மறைந்துள்ள அறுவடை


நாம் பயிரிடாத சில பயிர் தாவரங்கள், நாம் உண்ணக்கூடியவைகளாக அதிக அளவு ஊட்டச்சத்து மிக்கவைகளாகயும், மருத்துவ பயன் கொண்டதாகவும் இருக்கின்றன. இந்த பயிர்கள் நமது உணவில் முக்கிய ஊட்டச்சத்துக்களை தரும் சக்தி கொண்டவைகளாகவும், குடும்பத்தின் வருமானத்திற்கு முக்கிய பங்களிப்பவைகளாகவும் உள்ளதால் அவற்றை மறைந்துள்ள அறுவடை என குறிப்பிடுகிறோம்.


இந்த உலகில் 12000 வகையான உண்ணக்கூடிய தாவரங்கள் இருந்தாலும், வெறும் 15 பயிர்களில் இருந்து கிடைப்பதை தான் உலகில் உள்ள 90 விழுக்காடு மக்கள் உணவாக உண்கின்றனர். அதிலும் மொத்த உணவில் மூன்றில் இரண்டு பங்கு உணவு அரிசி, சோளம் மற்றும் கோதுமை பயிர்கள் இருந்துதான் உண்ணப்படுகிறது. பெரும்பான்மையான சமூகங்கள் தங்களின் உணவுக்கு வேளாண்மையைதான் இன்று நம்பியுள்ளது. ஆனால் வேளாண்மை தான் அனைத்து விதமான உணவையும் தருவதாக அர்த்தம் ஆகாது. அனைத்து வேளாண் நிலங்களிலும் சில பயிரிடப்படாத சில தாவரங்கள் இருப்பதை காணலாம், அவைகளில் சில உணவாக உட்கொள்ளக்கூடியவை. அப்படி உண்ணக்கூடிய பயிரிடப்படாத பயிர் தாவரங்கள் எல்லா வேளாண் முறைகளிலும் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகளே உணவின் அனைத்துவிதான முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களை தருபவையாகவும், அதற்கும் மேல் குடும்பத்தின் வருமானத்திற்கு பங்களிப்பவைகளாகவும் உள்ளன. எனவே இந்த பயிரிடப்படாத பயிர்களை மறைந்துள்ள அறுவடை என குறிப்பிடுகிறோம்.

உண்ணக்கூடிய பயிர் தாவரங்கள் அல்லாதவற்றின் பன்மயத் தன்மைக்கான சிறந்த உதாரணம் கேரளாவில் உள்ள வீட்டுத் தோட்டங்கள்தான். உதாரணத்திற்கு மல்லபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 48 வீட்டுத்தோட்டங்களில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது அங்கு 27 வகையான உண்ணக்கூடிய மூலிகைகள் மற்றும் செடிகள் கண்டறியப்பட்டன. இந்த 27 வகைகளில் 22 வகையானவற்றின் இலைகள் உண்ணக்கூடியதாகவும், மீதமிருந்த 5 வகைகள் முழுத் தாவரமும் உண்ணக்கூடியதாகவும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் வல்லாரை (சென்டெல்லா ஏசியாடிக்கா) புளியாரை (ஆக்சாலிஸ் கார்னிகுடேட்டா) கீழாநெல்லி (பில்லான்தஸ் யூரினாரியா) பருப்புக் கீரை ( போர்டியுலகா ஓலிரெலிசயா) பேயவரை (சென்னா ஒக்சிடென்டாலிஸ்) டெக்ரை (சென்னா டோரா) போன்றவை மிகவும் பொதுவாக இயற்கையாகவே மறுஉற்பத்தி செய்து கொண்டு விரைவாக வீட்டுத் தோட்டங்களில் வளர்பவை. இதில் உள்ள உணவு மற்றும் மருத்துவப்பயன்படும் இவைகள் பரவலாக வளர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த உண்ணக்கூடிய பயிர் தாவரமில்லாதவற்றை சேகாிக்க வீட்டுத் தோட்டங்களில் இரண்டு விதமான வழிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, பொன்னாங்கன்னி (ஆல்டர்நன்தீரா பெட்டிசிக்கியானா) பொன்னாங்கன்ணி (ஆல்டர்நன்தீரா புங்கன்ஸ்) முளைக்கீரை (அமரான்தஸ் காடாடஸ்) முள்ளுக்கீரை ( அமரான்தஸ் ஸ்பைனோசஸ்) காய்கறி  பர்ன் (டிப்ளேசியம் எஸ்குலென்டம்) பேயவரை (சென்னா ஒக்சிடென்டாலிஸ்) டெக்ரை (சென்னா டோரா) போன்ற தாவரங்களை சேகாிப்பதற்காக சிறப்பு பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் வல்லாரை (சென்டெல்லா ஏசியாடிக்கா) புளியாரை (ஆக்சாலிஸ் கார்னிகுடேட்டா) கீழாநெல்லி (பில்லான்தஸ் யூரினாரியா) போன்ற உண்ணக்கூடிய பகுதிகளை கொடுக்கும் வகைகளை சாதாரணமாக போகும் பயணங்களில் சேகாிப்பது.
இந்த 27 வகைகளும் ஊட்டச்சத்துகள் நிறைந்தவை என்பதை பெரும்பாலான குடும்பங்கள் தொிந்து வைத்திருப்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இருப்பினும், கேரளா வன ஆய்வு நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட சில முயற்சிகள் வரை, இதில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள் குறித்த அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த 11 வகை பொதுவான உண்ணக்கூடிய பயிர் தாவரமில்லாதவைகளில் உள்ள ஊட்டச்சத்து விபரங்கள் அட்டவணை 1ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 1 ( கேரளாவின் வீட்டுத் தோட்டங்களில் உள்ள உண்ணக்கூடிய பயிர் அல்லாத தாவர வகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கலவை (மி.கி /1 கிராமில்)

