சமூக முயற்சியின் மூலம் உணவு உத்திரவாதமின்மையின் சவாலை சந்தித்தில்


திறன் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் பெண்களை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குதல், இருக்கும் திறன்களை பயன்படுத்துவது, தேவையான இடத்தில் உதவி அளிப்பது மற்றும் மறுசுழற்சி மூலம் அனைத்து பண்ணை செயல்பாடுகளை ஒருங்கணைத்தல் ஆகிய காரணிகள் யாவும், கேரளாவில் உள்ள இந்த ஏழை பெண்களை வறுமையிலிருந்து வெளிகொணர்ந்தது.


கேரளாவில் பெண் விவசாயிகள், நெல், கிழங்குகள் மற்றும் காய்கறிகள் ஆகியவை முழுமையாக சாகுபடி செய்வதில் ஈடுபட்டிருந்தனர். 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்க்கை பயிர்களிலிருந்து நெல் மற்றும் கருணைக் கிழங்கு, பணப்பயிர்களான கரு மிளகு, காப்பி, இஞ்சி மற்றும் ரப்பர் ஆகியவற்றிற்கு பெரும் மாற்றமடைந்தது. குறைந்த மண் மற்றும் தண்ணீர் சேமிப்பு தொழில்நுட்பங்களோடு இணைத்து தொடர்ந்து வேளாண்மையை செய்ததனால் வேளாண் உற்பத்தி குறைந்தது.கடந்த பத்து ஆண்டுகளில், அதிகாித்த பூச்சி தாக்குதல்,நோய்கள்மற்றும் சாிந்துவரும் விலைகள் அனைத்தும், அதிகாித்த உற்பத்தி செலவும் சேர்ந்து உள்ளூர் சாகுபடியில் பிரச்சனை ஏற்பட்டு இதனால் விவசாயிகள் மற்றும் இதர பணியாளர்கள் தொடர்ந்து வறுமை நிலை அடைகின்றனர்.

2004 ஆம் ஆண்டு, ரஸ்தா என்ற அமைப்பு, வயநாட் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் (உள்ளூர் நிர்வாகப் பகுதி) ஆய்வு நடத்தியது, அதில் உணவு பயிர்களில் 90 சதவிகிதப் பெண்கள் கூலியாட்களாக பணியாற்றுகின்றனர் என்று காட்டுகிறது. ஆனால் சாகுபடியில் உணவுப் பயிர்களிலிருந்து (நெல்) பணப்பயிர்களுக்கு (வாழை) மாறியதன் விளைவாக பெண் கூலிகளின் நிலையும் மாறியது. வயநாட் மாவட்டத்தில் ரஸ்தா அமைப்பினால் சமீபகால மதிப்பீடு காட்டியது என்னவென்றால் நெல் சாகுபடி 40000 ஹெக்டோிலிருந்து 12000 ஹெக்டேராக சுருங்கிய பின்னர், பெண்கள் ஒரு பட்டத்தில் கிட்டதட்ட 1,500,000 பணி நாட்கள் நெல் சாகுபடியின்போது தொலைத்தனர்.

