அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண்மையில் பணியாற்றும் முக்கிய நிறுவனங்கள் தங்களின் கூட்டுச் செயல்பாடுகளின் வழியாக முக்கிய பங்காற்றுகின்றன. கரூரில் உள்ள வேளாண் அறிவியல் மையம் தனது பல் நிறுவன அணுகுமுறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மையில் அங்கக சாகுபடி முறைக்கு மாறுவதற்கு உதவி, அதையோட்டி அவர்களின் நிகர வருமானத்தை, பண்ணையில் வேலைவாய்ப்பையும் அதிகாித்து, அவர்களின் தற்சார்பை கட்டியெழுப்பவும் உதவி வருகிறது.
இந்தியாவில் அங்கக வேளாண் உற்பத்திக்கும், சந்தைப்படுத்துவதற்கும் பரந்த அளவில் சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், அதன் உற்பத்தி, சான்றளிப்பது மற்றும் ஏற்றுமதியில் அதன் சாதனைகள் பல்வேறு காரணங்களால் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பிட்ட தரங்களின் அடிப்படையில் உற்பத்தி செய்வதற்கான போதுமான கல்வி இல்லாததாலும், ஆர்வமுடைய விவசாயிகளுக்கு அங்கக முறைகள் குறித்த செய்திகள், தேவைகள் மற்றும் சந்தை நிலவரங்கள் எளிதில் கிடைக்கப் பெறாதது, அங்கக வேளாண்மை குறித்தும், அங்கக வேளாண் உணவுப் பொருட்கள் குறித்து நுகர்வோர் மத்தியில போதிய விழிப்புணர்வு இல்லாதது, வினியோகத்தில் அதிகப்படியாகும் செலவினங்கள், விவசாயிகள் மற்றும் ஆலோசகர்கள் மத்தியில் ஆய்வு முடிவுகளை ஆவணப்படுத்துவதிலும், பரவலாக்குவதிலும் திறன்படி செய்யாததினாலும், ஆய்வுகள் குறித்த நடைமுறை விளக்கங்கள் குறைவாக இருப்பது என்பது இவற்றில் அடங்கும்.
கிராமப்புற பங்கேற்பு ஆய்வு மற்றும் குழு விவாதங்களின்போது, கரூரில் உள்ள வேளாண் அறிவியல் மையம் கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கக வேளாண் முறை சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்கொள்ளும் பிரச்சனைகளை அடையாளம் கண்டது. அவற்றில் குறைவான உற்பத்தித் திறன், வேளாண் கழிவுகளை முறைப்படி மறுசுழற்சி செய்யாதது, மிகவும் குறைவான லாபகரமான விலை, உள்ளூர் சந்தைகள் இல்லாதது, அங்கக வேளாண்மை பற்றிய தகவல்கள் மற்றும் அறிவின்மை போன்றவைகள் அடங்கும். அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, உற்பத்தித் திறனை அதிகாிக்க, மற்றும் சிறு விவசாயிகளுக்கு குழு சான்றிதழ் பெற உதவுவது என அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தனது பணியை கரூரில் உள்ள வேளாண் அறிவியல் மையம் தொடங்கியது.
ஒத்த வேளாண் முறை மற்றும் பூகோள ரீதியாக கிராமங்கள் அருகருகே இருப்பதையும் பொருத்து அவைகள் குழுக்களாக அமைக்கப்பட்டன. 63 குழுக்களை உள்ளடக்கிய 4 பெருங்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்த பெருங்குழுக்களில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை மற்றும் சிறுதானியங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள், மரவள்ளி மற்றும் வாழை பயிரிடப்படுகிறது.
இயற்கை வேளாண்மையை மாவட்டத்தில் மேம்படுத்துவதற்கு கரூரில் உள்ள வேளாண் அறிவியல் மையம் நிறுவன ரீதியான அணுகுமுறையுடன் செயல்படுகிறது. அதற்கென உற்பத்தி தொடர்பான விசயங்களில் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனும், நிதி உதவிக்கு இயற்கை வேளாண்மைக்கான தேசிய மையத்தோடும், அடிப்படை தரங்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு, சந்தைப்படுத்தும் தகவல்கள், கொள்முதல் மற்றும் தொழிற்நுட்பங்களை பரவலாக்கி மற்றும் குழுக்கள் அளவில் மக்கள் நிறுவனங்களை அமைப்பதற்கு, சந்தைப்படுத்துவதில் ஈடுபடும் நிறுவனங்கள் போன்றவற்றோடு இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவை செய்ய வேண்டிய பங்கை செய்கின்றன.
