21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான சவால். அனைத்தும் தொழில்நுட்பம் கிடையாது என்கிற அதேநேரத்தில் கால்வாய் தானியங்கியில் கிடைத்த அனுபவத்தை வைத்து பாடம் கற்பதை உதாசினம் செய்வதே தொடர் தோல்விகளில் முடிகிறது. பாசனத் திட்டங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். இதற்கு முக்கிய தேவையாக கருதப்படுவது ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையாகும்.
வேளாண்மையில் சிறப்பாக பயன்படுத்துவது குறித்து பலமுறை கலந்துரையாடும்போது உயர்தட்டு மாற்றம் ஏற்படுகிறது. சாியாக தண்ணீரை பயன்படுத்தாததால் விவசாயிகளை குறை கூறுவர். தொழில்நுட்ப பிரச்சனைகளை பொருத்தமட்டில் ஒன்று குறைத்து செயல்படுகிறது அல்லது முழுமையாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தண்ணீர் ஆதாரமுள்ள இடத்திலிருந்து பண்ணைக்கு அமைத்துள்ள பாசன அமைப்புகள் அனைத்தும் நன்றாக செயல்படுகிறது என்று எண்ணிவிடுகின்றனர்.
இந்தியாவில், மஹாராஷ்டிரா முன்னேற்றமிக்க, தொழில் மற்றும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகும். பாசனத் திட்டங்களை கூர்ந்து கவனித்து அதன் இயற்கைபண்பு, திறன், பயன்பாடு மற்றும் பாசனசிறப்புகள் யாவும் இந்தத் திட்டங்களை நவீனமயமாக்குவதன் தேவையை கொண்டு வருகிறது.
மஹாராஷ்ராவின் கதை
உள் மாநில தண்ணீர் குழுமத்தினால் 1,16,467 எம்சிஎம் மேல்தட்டு தண்ணீரை பயன்படுத்த அனுமதித்த போதிலும், அதிகபட்சமாக 55% தண்ணீர் அளவு இருக்கும் கொங்கன் பகுதியில், அதை பயன்படுத்துவதில் பிரச்சனைகள் இருக்கிறது. மஹாராஷ்டிரா இதுவரை 38 சதவிகித தண்ணீர் அளவிற்கு வடிவமைத்து உயிரோட்டத்தோடு சேமிக்கப்படுகிறது. பெரும்பாலான பாசனத் திட்டங்களை மஹாராஷ்டிராவில் பாசனத்திற்கு மட்டும் வடிவமைக்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டு பாசனத்திற்கு பயன்படுத்திய தண்ணீர் 58.6 சதவிகிதம் ஆகும். மீதமுள்ள 41.4 சதவிகிதம் தண்ணீர் பாசனமில்லாத மற்ற தேவைகளான வீட்டிற்கு, தொழிலுக்கு மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.இதர தேவைகள் பிரிவில் வரையறுக்கப்படாத மற்றும் வித்தியாசமாக 15 சதவிகிதம் தண்ணீர் பயன்படுகிறது. சுமார் 15.6 சதவிகித தண்ணீர் ஆறுகளில் வீணாக போகிறது,16.7 சதவிகித தண்ணீர் ஆவியாகிவிடுகிறது.
