கொண்டு, இவர் தற்போது பீன்ஸ், சிவப்பு அரிசி, மக்காச்சோளம், கொள்ளு, மாதுளை, கம்பு, சோயாபீன்ஸ், உள்ளூர் பயிரான காராமணியை போல் இருக்கும்,பாரத் என்ற பயிர், மற்றும் ஒரு படரும் கொடியான ஜம்ரு போன்ற பயிர்களை வளர்கிறார். கூடுதலாக,போிக்காய் வளர்ப்பதற்கும் திட்டமிட்டுள்ளார். சிறுதானியங்களின் பயனை நன்கறிந்து, அவர் ராகி, தினை, பனிவரகு, சாமை, மற்றும் கீரை ஆகியவற்றை சாகுபடி செய்ய தொடங்கினார். முன்பு பட்டாணியை மட்டும்தான் வளர்த்தோம். கூடுதலாக பீன்ஸை தழைச்சத்திற்காக வளர்த்தோம், கடந்த 3-4 வருடங்களில், சிறுதானிய சாகுபடியையும் துவக்கினோம் என்று கலாதேவி கூறினார்.
2021 ஆம் ஆண்டு ஆர்.ஆர்.ஏ-எனின் விதைக் குழுவினால் அளிக்கப்பட்ட பயிற்சியை இவர் பெற்று – உயிர் பல்வகைமைக்கென சிறிய நிலம் ஒதுக்கி, உள்ளூர் உயிர்ச்சூழல் அமைப்பில் நன்கு வளரும் குறிப்பிட்ட விதை இரகங்கள் கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தினார்.
ஏற்கனவே புழக்கத்தில் உள்ள உள்ளூர் உணவு வகைகளை புதிதாக மாற்றி தயாரித்தார். தற்போது ராகி/ தினைமாவில் புதிதாக உருவாக்கியுள்ளார். ‘ராகிமாவை பயன்படுத்தி தோசை போன்ற உணவை நான் உருவாக்கினேன். அதை உள்ளூர் மொழியில் நாங்கள் சில்ரஹா என்று கூறுவோம். தயிர் மற்றும் வரகுமாவில் நாங்கள் மற்றொரு உணவான உள்ளூரில் அழைக்கப்படும் கோப்ரு என்ற பானகத்தை தயாரித்தோம்” என்றார் கலாதேவி.
சம்பா மாவட்டம், பனேளா கிராமம்,திருமதி. ரீனா தேவி ராகியைத் தவிர மற்ற சிறுதானியங்களை எப்பொழுதும் சாகுபடி செய்வது கிடையாது. மூன்று வருடங்களுக்கு முன்பு, தினை, சாமை மற்றும் சுகாராதான் என்று அழைக்கப்படும் சிறப்பு இரகமான சிவப்பு அரிசி (மானாவாரி சூழ்நிலைக்கு உகந்தது) ஆகியவற்றை சாகுபடி செய்ய தொடங்கினார். தற்போது கொள்ளு, கீரை மற்றும் எள்ளு ஆகியவற்றை சாகுபடி செய்கிறார். தற்போது இவர் பல்வேறு பயிர்களோடு கலப்பு பயிரை பின்பற்றுகிறார். இவர் உருவாக்கிய சுய உதவிக் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு கன ஜீவாமிருதத்தை அளித்தார். சிறுதானிய சாகுபடியில் மற்றவர்களுக்கு பயிற்சியளிக்கிறார். மக்காச் சோளம் எங்களது முக்கியப் பயிராக இருந்தது மற்றும் இது கிட்னி பீன்ஸ் என்ற தழைச்சத்தை நிலைநிறுத்தும் பயறு வகையோடு வளர்க்கிறார். தற்போது கூடுதலாக ராகி, தினை மற்றும் சாமை ஆகியவற்றை வரிசைப் பயிராக சாகுபடி செய்கிறோம் என்று ரீனா தேவி பகிர்ந்துகொண்டார். 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற சம்பா மிஞ்சர் மேளாவில் அமைக்கப்பட்ட இவருடைய காட்சிப்படுத்தும் பகுதியில் சூடான மில்லட் பானத்தை (சிறுதானிய டீ) அறிமுகம் செய்தார்.மேளாவின் வரலாற்றில் இம்மாதிரியான டீயை வழங்குவது இதுவே முதல் முறை. தரம்ஷாலாவில், சிறுதானிய உணவு திருவிழாவில் சம்பா மாவட்டத்தில் பாரம்பாிய ராகி உணவான பிந்திரி (உள்ளூர் பெயர்) முதல் முறையாக அறிமுகம் செய்து பிரபலமாக்கினார்.