அறிவு மற்றும் திறமைகளை மேம்படுத்த பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் நடைபெறுகின்றன. விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்தும் அதில் மண் வள மேம்பாடு, இயற்கை வேளாண்மையின் அடிப்படை அம்சங்கள் மற்றும் நடைமுறைகள், இயற்கை வேளாண் இடு பொருட்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்கள், இயற்கை வள ஆதாரங்களை பயன்படுத்துவதும் மற்றும் இயற்கை வேளாண்மை தொடர்பான விசயங்களை ஆவணப்படுத்துவது, சான்றிதழ் பெறுவது மற்றும் அறுவடைக்கு பிந்திய தொழில் நுட்பங்கள் என பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளின் வயல்களிலும் மற்றும் வேளாண் அறிவியல் மைய வளாகத்திலும் நடத்தப்படுகிறது. 2006-08 ஆம் ஆண்டுகளில் 3402 விவசாயிகள் வேளாண் அறிவியல் மையத்தின் வாயிலாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.
இடுபொருட்களை பயன்படுத்துவதையும், சாண எரிவாயுவில் இருந்து கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்துவது குறித்தும் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. இடுபொருட்களின் பயன் குறித்த செயல்முறை விளக்கங்கள் காசீயாபாத்தில் உள்ள இயற்கை வேளாண்மைக்கான தேசிய பயிற்சி மையத்தின் நிதி உதவியுடன் செய்யப்பட்டது. இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பிற்காக மூன்று செயல்முறை விளக்கங்கள் வடசோி, ஆர்ச்சம்பட்டி, மற்றும் முதலைப்பட்டி போன்ற கிராமங்களில் நெல், வெண்டை மற்றும் வாழை போன்ற பயிர்களில் செய்து காண்பிக்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் இயற்கை வேளாண் உற்பத்தி தொடர்பான தொழிற்நுட்பங்கள் குறித்தும், மற்ற விவசாயிகள் இந்த தொழிற்நுட்பங்களை பாிசோதனை அளவில் குறைந்த அளவு நிலப்பரப்பில் செய்து பார்ப்பதற்கும் நம்பிக்கையை உருவாக்கியது. உயிர் உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள் (அசோஸ்பாில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடர்மா), உயிர் கட்டுப்பாட்டு உயிரிகள் (டிரைக்கோகிராம்மா ஐப்பானிக்கம், டிரைக்கோகிராம்மா கைலோனிஸ்), பசுந்தாள் உரப்பயிர்கள் ( சணப்பு, தக்கைப்பூண்டு, எருக்கு, ஆவாரை, கொழிஞ்சி) மற்றும் கால்நடையை அடிப்படையாக கொண்ட மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் (பஞ்சகாவியா, அமிர்த கரைசல், மண்புழு உரம், மண்புழு உர திரவம், மீன் கரைசல் மற்றும் பழக்கரைசல்கள்) பொறிகள், தாவர மற்றும் ஊட்டமேற்றிய உரங்கள் போன்றவை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
சாண எரிவாயு கழிவுகளை மற்றும் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக செயல்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டது. காசியாபாத்தில் உள்ள இயற்கை வேளாண்மைக்கான தேசிய மையத்தின் நிதி உதவியோடு இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக செயல்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டன. இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக மூன்று செயல்முறை விளக்கங்கள் நெல், வெண்டை மற்றும் வாழை போன்ற பயிர்களில் முறையே வடசோி, ஆர்ச்சாம்பட்டு மற்றும் முதலைப்பட்டி போன்ற கிராமங்களில் நடத்தப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் இயற்கை முறை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த நம்பிக்கையை கொடுத்ததோடு மற்ற விவசாயிகளும் பாிசோதனை முறையில் குறைந்த நிலப்பரப்பில் இயற்கை முறை உற்பத்தி தொழில்நுட்பங்களை கடைபிடிக்க ஒப்புக் கொண்டனர். இயற்கை இடுபொருட்களாக உயிர் உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் (அசோஸ்பாில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் மற்றும் ட்ரைக்கோடர்மா) உயிரியல் கட்டுப்பாட்டு உயிரிகளாக (டிரைக்கோகிரம்மா ஐப்பானிக்கம், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்), பசுந்தாள் உரங்கள் ( சணப்பு, தக்கைக்பூண்டு, எருக்கு, ஆவாரை மற்றும் கொழிஞ்சி) மற்றும் கால்நடை கழிவு உரங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் (பஞ்சகாவியா, அமிர்தகரைசல், மண்புழு உரம், மண்புழு உரக் கரைசல், மீன் அமிலம், பழக்கரைசல்) பொறிகள், தாவரங்கள் மற்றும் பல்வேறு ஊட்டமேற்றிய உரங்கள் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டன.