தண்ணீர் பாசனம் – திறன் மற்றும் பயன்பாடு
மஹாராஷ்டிரா பாசனத்திட்டங்களில் மாநில அளவில் இதுவரை 3877 திட்டங்கள் முடிந்துள்ளது. இதில் 87 பொியத் திட்டங்கள், 297 நடுத்தர திட்டங்கள் மற்றும் 3493 சிறியத் திட்டங்கள். முடிவு செய்யப்பட்ட பாசனத் திறனான 85 இலட்சம் ஹெக்டருக்கு எதிர்த்து, மாநிலம், 73.494 இலட்சம் ஹெக்டர் மட்டுமே உருவாக்கியுள்ளது. மாவட்ட பிரிவு திட்டங்களில் உண்மையான பாசன பரப்பளவு 41.6 ஹெக்டர் ஆகும். உள்ளூர் பிரிவு திட்டங்களின் தகவல்கள் இல்லை. இந்தத் திட்டங்கள் எதிர்பாராதவிதமாக உருவாக்கி, மறக்கப்பட்ட பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது – மேலாண்மை இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
கிணற்றுப் பாசனம் கருதப்படாத நிலையில் மாநில பிரிவு திட்டங்களில் சராசாியாக உண்மையான பாசன பரப்பளவு 45.4 சதவிகிதம் பாசனத் திறன் மட்டுமே உருவாக்கியுள்ளது. கிணற்றுப் பாசனத்தோடு இது 69% அதிகாிக்கிறது. எழுத்து வடிவில் கூறினால், கிணற்றுப்பாசனம் ஒரு விபத்தாக கருதப்படுகிறது. திட்டத்தில் இதை அளிக்கவில்லை. இந்த கிணற்று பாசனம், மூலதனம் மற்றும் மேம்பாட்டு செலவுகளை விவசாயிகளே செய்கின்றனர். சராசாியாக ஒட்டுமொத்த மாநிலத்தில் கரும்பு பரப்பளவின் கீழ் உள்ள பகுதியில் உத்தரவில் உள்ள கரும்பு சராசாி பகுதியின் 60 சதவிகிதமே ஆகும். அணைகளின் முழு கொள்ளளவிற்குத் தண்ணீர் நிரம்பாது. சராசாியாக உண்மையில் 64% தண்ணீரையே சேமிக்க முடிகிறது. இது முக்கிய இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. முதலில் திட்டங்களை சாத்தியமாக்க, தண்ணீரின் அளவு அதிகப்படியாக காட்டப்படுகிறது. இரண்டாவது, திட்டத்தின் நீர்ப்படிப்புப் பகுதியில், கூடுதலாக மித மற்றும் குறுகிய பாசனத் திட்டங்கள் மற்றும் பண்ணை குட்டையினால், அங்கீகாரம்/அங்கீகாரமற்ற நீரோட்டத்திற்கு எதிராக தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தண்ணீரை அதன் ஓட்டத்தின் தாக்கத்திற்கு சமமாக எங்கும், எப்படியாயினும், எதற்காகவும் சேமிக்கலாம். தண்ணீர் மேலாண்மை பூஜ்ஜிய கணக்கு விளையாட்டாக இருக்கிறது.
ஒட்டுமொத்த திட்டத்தின் சிறப்பு
ஒட்டுமொத்த திட்டத்தின் சிறப்பு என்பது அனைத்து கூறுகளின் விளைபொருட்கள் சிறப்பை புரிந்துகொள்வது அவசியமாகும். இதை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வரையறுக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த திட்டத்தின் சிறப்பு (ஒபிஈ) = Emc x Edy x Eminor x Efc x Efarm (Emc என்றால் மத்திய கால்வாயின் திறன், Edy என்றால் துணை கால்வாயின் திறன், Eminor என்றால் சிறு கால்வாயின் திறன், Efc என்றால் பண்ணை வரப்பின் திறன் மற்றும் Efarm என்றால் பண்ணை பயன்பாட்டின் திறன்). ஓவ்வொரு கூறுகளும் முக்கியம். எந்த கூறும் குறைந்த திறனோடு செயல்பட்டால் ஒட்டுமொத்த திட்டத்தின் திறனும் குறையும். மத்திய கால்வாய், துணை கால்வாய் மற்றும் சிறிய கால்வாய் என அனைத்தும் ஒரு முழுமையான அமைப்பு உருவாகிறது. இது பொதுவாக அரசின் கட்டுபாட்டில் இருக்கும் பண்ணை வாய்க்கால் மற்றும் பண்ணையிலேயே பாசனம் செய்யும் பொறுப்பு விவசாயிகளுடையதாகும்.ஆனால் இங்கு தண்ணீர் பயன்பாட்டு சங்கம் உருவாகியது. இந்த சிறிய கால்வாய் தண்ணீர் பயன்பாட்டு சங்கத்தில் ஒப்படைத்தது.