பெண்கள், வேளாண் பணிகளை நாளடைவில் குறைந்ததனால், அவர்களின் சார்புத்தன்மை அதிகாித்து, அதனால் அடிப்படை பொருளாதார தேவைகளுக்கும் தங்களது கணவரிடமே எதிர்ப்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மேலும் குடும்ப அளவில் உணவு உத்திரவாதமின்மையை உருவாக்கியுள்ளது. சமீபகாலமாக விவசாய தற்கொலைகள் அதிகாித்து வருவதனால் பெண்களின் தோல்களில், குடும்பத்தை மேம்படுத்துவது, குழந்தைகளின் கல்வி மற்றும் இதர குடும்ப தேவைகள் ஆகிய பொறுப்புகள் சுமக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த பெண்களாக்குதல்
ரஸ்தா நிறுவனம் வயநாட் மாவட்டத்தில் 1987 ஆம் ஆண்டிலிருந்து கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்வு காணும் பணியில், குறிப்பாக பெண்கள், பாரம்பாிய சமூகங்கள் மற்றும் குறு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டுவருகிறது. பெண்கள் திறன்மிக்கவர்களாக ஆக்குவது, இந்த நிறுவனம் முக்கிய சவால்களில் ஒன்றாக துவக்கிய நாளிலிருந்தே கருதப்படுகிறது. துவக்கத்தில் கிராம மற்றும் பழங்குடியின பெண்களை ஒருங்கிணைப்பதற்காக ‘சேமிப்பு மற்றும் கடன் குழுக்கள்” ரஸ்தா நிறுவனம் மூலம் 1990 ஆம் ஆண்டு உருவாக்கி, பின்னர் சுய உதவிக் குழுக்களாக மாவட்டத்தில் 12000 ஏழைக் குடும்பங்களுக்கு பரவலாக பரப்பப்பட்டது. 10-15 பெண்கள் ஒன்று கூடுதல், பெரும்பாலானோர் ஒரே எண்ணத்துடன் இருப்போர், ஒரே பொருளாதார பின்னனியில் உள்ளவர்கள் போன்ற காரணிகளைக் கொண்டு சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்தல். இவர்கள் வாரம் ஒரு முறை கூடி சேமிப்பு, அவர்களுடைய உரிமைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடி, கற்றுகொள்கின்றனர். இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் திடமான தலைமை பண்புகள் மற்றும் ஒன்றுபட்ட செயல்கள் உருவாகிறது. மேலும் இந்த ஒன்றுபட்ட சக்தி உறுப்பினர்களுக்கு, பெரும்பாலும் புதிய அல்லது மாற்று வாழ்வாதார செயல்பாடுகள் தொடங்குவதற்கான வழிகாட்டியாக அமைகிறது. வருடங்கள் செல்ல செல்ல சுய உதவிக் குழு அனுகுமுறை, பெண்களை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குவதற்கும், கிராமங்களில் உள்ள வளர்ந்து வரும் உணவு உத்திரவாதமின்மை பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கு மிக ஏதுவாக இருந்ததை நாங்கள் கண்டோம். முதன்மை வாழ்வாதார துறையான, வேளாண்மையில், பல பிரச்சனைகளை சந்திப்பதால், ரஸ்தா நிறுவனம் இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, நிலைத்த வேளாண் உற்பத்தி முறைகள், அறிவு பாிமாற்றம், கள விரிவாக்க பணி மற்றும் பயிர் பல்வகைமை ஆகியவற்றில் பயிற்சியளித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.

உணவு உத்திரவாதமின்மை மற்றும் வேலையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெண்கள் விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்பட்டது. இந்தப் பரச்சனையை தீர்ப்பதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் தனித்துவம் வாய்ந்த ஒன்றை துவக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். சுய உதவி குழுக்களை சேர்ந்த ஐந்நூறு பழங்குடியின மற்றும் இதர குறு விவசாயிகளின் ஏழைக் குடும்பங்கள் இந்தப் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க முன்வந்தனர்.

விதை பாிமாற்றத் திருவிழா
குடும்ப உணவுக் கூடையில் காய்கறிகள் பெரும் பங்கு வகிக்கின்றது. பல ஆண்டுகளுக்கு முன்னரே காய்கறி சாகுபடி, பணப்பயிர்கள் சாகுபடிக்கு மாறியது. இந்த தொழில்நுட்பம் மறுஉருவெடுக்க, ஒரு விதை பாிமாற்றத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.விதை பாிமாற்றத் திருவிழா என்பது கிராமத்தில் உள்ள பெண்கள் விவசாயிகள் அவர்களிடம் உள்ள விதைகளை மற்ற விவசாயிகளோடு பாிமாறிக்கொள்வதே இதன் நோக்குமாகும். குறைந்தது ஒரு விதையாவது பெற்றிருந்தால் மட்டுமே விவசாயிகள் இந்த திருவிழாவில் பங்குபெற அனுமதிக்கப்பட்டனர்.

