வேளாண் உயிர்ச்சூழல்வியல் – வளத்திற்கு வழி


தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம் வட்டத்தில், நல்லம்பட்டி கிராமத்தில் வாழும் திருமதி. ரேவதி, ஒரு இளம் விவசாயி. இவரது குடும்பத்திற்கு விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரம் என்றாலும், இவரின் கணவர் அருகில் உள்ள டவுனில் ஓட்டுனராக பணிபுரிதல் முக்கியமாக என்னுகிறார். ஏனென்றால் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை. நிலத்தை தாிசாக விட மணமில்லாமல், ரேவதி தனது ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்து வந்தார். சாதாரண முறையில் சாகுபடி செய்து வந்த அவருக்கு, பெரும்பாலும் ஒரு பயிரை வெற்றிகரமாக மகசூல் எடுப்பதற்கு பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். வெளியிடு பொருட்களை சார்ந்திருப்பதால் உற்பத்தி செலவும் அதிகமாக இருந்தது. உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு, மண்ணின் ஆரோக்கியமும் நாளடைவில் குறைந்துவிட்டது.


2011 ஆம் ஆண்டு, ஏ.எம்.இ. நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விவசாய வயல்வெளிப் பள்ளி திட்டத்தில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு, ரேவதிக்கு கிடைத்தது. துவக்கத்தில் 20 இளம் பெண்கள் கொண்ட குழு ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த பெண்கள் ஏற்கனவே சுய உதவிக் குழுவில் ஈடுபட்டு சேமித்தும், கடன் பெற்றும் வருகின்றனர். முதலில் பெண்களுக்கு நிலைத்த வேளாண்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டது, பின்னர் விவசாயி வழிநடத்துனர்களாக்குவதற்கு பயிற்சியளிக்கப்பட்டது.

வுிவசாய வயல் வெளிப் பள்ளியில் கற்றுக்கொள்ளும்போது, தன்னுடைய வயலில் ரேவதி பல உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை செயல்படுத்தினார். மழை நீரை சேமிக்கும் நோக்கோடு சாிவுக்கு குறுக்கே உழவு செய்தார், மண் வளத்தை அதிகாிப்பதற்கு பசுந்தாள் உரத்தை மடிக்கி உழவு செய்ய வேண்டும். இதற்காக முக்கிய பயிர் சாகுபடி செய்வதற்கு முன், சனப்பை விதையை, இலைதழைகள் உற்பத்தி செய்வதற்கு விதைத்தார். அவர், உயிரூட்டப்பட்ட தொழுஉரத்தை ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா, எதிர்உயிரியான ட்ரைகோடர்மா விரிடி போன்றவைகளை கலந்து வயலில் இட்டார்.

பூச்சிகளை கட்டுபடுத்துவதற்கு, குறிப்பாக நிலக்கடலையில் பெரும் சேதம் ஏற்படுத்தும் சாறு உறிஞ்சும் பூச்சியான எபிட்ஸ் ஈர்க்க, குறைந்த செலவுடைய மஞ்சள் ஒட்டு பொறியை கண்டுபிடித்து வயலில் நிறுவினார். சாறு உறிஞ்சும் பூச்சிகளை தடுக்க சோளப்பயிரை ஓரப்பயிராக வளர்த்தார். புழுக்கள் பயிரை தாக்ககமல் தடுக்க, ஆமணக்கு பயிரை ஓரப்பயிராக வளர்த்தார். இதனால் பூச்சிகொல்லிகளை நிறுத்தினார்.

துவரை மற்றும் காராமணி ஆகியவற்றை நிலக்கடலைக்கு ஊடுபயிராக விதைத்ததனால் சாகுபடியில் பல்வகைமையை ஏற்படுத்தியதால் பிரச்சனைகளும் குறைந்தார். பண்ணையில் உள்ள பல்வகைமை, அவர்களது பண்ணை மற்றும் வாழ்வாதாரங்களில் வளைந்துகொடுக்கும் தன்மை உயா;வது மட்டுமில்லாமல், நல்ல மகசூல் பெற்று வருமானமும் அதிகாித்தது. நம்பமுடியாத அளவிற்கு மானாவாரி நிலத்தில், ரேவதி ரூ.85000 ஈட்டமுடிந்தது. உற்பத்தி செலவும் ரூ.3450 வரை குறைந்தது. ரேவதி, தன்னுடைய பண்ணையில் பல இதர பண்ணை சார்ந்த தொழில்நுட்பங்கள் செய்து வந்தார்.அவர் 13 வகையான காய்கறிகளை விதைத்து அதன் மூலம் வாரத்திற்கு ரூ.1000 மதிப்புள்ள விளைபொருட்களை அறுவடை செய்தார். தீவன வங்கி மற்றும் அசோலா வளர்ப்பு கால்நடைக்கு தொடர்ந்து தீவனம் அளித்து வந்தது. இரண்டே படுக்கை அமைத்து ரேவதி காளான் வளர்ப்பையும் செய்ய துவங்கினார். காய்கறிகள், பால் மற்றும் காளான் யாவும் அரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவை அளிக்கிறது. அளவுக்கு அதிகமாக கிடைப்பதை விற்று தொடர்ந்து வருமானமும் ஈட்டலாம்.

ரேவதி, அவர் எடுத்த முயற்சிகளுக்கு அவர் பெருமைபடுகிறார். தனது பண்ணையை நிலைத்ததன்மை அடைந்ததற்கும், ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவை அளித்ததற்கும், கால்நடைகளுக்கு தீவனமும் மற்றும் வீட்டிற்கு வருமானமும் கிடைத்ததில் வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். இவரின் திறன் மற்றும் விழிப்புணர்வை கொண்டு, தற்போது உயிர்ச்சூழல் வேளாண்மை பயிற்றுனராக இருக்கிறார்.


This article has been developed by J. Krishnan. He can be contacted at josephkrish@rediffmail.com


Smt. K Revathi can be contacted at Door.No. 3/1A, 
Nallampatti village, B. Agraharam, Pennagaram
taluk, Dharmapuri district, TamilNadu - 636 813

மூலம்:  லீசா இந்தியா, டிசம்பர்; 2015, வால்யூம் 17, இதழ ; 4
அண்மைய இடுகைகள்
கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் – குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்

மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை,...

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி – ஒரு ஊக்கமளிக்கும் பயணம்

புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல்...