எம்எம்ஐஎஸ்எப் 2006 விதிகளின்படி,டபள்யூ.ஆர்.டி, ஜ.ஒ.எம் கீழே கூறுகளின் அதிகபட்ச திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த வரிசைப்படுத்தப்பட்ட மற்றும் வரிசைப்படுத்தப்படாத கால்வாய்களின் செயல்பாட்டுத் திறன் 52% மற்றும் 39%, முறையே ஆகும். இதன் சுலபமான பொருள் என்னவென்றால் வரிசைப்படுத்தப்பட்ட கால்வாயின் தலைப்பகுதிக்கு செலுத்தும் 100 யுனிட் தண்ணீர், பயிரின் வேர்ப்பகுதிக்கு 52% சென்றடைகிறது என்பதேயாகும். அதேபோல் வரிசைப்படுத்தப்படாத கால்வாய்களின் மூலம் 39 % சென்றடைகின்றது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மேலே கூறப்பட்டுள்ள வடிவமைக்கப்பட்ட மதிப்புகளையே ஒவ்வொரு கூறுகளின் திறனாக கருதப்படுகிறது. உண்மை மதிப்பு, வடிவமைக்கப்பட்ட மதிப்பை ஒப்பிடுகையில் வெறும் 50% மட்டுமே இருக்கும், இது கால்வாயின் வடிவமைக்கப்பட்ட நிலையை பொறுத்தே அமையும். கருத்தில் கொள்ளக்கூடிய முக்கிய விஷயங்கள் என்னவென்றால் தற்போது உள்ள கால்வாய்கள் 75 முதல் 80 சதவிகிதம் தண்ணீர் கடந்து செல்லும்வழியில் அதிகளவில் வீணாகிறது. அரசு கட்டுபாட்டில் உள்ள வரிசைப்படுத்தப்பட்ட மற்றும் வரிசைப்படுத்தப்படாத முக்கிய அமைப்புகள் (முதன்மை கால்வாய், வினியோக கால்வாய் மற்றும் சிறிய கால்வாய்) வடிவமைப்பின் திறன் 77 % மற்றும் 61%, முறையே செயல்படுகிறது.
இந்த முதன்மை அமைப்பு தேவையான அளவு மேம்படுத்தாததாலும் சாியாக மேலாண்மை இல்லாததாலும், தண்ணீர் பயன்பாட்டு சங்கங்கள் அல்லது விவசாயிகள் உறுதிசெய்யப்பட்ட, அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தண்ணீர், திட்டமிட்ட சுழற்சியில், சாியான நேரத்தில், சாியான இடத்திற்கு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு தண்ணீர் வழங்குவதில்லை. இது பாசனத் திட்டத்தில் நடக்கும் அராஜகம் ஆகும். இந்த மேலாண்மை இல்லாத நிலை, பண்ணையில் பாசனம் செய்வது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தண்ணீர் பயன்பாட்டு சங்கங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண திறன் குறைந்த முதன்மை அமைப்பு மற்றும் அழுத்தம் தரும் நிலையில் பண்ணையை பாசனம் செய்வது வித்தியாசமான இணைப்பாக இருப்பது, கிணற்றுப்பாசனம் இல்லாமல் மிக அரிதாகவே பணி செய்யும்.
மேலே கூறப்பட்டுள்ள நோக்கில், பாசனத் திட்டங்களை நவீனப்படுத்துவது குறித்து மிக தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரமாகும்.