கங்ரா மாவட்டத்தில் நக்ரோட்டா பக்வான் என்ற இடத்தைச் சேர்ந்த திருமதி.வீனாதேவி, தற்போது மஞ்சள், இஞ்சி, வெண்டை, சோயா, கத்திரி, பச்சைமிளகாய், குடை மிளகாய், சுரைக்காய், பாகற்காய், வெள்ளரி, ஸ்ட்ராபர்ரி மற்றும் கருமிளகு ஆகியவற்றை கலப்பு மற்றும் பல்வகைமை சாகுபடியை பாிசோதிக்கின்றனர்.‘தழைச்சத்து பயன்களுக்காக தற்போது நாங்கள் கொள்ளு பயிரை கூடுதலாக வளர்க்கிறோம், நாங்கள் வரகை 3 வருடங்களாகவும், தினையை 2 வருடங்களாகவும் வளர்த்து வருகிறோம்.மேலும் பனிவரகையும் சாகுபடி செய்ய துவங்கிவிட்டோம். தினையை இந்தப் பயிர்களின் வரப்புகளில் வளர்க்கிறோம். வரப்பிற்கு வெளியில் ஆப்பிள் மற்றும் மரகன்றுகளும் நட்டோம்” என்று அவர் விளக்கினார். இவர் 10 கனல் (ஒரு ஏக்கர்) நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறார். சிறுதானிய நுகர்வுக்கு, ராகி இட்லி, தினை புலாவ் (தினையுடன் காய்கறிகள் சேர்ப்பது), ராகி பப்ரு (நொதிக்கப்பட்ட மாவை சப்பாத்தியாக தயாரித்தல்) மற்றும் ராகி அல்வா (இனிப்பு பண்டம்) ஆகியவற்றை தாண்டி அவர் புதிதாக தினை கீர், சோளம் லஸ்ஸியையும் தயாரித்தார். இவருடைய சொந்த சுய உதவிக் குழுவில், சோளம், கருப்பு கோதுமை மற்றும் ராகி ஆகியவற்றை, தினமும் பயன்படுத்தும் கோதுமை மாவை சேர்க்க பாிந்துரை செய்துள்ளார். மண் பானையில் மட்டுமே ராகி டீ யை தயாரிப்பார்.