 
வகைகளின் பெயர்கள்

மலையாளப் பெயர்கள்

 பொதுவான மற்றும் உள்ளூர் பெயர்கள் புரதம்கொழுப்பு நார்தாது உப்புகால்சியம் இரும்பு
அல்டர்நன்தீரா பெட்சிக்கினியா (செருசீரா)லால் மெகன்டி, சிகப்பு கலியோ செடி, ஐாய் வீடு52.30.01331.344.24.90.5
சென்டெல்லா ஏசியாட்டிக்கா
(முத்திலில்லா)
மண்டுக்கபர்னி, பிரமி, மண்டுகிக், பிரக்மா- மண்டுகி, காவ்லகுடி, மண்டுக்காபர்ணி திவ்யா48.60.00744.347.99.30.45
க்ளியோம் விஸ்கோசா (நாய்க்கடுகு)ஆசிய சிலந்தி பூ, மஞ்சள் சிலந்தி பூ, பாக்ரா, ஹல்ஹல், நாய்வேளா, நயிபெலா, பிலிட்டாவாணி, குக்குவாமிண்டா, பிவால டிலாவன்54.30.01529.727.84.90.25
  டிப்ளசியம்; எஸ்குலண்டம் (சிருலி)டுகியா, லிங்குடா54.20.00949.853.213.30.6
ஆக்லாலிஸ் கார்னிகுலேட்டா (புலியாரில்லா)க்ரீப்பிங் வுட் சேர்ரல், க்ரிப்பிங் ஆக்லாலிஸ், அம்சூல், எண்சில், பலியாகிரி, அம்ருல்சா, போலியாரலா43.30.00913.433.88.30.6
பில்லான்தஸ் யுரினாரியா
(கீழா நெல்லி)
சேம்பர் பிட்டர், காமன் லீப் ப்ளவர், ஸ்சட்ர்ஸ்டோன்,
கல் உடைக்கும் மூலிகை, பும்யாமலசி
32.10.00641.638.69.20.75
போர்ட்டுலக ஓலிரேசியா ( குலட்புசீரா)  புர்ஸ்லேன், லுனியா, லைபெக் குண்டோ, பருப்பு கீரை, கோலப்பு, டுடாகோரை, நுனியாசாக்47.30.01238.941.37.90.7
ரெமுசாட்டியா விவிபெரா (மரசெம்பு)ஹிட்ச்ஷிக்கர் யானை காது, காடு கெட்டா, மரகேசு, மரவர-ஜீம்பு, குக்ஆலி, ரகுலா, லக்மண53.60.01646.855.811.30.75
சென்னா ஆக்ஸிடென்டாலிஸ் (பொனின் தவாரா) காபி சென்ன, செட்டிக் வீடு20.20.00735.057.98.90.65
சென்னா டோடெ (தாவரா)செரோடா, செக்வாடு, செக்கவாட், செக்குண்டா, கவாரியா, குண்டுடேகாச்சே, செக்ரா மன்ராகம், டகாரா, டகாலா, செக்ராமாடா, டாட்மாி, தகரை, சின்ன கஸிண்டா49.20.01332.057.98.90.65
டலினும் குன்னிபோலியம்
(சாம்பர் சீரா)
 ப்ளேம் ப்ளவர், பாதாலசீரா, வாஸ்சால்சீரா, சாம்பர் சீரா, பாலக்கு, அக்குகோர்ரா, சீமா பச்சலி, பசலி43.20.01247.951.312.60.8