தற்போதைய பண்புகள் மற்றும் பிரச்சனைகள் – எவ்வாறு இவற்றை சாிசெய்வது:
பொியளவு பொதுப்பிரிவு பாசனத் திட்டங்கள், மஹாராஷ்டிராவில் பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் வழங்குவதில்லை, பாசனமல்லாத இதர பயன்பாட்டிற்கும் (குடித்தல், வீட்டு உபயோகத்திற்கு, தொழிற்சாலைகள், போன்றவைகளுக்கு) வழங்கப்படுகிறது. ஒரேசமயத்தில் பல்வேறு மற்றும் குறிப்பிட்ட சமயங்களில். இன்னும் கடினமான நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கின்றனர்.
மஹாராஷ்டிராவில் செயல்பட்டு கொண்டிருக்கும் பாசனத் திட்டங்கள் நீரோட்டத்திற்கு எதிரான கட்டுபாட்டிலும், மனிதன் இயக்கக்கூடியதாகவும், பெரும்பாலும் திறந்த கால்வாய் அமைப்புகள், உண்மை நிலவர தரவின் அடிப்படையில் மேல் சீரியக்கிகள் மற்றும் குறுக்கு சீரியக்கிகள் இயக்குவதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. தற்போதுள்ள செயல்பாடு அதன் உண்மையான இயற்கை குணம் மற்றும் உள்ளடங்கிய பண்புகளின் வெளிபாடாகும். வடிவமைக்கபடாத அமைப்புகளிலிருந்து சிலவற்றை எதிர்ப்பார்ப்பது சாியானதல்ல.
கால்வாய்களில் அளவீட்டுக் கருவிகள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களிலும் டஸ்னெட் வழங்குவோ / கட்டவோ இல்லை. அளவீட்டுகருவிகள் இருந்தாலும், அவைதவறாக வடிவமைத்து, சாியான இடத்தில் வைக்காமல் குறையுள்ள கட்டமைப்பு, மோசமான மேம்பாடு மற்றும் சேவை, மற்றும் சம்மந்தமில்லாத கையேடுகள் போன்ற பொதுவான பிரச்சனைகளினால் அவதிப்படுவது சாத்தியமான ஒன்றுதான். பாசனமில்லாத திட்டங்களில், குழாய்களில் தண்ணீர் மீட்டர்களின் நிலையிலும் பொிய வித்தியாசம். அங்கு முறையாக செயல்படுவதாக தொியவில்லை, மேலும் தேவையான அளவுத் தண்ணீர் மீட்டர்களின் வசதிகள், நிறுவுதல், மேம்பாடு, சேவைகள் மற்றும் அளவீடுகளை திருத்தம் செய்தல் ஆகியவற்றின் திட்டங்கள் முழுமையாக இல்லை.
மஹாராஷ்டிராவில் பாசனத் திட்டங்கள் அடிப்படையாக நீரோட்டத்திற்கு எதிரான கட்டுபாட்டு அமைப்புகளை கொண்டது. இந்த அமைப்பானது வினியோகப் பிரிவு மேலாண்மையின் நிதா;சனத்தை வைத்தே பணிபுரிகிறது. தண்ணீர் அளவு நீரோட்டதிற்கு எதிரான கட்டுபாட்டு காரணியை (குறுக்கு சீரியக்கி) மேம்படுத்துகிறது. திறந்து விடுவதில் மாற்றங்களை, நீரோட்டத்தின் எதிர்முனையில் அமைப்பை இயக்குபவரே துவக்கி வைப்பார். மேலும் அவருடைய வசதிக்கேற்ப முடிவுகளை எடுப்பார். தண்ணீர் பயன்பாட்டாளர்களின் தேவைகள் குறித்து எப்போதாவதுதான் கருத்தில் கொள்வார்கள். அரசுத் துறை எடுக்கும் முடிவுகள் பயனீட்டாளர்கள் மேல் திணிக்கப்படுகிறது. பெரும்பாலான பயனாளிகள், அதனால், தேவையான தண்ணீர் தவறான நேரத்தில் எதிர்பார்க்காத சமயத்தில் கிடைப்பதில்லை. தண்ணீர் பயன்பாட்டு சங்கங்களின் அவலமான நிலைக்கு முக்கிய காரணமாகும். பங்கேற்பாளர் பாசன மேலாண்மை, தண்ணீர் கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டங்கள் மற்றும் விதிகளாக வழங்கினாலும், சாதாரண முதன்மை அமைப்பு, பங்கேற்பாளர் பாசன மேலாண்மைக்கு ஏற்றதாக இல்லை, ஏனென்றால் முன்னுதாரணமான மாற்றத்திற்கு, பொறியாளர் பார்வையில் இது வடிவமைக்கவில்லை.