தொடக்கத்தில், முப்பது குழுக்கள் (300 பெண் விவசாயிகள்) இந்த விதை பாிமாற்ற திருவிழாக்களில் ஈடுபடுத்தப்பட்டனர். விதை பாிமாற்ற திருவிழா, டிசம்பர் மாதம் நெல் அறுவடை செய்த உடனே நடத்தப்படுகிறது. திருவிழாவிற்கு பின்னர், 5-10 உறுப்பினர்கள் கொண்ட பெண் குழுக்கள் சேர்ந்து காய்கறிகள் சாகுபடி செய்வர். இயற்கை உரங்கள், மக்கு மற்றும் மனிதனால் கட்டுபடுத்தப்படும் பூச்சிகள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே அவர்கள் சோப்பு மற்றும் புகையிலை கலவையை பயன்படுத்துவர் – ஒரு உயிர்ச்சூழலுக்கு உகந்த பூச்சி கட்டுபடுத்தும் முறை. ஒரு மாதத்திற்குள் அவர்கள் அறுவடை செய்ய ஆரம்பித்து விடுகின்றன, முதலில் கீறை வகைகளில் ஆரம்பித்து, பின்னர் மற்ற பயிர்களை அறுவடை செய்வர். மிகுதியான காய்கறிகள் சமூகத்திற்கு நேரடியாக விற்கப்படுகிறது. இது இடைத்தரகர்களை விலக்கி, பெண்களின் குழுக்களுக்கு உறுதியாக அதிக விலை கிடைக்கிறது மற்றும் அதிக தரமான இயற்கை காய்கறிகள், இரசாயன பூச்சிகொல்லிகளிலிருந்து விடுதலை ஆகியப் பயன்கள் கிராம சமூகங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த செயல்பாடு வீட்டில் உணவு இருப்பு அதிகாித்துள்ளது, மேலும் வெளி உணவை சார்ந்திருத்தலும் குறைந்துள்ளது.

அறுவடையின்போது சிறப்பான தரமிக்க விளைபொருளை விதைபொருளாக சேகாித்து, பாரம்பாிய முறைகளில் பாதுகாத்து அடுத்த விதைத் திருவிழாவில் அதனை பகிர்ந்துகொள்ளப்படும். ஆகையால் பாரம்பாிய இரகத்தை சேமிப்பதற்கும், பரப்புவதற்கும் ஒரு பாரம்பாியம் உருவாக்கப்படுகிறது.

கால்நடை கொணர்தல்
கால்நடை வாங்குவதற்கு, சுமார் 530 உறுப்பினர்கள் தலா ரூ.20,000 சிறு கடன் கிடைத்தது. பெண்கள் குழுவாக அனுகியதால், எந்த பத்திரமும் இல்லாமல் கடன்கள் கிடைக்க முடிந்தது. இங்கு குழு பொறுப்பேற்கிறது, இந்த குழுவே உத்திரவாதம் அளிக்கிறது. இது உள்ளூர் பொருளாதாரத்திற்கும், ஏழை குடும்பங்களுக்கும் சிறந்த ஊட்டமாகும்.

அதிக மகசூல் அளிக்கும் பசுக்களை மேம்படுத்துவது குறித்து பெண்களுக்கு செயல்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பகுதி இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியென்பதால், இறக்குமதி உணவின் சார்புத்தன்மை மிகக் குறைவாகவே உள்ளது. மேலும் பண்ணைக் கழிவுகள் தீவனமாக பயன்படுகிறது, ஆகையால் பயிர் உற்பத்தியோடு கால்நடையும் ஒருங்கிணைக்கப்பட்டது.
சராசாியாக, ஒரு பசு ஒரு நாளைக்கு15-20 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. மில்மா, ஒரு அரசு பால் வினியோக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பால் சேகாிக்கப்படுகிறது. பெண்கள் ஒரு நாளைக்கு ரூ.600 வருமானம் கிடைத்தது. கால்நடைகளை வளர்ப்பதற்கான செலவும், கடன் திரும்ப செலுத்துவதற்கும் இது போதுமானதாகும். கால்நடை வளர்ப்பு இந்த பெண்களுக்கு வருமானம் ஈட்டும் நல்ல திட்டமாக உள்ளது.

கால்நடை வளர்ப்பு குடும்பத்திற்கு பல வழிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.சாணம் பயன்பாடு காய்கறி மற்றும் நெல் சாகுபடி உயர்கிறது.
மக்கு எருவிற்கு மிக குறைவான அளவே பயன்படுத்துவதால், மீதமுள்ள சாணம் உயிர் எரிவாயுவிற்கு பயன்படுத்தப்பட்டது. பண்ணை வீடுகளுக்கு ஒரு உயிர் எரிவாயு தொட்டிற்கு ரூ. 5000 (சுமார் 50%) நன்கொடையாக அளிக்கப்பட்டது. மீதியுள்ள தொகை கூலியாட்கள் அல்லது சுய உதவி குழுக்களிடமிருந்து கடன் எடுக்கப்பட்டது. உயிர் எரிவாயு கலன்களை விறகு உபயோகம் குறைவதோடு, வெளி ஆற்றல் வினியோக சார்புத் தன்மை குறைந்துள்ளது. உயர் எரிவாயு கழிவு மறுசுழற்சி செய்து பயிர்களுக்கு எருவாகிறது.

