வீட்டுத் தோட்ட விவசாய அமைப்பு, கேரளாவில் உள்ள குடும்ப சாகுபடியை புதிதாகவும், இருக்கும் நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கும் மிக சிறப்பான வாய்ப்புகளை அளிக்கிறது. சாகுபடி முறையை உதாசினப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த மையங்களின் உதவியோடு, பண்ணை அளவிலான மதிப்பு கூட்டுதல் முன்னேற்ற பாதைக்கு செல்கிறது. எதவா பெண்களின் சங்கம் அவர்களின் கூலிக்கு ஏற்ற கனிகளை அறுவடை செய்யும் அதேநேரத்தில் உற்பத்தி திறன் கொண்ட பண்ணை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனபி.அனிதாகுமாரி மற்றும் வி. கிருஷ்ணகுமார்.
கேரளாவில் உள்ள முழுமையான வீட்டுத்தோட்டம் என்பது வளமான மண், நல்ல சீதோஷண நிலை, சமமாக பெய்யும் மழை மற்றும் சிறுகுறு நிலப் பரப்பளவு ஆகிய பண்புகளை தாங்கியிருக்கிறது. தென்னை மற்றும் பனை மரங்கள் பலவருடப் பயிராக உருவாகி, துணை பயிர்களை அதனுடன் வளர்க்க இடைவெளி அளிக்கிறது. ஊடுபயிர்களை தேர்ந்தெடுத்தல், விளைபொருட்களை பயன்படுத்துவது சமந்தமான முடிவுகள், குடும்பத் தேவைகளை சந்தித்தல், சிறுத் தொழில் பதப்படுத்துதல் மற்றும் மிகுதியாக உள்ள விளைபொருட்களை விற்பனை செய்தல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களே. பொதுவாக, காய்கறிகள் (வருடம் முழுவதும் சத்துக்கள் அல்லது வீட்டுத் தோட்டம்) கிழங்கு பயிர்கள் (கருணைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, உருளைக் கிழங்குகள் போன்றவை குடும்ப பயன்பாட்டிற்காக ஒரு வருடத்திற்கு சேமிக்கப்படுகிறது) மற்றும் வாழைப்பழம் (பல்வேறு பாகங்களாக இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள்) ஆகியவை ஊடுபயிர்களாக வளர்க்கப்படுகிறது. மேலும் வீட்டில் பயிர்கள் தேர்வு செய்வதில் பெண்களே முடிவெடுக்கின்றனர். பல வருட பயிர்களான முருங்கை, கறிவேப்பிலை, கீரைகள் ஆகிய பயிர்களையும் தென்னை தோட்டத்தின் இடையில் வளர்க்கலாம்.
பயன்பாடு மற்றும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் கலப்பு பயன்பாடு உடைய பயிர்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பர். பல்வேறு செயல்பாடுகளை செய்வதற்கும், குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான உணவுத் தேவையை தீர்ப்பதற்கும், அவர்கள் ஒத்துபோகும், சுலபமாக இருக்கும் மற்றும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கும் காரணிகளை ஒருங்கிணைக்கின்றனர். சுமார் 30% குடும்பங்கள் கோழி அல்லது வாத்து, பண்ணையை சிறியளவில் (10-20 பறவைகள்), கால்நடை, ஆடுகள், மேம்படுத்தி வந்தனர். இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான செயல்பாடுகள் பெண்களே செய்கின்றனர்.
பண்ணை அளவிலான மதிப்புக் கூட்டுதல்
ஐ.சி.ஏ.ஆர்- மத்திய மரப்பயிர்கள் ஆராய்ச்சி மையம், பண்ணை அளவில் மதிப்பு கூட்டுதலை உயர்த்த 2010-2014 வரை பெண்கள் பங்கேற்புடன் கூடிய திட்டத்தை செயல்படுத்தியது. இருக்கும் பண்ணை ஆதாரங்களை வீணாகாமல் பயன்படுத்தவும், பண்ணை குடும்பத்தின் வருமானத்தையும் மற்றும் பண்ணையில் பெண்களின் ஈடுபாடு அதிகாிக்கவும் செய்வதே இதன் நோக்கமாகும்.