நீரோட்டத்திற்கு ஏற்ற கட்டுபாட்டு அமைப்பு, எதிராக, தேவைக்கேற்ற மேலாண்மை நிதர்சனத்திற்கு உகந்தவாறு செயல்படுகிறது. இவை பங்கேற்பாளர் பாசன மேலாண்மைக்காக வடிவமைக்கப்பட்டது. தண்ணீர் அளவு நீரோட்டத்திற்கு ஏற்ற கட்டுபாட்டு காரணியை மேம்படுத்துகிறது. திறந்துவிடுவதில் மாற்றங்களை ஏற்கனவே நிரம்பிய கால்வாயிலிருந்து, கீழ் செல்லும் நீரோடையின் முனையில் பயனீட்டாளர்கள் / தண்ணீர் பயனீட்டாளர் சங்கங்களினால் துவக்கப்படுகிறது. இவர்களின் தேவைமேல் நீரோடைக்கு மாறித் தண்ணீரின் மூலமாகவே இவர்கள் தண்ணீர் எடுக்கத்துவங்கினர். இறுதியாக இந்த அமைப்பு தண்ணீர் திறந்துவிடுவதற்கு பொருத்தமான அளவிற்கு வெளியிடப்படுகிறது. பொறியாளர் பார்வையிலிருந்து நிதர்சனத்தை தேவையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. உதாரணமாக, கீழ் நீரோடை கட்டுபாட்டு அமைப்பின் மாறுபாடுகளின் ஒன்றாக மஜல்கயோன் திட்டம் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தை மீண்டும் பார்வையிடவேண்டும் ,ஏனென்றால் இந்தக் கருத்து பல வருடங்களுக்கு முன் 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆகையால் கீழ் நீரோட்ட கட்டுப்பாட்டு அமைப்பின் கோட்பாடுகள் பயன்படுத்தி, சோதனை அடிப்படையில், புதிய திட்டத்தை வடிவமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பல இதரஅளவீடுகள் மூலம் முதன்மை அமைப்பை நவீனப்படுத்தலாம். முதன்மை அமைப்பு நவீனமயமாக்கும் வரையில்,அதன் பண்புகள் மாறும் வரையிலும், எந்த முக்கியமான செயல்பாட்டில் உயர்வு ஏற்படாது. முதன்மை அமைப்பு கட்டுபடுத்துதல், சீர்படுத்துதல், தண்ணீர் அளவு மற்றும் வெளியிடும் அளவினை அளத்தல். போன்ற வசதிகள் உடனடி தேவையாக இருக்கிறது. சிறந்த முதன்மை அமைப்பு சிறப்பான தண்ணீர் மேலாண்மை, அரசாட்சி மற்றும் சீர்திருத்தம் செய்வது, மேலும் பல்வேறு பயன்பாட்டிற்கு தண்ணீர; பயன்பாடு உண்மையாக பயன்படுத்துவது அதிகாிக்க உதவுகிறது.
சில செயல்படுத்தக்கூடிய தீர்வுகள்
அ) சீரியக்கிகள் மற்றும் கதவுகளை நவீனப்படுத்துவது
தலைமை மற்றும் குறுக்கு கதவுகளை இயந்திரமயமாக்கி வழங்கி, அவற்றை பாதுகாத்து, மேம்படுத்தி, மற்றும் இயக்கமுறையே தண்ணீர் சட்டங்கள் செயல்படுத்தி, சிறப்பு கேட்டுகள் எம் மற்றும் ஆர் நகரும் கலன்களை உருவாக்கி பயிற்சி பெற்ற அமைப்பு இயக்குபவரை நியமிக்க வேண்டும்.