செம்மை நெல் சாகுபடி மூலம் நெல் உற்பத்தியை மறுஅறிமுகம் செய்தல்
5 பெண்கள் கொண்ட சுமார் 40 குழுக்கள் செம்மை நெல் சாகுபடி முறை மூலம் 200 ஏக்கர் நெல் சாகுபடி செய்தனர். இந்த முறையில் அதிக மகசூல் கிடைப்பதற்கு, சாதாரண முறையை விட 50% குறைவான விதைகளும், 40-50% குறைவான தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது. கன்னியம்பெட்ட பஞ்சாயத்தை சேர்ந்த பாரம்பாிய பெண் விவசாயியான, தங்கம்மா, ஒரு ஏக்கர் நிலத்தில் 3500 கிலோ அரிசி உற்பத்தி செய்த இவர், மற்ற விவசாயிகளுக்கு உந்துதலாய் இருந்தது. பசுஞ்சாணம், மக்கு உரம் மற்றும் உயிர் எரிவாயு கழிவு ஆகிய அனைத்தும் கிடைப்பதால், உற்பத்தி முறை முழுவதும் இயற்கையாகவே பின்பற்றப்பட்டது. காய்கறிகளை போலவே, பெண்கள் மிகுதியாக இருக்கும் அரிசியனை மற்ற உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு நல்ல விலைக்கு விற்கவும் முடிகிறது.

முடிவு
திறன் மற்றும் நம்பிக்கை வளர்ப்பின் மூலம் பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக்குதல், இருக்கும் திறன்களை பயன்படுத்துதல், தேவையான இடத்தில் உதவி அளித்தல், அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தல், அதில் ஒரு செயல்பாட்டின் கழிவுகள், மற்ற செயல்பாட்டிற்கு இடுபொருளாய் ஆகிவிடுகிறது ஆகிய காரணிகள் இந்தத் திட்டம் வெற்றிபெற்றதற்கான முக்கிய காரணம். ஆதார மறுசுழற்சி செய்வதனால் உற்பத்தி செலவு குறைகிறது, மேலும் வெளி ஆதாரங்களின் சார்புத்தன்மையும் குறைகிறது.

சத்துக்கள் உத்திரவாதத்தில் ஆச்சாியமூட்டும் மாற்றம், இந்த குடும்பங்களின் குழந்தைகள் மற்றும் பெண்களின் நிலைதான், இந்தத் திட்டத்தின் சிறந்த தாக்கங்களில் ஒன்று.முதல் முறையாக இந்த குடும்பங்களுக்கு பால் இறுப்பு இருந்தது, மேலும் உறுப்பினர்களின் ஆரோக்கியம் உயர்ந்தது. உரத்திற்கு பயன்படுத்தும் பசுஞ்சாணம் போன்ற உப பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான உயிர் எரிவாயு ஆகியவை வேளாண் இடுபொருட்கள் மேல் விவசாயிகளின் பார்வை மாறியது.

முதல் முறையாக இந்த குடும்பங்களுக்கு பால் இறுப்பு இருந்தது, மேலும் உறுப்பினர்களின் ஆரோக்கியம் உயர்ந்தது.
மிக முக்கியமாக, சமூகத்திற்குள் பெண்களின் நிலை மற்றும் சுய நம்பிக்கை அதிகாித்துள்ளது. தற்போது, உள்ளூர் அரசு பஞ்சாயத்து ராஜ் மையமும் இந்தத் திட்டத்தை எடுத்து மாநிலத்தில் பரவலாக நடத்தப்பட்டது.

டி.கே. ஓமனா


T K Omana
Director,
Rural Agency for Social and Technological Advancement(RASTA), 
Kamblakad.P.O.,Wayanad District.,
Kerala – 673122
www.rastaindia.org
E-mail: t.k.omana@gmail.com

மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2015, வால்யூம் 17, இதழ் 4

அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...