வேளாண் உயிர்ச்சூழல் குறித்த அறிவை கட்டமைப்பது – முறையாக ஆவணப்படுத்துவதன் தாக்கம்


வேளாண் உயிர்ச்சூழல் குறித்த நடைமுறை அறிவை பகிர்ந்து கொள்வதை மேம்படுத்துவது, செயல்முறைகளில் தாக்கம் ஏற்படுத்துவது, செயல்முறைகளை அடிப்படையாக கொண்ட கொள்கை, ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட விவாதம் மற்றும் புதிய கூட்டு முயற்சிகளின் வளர்ச்சி போன்றவற்றிற்கு முறையாக ஆவணப்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கியாக் கதை விளக்குகிறது.


உயிர்ச்சூழல் வேளாண்மை அறிவானது பாரம்பாிய மற்றும் உள்ளூர் அறிவின் ஆதாரங்களால் ஈர்க்கப்பட்டு, விவசாயிகள் முன்னெடுத்துச் செல்லும் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பாக, மாற்றுகளுக்கான அறிவையும், அந்தந்த பகுதிக்கு பொருத்தமான தீர்வுகளையும் முன்னெடுக்கிறது. வேளாண் உயிர்ச்சூழல் குறித்த அறிவானது உள்ளூர் கண்டுபிடிப்புகள் மற்றும் அதனை பயன்படுத்துவதன் மூலம் கூர்மைப்படுத்தப்படுகிறது. அப்படியான அறிவை நிலைத்த வேளாண் உணவு முறைகள் மற்றம் வாழ்வாதாரங்களை ஊக்குவிப்பதற்காக பொிய அளவில் பயன்படுவதற்கு, அவற்றை பகிர்ந்து கொள்ளுவது மிகவும் இன்றியமையாதது.

இருப்பினும் அறிவு உற்பத்தி மற்றும் பரவலாக்கும் சங்கிலியில் ஒரு பலவீனமான தொடர்பு என்பது ஒரு குறிப்பிட்ட பின்னணியில் உள்ள செயல்முறைகள், பார்வை மற்றும் படிப்பினைகளை முறையாக ஆவணப்படுத்தும் வேலைதான். வேளாண் உயிர்ச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் அது தொடர்பான அறிவைப் பெற்றிருக்கும் விவசாயிகள் மற்றும் அந்த வழிமுறைகளை மேம்படுத்தும் பணிகளில் உள்ள அடிமட்ட களங்களில் பணி செய்யும் நிறுவனங்கள் பல நேரங்களில் அந்த அனுபவங்களை ஆவணப்படுத்தும் திறனை குறைவாக பெற்றிருப்பார். எனவே, அறிவை ஆவணப்படுத்துவதிலும், அதனை பொதுதளங்களில் பகிர்ந்துகொள்ளும் வகையில், அவற்றை வழிநடத்தும் நிறுவனங்களின் திறமையை மேம்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகிறது.

இந்த பின்னணியில், ஏ.எம். இ. பவுண்டேசன் அதன் லீசா இந்திய திட்டத்தின் வழியே அதன் கூட்டமைப்பு நிறுவனங்களுக்கு அறிவு ஒருங்கிணைந்த உருவாக்கத்தை பலப்படுத்துவதற்காகவும், பகிர்ந்து கொள்வதற்காகவும் ஒரு முயற்சியினை ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதல் திட்டத்தின் மூலம் சிந்தித்தது. லீசா இந்திய கூட்டமைப்பு என்பது ஒத்தக் கருத்துடைய தன்னார்வக் குழுக்கள் மற்றும் தனி நபர்கள் இணைந்து வேளாண் உயிர்ச்சூழல் செயல்முறைகளை நடத்தி செல்வதற்கான பொதுவான கருத்தும், இணைந்த தொலைநோக்கு பார்வையும் கொண்ட அமைப்பாகும்.