சாதாரண தலைமை சீரியக்கிகளை, வினியோகஸ்தர் வைத்தும், முதன்மை கால்வாயில் சாதாரண குறுக்கு சீரியக்கியை தானியங்கி கதவுகள் வைத்தும், துணை ஆறுகளுக்கு டக்பில் அல்லது மூலை விட்ட அணைகளால் மாற்றப்படுகிறது.
பொியத் திட்டங்களின் முதன்மை கால்வாய்கள் மேற்பார்வையிடும் கட்டுப்பாடு மற்றும் தரவு சேகாித்தல் துவக்கத்தில் அறிமுகம் செய்யவேண்டும்.
மேலே கூறப்பட்ட 3 தீர்வுகளை சாியாக கலந்து செயல்படுத்த வேண்டும். சோதனைத் திட்டங்களை உருவாக்கி மேலே உள்ள தீர்வுகளை முயன்று பார்க்க வேண்டும்
ஆ) அளவுகோள் கருவிகளை நவீனமயமாக்குதல்
சூழ்நிலையை உயர்த்த மூன்று வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
பொியளவில் அளவுகோள் கருவிகளை வழங்குதல். வால்மி வெளியீடுகள், எண் – 36, எம்.டபிள்யூ.ஆர்.ஆர்.ஏ.வின் தண்ணீர் உரிமை வழங்குவதின் தொழில்நுட்ப கையெட தண்ணீர் பாய்ச்சும் அளவுகோள்கள், எம்.எம்.ஐ.எஸ்.எப் சட்டம், 2005 மற்றும் விதிகள், 2006 மற்றும் எம்.டபிள்யூ.ஆர்.ஆர்.ஏ.சட்டம், 2005.
தண்ணீரை மறைமுகமாக அளவிடும் முறைக்கு மாற்ற வேண்டும். சாதாரண தலைமை சீரியக்கி கதவுகளை வினியோகிக்கும் கருவிகளை மாற்றினால், அளவீட்டு கருவிகளின் தேவையை குறைக்கலாம். இந்த வடிவமைப்புகள் தொிந்த மற்றும் நிலையான தண்ணீரை திறந்துவிடப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு தீர்வுகளை சாியாக ஒன்று சத்து செயல்படவும்.
உத்தேசமான திட்டத்தை அளவீட்டு வினியோக அமைப்புகளுக்கு மாற்றவது
அளவீட்டு வினியோகத் தேவைகளை நன்கு மேம்படுத்தப்பட்டு, அமைப்பைதண்ணீர் கடந்து செல்லும்போது வீணாவதுடன், அனுமதிக்கப்பட்ட அளவுகளுக்குட்பட்ட நேரத்தில் நிரப்புவதோடு செயல்படுத்தப்படுகிறது. தலைமை மற்றும் குறுக்கு சீரியக்கியின் செயல்பாட்டு கதவுகள் க்யூ டேபிளுடன் தண்ணீர் அளவை கட்டுபடுத்தி, வரையறுக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. செயல்பாட்டு, சாியான மற்றும் கணக்கிடக்கூடிய அளவீட்டு கருவிகள், பயிற்சியளிக்கப்பட்ட கால்வாய் இயக்குபவர்கள் தேவையான எண்ணிக்கையில் இயக்கவும் மற்றும் மேம்படுத்தும் கதவுகள், அளவீட்டு கருவிகள் மற்றும் தண்ணீர் பாயும் அளவீடுகளுக்கு நல்ல கையேடுகளை மேம்படுத்தப்படுகிறது. உடனடி மற்றும் தேவையான மேம்பாடு, மற்றும் சேவைகளுக்கு, சிறப்பு கதவுகள் மற்றும் அளவீட்டு கருவிகளுக்கு சேவைகள் செய்யும் நடமாடும் கலன்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
முடிவு
அளவீட்டு வினியோகம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். அமைப்புகளின் பாகங்களின் பிரச்சனைகளை ஏன் மற்றும் என்ன முறையில் மாநில தண்ணீர் கொள்கை மற்றும் பல்வேறு வெளியீட்டுகளின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால் பொியகுழப்பம் என்னவென்றால் – எப்படி? எங்கு? எதுவரையில்? எவரால்? எவ்வளவு விலையில்? செய்யப்படுகிறது. அளவீட்டு வினியோக முறைகள் தனிபட்ட தண்ணீர் பயனீட்டாளர் சங்கங்களின் அளவில் சுலபமாக அறிமுகப்படுத்தப்பட்டது. திட்ட அளவில் அறிமுகப்படுத்துவதே உண்மையான சவாலாகும். தேவையான மற்றும் அங்கீகாிக்கப்பட்ட முறையான அணுகுமுறையே அவசியமாகும்.