முடிவு
ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் இந்த பெண்களுக்கு வேளாண் உயிர் பல்வகைமை குறித்த நல்ல செயல்பாட்டு புரிதல் பெற்றிருக்கின்றனர். இது வேளாண் உயிர்ச்சூழலை அடைவதற்கான முன்தயாரிப்பாக கருதப்படுகிறது. சிறுதானியங்கள் உண்பதை அதிகபடுத்துவதற்காக புதிய மற்றும் உள்ளூருக்கு உகந்த உணவு வகைகளை தயாரிக்கும் இவர்களின் அணுகுமுறை இரட்டை பயன்களை அளிக்கிறது . அவை குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும், தங்களின் சொந்த அதிகாரத்தை உயர்த்துவதற்கும் பயன்படுகிறது. அடிப்படையில் சிறுதானியங்களை சேர்ப்பதால் சீதோஷனத்தை தாங்கக் கூடிய சக்தி அதிகாிக்கும். உயிர்ச்சூழலை வளர்க்கும் அதேசமயத்தில், அதிகமான மற்றும் பல்வகை உணவை எப்படி உற்பத்தி செய்வது என்பதை காண்பித்துள்ளனர். இயற்கை மற்றும் வேளாண் உயிர்ச்சூழல் அமைப்புக்கு மாற இந்த வெற்றிக்கதைகள் சாியாக பொருந்தி, பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் திடத்தையும் வளர்க்கிறது. ஹிம்ரா இணைப்புக் குழுவின் பல்வேறு ஊடகங்கள் மூலம் வேளாண் உயிர்ச்சூழல் மற்றும் இயற்கை சாகுபடி குறித்த அறிவை வளர்த்து, அதனை பகிர்ந்து மேலும் பரவலாக்கம் செய்வதற்கு உந்துதலாய் இருக்கிறது. இதுவும் பாலின சமதர்மத்தை ஆராய்ச்சியின் பிரிவில் கொண்டு வருகிறது. இவர்கள் சாகுபடியை கட்டுபாட்டில் வைத்திருப்பது தினமும் செய்யப்படும் சாகுபடி செயல்பாடுகள் ரீதியாக தனித்து முடிவெடுத்தல் ஆகிய புதிய பிரிவுகளில் மாற்றங்களை நம்மால் காணமுடிகிறது.
பெட்டி செய்தி
சிறுதானிய உணவுகள் மூலம் இயற்கை வேளாண்மைக்கு மாற்றுதல்
இயற்கை வேளாண்மைக்கு மாறிய காரணங்களை சிலர் வெளிப்படுத்தினர். தினமும் உண்ணும் உணவு குழந்தைகளை மந்தமாக மாற்றுகிறது. ஆனால் எப்பொழுது‘டேலியா” (கைக்குத்தல் அரிசியை தண்ணீர் அல்லது பாலில் வேகவைப்பது ) அல்லது ‘கீர்” (தினை அல்லது கேழ்வரகை பாலில் கெட்டிபதத்தில் செய்யப்படும் ஒரு இனிப்பாகும்) நாம் குழந்தைகளுக்கு உண்ணகொடுத்தால், அவர்கள் மிக சுறுசுறுப்பாக, மேலும் அவர்களது செயல்பாடும் சிறப்பாக இருக்கும். நாங்கள் எங்கள் குடும்பங்களில் இதை கண்கூடாக உணர்ந்தோம். உணவில் உள்ள இரசாயனங்கள் மூலம் ஏற்படும் பாதகத்தை நாங்கள் கண்கூடாக பார்த்தோம் என்று செப்டம்பர் 2022 நடந்த கூட்டத்தில் திருமதி. ரீட்டா தேவி கூறினார். இவர் புதிய உணவுகளை குழந்தைகள் விரும்பி மீண்டும் கேட்கும் வண்ணம் உருவாக்குகிறார். துவக்கத்தில் வெளிப்படுத்துவதில் வெட்கப்பட்ட திருமதி. ரீட்டாதேவி மற்றும் வந்தனா, மெதுவாக இந்த இரண்டு வருடங்களில் சமூக ஆதார உறுப்பினராக ஆர்.டீ. டி.சி யுடன் தற்போது மாறி, புதிய உணவு வகைகளை குழந்தைகள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை கூறுகின்றனர். சிறுதானியத்தை சிறுவயதில் உண்டு, தற்போது அப்பழக்கத்தைவிட்ட குடும்பத்தில் உள்ள பொியவர்களும் உண்ணுவதில் அவர்களுக்கே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
டி.கே. சாதனா, சக்தேவ் விஸ்வ பிரேமி மற்றும் அனூப் குமார்
D. K. Sadana Formerly Scientist at ICAR-NBAGR, Karnal-132 001 (Haryana) E-mail: sadana.dk@gmail.com Sukhdev Vishwapremi and Anoop Kumar HimRRA Network, RTDC, Vill. & P.O. Kamlehar - 176 061 Kangra (HP)
மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2023, வால்யூம் 25, இதழ் 3