ஊட்டமேற்றிய சாண எரிவாயு கழிவுகளின் முக்கியத்துவம் குறித்து ஐந்து இடங்களில் செயல்முறை விளக்கங்கள் எள், சூரியகாந்தி மற்றும் நிலக்கடலை பயிர்களில் செய்து காண்பிக்கப்பட்டன. சாண எரிவாயு கழிவானது தழைச்சத்தை நிலைநிறுத்தும் மற்றும் ஊட்டச்சத்துக்களை கரைத்துக் கொடுக்கும் பாக்டீரிய மற்றும் பூஞ்ஞானங்களை கொண்டு ஊட்டமேற்றப்பட்டது. மேலும் அதன் பயன்பாடுகள் மற்ற இடுபொருட்களோடு சேர்த்து செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. குளித்தலை மற்றும் கடவூர் ஒன்றியத்தில் உள்ள புழுதோி, சீத்தப்பட்டி, வடசோி, தரகம்பட்டி மற்றும் ஆர்.டி. மலை போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த செயல்முறை விளக்கங்களில் பங்கெடுத்தனர்.
விழிப்புணர்ச்சி பரவலாக்கம்:
கண்காட்சிகள், ஊடகங்களை பங்குபெற செய்த நிகழ்வுகள் மற்றும் கல்வி சுற்றுலா பயணங்கள் போன்றவை பொிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டன. 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை 14 முறை கள பயணங்கள் நடத்தப்பட்டு இயற்கை வேளாண்மை குறித்த கருத்துக்கள் 760க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. 2006 முதல் 2008 வரை 21 கண்காட்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு அதில் விவசாயிகள், விவசாய பெண்கள், கிராமப்புற இளைஞர்கள், விரிவாக்கப் பணியாளர்கள் என கிட்டத்தட்ட 20000 பேர் பங்கெடுத்தனர். இந்த கண்காட்சிகள், இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் மற்றும் அதன் முக்கியத்துவம் கரூர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள விவசாய சமூகங்களிடம் விரிவாக ஏற்படுத்தப்பட்டு, மேலும் இயற்கை விவசாயிகள் மத்தியிலும், இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை விளைபொருட்களை விரும்பும் நுகர்வோர் மத்தியிலும் ஒரு கூட்டமைப்பு உருவாகவும் உதவியது.