புதிய முறைகள், தலைமை மற்றும் குறுக்கு சீரியக்கி கதவுகள், டக்பில் அணைகள், அளவீட்டு கருவிகள் மற்றும் தண்ணீர் மீட்டர்களை தொழில் துறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சேவை, நிறுவுதல், மேம்படுத்துதல், அளவுத்திருத்தம், தானியங்கி தரவு சேகாிப்புகள் போன்றவையும் அளிக்கப்படுகிறது. சிடிஎப், எஸ்ஆர்ஒ மற்றும் வினியோகஸ்தர்களின் கருவிகள், உள்ளூர் சிறு / மித தொழில்துறையில் சில பயிற்சிகளுக்கு பிறகு உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில் முனைவோருக்கு இது ஒரு பொிய தொழில் வாய்ப்பாகும். இவை வருட மேம்பாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் அளவுத் திருத்தும் பணி. கதவுகள் துறை / கருத்தரங்கத்தில் ரேடியல் கதவுகள் உருவாக்கும் அனுபவம் நிறைந்திருக்கும். சர்வதேச நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் செய்து நவீன தொழில்நுட்பங்களை மாற்றவது சாத்தியம். 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கு இணக்கமான பாசன அமைப்பை எப்படி உருவாக்குவது என்பது உண்மையான சவால் நம் முன் இருக்கிறது. அனைத்தும், தொழில்நுட்பம் கிடையாது. ஓப்புக்கொள்கிறோம். ஆனால் வேற்றுமையற்ற மற்றும் பாடங்களைகற்றக்கொள்வதற்கு உதாசினப்படுத்துவது தவறாகும். தண்ணீர் பிரிவு குறிப்பாக பாசனத்திட்டங்களை நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது அவசியம். உலக உதாரணங்களும் இருக்கின்றன. இஸ்ரேலில் உள்ள நேஷனல் கோியர், அமொிக்காவில் உள்ள கேலிப்ரோனியா அக்விடக்ட் மற்றும் பிரான்ஸில் உள்ள பிரவின்ஸ்-டி-கால்வாய் ஆகியவை முதன்மை அமைப்போடு உள்ளகால்வாய் தானியங்கியின் சிறந்தஉதாரணங்களாகும்.
பிரதீப் புரந்தோ
References WRD, GOM, Water Resources Management, 11.1 Irrigation, Report of Integrated State Water Plan committee, 2017 Pradeep Purandare, Making Irrigation Systems Compatible & Amenable to Modern Concepts and Improving Institutional & Legal Arrangements, A submission to the drafting Committee for National Water Policy on 27.1.2020 Pradeep Purandare Retired Associate Professor, WALMI, Aurangabad. Expert and Member, State Level Committees and Expert Panels Flat A-1404 , Vasudha - Etasha, Pune -Bangalore HWY, Kothrud, Pune - 411038 Blog: jaagalyaa-thewhistleblower.blogspot.in E-mail: pradeeppurandare@gmail.com
மூலம்: லீசா இந்தியா, ஜூன் 2023, வால்யூம் 25, இதழ் 2