தங்களை பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற பலமான ஆர்வத்தின் இயக்கத்தின் காரணமாக, லீசா இந்தியா கூட்டமைப்பு உறுப்பினர்கள் 2 வருட காலம் ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதல் திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். 2003-2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்த திட்டத்தை லீசா இந்தியா குழு, நெதர்லாந்து நாட்டின் இலியா அமைப்பின் ஆலோசனைகளின் படி வழிநடத்தியது. உறுப்பு நிறுவனங்களில் ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதல் பணியை முதன்மைப்படுத்தவும், தீவிரப்படுத்தவும் அதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளில் கவனம் செலுத்துவதுதான் முக்கிய கவனமாக இருந்தது.

கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள அனுபவமானது கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒன்றானது. இதில் அறிவு பகிர்வதில் திறன்வளர்ப்பு, அறிவு ஒருங்கிணைப்பு மேம்பாடு மற்றும் அறிவை பயன்படுத்துவதில் உள்ள மேம்பாடு போன்ற அம்சங்களை எடுத்துரைக்கிறது.

திட்டம்
இந்த இரண்டு வருட ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதல் திட்டமானது 2003 – 2005 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. திட்டத்தின் செயல்பாடுகளில் தகவல் தேடல், ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதல் தலைப்புகளில் கருத்தரங்குகள், சீராய்வு மற்றும் திட்டமிடல் கூட்டங்கள், களப்பணிகள் மற்றும் வேலைகள் அடங்கும். திட்டத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் அவர்களுக்குள் நபர்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தும் வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதற்கு உறுதி எடுத்துக் கொண்டு, இறுதியில் இந்த திட்டத்தை நிறுவனத்தின் திட்ட செயல்பாடுகளோடு இணைத்து கொண்டு செல்லப்பட்டது. இதற்காக கூட்டமைப்பின் உறுப்பு நிறுவனங்கள் ஒரு ஆண்டில் 200 வேலை நாட்கள் பணியாளர் நேரத்தை ஒதுக்கி, கருத்தரங்கில் பங்கு பெறுவது மற்றும் அதன் பின் நடைமுறைப்படுத்த வேண்டிய ஆவணப்படுத்த வேண்டிய பணிகள் மற்றும் அவற்றை பகிர்ந்துகொள்ளும் வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டது. லீசா இந்தியா குழு, இலியாவுடன் இணைந்து கூட்டமைப்பு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வகையான ஆதரவு மற்றம் திட்ட உதவிகளை செய்தது.

அணுகுமுறை:
இந்த திட்டம் மூன்று விதமான அணுகுமுறைகளை அடிப்படையாக கொண்டிருந்தது. பங்கேற்பு முறையில் கற்றல், கற்ற விசயங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் படிப்பினைகளையும், திட்ட வெளிப்பாடுகளையும் தொடர்ந்து சீராய்வு மற்றும் திட்டமிடுதலில் ஈடுபடுவது.
கள அளவில் வேளாண்மை தகவல்களோடு பணி செய்யும் பங்கேற்பாளர்களின் பல்வேறு அனுபவங்களில் இருந்து பங்கேற்பு முறையில் கற்கும் சூழலை ஏற்படுத்துவது ஒரு அணுகுமுறையாகும். குழுவாக கற்கும் வழிமுறைகளோடு தனி நபர்களின் வேலைகளும் அவர்களின் நிறுவனத்தின் முன்னுரிமைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. கை மீது கிடைத்த படிப்பினைகள் நன்கு பிரசித்தி பெற்ற மற்றும் பொிய அளவில் அனுபவமுடைய ஆதார நபர்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு அவர்கள் அந்தப் பணியில் தேவையான தௌிவு மற்றும் அதற்கு மதிப்புக் கூட்டிக் கொடுப்பர். இவ்வாறு, இந்த கருத்துப்பட்டறைகள் நடைமுறையில் உள்ள அனுபவங்கள், திறமைகள் மற்றும் குழுவிடம் இருக்கும் திறமைகள் போன்றவற்றை திட்டத்தின் வழிமுறைகளில் ஒவ்வொரு நிலையிலும் உண்மையில் கட்டியெடுப்பதற்கு உதவியது.