அதேபோல், வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் போன்ற ஊடங்களும் அதிகமானோருக்கு இந்த கருத்துக்கள் சென்றடைவதற்கு பயன்படுத்தப்பட்டன. ”இயற்கை மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் காலாண்டு செய்தி இதழ்கள் வெளிடப்பட்டு அதில் இயற்கை வேளாண்மை குறித்த அண்மை நிகழ்வுகள் மற்றும் போக்குகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
திட்டத்தின் தாக்கத்தை அறிவதற்கான ஒரு ஆய்வு 2008 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயகளிடத்தில் நடத்தப்பட்டு, அதன் வாயிலாக 83 விழுக்காடு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த அறிவு குறிப்பாக இயற்கை வேளாண்மையின் கோட்பாடுகள், மண் வள மேம்பாடு, இயற்கை வேளாண்மைக்கான நிலத் தேர்வு , பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மை, அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆவணப்படுத்துதல் மற்றும் இயற்கை வேளாண் சான்றிதழ் பெறுவதற்கான முறைகள் போன்றவற்றில் அதிகாித்துள்ளதை அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியது. இது 2005 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் அப்போதை விழுக்காடான 42 டை விட இரண்டு மடங்கு கூடுதலாக அறிவு பெருகியுள்ளது. இதற்கு வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் நடத்தப்பட்டட பல்வேறு பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விரிவாக்க செயல்பாடுகள் காரணமாக அமைந்திருந்தது.
இயற்கை விவசாய செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவதில் விவசாயிகள் தொழிற்நுட்பவாதிகளாக திகழ்ந்தனர்
ஆய்வுக்கு பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானோர் (85 விழுக்காடு) இயற்கை விவசாய செயல்முறைகளை நிலம் தோ;விலிருந்து, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துவது வரை அறிவியில் பூர்வமாக புரிந்து கொண்டு செயல்படுத்தியுள்ளனா; என்பது கண்டறியப்பட்டது. 2006 ல் 27, 2007 ல் 47 மற்றும் 2008 ல் 22; என கிட்டத்தட்ட 96 இயற்கை விவசாய குழுக்களாக ஒருங்கிணைந்தனா;. இந்த குழுக்களில் 1930 இயற்கை விவசாயிகள் உறுப்பினா;களாக பதிவு செய்யப்பட்டனா;. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் இயற்கை வேளாண்மையிலும், இயற்கை வேளாண்மைக்கான அடிப்படை தர நிர்ணயங்கள், ஆவணப்படுத்துதல், தொழிற்நுட்பங்களை பரவலாக்குவது என அனைத்திலும் பயிற்றுவிக்கப்பட்டனா;. அவர்களே ஆவணப்படுத்துவது மற்றும் இயற்கை வேளாண்மைக்கான தர நிர்ணயங்களை விவசாயிகள் கடைபிடிப்பதற்கும் பொறுப்பாளர்களாக ஆக்கப்பட்டனா;.
2006 ஆம் ஆண்டில் நான்கு இயற்கை விவசாயிகள், தொழிற்நுட்பவாதிகளாகவும் செயல்படத் தொடங்கினர் இது 2007 ஆம் ஆண்டில் 17 ஆகவும், 2008 ல் 53 ஆகவும் உயர்ந்தது. இந்த தொழிற்நுட்பவாதிகளால், இயற்கை வேளாண்மை குறித்த தொழிற்நுட்பங்கள் பரவலாவது அதிகாித்தது. அவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கை தன்மையும் அதிகமானது.
பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள குறிப்பிட்ட பகுதிளை ஒதுக்கினர். இந்த சிறிய பகுதியில், வேளாண் அறிவியல் மையத்தின் உதவியோடு இயற்கை வேளாண் செயல்முறைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தனர். 2006 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட 532 விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்த பரப்பளவு 116.28 ஹெக்டேராக இருந்தது. அதில் நெல், வாழை, எள், சூரியகாந்தி, நிலக்கடலை, பச்சை பயிறு மற்றும் உளுந்து போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. 2007 ஆம் ஆண்டில் இது 269.63 ஹெக்டேராக அதிகாித்தது.
அதிகாித்த சுய சார்புத்தன்மை
பெரும்பாலான இயற்கை இடுபொருட்கள் உள்ளூரிலே உற்பத்தி செய்யப்பட்டதால், வெளியிடு பொருட்களின் சார்புத்தன்மை குறைந்தது. மிக அதிக அளவில் பரவலாக பயன்படுத்தப்பட்ட இயற்கை உரம் மண்புழு உரமாகும். இந்தத் திட்டத்தின் பகுதியில் மொத்தம் 44 விவசாயிகள் மண்புழு உர உற்பத்தி மையங்களை தொடங்கியுள்ளனர். உற்பத்தி செய்யப்பட்ட மண்புழுஉரம் தங்களின் சொந்த நிலங்களில் பயன்படுத்தப்பட்டது. எஞ்சியவை கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு விற்கப்பட்டது. எஞ்சியுள்ள மற்ற விவசாயிகள் தொழு உரங்கள் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரங்களை உயிர் உரங்களோடு கலந்து அடி உரமாக பயன்படுத்துகின்றனர். இந்த 44 மண்புழு உர மையங்களின் ஆண்டு உர உற்பத்தி திறனானது 399 டன் ஆகும்.
பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும்போது பஞ்சகாவியா மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரித்துக் கொள்கின்றனர். 2006 ஆம் ஆண்டு, 18 மையங்கள் பஞ்சகாவியா மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அது 2008 ஆம் ஆண்டில் 56 ஆக உயர்ந்து பொிய அளவில் உற்பத்தியில் ஈடுபட தொடங்கியது.
இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தியதால் இடுபொருள் செலவு குறைந்தது. அதே வேளையில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட விளைபொருட்களுக்கு அதிகப்படியான கூடுதல் விலையும் கிடைத்தது. இது கூடுதல் நிகர லாபமாக ஹெக்டேருக்கு ரூ. 1130, ரூ. 1250 மற்றும் ரூ. 1820 என முறையே 2006, 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் அதிகாித்தது. பல்வேறு இயற்கை வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டதன் விளைவாக, வேலைவாய்ப்பு நாட்கள் 142, 198 மற்றும் 210 நாட்களாக, முறையே 2006, 2007 மற்றும் 2008 ல் அதிகாித்தது.
உற்பத்தியாளர்களையும், நுகர்வோர்களையும் இணைத்தல்:
இயற்கை வேளாண்மையில் பயிரிடப்படும் பரப்பளவு அதிகாித்தன் விளைவாக, கரூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண் விளைபொருட்களின் இருப்பும அதிகாித்தது. நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, கண்காட்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. மேலும் சந்தைப்படுத்துவர்களின் தொடர்போடு இயற்கை வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான சிறப்பான ஒரு கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட எள் மற்றும் நெல் விற்பனைக்காக, வேளாண் அறிவியல் மையமும் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு கண்காட்சிகளில் பங்கெடுத்தது. வேளாண் அறிவியல் மையத்தின் உதவியோடு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட எள், அரிசிக்கு பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டன. சான்றளிக்கப்பட்ட இந்த பதப்படுத்தும் மையங்கள் வழியாக மாவட்டத்தில் இந்த பொருட்களின் வரவு அதிகாித்தது.
முடிவுரை:
விவசாயிகளோடும், தேசிய அளவில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்களோடு இணைந்து, மாவட்டத்தில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், வேளாண் அறிவியல் மையம் அறிவு மற்றும் வள ஆதார மையமாக சேவை செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்டது. அவர்களின் முயற்சியோடு, விவசாயிகள் இயற்கைக்கு உகந்த வேளாண் முறைகளுக்கு மாறுவதற்கு வேளாண் அறிவியல் மையம் மிகப் பொிய பங்காற்றியது. இது மாநில வேளாண் பல்கலைக் கழகம், (எஸ்.ஏ.யு) இயற்கை வேளாண்மைக்கான தேசிய மையம், (என்.சி.ஓ.சி) வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அப்பீடா) மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிறுவன கூட்டு முயற்சி அணுகுமுறையினால் சாத்தியமானது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது மிகவும் லாபகரமான மற்றும் வெளியிடு பொருட்கள் சார்புத் தன்மை குறைந்த இயற்கை வேளாண் முறைகளை நடைமுறைப்படுத்துவதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்.
எஸ். வள்ளல் கண்ணன், பி. ஆனந்த ப்ரியா மற்றும் பி. தமிழ்ச்செல்வி
S Vallal Kannan KVK Karur Pulutheri village, R T Malai Post, Kulithalai Taluk, Karur District Tamil Nadu E-mail: vallalkannan@yahoo.com
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 4