புரதங்கள் உடலின் வளர்ச்சிக்கும், திசுக்களை பராமமாிக்கவும் மிகவும் இன்றியமையாதவை. இந்திய தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் படி, ஒரு தனி மனிதாின் ஒரு நாளைய புரதச்சத்து தேவையானது 60 கிராம் ஆகும். மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு வகைகளின் உண்ணக்கூடிய பகுதியில் உள்ள 1 கிராமில் 19.3 மி. கி முதல் 54.33 மி. கி வரை புரதச் சத்து உள்ளதும், நாய்கடுகு (கிளியோம் விஸ்கோசா) காய்கறி  பர்ன் (டிப்ளேசியம் எஸ்குலென்டம்), ரிமுசாடியா விவிபெரா மற்றும் பொன்னாங்கன்னி (ஆல்டர்நன்தீரா பெட்டிசிக்கியானா) போன்றவற்றில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதும் தொியவந்தது. மேலும் இந்த வகைகளில் உள்ள புரதச் சத்தானது பொதுவாக நாம் உண்ணக்கூடிய கீரை வகைகள், மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றில் இருப்பதை விட அதிகம் காணப்படுவது கண்டறியப்பட்டது.
மனித உடலில் உள்ள நரம்புகள் மற்றும் மூளை சாியாக இயங்குவதை எளிதாக்க கொழுப்பு சக்தியானது இருப்பு ஆற்றலாக பயன்படுகிறது. பொதுவாக கீரைகளில் கொழுப்பு சக்தி மிகவும் குறைவாக காணப்படும். 27 வகைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ரிமுசாடியா விவிபெரா மற்றும் நாய்கடுகு (கிளியோம் விஸ்கோசா) போன்றவற்றில் அதிகபட்ச அளவாக ( ஒரு கிராமில் 0.015 முதல் 0.016 மி.கி இருந்தது. இந்த உண்ணக்கூடிய பயிர் அல்லாத தாவர வகைகளில் உள்ள கொழுப்பு கலவை பொதுவாக காணப்படும் காய்கறிகளுக்கு இணையாக இருந்தது.

உடலுக்கும் சொிமான சக்தியை அளிப்பதில் நார்ச்சத்துக்கள் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களாகும். இந்திய தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் உள்ள கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு நபாின் ஒரு நாள் நார்ச்சத்து தேவை 28-39 கிராம். இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்ட அனைத்து வகைகளும் நார்ச்சத்துக்களை அளிப்பதில் சிறந்த மூலாதாரமாகவும், அதிக பட்ச அளவாக 1 கிராமில் (டிப்ளேசியம் எஸ்குலென்டம்) 49.8 மி.கி உள்ளது கண்டறியப்பட்டது. இங்ஙனம், இந்த உண்ணக்கூடிய பயிர் அல்லாத தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் 100 கிராம் இலைகளில் நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் 9-12 விழுக்காடு வரை கிடைக்கிறது.

மனித உடலில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கும் நரம்புகள் இயக்கத்திற்கும் தினசாி 1 கிராம் அளவு கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டிப்ளேசியம் எஸ்குலேட்டம் மற்றும் டாலினம் குன்னிபோலியம் போன்றவை கால்சியம் சத்து அதிக அளவாக 1 கிராமிற்கு 12.6 முதல் 13.3 மி.கி வரை உள்ளது. அதேபோல் இரத்த விருத்திக்கும், பிராண வாயுவை கடத்துவதற்கும் உதவியாக ஒரு தனி மனிதருக்கு தினசாி கிடைக்க வேண்டிய இரும்புச் சத்து 18 மி.கி ஆகும். இந்த 27 வகைகளில் , டாலினம் குன்னிபோலியம் அதிக அளவு இரும்புச் சத்தாக 1 கிராமிற்கு 0.8 மி.கி உள்ளது.

ஆக, ஆய்வில் மேற்கொள்ளப்பட்ட உண்ணக்கூடிய பயிர் அல்லாத தாவர வகைகள் அனைத்தும் பல ஊட்டச்சத்துகளான புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, மற்றும் தாது உப்புகள் பெறுவதற்கான நல்ல ஆதாரங்களாக விளங்குகின்றன என்றும், அவைகளில் உள்ள ஊட்டச்சத்துகள் பொதுவாக வணிகரீதியாக பயிரிடப்பட்டு கிடைக்கும் காய்கறிகளில் இருப்பதை விட அதிகம் காணப்படுகிறது. இதில் பெரும்பான்மையான வகைகள் மருத்துவப் பயன்களும் கொண்டுள்ளன. எனவே, இவைகளை உண்பதன் மூலம் செலவின்றி ஊட்டச்சத்தின்மை என்ற பிரச்சனையை ஒழித்துவிடலாம். மக்கள் மத்தியில் குறைவான தகவல்களை கொண்டுள்ள இந்த வகைத் தாவரங்கள் பற்றிய செய்திகளை பரவலாக்குவதும், இவைகளை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலம் நமது உயிர்ச்சூழலை பாதுகாக்கவும், தாவர உயிர்பன்மயத்தை மேம்படுத்தவும், அதேவேளையில் கிராமப்புற பகுதிகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்திற்கு நல்ல பங்களிப்பையும் பெற முடியும்.

சந்திர சேகர் யு.எம் மற்றும் ரேஷ்மா பி.கே.


U M Chandrashekara
Scientist in charge
Kerala Forest Research Institute Sub Centre,
Nilambur P.O., Malappuram,
Kerala – 679 329
E-mail: umchandra@rediffmail.com

மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2016, வால்யூம் 18, இதழ் 2

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...