இரண்டாவதாக, மற்றுமொரு முக்கியமான அணுகுமுறையானது, படிப்பினைகளை அந்த நிறுவனங்களுக்குள்ளே குறிப்பிட்ட பங்கேற்பாளரின் வேலையாக நடைமுறைப்படுத்தவது. மேலும், ஒவ்வொரு நிறுவனத்தில் உள்ள நபரை தேவைப்படும் பின்னணி மற்றும் திறமைகளுக்கான கருத்தரங்களில் பங்கேற்க வைப்பது, வேலைகளை தொடர்ந்து செய்வதும் மற்றவர்களை பயிற்றுவிப்பதும் அந்த நிறுவனத்தில் உள்ள ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதலில் உள்ள முக்கிய திறமைகளை கட்டமைப்பதற்கு உதவுகிறது. இது பங்கேற்பாளரின் கற்றல் முயற்சிகள் மற்றும் நிறுவனத்தின் அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதை காட்டுகிறது.
நிறுவனத்தின் தற்போதைய முக்கிய வழிமுறைகளில் ஆவணப்படுத்துதல் முறைப்படியும், தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்டது ஒரு முக்கியமான படிப்பினை. இல்லாவிட்டால் உண்மையாக தகவல்கள் பல்வேறு நிலைகளில் நினைவிலிருந்து அழிந்திருக்கும் – கியாக் பணியாளர்

மூன்றாவதாக, நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் தேவையான கவனம் மற்றும் கடுமையான போக்கு போன்றவை இணைந்த திட்டமிடல் மற்றும் சீராய்வு வழிமுறைகளோடு ஒருங்கிணைக்கப்பட்டது. சீராய்வு கூட்டங்களில் நிறுவனங்களில் தலைவர்கள் பணியாளர்களோடு சேர்ந்து பங்கெடுத்தது அவர்களுக்கு திட்டத்தின் மேல் உள்ள ஈடுபாட்டை மட்டுமல்லாது, சீராய்வை உண்மையாக நடத்தவும், திட்டத்திற்கு தேவையான ஆதரவுகள் மற்றும் ஈடுபாட்டை உறுதிப்படுத்தியது.

கியாக் அனுபவம்
கியாக் (கோராக்பூர் சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குழு) என்பது கிழக்கு உத்திரபிரதேச மாநிலத்தில் கோராக்பூர் மாவட்டத்தில் உள்ள எழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாய சமூகத்தின் நிலைத்த வளர்ச்சிக்காக பணியாற்றும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். கியாக் நிறுவனம் உத்திரப் பிரதேசம் மற்றும் வட இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உறுப்பினர்களாக கொண்டு ஆராய்ச்சி, வக்காலத்து வாங்குதல் மற்றும் கூட்டமைப்பு போன்ற பணிகளுக்காக அங்கீகாிக்கப்பட்ட மையமாக உள்ளது. (www.geagindia.org) கியாக் முன்பு ஏ.எம்.இ யோடு இணைந்து கடந்த காலங்களிலும் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளது. 1990-92 ஆம் ஆண்டுகளில் உயிர்ச்சூழல் வேளாண்மையில் ஏ.எம். இ நிறுவனத்திடம் கியாக் பயிற்சி எடுத்துக் கொண்டது என்ற கூடுதல் விவரத்தை கியாக் நிறுவனத்தின் தலைவர் முனைவர். சிராஸ் வாசி, தொிவிக்கிறார்.
2002 ஆம் ஆண்டில் உருவான கூட்டமைப்பில் ஒரு உறுப்பினரான கியாக் 2003-2005 ஆம் ஆண்டுகளில் பிரத்தியோகமாக நியமிக்கப்பட்ட பணியாளருக்கு நடைபெற்ற ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதல் திட்ட வழிமுறைளில் பங்கெடுத்தது. விரிவாக்க சேவைகளை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கு என்ற கருத்தாக்கத்தை கியாக் முன்னெடுத்தது.