தற்போதைய சூழ்நிலையை புரிந்துகொள்ள தருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள எதவா கிராம பஞ்சாயத்தில் வயல் அடிப்படை ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 70 சதவிகிதத்தற்கும் மேல் பெண்கள் ஒரு நாளைக்கு 1.5 – 2 மணி நேரங்கள் உற்பத்தி செயல்பாடுகளுக்கு செலவிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முக்கியமாக பெண்கள் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் அல்லது அலுவலக பொருப்பாளர்களாக இருக்கின்றனர். பெண்களை பொருத்தவரையில், குடும்பத்திற்கு தேவையான சத்தான மற்றும் பாதுகாப்பான உணவை உற்பத்தி செய்வதும், சிறு தொழில்கள் மூலம் வருமானம் பெறுவதும், விவசாயத்தின் நோக்கமாகும். இந்தக் காரணிகளை கருத்தில் கொண்டு, வீட்டுத் தோட்டத்திலிருந்து பெறும் விளைபொருட்களை, பண்ணையிலேயே மதிப்பு கூட்டும் செயல்பாட்டை ஒருங்கிணைத்து, ஒரு திட்டம் வடிவமைக்கப்பட்டது. வேளாண்மைத் துறை, தொழில் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வங்கிகள் ஆகிய அமைப்புகளிடமிருந்து நிதியுதவியும், பொருளுதவியும் பெறப்பட்டது.
பஞ்சாயத்து அளவில் ஒவ்வொரு பட்டத்திலும் கிடைக்கும் பண்ணை பொருட்களின் அளவு குறித்த தகவலை சேகாித்து, அதன் அடிப்படையில் மதிப்பு கூட்டுதல் தொழிலை திட்டமிட்டு, பஞ்சாயத்து அளவில் முடிவு செய்யப்பட்டது. தேங்காய் (10 பொருட்கள்), பலாப் பழம் (23 பொருட்கள்), கிழங்கு வகைகள் (4 பொருட்கள்), காளான்கள் (புதிய மற்றும் 2 பொருட்கள்) பண்ணை அளவில் பச்சை நிற பூஞ்சாணம் பெருக்கும் அமைப்பு பல்வேறு மதிப்பு கூட்டுதல் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆறு பெண் விவசாயிகளின் உப-குழுக்கள் உருவாக்கப்பட்டது – தென்னை பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளின் ஒன்றான காண்டாமிருக வண்டுகளை இனபெருக்க இடத்தை அழிக்கும் உயிர்க் கொல்லி, மண்புழு உரம் (பொட்டலமிட்டது) மற்றும் சாணம் (உளர வைத்து, பொட்டலமிட்டது) ஆகியவை உற்பத்திக்காக உருவாக்கப்பட்டது. இந்த குழுக்கள் அனைத்தும்,பதிவு செய்யப்பட்ட எதவா பெண்களின் சங்கமாக, 2010 ஆம் ஆண்டு கூட்டமைக்கப்பட்டது. பல வல்லுநர்களிடமிருந்து விவசாயம்,அதை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பொருட்களை பொதுவுடைமையாக்கப்பட்ட விற்பனை ஆகியவை எதவா பெண்களின் சங்கம் எடுத்த செயல்பாடுகளில் சிலவற்றோடு புதிய இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களை பொருத்தவரையில், குடும்பத்திற்கு தேவையான சத்தான மற்றும் பாதுகாப்பான உணவை உற்பத்தி செய்வதும், சிறு தொழில்கள் மூலம் வருமானம் பெறுவதும், விவசாயத்தின் நோக்கமாகும்.
திறன் வளர்த்தல்
கிராமத்தில், எதவா பெண்களின் சங்க உறுப்பினர்கள், புதிய கிராம பயிற்சி மையத்தின் மூலம் பண்ணை விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து செயல் பயிற்சியளிப்பதற்காகவே ஆகும். துவக்கத்தில் ஐ.சி.ஏ.ஆர்-ன் கீழ் மத்திய மரப்பயிர்கள் ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் துறை பல்வேறு பயிற்சிகள் நடத்தியது. பல்வேறு மையங்களின் வல்லுநர்கள், பதப்படுத்துதலில் புதுமை படைத்தவர்கள் ஆகியோரை தகவல் ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டது.
பண்ணை விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்து பல்வேறு திறன்களில் சுமார் 200 பெண் விவசாயிகளுக்கு முழுமையாக பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களில், ஆறு பிரிவுகளில் மதிப்பு கூட்டுதலில் தேர்ந்த 100 விவசாயிகளை, உற்பத்தி செய்யும் பொருட்களின் தரம், விடாமுயற்சி, ஒன்றினைந்து செயல்படுதல், ஈடுபாடு மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த விவசாயிகளில், முதிர்ந்த பயிற்சியாளர்களாக ஆறு பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தொடர்பு கொள்ளுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் விற்பனை குறித்த திறன்கள் யாவும் சிறப்பு பயிற்சிகள் மூலம் அளிக்கப்படுகிறது. அவர்கள் முதிர்ந்த பயிற்றுனர்களாக, கேரளாவில் உள்ள ஏழு மாவட்டங்களில் இருக்கும் 6000 த்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர்.