தகவல் சேகாித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதல் என மூன்று கருத்துப்பட்டறைகள் வடிவமைக்கப்பட்டன.

நவம்பர் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தகவல் சேகாிப்பு தொடர்பான முதல் கருத்துப்பட்டறைக்கு பிறகு அதன் பின் தொடர் வேலையாக ”கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் வேளாண் விரிவாக்கத்தில் பெண்களின் பங்கெடுப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை கியாக் தயார் செய்தது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆவணப்படுத்துதல் தொடர்பான இரண்டாவது கருத்துப்பட்டறையில் அந்த கட்டுரை பங்கேற்பாளர்களாலும், பயிற்சி ஆதார நபர்களாலும் நன்கு ஆராயப்பட்டது. இது கியாக் அதில் உள்ள விடுபட்ட விசயங்கள், தௌிவில்லாத விசயங்கள் போன்றவற்றை தௌிவுபடுத்த உதவியது. இந்த கருத்துப்பட்டறைகள், தனி நபர்களின் முயற்சிகளை குழுவாகவும், பயிற்சி ஆதார நபர்களால் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.

கருத்துப்பட்டறையில் கிடைக்கப் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் கியாக் கட்டுரையை மீண்டும் திருத்தி முடிந்தவரை முழுமைப்படுத்தும் வகையில் ஈடுபட்டது. திருத்தியமைக்கப்பட்ட கட்டுரையை அடிப்படையாக கொண்டு அதிலிருந்து பல்வேறு தகவல் பொருட்கள் கொண்டுவர முயற்சிகள் தகவல்படுத்துதல் தொடர்பாக செப்டம்பர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்துப்பட்டறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்துப்பட்டறையில் கவனம் ஆவணப்படுத்தப்பட்ட விசயங்களை குறிப்பிட்ட தகவல்களாக அதற்கு உரிய இலக்கு மக்களுக்கு தகவல்படுத்துவதற்கு உகந்த சாதனங்கள் மற்றும் ஊடகங்களில் கொண்டு வருவதற்கான திறன்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
இந்த கருத்துப்பட்டறையில் கிடைக்கப் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில், ”விவசாய நிலங்களின் மேல் பெண்களுக்கு உள்ள உரிமைகள் ” என்ற கருத்தை மையப்படுத்தி ஒரு சுவரோட்டியும், கிராமங்களில் பொிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆவணப்படம் ஒன்றையும் கியாக் தயாரித்தது.
இந்த திட்டம் கியாக் பணியாளர்களுக்கு ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதல் தொடர்பாக பல்வேறு அம்சங்களில் திறனையும் அறிவையும் வெற்றிகரமாக வளர்த்துக் கொள்ள உதவியது. பல்வேறு பார்வைகள், உண்மைகள் மற்றும் பாிமாணங்களில் (சமூக, தொழிற்நுட்ப மற்றும் மனித) நல்ல தௌிவை பெற உதவி, ஒரு குறிப்பிட்ட அனுபவத்தில் அல்லது வழிமுறையில் முழுவதுமாக தயாரிப்பதை உள்ளடக்கியது.

பிரச்சாரத்திற்கு ஒரு கருவியாக உதவியது
இந்த கருத்துப்பட்டறைகள் உருவாக்கி கொடுத்த வேகத்தை கியாக் மேலும் ஒரு அடி எடுத்து தக்க வைத்துக் கொண்டது. அவர்களின் இந்த ”விரிவாக்க சேவையை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கு” என்ற ஆவணப்படைப்பு வக்காலத்து வாங்குவதற்கான ஒரு சிறந்த கருவியாக பயன்படுத்துவதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்கள் அதனை ஒரு கொள்கை ஆவணமாக தயாரித்து உத்திரப்பிரதேச மாநில அரசின் வேளாண் துறை முதன்மை செயலாளரிடம் பகிர்ந்து கொண்டனர். மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெற்ற வேளாண் விரிவாக்கத்தில் பெண்கள் பிரச்சனைகள் தொடர்பான விவாதங்கள் நிகழும்போது முக்கியமான ஆவணமாக கொடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. வேளாண் விரிவாக்கத்தில் பெண்களின் அவலநிலை மற்றும் பிரச்சனைகள் அங்கீரிக்கப்பட்டு விரிவாக்கப் பணிகளில் பெண் விவசாயிகளின் பங்கு அங்கீகாிக்கப்பட்டு மிக முக்கிய கொள்கை மாற்றம் ஏற்பட வழி வகுத்தது.
இந்த ஆவணப்படத்தின் தொகுப்பு களஅளவில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அடையாளம் காணவும் அதற்கான தேவையையும் முன்னிறுத்தி , உத்திரப்பிரதேசத்தில் 2006 ஆம் ஆண்டு பெண் விவசாயிகள் உரிமைகள் குறித்த பிரச்சாரத்திற்கு தூண்டியது. இது 200 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் என உத்திரப்பிரதேசத்தில் 70 மாவட்டங்களில் 5 மண்டலங்களில் நடைபெற்றது. இந்த பிரச்சாரம் மாநில மற்றும் தேசிய அளவில் அங்கீகாிக்கப்பட்டு முக்கிய மாற்றங்களாக உத்திரப்பிரதேசத்தில் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்தது என்கிறார், கியாக் அமைப்பின் முனைவர். சிராஸ் வாசி

இதன் வெளிப்பாடாக விவசாய பெண்களை கவனத்தில் கொள்ளும் வகையில் ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது. இவைகள் அனைத்தும் வேளாண்மையில் பெண்கள் என்ற ஆண்டு பிரச்சாரத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இந்த வெளிப்பாட்டினால் ஈர்க்கப்பட்டு பெண் விவசாயிகள் என்ற கருத்தாக்கத்தை ஒட்டி புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்கள் துவக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக , கியாக் நிறுவனத்தில் ஆவணப்படுத்துதல் மற்றும் தகவல்படுத்துதலில் அதன் எண்ணிக்கையிலும், தரத்திலும் மிகப் பொிய எழுச்சி ஏற்பட்டது. இது அதிகமாக வெளியிடப்பட்ட தகவல்கள் திரட்டுகள் மற்றும் நிறுவனத்தை பற்றிய சமர்ப்பில், அதன் தரம் மற்றும் உள்ளடக்கத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் ஆதாரமாக விளங்கின. மேலும் பொது தளங்களில் அனுபவப் பகிர்வில் மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் நிறைய புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும் வகையில் முடிவை தந்தது.
இதற்கு முன்னர், கியாக் உள்ளூர் செய்திகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மையப்படுத்தி தங்களது சொந்த செய்திமடலாக ஹிந்தி மொழியில் வசுந்தரா வெளியிடப்பட்டது. அதன் பிறகு கியாக் இந்திய மொழிகளில் அதிக மக்கள் அடையும் வகையில் அதிக மக்கள் பேசும் மொழியான ஹிந்தியில் செய்திமடல்களை வெளியிடுவதற்கு முன்னே ஈடுபடும் வகையில் வளர்ச்சி அடைந்தது. (பெட்டி செய்தி 1 ஐ பார்க்கவும்). தற்போது கியாக் லீசா இந்தியா ஹிந்தி மடலையும் உள்ளடக்கி மூன்று செய்திமடல்களையும், 15 வண்ணமயமான ஆண்டு அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள், ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள்,திட்டங்கள் தொடர்பான குறிப்பிட்ட கருத்தாக்க தாள்கள் மற்றும் ஆவணப்படங்கள் என 400 வகையான ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