முதிர்ந்த பயிற்றுனராக அவர்களின் போக்குவரத்துகளும், சமூக நிலையும் தகவல் தேடும் ஆர்வத்தோடு உயர்ந்தது. ‘ எங்களால் தொடர்பு கொண்டு இத்தனை விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சியளிப்போம் என்று நாங்கள் என்றுமே நினைத்ததில்லை. எங்கள் எதவா பெண்கள் சங்கத்தின் மூலம் நாங்கள் உண்மையாகவே பெருமையடைகிறோம்”, என்று ஒரு பயிற்றுனர் கூறுகிறார்.
வெளிப்பாடுகள்
இந்த திட்டத்தின் வெற்றி அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் யாவரும் இந்த குழுக்களின் அங்கமாக மாறிவிட்டனர். சங்க உறுப்பினர்களுக்கு வருடம் முழுவதும் பகுதி நேர வேலை (ரூ. 600-3500/- ஒரு மாதம் ஒரு உறுப்பினருக்கு) மற்றும் சமூகத்தின் பாராட்டும் கிடைக்கிறது. மதிப்பு கூட்டுதல் மூலம் தேங்காய்க்கு ரூ. 2-20/-, பலாவிற்கு ரூ. 80-300/- மற்றும் காளானுக்கு ரூ. 10-30/- வரை பெறுகின்றனர். இந்த மையங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை கழிவு மண்புழுவாக மாற்றி அதனை ஒரு கிலோவிற்கு ரூ.12 /- என விற்கப்படுகிறது. வருமானத்தில் உள்ள மொத்த உயர்வு 30-40 சதவிகிதம் ஆகும். உள்ளூர் சுய அரசு நிலைத்தத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில் விற்பனைக்கு தேவையான பொருட்களை வளர்க்க உதவியது. பெண் குழு உறுப்பினர்கள் பண்ணையிலேயே புது யுக்தியை பயன்படுத்தி, 45% செலவை குறைத்தும், 30% உற்பத்தி நேரத்தை குறைத்து பச்சை நிற பூஞ்சாணத்தை வளர்க்க முடிந்தது.
‘இந்த மாதிரி பெண்ணிற்கு ஏற்றது. சிறு குறு வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி பொருட்கள் அதிகமாக மீறுவதில்லை, ஆனால் கிராமப் பகுதிகளில் உள்ள மதிப்பு கூட்டப்படும் மையத்திற்கு, சிறிது சிறிதாக சேகாித்து தேவையான அளவிற்கு அளிக்கலாம். பெண் விவசாயிகள் விளைபொருட்களை சேகாிப்பதற்கு சுலபமாக பொருப்பேற்க தோள் கொடுத்தனர்” என்று திருமதி. சுலேகா, எதவா பெண்கள் சங்கத்தின் தலைவர் கூறுகிறார். எதவா பெண்கள் சங்கத்தின் வெற்றி குறித்து அனைத்திந்திய வானொளி, தூர்தர்ஷன், இதர தொலைகாட்சி சேனல்களிலும் மற்றும் அச்சு ஊடகத்திலும் பரப்பப்பட்டது.
இயற்கை ஆதாரங்கள் மற்றும் பண்ணையில் உள்ள பயிர்கள் மற்றும் விளங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறும் கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்து, அதன் மூலம் பாதுகாப்பான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. பசுந்தழை உரங்கள், மக்கு மற்றும் தொழு உரம் அதனுடன் சாம்பல் ஆகிய அனைத்தும் சமையலறையிலிருந்து சுலபமாக கிடைப்பதால் பெண்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர். பல்வேறு காரணிகளை ஒருங்கிணைப்பதால் சமையலறை கழிவுகள் குறைவதோடு சுற்றுப்புறச்சூழல் தூய்மையாக இருக்கிறது. வீட்டைச் சுற்றி நன்றாக திட்டமிட்டு அடர்வாக சாகுபடி செய்யும் இந்த முறை, பெண்களுக்கு மிக சிறப்பான முறையில் நேரம் மேலாண்மை செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது. வீட்டு வேலைகளை செய்துகொண்டே பயிர்கள், விளங்குகள் மற்றும் பறவைகளை கண்காணித்தல். புதிய பண்ணை உற்பத்தி பொருட்களை, மையில்கள் பல செல்லாமல் பாதுகாப்பான உணவு தயாரிக்கப்படுகிறது.
பி.அனிதாகுமாரி மற்றும் வி. கிருஷ்ணகுமார்
Anithakumari P Principal Scientist (Agricultural Extension) ICAR - Central Plantation Crops Research Institute Regional Station, Krishnapuram P.O. Kayamkulam- 690 533, Kerala. E-mail: anithacpcri@gmail.com V Krishnakumar Head, ICAR - Central Plantation Crops Research Institute, Regional Station, Krishnapuram P.O. Kayamkulam- 690 533, Kerala. E-mail: dr.krishnavkumar@gmail.com
மூலம்: லீசா இந்தியா, டிசம்பர் 2015, வால்யூம் 17, இதழ் 4