பகுப்பாய்வு மற்றும் முடிவுரை
பிரச்சாரங்களை மற்றும் வேளாண் உயிர்ச்சூழல் மேம்பாடுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை ஹிந்தி பேசும் வட இந்திய பகுதிகளில் முன்னெடுப்பதில் கியாக் முன்னணி கூட்டமைப்பாக இருந்துள்ளது மற்றும் தற்போதும் இருந்து வருகிறது. 2003-05 ஆம் ஆண்டில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் அதற்குரிய நோக்கத்தையும், தொலைநோக்கு பார்வையையும், ஆவணப்படுத்துவதிலும், நிறைய போிடம் சென்றடைவதிலும் மிகப்பொிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதன் தாக்கம் அவர்கள் நல்ல தரமான தகவல்கள் பகுப்பாய்விலும், தொகுப்பிலும், பகிர்ந்து கொள்வதிலும் வெளிப்படுகிறது. களத்தில் என்ன நடைபெற்று வருகிறது என்பதை சேகாிப்பதில், கொள்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதில், புதிய வளர்ச்சி திட்டங்களை துவக்குவதில் (உதாரணத்திற்கு நகர்புற வேளாண்மை, பருவநிலை மாற்றத்திற்கு உள்ளூர் நடைமுறைகள்), கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு திட்டங்கள் போன்றவற்றில் நடைபெறும் விவாதங்கள் என இந்த நிறுவனம் மிகப்பொிய அளவில் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. லீசா இந்தியா ஹிந்தி மடலை வெளியிடுவதன் மூலம், படிப்பறிவில்லாத சமூகங்களுக்கு உள்ளூர் மொழியின் வாயிலாக வேளாண் உயிர்ச்சூழல் நடைமுறைகளையும், குடும்ப வேளாண் இயக்கங்களும் அவர்களை சென்றடையும் பணியை கியாக் பிரபலப்படுத்தி வருகிறது.

லீசா இந்தியா – ஹிந்தி மடல்
பெட்டி: 1
வயல்வெளிப்பள்ளிகள், விவசாயக்குழுக்கள், வள ஆதார மையங்கள், ஆத்மா மற்றும் இதர அரசு திட்டங்கள் வழியாக விவசாயிகளை சென்றடைவது.

  • களத்தில் பணி செய்யும் வழிநடத்துநர்கள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்களை நேரடியாக சென்றடைவது.
  • உள்ளூர் சூழலுக்கு ஏற்ப நேரடியாக தொழிற்நுட்பங்கள் பின்பற்ற தாக்கத்தை ஏற்படுத்தவது.
  • கள அளவில் வாசகர் அளவை வளர்ப்பது அதன்மூலம் தேவையை அதிகாிப்பது
  • விவசாயிகள் முன்னின்று செய்யும் கண்டுபிடிப்புகளை பரவலாக பகிர்வது.
  • வேளாண்மையில் செலவை குறைத்து சிறு குறு மற்றும் பெண் விவசாயிகளை கவர்வது.
  • தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அவர்களின் முன்னணி பொறுப்பாளர்களுக்கு நடத்தும் பயிற்சிகளுக்கு தேவைப்படும் கையேடாக பயன்படுத்துவது.
  • ஆராய்ச்சி நிலையங்கள், அரசு துறைகள் போன்றோர் அவர்களது பயிற்சியின்போது பயன்படுத்திக் கொள்வது.
  • நகர்ப்புற வேளாண் செயல்பாடுகள் மற்றும் பருவநிலையை எதிர்கொள்ளும் வேளாண் முறையை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.

கே. வி. எஸ். பிரசாத்


K V S Prasad
Executive Director,
AME Foundation, Bangalore - 560085
www.amefound.org
E-mail: leisaindia@yahoo.co.in

மூலம்: லீசா இந்தியா, செப்டம்பர் 2016, வால்யூம் 18, இதழ் 3

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...